மழலை(குழந்தை) - மருத்துவம்



Reactions: 
குழந்தைகளுக்கு 2 வயதிற்க பிறகே ஹார்லிக்ஸ், காம்ப்ளான்,பிடியாஸுர் போன்ற புரத பானங்களை தர வேண்டும். 

புரத சத்து செரித்த பின் எஞ்சிய கழிவு பொருளான யூரியா ,யூரிக் ஆஸிட் போன்றவை சிறுநீரகம் மூலம் வெளியேற்ற படுகிறது. எனவே 2 வயதுக்கு குறைவான குழந்தைகளின் சிறுநீரகதிற்கு அதிக வேலை பளு ஏற்படாமல் இருக்க மேலெ சொன்னவற்றை தவிர்க்க வேண்டும். 

புரத மாவுகள் அதிக படியான சூட்டில் செயலிழக்க வாய்ப்பு உள்ளது.எனவே குளிர்ந்த அல்லது மிதமான சூடு உள்ள பால் அல்லது தண்ணீரில் கரைத்து தரவேண்டும். 

புரதமாவு கொடுக்கும் போது தண்ணீர் நிறைய குடிக்கவேண்டும்.அப்படியே அள்ளி சாப்பிடுவது தவறு!

Posted by குழந்தை நல மருத்துவன்! at Saturday, February 19, 201115 comments http://img1.blogblog.com/img/icon18_email.gif 




Reactions: 
தினமும் அரை மணி நேரமாவது குழந்தைகளை விளையாட செய்தால் அவர்களின் நினைவு திறன் அதிகரிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. 

எனவே உங்கள் குழந்தையை புத்தகத்திடம் இருந்து விடுவித்து விளையாட விடுங்கள். 

(
மொபைலில் இருந்து முயற்சி செய்த முதல் தமிழ் பதிவு) 

Reactions: 

பிறந்த குழந்தைக்கு இருக்கும் பற்கள் (பிறவி பற்கள் )

பொதுவாக 6 -8  மாதங்களில் குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைக்க தொடங்கும் .ஆனால்  அரிதாக  பிறக்கும் போதே சில குழந்தைகளுக்கு பற்கள் இருக்கலாம் .இதற்க்கு NATAL TEETH  என்று பெயர் .


பொதுவாக கீழ்வரிசை நடுபற்களில் இது காணப்படும் .எல்லா பிறவி பற்களையும் நீக்க தேவை இல்லை .

இதில் இரு வகைகள் உள்ளன :

I .PREDECIDUOUS TEETH : இது 4000  இல் ஒரு குழந்தைக்கு இருக்கலாம் .இது ஏற்கனவே ஈறுகளின் உள்ளே மறைந்துள்ள பால் பற்களின் மீது தோன்றும் ஒரு அதிகபடியான பல் ஆகும் .இது வலுவில்லாமல் ஆடிக்கொண்டு இருக்கலாம் .எனவே இதை நீக்கிவிடுவது நல்லது . 

II .TRUE DECIDUOUS TEETH : இது 2000 இல் ஒரு குழந்தைகளுக்கு இருக்கலாம் .இது உண்மையான பால் பற்கள் ஆகும் .ஆனால் சற்று முன்கூட்டியே முளைத்து விடுகிறது .இதனே நீக்க கூடாது .

மேலே சொன்ன இரு வகைகளை  X -RAY எடுத்து பார்ப்பதன் மூலம் வேறுபடுத்தி அறியலாம் .


ஏன் நீக்கவேண்டும் :

 வலுவில்லாத , ஆடிகொண்டிருக்கும் பல் மூச்சு குழாயினுள் சென்று மூச்சு திணறலை ஏற்படுத்தலாம் .
எனவே மருத்துவர் ஆலோசனை பெற்று நீக்கிவிடுவது நல்லது .

பின் குறிப்பு : அதிர்ஷ்டதிர்க்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை .ஆனால் சில நாடுகளில் இதனை ஒரு கெட்ட சகுனமாக கருதி பிறந்த குழந்தைகளை கொன்ற சம்பவங்கள் கூட நடந்துள்ளன .

