கணினி கல்வி

(1)

The Multi Media Soft Technologies
ஒர் இனிய அறிமுகம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புள்ள சகோதரர்களுக்கு
நம்முடைய முஸ்லிம் உம்மத் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது யாவரும் அறிந்ததே. சச்சார் கமிட்டி இதனை அறிக்கையாக ஊருக்கேவெளிச்சம் போட்டுக் காட்டியது. கல்வியை எங்கு கிடைத்தாலும் பெற்றுப் பயனுற்ற உலகிற்கே முன்னோடிகளாய் திகழ வேண்டிய சமூகம் இன்றோ நாதியற்றுச் சீர்குழைந்து நிர்க்கதியாய் தெருவேரங்களில் முடங்கிக் கிடக்கின்றது. வாழ்க்கைக்குப் பணம்சம்பாதித்தால் போதும் எனனும் மனப்பான்மையினால் வணிகம் வியாபாரத்தை மட்டும்மே இலக்காகக் கொண்டு காசு பணத்தை மட்டும்மே தேடியலையும் சமூகமாய் நாமின்று மாறிவிட்டோம். இந்நிலையை மாற்றியே ஆகவேண்டும்அதுவும் விரைவாய் வெகு விரைவாய். அதற்கான ஒரு சிறு முயற்சிதான் தி மல்ட்டி மீடியா ஸாஃப்ட் டெக்னாலஜி இது ஒரு சமுதாய நிறுவனம்.

இன்றைய வேகஉலகில் தவிர்க்வே முடியாத ஓர் அம்சமாய் திகழுவது கணிணி என்பதை செய்தித்தாள் வாசிக்கத் தெரிந்தவர்கள் கூட மிகச்சரியாக புரிந்து வைத்திருப்பார்கள். அக்கணிணித் துறையில் நம்மவர்களை வல்லவர்களாகவும் சிறிகடித்து பறப்பவரளாகவும் உருவாக்கவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டுள்ளது தி மல்ட்டி மீடியா ஸாஃப்ட் டெக்னாலஜி
கம்ப்யூட்டர் என்பது ஏதோ கண்க்கு போடும் கருவியோ மொபைல் ஃபோன்களுக்கு டவுன்லோாடு செய்யும் மெஷினோ கடைக்கு வைக்கும் பேனர்களை உருவாக்கும் இயந்திரமோ அல்ல. கண்டிப்பாக இல்லை. மாறாகஉலகத்தில் வெற்றிவாய்ப்புகளை குவிக்க நினைப்பவர்களுக்கு வாசலை அகலமாகத் திறந்து வைக்கும் வெற்றிச்சாவி.

கம்ப்யூட்டர் பயில வேண்டுமென்றால் ஆயிரக்கணக்கில் செலவளிக்கவேண்டும். நிறையப் படித்திருக்க வேண்டும் என்றெல்லாம்நினைத்துக்கொண்டு அதைப் பற்றி யோசிக்கவே நாம் பயப்படுகிறோம். தமிழ்நாட்டில் கம்ப்யூட்டர் துறையில் முன்னிணியில் திகழுகின்ற நிறுவனங்களில் நுழைந்து பார்த்தால்நுழைவது என்ன அவற்றின் விளம்பரங்களைக் கண்ணுற்றாலே நமக்கு கண்டிப்பாக நமக்குகம்ப்யூட்டர் பயிலவேண்டும் என்னும் எண்ணமே வராது.

ஏராளமாய் சம்பாதிக்க வேண்டும் என்னும் வணிகநோக்கம் இல்லாமல் சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதை முதல் இலக்காகக்கொண்டு இந் நிறுவனம் துவக்கப் பெற்றுள்ளது. முஸ்லிம் பெண்கள்,முஸ்லிம் மாணவர்கள்மாணவியர்கள் என அனைத்து தரப்பாரும் பயனுறும் வகையில் பல்வேறு துறைக்கல்வியை இந்நிறுனம் வழங்க உள்ளது.

