வளமையான வாழ்விற்காக இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள் ! வறுமை என்ற சுனாமியால் அரபிக்கடலோரம் கரை ஒதுங்கிய அடையாளம் தெரிந்தநடை பிணங்கள் !
சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய திசை மாறிய பறவைகள் !
நிஜத்தை தொலைத்துவிட்டுநிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும் அபாக்கிய சாலிகள் !
தொலைதூரத்தில்இருந்து கொண்டேதொலைபேசியிலேகுடும்பம் நடத்தும் தொடர் கதைகள் !
கடிதத்தை பிரித்தவுடன்கண்ணீர் துளிகளால் கானல் நீராகிப் போகும் மனைவி எழுதிய எழுத்துக்கள்! ஈமெயிலிலும் இண்டர்நெட்டிலும் இல்லறம் நடத்தும் கம்ப்யூட்டர் வாதிகள் !
நலம் நலமறிய ஆவல் என்றால் பணம் பணமறியஆவல் என கேட்கும் ஏ . டி . எம் . மெஷின்கள் !
பகட்டானவாழ்க்கை வாழபணத்திற்காக வாழக்கையை பறி கொடுத்த பரிதாபத்துக்குரியவர்கள் !
ஏ . சி . காற்றில்இருந்துக் கொண்டே மனைவியின்மூச்சுக்காற்றை முற்றும் துறந்தவர்கள் !
வளரும் பருவத்திலேவாரிசுகளைவாரியணைத்து கொஞ்சமுடியாத கல் நெஞ்சக்காரர்கள் !
தனிமையிலே உறங்கும் முன் தன்னையறியாமலே தாரை தாரையாகவழிந்தோடும்கண்ணீர் துளிகள் !
அபஷி என்ற அரபி வார்த்தைக்கு அனுபவத்தின் மூலம் அர்த்தமானவர்கள் ! உழைப்பு என்றஉள்ளார்ந்த அர்த்தத்தை உணர்வுபூர்வமாகஉணர்ந்தவர்கள்! முடியும் வரைஉழைத்து விட்டுமுடிந்தவுடன்ஊர் செல்லும்நோயாளிகள் ! கொளுத்தும் வெயிலிலும் குத்தும் குளிரிலும்பறக்கும் தூசிகளுக்கும் இடையில் பழகிப்போன ஜந்துகள் !
பெற்ற தாய்க்கும் வளர்த்த தந்தைக்கும் கட்டிய மனைவிக்கும் பெற்றெடுத்த குழந்தைக்கும் உற்ற குடும்பத்திற்கும் இடைவிடாது உழைக்கும் தியாகிகள் !
அன்புடன் . ஹமீது சுல்தான் .
Assalamu Alaikkum
Pages
இந்த தளத்தில் தேட ...
Friday, October 17, 2008
Sunday, October 12, 2008
அது ஒரு காகம்!
அது ஒரு காகம்!
வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.
திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.
'என்ன இது?' என்று கேட்டார் முதியவர்.
லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், 'அது ஒரு காகம்'
சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், 'என்ன இது?'
'இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்' என்றார் மகன்.
சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், 'என்ன இது?'
சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், 'அது ஒரு காகம், காகம்!'
இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், 'என்ன இது?'
மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், 'அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, 'அது ஒரு காகம்' என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?'
முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.
அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.
அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;
'எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் 'அது என்ன' என்று 23 தடவைகள் கேட்டான். 'அது ஒரு காகம்' என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது'.
இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது. திருமறை குர்ஆனின் கீழ்க்கண்ட போதனைகளும் அவரது நினைவுக்கு வந்தன.
(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் 'சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.
அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என்இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)
தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும். முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது ஆண்டு களை அவன் அடைந்திட்ட பொழுது, 'என்னுடைய ரப்பே! நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட் கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக! என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்து) மீண்டு விட்டேன். நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற) முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்' என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)

Labels:
ஹமீது சுல்தான்
Subscribe to:
Posts (Atom)