Posted by குழந்தை நல மருத்துவன்! at Sunday, February 06, 20111 comments http://img1.blogblog.com/img/icon18_email.gif 




Reactions: 



ஜுரம் என்பது  ஒரு அறிகுறி  மட்டுமே , அதுவே வியாதி அல்ல என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே .



http://doctorrajmohan.blogspot.com/2010/07/fever-in-children.html



ஆனால் சிறு குழந்தைக்களுக்கு  ஜுரம் வந்தால் சோர்வடைந்து எதுவும் சாப்பிடாமல் ,குடிக்காமல் இருக்கும் .இது உடலில் உள்ள  நீர் சத்தை குறைத்துவிடும் .இது மேலும்  உடல் வெப்பத்தை  அதிகரிக்கும் .



எனவே ஜுரம் வந்தால் செய்யவேண்டியது என்ன ?


அதிகமான திரவ உணவினை கொடுத்துகொண்டே இருக்கவேண்டும் - காய்கறி சூப் ,ஐஸ் போடாத பழசாறு 



எளுதில் காற்றோட்டம் உள்ள பஞ்சினால் ஆனா உடையை மட்டுமே போடவேண்டும் .முடிந்தால் டயபரை  கூட கழட்டிவிடுவது நல்லது .
http://doctorrajmohan.blogspot.com/2010/08/blog-post_15.html


ஸ்வட்டர் கண்டிப்பாக போடகூடாது .ஏனெனில் இது உடல் சூட்டை தக்கவைத்து சுரத்தை இன்னும் அதிகரிக்க செய்யும் .எனவே கண்டிப்பா  கூடாது .இதனால் சில குழந்தைகளுக்கு சுர வலிப்பு எனப்படும் febrile fits வர வாய்ப்பு உண்டு .


http://doctorrajmohan.blogspot.com/2010/06/febrile-fits.html


ஏற்கனவே சுர வலிப்பு வந்திருந்தால் கண்டிப்பாக இதை கடைபிடிக்கவேண்டும் !


 சரி ஸ்வட்டர்  எப்போது போடலாம் :

எடை குறைவான குழந்தைகளுக்கு உடல் வெப்ப இழப்பு ஏற்படாமல் இருக்க பயன் படுத்தலாம்.

பயணம் செய்யும்போது ,குளிர்ப்ரதேசங்களுக்கு  செல்லும்போது ,


இந்திய போன்ற வெப்பநாட்டில் இருக்கும் போது நாம் இதனை அதிகமாக உபயோகிக்க தேவை இல்லை .முக்கியமாக ஜுரம் உள்ளபோது .





உங்கள் குழந்தையின் உயரத்தை கணிக்க :



Reactions: 
உங்கள் குழந்தையின்  உயரத்தை கணிக்க :

வளர்ந்த பின் உங்கள் குழந்தை  எவ்வளவு  உயரம் இருக்கும் என்பதை  சில முறைகள் மூலம்  முன் கூட்டியே சொல்லமுடியும் , 

பெண் குழந்தை ஒன்றரை  வயதில் உள்ள உயரத்தை போல்  இரு மடங்காகும் 

ஆண் குழந்தை  இரண்டு வயதில்  உள்ள உயரத்தை  போல் இரு மடங்காகும் 
                                                   (அல்லது) 

மூன்று வயது மூடியும் போது உள்ள உயரத்தை 1 .57  என்ற  எண்ணால்  பெருக்கினால் வரும் .


                                        (அல்லது  )



weech  formula :
    predicting adult height(male)= o.545x(height at 3 years)+ 0.544(mid parental height) +38 cms

     predicting adult height(female)= o.545x(height at 3 years)+ 0.544(mid parental height) +26 cms
midparental height   என்பது பெற்றோரின்  சராசரி  உயரம் ( அப்பா 160 , அம்மா  140  எனில் mph  150  ஆகும் )

உங்கள் குழந்தை மூன்று வயது உள்ளபோதே  அதன் வரும்கால  உயரத்தை  கணக்கிடமுடியும் .





ப‌ன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து போடும் முறை :



Reactions: 
தடுப்பு மருந்து  போடும் முறை :


1. ஊசி மூலம்  உடலில்  போடுவது - vaxiflu  -s  


                இது  18 - 60  வயது  உள்ளவர்களுக்கு  மட்டும் போடவேண்டும் .






