சமையல்

[1]  சாம்பார் சாதம் (பிஸிபேளாபாத்)


தேவையானவை






அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கப்
புளித்தண்ணீர் - 1 கப்
எண்ணெய்
உப்பு
முருங்கைக்காய்
சின்ன வெங்காயம்
அவரைக்காய்
உருளைகிழங்கு
கேரட்







பீன்ஸ்
பட்டாணி
கத்தரிக்காய்
காளிஃப்ளவர்
சவ்சவ்
வாழைக்காய்
(அனைத்தும் சேர்ந்து 3 கப்)

தாளிக்க
வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
கடுகு
பெருங்காயம்
கறிவேப்பிலை
நெய் - 1 டீஸ்பூன்
வறுத்து பொடிக்க
வரமிளகாய் - 14







மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டுகள்
ஏலக்காய் - 1
கறிவேப்பிலை
(1/2 டீஸ்பூன் நெய் விட்டு வறுத்து பொடிக்கவும்)

செய்முறை
  • அரிசி மற்றும் பருப்பை கழுவி ஊற வைக்கவும்.
  • குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு காய்கள் அனைத்தையும்சேர்த்து பொடித்து வைத்துள்ள பொடியையும் சேர்த்துகலக்கவும்.
  • அதில் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து கலந்துபுளித்தண்ணீர்மற்றும் 10 கப் தண்ணீர் சேர்த்துஉப்பும் சேர்த்து கலந்து மூடிவைத்து 6 விசில் வரை விடவும்.
  • கடாயில் நெய் மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு,பெருங்காயம் தாளித்துவெங்காயம்கறிவேப்பிலை சேர்த்துநன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும்குக்கரில் உள்ள சாதத்துடன்கலந்துமல்லித்தழை தூவி வைக்கவும்.







அப்பளம் அல்லதுசிப்ஸ் நல்ல combination.

இது செய்வதற்கு சுலபமானதுசுவையும் நன்றாக இருக்கும்.
சாதத்துக்கு சேர்ப்பதைப்போல தண்ணீர் இரண்டு மடங்கு சேர்க்கவேண்டும்.எல்லா காய்களும் சேர்க்கலாம்.

HS.