அதுமட்டுமல்லாமல் சமூகத்திற்கு வழிகாட்டுகின்ற உலமாக்களைப் பற்றி யாருமே கவலை கொள்ளுவதாகத் தெரியவில்லை. பள்ளியில் நின்று தொழுவைப்பது மட்டும் அவர்களுடைய பணியாக இருக்காலாகாது. மாறாக சமூக அரங்கிலும் முன்னிணியில் நின்று அவர்கள் பணியாற்றியாக வேண்டும்அதற்கான பல்திறன் தகுதிகளை அவர்கள் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அவற்றுள் மிக முக்கியமானது கணிணிப் பயிற்சி. கணிணிப் பயிற்சியின் மூலம் அவாகள் உலகத்தை மட்டும் அறிந்து கொள்ளப் போவதில்லை. அத்தோடு அரபி மொழியையும் வளர்த்துக்கொள்ள முடியும் ஆயிரக்கணக்கான அரபி நூற்களை அணுகி வெகு எளிதாக ஆய்வுக்கண் கொண்டு அறிவமுதம் பருகமுடியும்.

சமூகத்தின் பெருந்தகைகளான தங்களிடம் கோரிக்கையொன்றை ஈங்கு நாங்கள் முன்வைக்கிறோம். சமூகநலன் கருதி துவங்கப்பட உள்ள இப்பணிக்கு தங்களுடைய ஆதரவையும் ஆலோசனையையும் உறுதுனணயையும் உதவிகளையும் ஒத்தாசசைகளையும் எதிர்நோக்குகிறோம்.

சிற்பான முறையில் இற்றிறுவனத்தை இயக்க துனைபுரியும் வகையில்15 கணிணிப்பொறிகளை வாங்கியாக வேண்டியுள்ளது. எனவே,தங்களால் இயன்ற அளவு ஒன்றுஇரண்டுநான்குஎன கணிப்பொறிகளை வாங்கியளிக்குமாறும் முஸ்லிம் உம்மத்தினரை முன்னேற்றம் முயற்சியில் இயன்ற உதவி ஒத்தாசைகளை வழங்குமாறும் இந்த பணி இறைவனின் நற்கூலி பெறுவாதுதான் எங்கள் நோக்கம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு

இஸ்லாமிய சகோதரன்


(2)
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 -ல் எளிதாக வேலை செய்ய 

நம்மில் பலர் மைக்ரோசாப்ட் Office 2003 -ல் வேலை செய்து பழக்கப்பட்டவர்கள். திடீரென Office 2007 உபயோகிக்க துவங்கும் நிலை வரும்பொழுது, அதில் டூல்பாருக்கு பதிலாக உள்ள ரிப்பன் மெனுவை பார்த்து, சற்று திணறி, சில கட்டளைகளை தேடி சலித்துப்போய், மறுபடியும் 2003 இற்கே மாறி விட்டிருக்கிறோம்.

இதற்கு முக்கியமான காரணம் நாம் உபயோகிக்கப் போகும் கட்டளை எந்த ரிப்பன் மெனுவிற்கு உள்ளே கொடுக்கப்பட்டுள்ளது என்ற குழப்பமே ஆகும்.

நாம் ஒரு கணினி தொழில்நுட்ப வல்லுனராக இல்லாமலிருந்தாலும், புதிதாக வருகின்ற தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டும் உபயோகப்படுத்தவும் வேண்டுமாய்தான் இருக்கிறோம்.

இதோ உங்களுக்காக, Office 2007 -ல் நீங்கள் தேடும் கட்டளைகளை எந்த ரிப்பனில் உள்ளது எனத் தேடித்தர, Microsoft Office Labs -இன் புதிய Add-in.

தரவிறக்க சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதை பதிந்து கொள்வது மிகவும் எளிதானது. பதிந்து கொண்டவுடன். Excel அல்லது Word என ஏதாவது ஒரு அப்பிளிகேஷனை திறந்தால் அதில் வழக்கமாக உள்ள ரிப்பனுக்கு அருகாமையில் Search என்ற புதிய tab வந்திருப்பதை பார்க்கலாம்.




இந்த சர்ச் பாக்ஸில் நமக்கு தேவையான கட்டளைகளை டைப் செய்தால் போதுமானது.