2 . மூக்கு  வழியே போடும்  ஸ்ப்ரே மருந்து :
             மூன்று  வயது முதல்  போடலாம் .இது குறித்து  கீழே  பார்க்கவும் :






   NASOVAC :  மூக்கின்  வழியே  போடவேண்டும் 
   மூன்று வயதில்  இருந்து போடவேண்டும் 


அலர்ஜி , ஆஸ்த்மா  இருந்தால்  போடகூடாது . (ஊசி  வேண்டுமானால்  போட்டு கொள்ளலாம் )


முட்டை  அலர்ஜி உள்ளவர்களும்  போட்டுகொள்ள கூடாது .


இதை ஊசி மூலம்  உடலில்  ஏற்றகூடாது .


5 டோஸ் (5  பேருக்கு )  , சிங்கள்  டோஸ்  - கிடைக்கிறது


விரிவான  செயல்முறைக்கு  இங்கே பார்க்கவும் :
                                
                                          


                                           http://www.youtube.com/watch?v=amIwMozhx9U














பின் இணைப்பு :  பன்றி  காய்ச்சல் :




ப‌ன்றிக்காய்ச்சல் என்றழைக்கப்படும் காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என்று அழைக்கப்படுகிறது.


அதில் 3 வகை உள்ளது. இவை அனைத்தும் வைரஸ்களால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் தனது ஆர்.என்.ஏ. என்கிற உருவ அமைப்பை அடிக்கடி மாற்றிக்கொள்கிறது. அதனால் இது ஏ.பி.சி. என்று 3 வகைப்படுகிறது.



ஏ டைப் வைரஸ் தொற்றினால் லேசான காய்ச்சல் இருக்கும். சளி, இருமல் , தலைவலி, வயிற்றோட்டம் வாந்தி ஆகியவை இருக்கும். சிலருக்கு வயிற்றோட்டம் வாந்தி இருக்காது. இந்த நோய் வந்தவர்களை தனிமை படுத்தி சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளித்தால் போதும். இவர்களுக்கு டாமிபுளு (ஒசல்டாமிவிர்) மாத்திரை கொடுக்கக்கூடாது. ஏன் என்றால் அவ்வாறு அந்த மாத்திரை கொடுத்தால் அது பின்விளைவை ஏற்படுத்தும்.


இவர்களுக்கு ஆய்வக பரிசோதனை தேவை இல்லை. வீட்டில் ஓய்வு எடுத்து கொள்ளும்படியும் மற்ற நபர்களிடம் தொடர்பை குறைத்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.


பி டைப் நோயாளிகளுக்கு ஏ டைப் நோயாளிகளுக்கு இருந்த அனைத்து அறிகுறிகளுடன் காய்ச்சல் அதிகமாக இருக்கும். தொண்டை வலி அதிகமாக இருக்கும். இவர்களுக்கும் ஆய்வக பரிசோதனை தேவை இல்லை. ஆனால் பிடைப் நோயாளிகளுக்கு உடனடியாக டாமி புளு மாத்திரை கொடுக்கவேண்டும்.



சி டைப் நோயாளிகளுக்கு பி டைப் நோயாளிகளுக்கு இருந்த அறிகுறி தவிர வழக்கத்தை விட அதிக மூச்சுத்திணறல் ஏற்படும். ரத்தத்துடன் கலந்த சளிவரும். நகம் நீல நிறமாக மாறும். சாப்பிட மனம் வராது. பசி எடுக்காது. உடனே ஆய்வக பரிசோதனை செய்து மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்பட வேண்டும். டாமி புளு மாத்திரை சாப்பிடவேண்டும்



பன்றிக்காய்ச்சலை பரப்பும் வைரஸ் கைகுட்டையில் 12 மணிநேரமும், கைளில் 5 நிமிடமும், குளிர்ந்த தண்ணீரில் 30 நாட்களும் உயிர்வாழக்கூடியது . மேலும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க இருமும்போதும், தும்மும் போதும் மற்றவர்களுக்கு குறைந்தது 4 அடி இடைவெளி இருக்க வேண்டும்


பன்றி காய்ச்சல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 'ஒசல்டமிவிர்', 'ஜானமிவிர்' ஆகிய மருந்துகளை அளிக்க வேண்டும். ஒசல்டமிவிர் கிடைக்காவிட்டால், ஜானமிவிர் மருந்தை கொடுக்கலாம்.


இந்த மருந்துகள் மரணத்தை ஏற்படுத்தும் நிமோனியாவை கட்டுப்படுத்துகிறது.


பன்றி காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்படாத நபர்களுக்கு இந்த வைரஸ் தடுப்பு மருந்துகளை அளிக்கக்கூடாது. 5 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளுக்கு கூட, அவர்கள் கடுமையாக பாதிக்கப்படாத நிலையில் இந்த மருந்துகளை கொடுக்க வேண்டிய தேவை இல்லை.


மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, 3 நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் போன்ற பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.


குழந்தைகள் வேகமாகவோ, சிரமப்பட்டோ மூச்சு விடுதல், சுறுசுறுப்பு இல்லாமை, படுக்கையை விட்டு எழுவதில் சிரமம், விளையாடுவதில் ஆர்வம் இன்மை ஆகியவற்றுடன் காணப்பட்டுவதும் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகளாம்.


பன்றிக் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் டாமிபுளு மாத்திரைகளை, மரு‌த்துவ‌ர்க‌ளி‌ன் அ‌றிவுறு‌த்த‌ல் இ‌‌ல்லாம‌ல், முறையின்றி உட்கொண்டால் மோசமான ‌பி‌ன் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.


இந்தியா போன்ற நாடுகளில் பன்றிக் காய்ச்சலுக்கான டாமிபுளு மாத்திரைகளை, பொதும‌க்க‌ள், மரு‌த்துவ‌ர்க‌ள் ஆலோசனையின்றி பயன்படுத்துவதாகவும், முறைப்படி ஐந்து நாட்கள் உட்கொள்ளாமல் இடையில் நிறுத்தி விடுவதாகவும் உலக சுகாதார அமைப்புக்கு (டபிள்யூ.எச்.ஓ) புகார்கள் வந்தன.


இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய் கட்டுப்பாடு மையத்தின் நிபுணர்கள் கூறுகை‌யி‌ல், "டாமி புளு மருந்துகளை முறையின்றி பயன்படுத்தினால் மருந்தின் சக்தியை எச்1என்1 வைரஸ் தடுத்து நிறுத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.


டாமி புளு தனது சக்தியை இழக்க நேரிடும். எனவே மரு‌த்துவ‌ர்க‌ள் பரிந்துரைப்படியே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் எ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.
எனவே, பொதும‌க்க‌ள் யாரு‌ம், சாதாரண கா‌ய்‌ச்சலு‌க்காகவோ, ச‌ளி‌க்காகவோ மரு‌த்துவ ப‌ரிசோதனை இ‌ன்‌றி டா‌‌மி புளு மா‌த்‌திரைகளை‌ப் போட வே‌ண்டா‌ம். உட‌ல் நல‌ப் பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டா‌ல் உ‌ரிய மரு‌‌த்துவரை அணு‌கி, அவரது ப‌ரி‌ந்துரை‌யி‌ன் படி ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வது ந‌ல்லது.


மேலு‌ம், ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பா‌தி‌ப்பு‌க்கு‌ள்ளானவ‌ர்க‌ள், பய‌ந்தோ, அ‌றியாமையாலோ ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் முட‌ங்‌கி இரு‌க்காம‌ல், தகு‌ந்த மரு‌த்துவமனை‌யி‌ல் உடனடியாக ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று குணமடையலா‌ம். ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் நோ‌ய்‌க்கு உடனடியாக உ‌ரிய ‌‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டா‌ல் ‌நி‌ச்சயமாக பூரண குணமடையலா‌ம்.


ஒருவ‌ரிட‌ம் இரு‌ந்து ஒருவரு‌க்கு ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பரவுவதை‌த் தடு‌க்க நாமு‌ம் ந‌ம்மை சு‌த்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். து‌ம்‌மிய‌ப் ‌பிறகோ, இரு‌‌மிய‌ப் ‌பிறகோ நமது கைகளை சு‌த்தமாக கழுவ வே‌ண்டு‌ம். வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை, கா‌ல்களை ந‌ன்கு கழு‌வி, ‌பி‌ன்ன‌ர் முக‌த்தையு‌ம் கழுவ வே‌ண்டு‌ம்.


பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? என்பது பற்றிய சில யோசனைகளை பொது ம‌க்களு‌க்கு மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதனை ‌பி‌ன்ப‌ற்‌றி ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பரவுவதை தடு‌ப்போ‌ம்.