சரியாக கட்டளைகளையே டைப் செய்ய வேண்டுமென்றில்லை, உதாரணமாக Font size பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ, சர்ச் பாரில் smaller என டைப் செய்தால் போதும். அதுமட்டுமல்லாமல், நாம் டைப் செய்ததில் ஏதாவது எழுத்துப் பிழை இருந்தாலும், அதுவே மாற்று வார்த்தையை தரும் கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.




Download Search Commands

அது மட்டுமல்லாமல் Office 2007 -ல் உருவாக்கிய Docx, xlsx போன்ற கோப்புகளை 2003 -ல் திறக்க முடியவில்லை என்ற கவலை இருந்தால், கீழே உள்ள சுட்டியிலிருந்து File Format Converter ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
Download File Format Converter

Hs.



(3)

கணினிக்கான கூகுளின் தமிழ்

கணினிக்கான கூகுளின் தமிழ் எழுதி






கணினியில் தமிழில் எழுத்து பல்வேறு தமிழ் எழுதிகள் இருந்தாலும் கூகுளின் தமிழ் எழுதி வரவேற்பை பெற்றுள்ளது. கூகிள் தமிழ் எழுதி குறித்து ஏற்கனவே பல இடுகைகள் எழுதி உள்ளேன். கூகிள் தமிழ் எழுதியின் பெரிய பின்னடைவு இணைய தொடர் இணைப்பின்றி அதனை உபயோகிக்க இயலாது. Notepad, Word போன்றவற்றில் கூகிள் தமிழ் எழுதியை உபயோகிக்க இயலாது.

இப்போது இந்த பின்னடைவும் நீக்கப்பட்டு உள்ளது. இனி கூகிள் தமிழ் எழுதியை உபயோகிக்க இணைய இணைப்பு தேவை இல்லை. உங்கள் கணினியில் வேண்டுமென்ற இடத்தில் கூகிள் தமிழ் எழுதி மூலம் தமிழில் தட்டச்சலாம்.

இதற்கு கூகுளின் ஐஎம்ஈ(IME) எனும் மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொண்டால் போதுமானது. இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 இயங்குதளங்களில் வேலை செய்யும்.

இதனை தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். 'Choose your IME Language' என்பதில் தமிழ் என்பதனை தேர்வு செய்து தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.



தோன்றும் விண்டோவில் Keyboards and Languages என்பதில் Change Keyboards என்பதை கிளிக் செய்து கொண்டு Google Tamil Input என்பதனை தேர்வு செய்து கொள்ளவும். விளக்கத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.




அவ்வளவுதான் இனி நீங்கள் கணினியில் இனி எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்து கொள்ளலாம். ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் மாறிக் கொள்ள F12 விசையை (F12 Key) அழுத்தி கொள்ளவும்.

இனி நீங்கள் தமிழில் தட்டச்சும் போது எல்லாம் தொடர்ந்து இணைய இணைப்பில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

கூகுளுக்கு நன்றி. HS.

SUNDAY, FEBRUARY 7, 2010


விஸ்டா / விண்டோஸ் 7 -ல் வன்தட்டில் பார்ட்டிஷன்களை சுருக்க, விரிக்க மற்றும் உருவாக்க 


நாம் புதிதாக மடிகணினி வாங்கும் பொழுது, வழக்கமாக அதில் விண்டோஸ் 7 அல்லது விஸ்டா இயங்குதளம் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும். இப்படி வாங்கிய மடிக் கணினிகளில் பல பேருக்கு ஏற்படுகின்ற சிக்கல் ஒன்று உண்டு. நம்மில் பலர் டெஸ்க் டாப் கணினிகளில் அதிகமாக பயன்படுத்தி பழக்கப்பட்டவர்கள், அதில் நமக்கு தேவையான கோப்புகளை நமது வசதிக்கு ஏற்றவாறு D,E,F என எந்த பார்ட்டிஷன்களிலும் வைத்துக் கொள்வது வழக்கம்.


ஆனால் பல மடிக்கணினிகளில் வன்தட்டின் கொள்ளளவு 320GB / 500GB என எவ்வளவு இருந்தாலும், இரண்டு பார்ட்டிஷன்கள் மட்டுமே இருக்கும், அதிலும் ஒன்று (C) இயங்குதளத்திற்கும் மற்றொன்று (D) ரெகவரிக்கும் மட்டுமே இருக்கும். அந்த 'ரெகவரி பார்ட்டிஷனை தொடாதே' என எச்சரிக்கை வேறு ஒருபுறம் பயமுறுத்தும். என்ன செய்வது நாமோ D for DATA, G for Games என பழக்கப்பட்டவர்கள். இதற்கு தீர்வாக பார்ட்டிஷன் மேஜிக் போன்ற பல மென்பொருட்கள் இருந்தாலும், விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் உள்ளிணைக்கப் பட்டுள்ள வசதியை பயன்படுத்தி,ஏற்கனவே உள்ள C பார்ட்டிஷனின் அளவை குறைத்து, புதிதாக ஒரு பார்ட்டிஷனை எப்படி நிறுவுவது எனப் பார்க்கலாம்.


விண்டோஸ் 7 / விஸ்டாவில் ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து Control Panel சென்று சர்ச் பாக்ஸில் Partition என டைப் செய்து வரும் லிங்கில் Disk Management திரையை திறந்து கொள்ளுங்கள்.





Disk Management திரையில் நீங்கள் சுருக்க விரும்பும் பார்ட்டிஷனை (உதாரணமாக C Drive) வலது கிளிக் செய்து “Shrink Volume” ஐ கிளிக் செய்யுங்கள்.







இனி திறக்கும் Shrink C: என்ற வசனப் பெட்டியில் அந்த பார்ட்டிஷனை எவ்வளவு சுருக்க வேண்டும் என்பதை MB -யில் கொடுக்க வேண்டும். உதாரணமாக 100 GB அளவுள்ள பார்ட்டிஷனை 80 GB அளவாக சுருக்க Enter the amount of space to shrink in MB என்பதற்கு நேராக 20000 என கொடுக்க வேண்டும்.





பிறகு Shrink என்ற பொத்தானை அழுத்தினால் போதுமானது.


இனி உங்கள் வன் தட்டில் Unallocated பார்ட்டிஷன் ஐ வலது கிளிக் செய்து புதிய பார்ட்டிஷனை உருவாக்கிக் கொள்ளலாம்.


இதே போல பார்ட்டிஷனை விரிவு படுத்த உங்கள் வன்தட்டில் உபயோகப்படுத்தாத அதிகப்படியான இடம் இருந்தால் Shrink Volume க்கு முன்னதாக உள்ள Extend Volume எனும் வசதியை தேர்வு செய்து தேவையான பார்ட்டிஷனை விரிவு படுத்தலாம்.


HS.





(4)

விண்டோஸ் டிரைவர்ஸ் அனைத்தையும் பேக்கப் செய்யும் இலவச யுட்டிலிட்டி


புதிதாக கணணி வாங்குபவர்களுக்கு டிரைவர் சிடி தருவார்கள். கணனியின் இயங்குதளத்தை மீண்டும் நிறுவும் போது இந்த சிடி மூலம் எல்லா டிரைவர்ஸையும் நிறுவி விடலாம். எனினும் டிரைவர் சிடி தொலைந்துவிட்டால் என்ன செய்வது. இவ்வாறான சநதர்ப்பததில் உதவுவது தான் Double Driver எனும் இலவச யுட்டிலிட்டியாகும்.





Double Driver ஐ கணனியில் நிறுவி ஸ்கான் செய்து பின்னர் பேக்கப் செய்யுமாறு பணித்தால் எல்லா டிரைவர்களையும் தனித்தனியாக பால்டர்களில் சேமித்துவிடும்.
இனி இலகுவாக கணனியை ரீஇன்ஸ்டால் செய்யும் போது பயன்படுத்தலாம்.


டவுண்லோட் செய்ய http://www.boozet.co.cc/dd.htm


By


HS.
(5)





mobile witch remote



connect to a projector



நோக்கியோ டெலிபோன்,கணினி மற்றும் டெலிவிசன்(tv) இந்த மூன்றுக்கும் ஒரு அற்புதமான தொடர்பை ஏற்படுத்தினால் நமக்கு மிக பெரிய வுதவியாக இருக்கும்.




அந்த அற்புதம் இன்றயபதிபில் பார்போம்.