சுகாதாரமாக வாழு‌ங்க‌ள்


தினமு‌ம் குறை‌ந்தப‌ட்ச‌ம் ஒரு வேளை சு‌த்தமான ‌நீ‌ரி‌ல் கு‌ளியு‌ங்க‌ள். நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பை‌க் கொ‌ண்டு அடிக்கடி கைகளை கழுவுங்கள். குழாய் தண்ணீரில் குறைந்த பட்சம் 15 வினாடிகள் கைகளை அலசுங்கள்.



வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று ‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை‌, கா‌ல், முக‌ம், கழு‌த்து‌ப் பகு‌திகளை சு‌த்தமான த‌ண்‌ணீரா‌ல் ந‌ன்கு கழுவு‌ங்க‌ள்.


இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு உற‌க்க‌ம் அவ‌சிய‌ம்.


ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.


சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு தானிய வகைகள், பசுமையான காய்கறிகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுங்கள்.


மது அருந்த வே‌ண்டா‌ம்


மது அருந்தினால் உடலில் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி குறையு‌ம். இதனா‌ல் பன்றி காய்ச்சல் போ‌ன்ற நோய்க்கிருமிக‌ள் உடலு‌க்கு‌ள் எ‌ளிதாக ஊடுருவு‌ம் எ‌ன்பதா‌ல் மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.


மிதமான உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால், தினசரி 30 முதல் 40 நிமிடம் வேகமான நடை‌ப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருங்கள்.


இருமுவதன் மூலமும், தும்முவதன் மூலமும் பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.


வெ‌ளி‌யி‌ல் செ‌ல்வதை த‌விரு‌ங்க‌ள்


தேவை இல்லாமல் வெளியில் செல்வதையும், கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிருங்கள். கண்கள், மூக்கு, வாய் மூலம் நோய்க்கிருமிகள் உடலுக்குள் செல்லும் என்பதால் அவ‌ற்றை தொடுவதையும் தவிருங்கள்.


வேறு எ‌ந்த‌க் காரண‌த்‌தி‌ற்காகவு‌ம் குழ‌ந்தைகளை மரு‌த்துவமனை‌க்கு அழை‌த்து வரா‌தீ‌ர்க‌ள்.


குழ‌ந்தைகளை வெ‌ளி‌யி‌ல் கொ‌ண்டு செ‌ல்வதை‌த் த‌விரு‌ங்க‌ள்.

 வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு வ‌ந்தது‌ம் குழ‌ந்தைகளை‌த் தூ‌க்கா‌தீ‌ர்‌க‌ள். உடனடியாக உடலை சு‌த்த‌ம் செ‌ய்த ‌பி‌ன்னரே அடு‌த்த வேலையை‌த் துவ‌க்கு‌ 







உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ?



Reactions: 
உங்கள்  குழந்தையின்  ஞாபக  சக்தியை  அதிகரிப்பது எப்படி ?


  ஞாபகம் ஒரு வியாதி , மறதி ஒரு வரம் என்று  சொல்வார்கள்  , ஆனால்  நம் குழந்தை  படித்தததை  எல்லாம் மறுக்கும் போது  மறதி ஒரு சாபம் போல  நமக்கு தோன்றும் .


ஞாபகம்   குறித்து சில  தகவல்கள் :


     


     நாம்  பார்க்கும்  , கேட்க்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும்  அனைத்துமே  நமது  ஞாபகங்கள்  ஆகும் .  இது முதலில் முதலில் குறைந்த  நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே  மறந்து விடும் .


இந்த சென்சரி  மெமரியில் நாம்  முழு கவனத்தை செலுத்தி  ஆழ்ந்து கவனித்தால்  அது ஷார்ட் டெர்ம் மெமரி  ஆக  பதிவாகும் .இதுவும்  சில மணித்துளிகளுக்கு  மட்டும்  இருக்கும் .


ஷார்ட் டெர்ம் மெமரி  ஐ திரும்ப திரும்ப  செய்யும்போது  அது நாள் பட்ட  ஞாபக சக்தியாக  மாறும் .


எனவே  ஞாபக சக்திக்கு  மிகவும் முக்கிமானது  இரண்டு :
                ஆர்வம் மற்றும்  கவனம் 


                 திரும்ப திரும்ப செய்தல் .




மேலும்  நாள் பட்ட ஞாபகம்  கூட மறக்க  வாய்ப்பு  உள்ளது , இதுவும் நல்லது தான் . சில சமயம்  வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.