நம்மிடம் இருக்கும் நோக்கியா போனையே நமது லாப்டபுக்கு மைஸாக (bloutooth)மற்றும் ரிமோட்டாக ப்லூடூத் வுதவியுடன் பயன் படுத்தமுடியும் அப்படியே TVயையும் இயக்கமுடியும். இந்த mobile witch remote மென்பொருள் வுங்கள் கணினியில் இருந்தால்.




மிகவும் பயன்வுள்ள இந்த மென்பொருள் குறைந்த கொள்ளளவே கொண்டுள்ளது (3.32 MB) இந்த மென்பொருளை இலவசமாக பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.




பதிவிறக்கம் முடிந்ததும் save or run வரும் கணினிக்கு புதியவர்கள் run தேர்ந்துஎடுக்கவும்,








i accept என்று இருக்கும் கட்டத்தில் மார்க்கை எடுத்துவிடவும் இல்லையேன் டூல்பரும் சேர்ந்து நிறுவப்பட்டுவிடும்.




இப்போது மென்பொருள் வுங்க கணினியில் நிறுவப்பட்டு கொண்டு இருக்கும்.




கணினியில் நிறுவிக்கொண்டு இருக்கையிலேயே நமது கணினியில் java இலையெனில் அதுவாகவே ஜாவா நிறுவுவதற்கு ஒருதளம் திறந்து குடுக்கும்.




ஜாவா தளம் திறக்கப்படவில்லை என்றால்?வுங்கள் கணினியில் முன்போ ஜாவா நிறுவப்பட்டு இருக்கலாம் ஒருவேளை ஜாவா இல்லையேன் தேவைபட்டால் மட்டும் இங்கு கிளிக் செய்து ஜாவா இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும்(ஜாவா நிறுவும் போது இணையதொடப்பு இருப்பது சிறந்தது)ஜாவாவையும் நிருவிகொல்லுங்கள்.




கணினியில் mobile witch remote மென்பொருள் நிறுவியதும் இதன் icon கணினித்திரையில் தோன்றும் கீலிருக்கும் படத்தில் இருபதைபோல்.





இப்பொது ஒருமுறை மௌஸின் வுதவியுடன் refresh செய்தால் இரண்டு icons திரையில் வந்துவிடும் கீழே இருபதைபோல்.





இதில் மேல் இருபது கணினிக்காக கீழே இருபது (Nokia Application Installer)போனில் நிறுவ.




Nokia Application Installerரை போனில் நிறுவுவதற்கு பலவழிகள் இருந்தாலும் நோக்கியா pc suite மூலம் நிறுவுவதுதான் சிறந்தது,nokia pc suite சாப்ட்வேரை போன் வாங்கும் போதே ஒரு டிஸ்க் இலவசமாக தருவார்கள்.




pc suite CD தற்போது கைவசம் இல்லையென்றால்இங்கு கிளிக் செய்து இலவசமாக
Nokia pc suite மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொல்லுங்கள்.(Nokia pc suite சாப்ட்வேர் எப்போதுமே கணினியில் இருப்பதுதான் நல்லது அப்போதுதான் நோக்கியா நிறுவனத்தின் புதிய,புதிய பதிப்புகள் வுங்கள் போனில் நிருவிகொள்ளமுடியும்)




Nokia pc suite மென்பொருளை கணினியில் நிறுவியபிறகு முதலில் பதிவிறக்கம் செய்த ரிமோட் சாப்ட்வேருக்கு(mobile witch remote) வருவோம்.




(Nokia Application Installer)மென்பொருளை போனில் நிறுவ போனையும் கணினியையும் ப்லூடூத் மூலம் இனைதுவிடவேண்டும்.





இப்பொது இந்த படத்தில் கீழே இருபதின்மேல் (Nokia Application Installer) (MWRemot....) மௌஸை வைத்து வலதுகிளிக் செய்தால் install with Nokia Application Installer என்று இருப்பதை தேர்வுசெய்தால் மென்பொருளை போனில் நிருவதுடங்கிவிடும்.




கணினியின் திரையிலும் டெலிபோனின் திரையிலும் நிறுவவேண்டுமா என்று கேட்கும் அனைத்திற்கும் ok குடுத்துவிட்டால் போதும்.