நாள் பட்ட ஞாபகத்தை  இரண்டு வகையாக  பிரிக்கலாம்  :
         explicit & implicit 


explicit   என்பது  கொஞ்சம் யோசித்தால்  நினைவுக்கு  கொண்டுவர முடியும் 


implicit என்பது  யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு  கொண்டு வருதல் 


நினவு  திறனை  சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம் :
மிதி வண்டி ஓட்ட பழகுதலை    எடுத்துகொள்வோம்


   யாரோ ஓட்டுவதை  நாம் பார்ப்பது - சென்சரி மெமரி 
   முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது  - ஷார்ட் டெர்ம் மெமரி 
    தத்தி தத்தி ஓட்டுவது - லாங் டெர்ம்  explicit மெமரி
  தயவே இல்லாமல்  ஓட்டுவது -லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது )


இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள் 


  1 . எதையும்  தாய் மொழியிலேயே  சிந்திக்க வேண்டும் , நீங்கள்  படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ , பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ   அதில் சிந்தித்து  மனதில் பதிய செய்ய வேண்டும்


2 . புரியாமல்  எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும்  பரவாயில்லை .


3 . முழு கவனம்  மிக அவசியம் . 


4 . mnemonics  வைத்து  படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு  கற்று
 கொடுங்கள் 
         உதரணம்  news - north ,east,west,south 


5 . படித்த வுடன் எழுதி  பார்க்கும் பழக்கத்தை  ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில்  கடமைக்கு  எழுதும்  சடங்கு  பயனில்லை.


6 . படங்களுடன் கூடிய  தகவல்கள்  மனதில் பதியும் . பட விளக்கங்களை திரும்ப திரும்ப  வரைந்து பார்க்க சொல்லவேண்டும்


7 . நல்ல உறக்கம்  அவசியம் . குறைந்தது  8  மணி நேர தூக்கம்  கண்டிப்பாக தேவை


8 .இரவில்  சீக்கிரம்  தூங்கி  அதிகாலை  படிக்கும்  படி  சொல்லவேண்டும் .


9 . தூங்க போகும்  முன்  அன்று  படித்த  அனைத்தையும்  ஒரு முறை மேலோட்டமாக  நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும்   நம் மூளையின்  சில மூலைகள் விழிப்புடன் இருந்து  தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து  லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான  பயிற்சி ஆகும் .


10 . மாவு சத்து உள்ள உணவுகள்  மந்த நிலையை  ஏற்படுத்தும் , எனவே புரதம்  நிறைந்த எளுதில்  செரிக்கும்  உணவை செர்த்துகொள்வது நல்லது.

5 comments:



ஜிஎஸ்ஆர் said...
நல்ல தகவல்களை தருகிறீர்கள் உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கிறேன் நேரமிருந்தால் பதில் அளியுங்களேன் சமீபத்தில் நண்பர் ஒருவர் அதிகம் பழக்கமில்லை அடிக்கடி பணி நிமித்தமாக அலைபேசியில் உரையாடியிருக்கிறேன் ஆனால் ஒரு நாள் அவர் என்னை காண வந்திருந்தார் ஆனால் அவர் பெயரை என்னால் ஞாபகத்தில் கொண்டுவர நானும் நெடு நேரம் முயற்சி செய்தும் கொண்டுவரமுடியாமல் ஒரு வழியாய் சமாளித்தேன் இது எதனால் எனக்கு இது முதல் முறையும் அல்ல. வாழ்க வளமுட்ன் என்றும் அன்புடன் ஞானசேகர்
தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் said...
நல்ல பயனுள்ள பதிவுகள், தொடரட்டும் உங்கள் படைப்புகள்
THE PEDIATRICIAN said...
dear GSR இது எல்லாருக்கும் வருவதுதான் . பயம் தேவையில்லை .
Jaleela Kamal said...
அருமையான தகவல்கள். சில விழியங்கள் ஆழமாக பதிகின்றன, சிஅல் விழியஙக்ள் நினைவிருக்கும் ஆனால் சொல்ல வராது
தவமணி said...
குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு வலைப் பூ. தொடரட்டும் உங்களின் ஆத்மார்த்தமான இந்த புனித தொண்டு.

Thanks.
HS.