இப்போது டெலிபோனின் மென்பொருள் நிறுவப்பட்டு இருக்கும் நமது டெலிபோனில் (menu + installations + remote) சென்று பார்க்கவும் இதன் ஐகான் தெரியும்.





நிறுவும் வேலைகள் முடிந்துவிட்டது இப்போது ரிமோட்டாக பயன் படுத்தும் முறையை பார்போம்.




முதலில் கணினியின் திரையில் இருக்கும் இதன் iconனை கிளிக் செய்யவும் ஐகானை கீழே பார்க்கவும்.





இப்பொது கீழே இருபதைபோல் ஒரு விண்டோ திறக்கும்.





இப்போது போனில் menu + installations + remote சென்று ரிமோட் ஐகானை திறக்கவும் search for servers வரும் சிறிதுநேரத்தில் நமது கணினியின் பெயர் போனில் வந்துவிடும் கணினியின் பெயர்தெரியும் இடத்தை திறந்தாள் கீழே இருபதைபோல் வரும்.


இது கணினியின் திரையில் தெரிவது



இது போனின் திரையில் தெரிவது.



இதில் mouse mode,keyboard mode, நமக்கு தேவையானதை தேர்வுசெய்யலாம்.




போனில் menu + tools + settings +general + personalisation + standby mode + shortcuts. சென்று shortcuts சொடுக்கி போனில் தேவையான இடத்தில் இதை வைத்து விட்டால் எழிதில் திறக்கவுதவும்.




அவ்ளோதான் வேலைமுடிந்தது இனி தொலைவில் இருந்துகொண்டே தொலைபேசிமூலம் அற்புதமாக கணினியை மௌஸின் மற்றும் கீபோர்டின் வுதவி இல்லாமல் இயக்கலாம். கணினியின் திரை முழுவதுமாக டெலிபோனின் திரைக்கு வந்துவிடும்.






connect to a projector






இப்போது கணினிக்கும் டெலிவிஷனுக்கும் தொடர்பு ஏற்படுத்துவதை பார்போம்





இது பலருக்கு தெரிந்து இருந்தாலும் கணினியின் திரை TV யில்
தெரியும் என்ற அளவிலேயே தெரிந்து வைத்து இருகின்றார்கள் இதில் இருக்கும் வசதிகளை முழுமையாக தெரிந்தால் இவ்ளோநாள் இது தெரியாமல் இருந்துவிட்டோமே என்று வருந்துவார்கள்.




முதலில் கணினியையும் டெலிவிஷனையும் இணைப்பதால் என்ன பயன் என்பதை பார்த்துவிட்டு அதை எப்படி இணைப்பது என்று பார்போம்.






கணினியின் வெரும்திரையில் மௌசை வலது செய்து கீழே கடைசியில் இருக்கும் Personalize கிளிக் செய்தால் கீழ் இருபதைபோல் ஒருவிண்டே திறக்கும்.





இதில் கீழே இடதுபக்கம் display என்பதை கிளிக் செய்தால் கீழே இருபதைபோல் ஒரு விண்டோவ் திறக்கும்.





இதில் இடதுபக்கம் connect to a projector என்பதை தேர்வு செய்தால் கீழ் இருப்பதை போல் ஒருவிண்டோவ் திறக்கும்.





அல்லது சுருக்கமாக் கீபோர்டில் விண்டோ படம் போட்ட கீயையும் P என்னும் கீயையும் சொடுக்கலா.








(விண்டோ 7 மற்றும் Windows Vista ஒரேமாதிரிதான் Windows XP மட்டும் FN key அழுத்திக்கொண்டு(function key) F5, F7 or F8 அழுத்துவதன் மூலம் எழிதில் திறந்து விடலாம்)இதில் இன்னும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இங்கு
கிளிக் செய்துபார்க்கவும்.




இதில் நான்கு வகையான படங்களும் நான்கு வகையான வசதிகளை கொண்டது நமக்கு தேவையானத்தின் மேல் மௌசால் கிளிக் செய்து தேர்வு செய்துகொள்ளலாம்.




1 Computer only இதை தேர்வு செய்வதன்மூலம் கணினிக்கும் tv கும் வுள்ளதொடர்பை துண்டிப்பது.




2 duplicate இதை தேர்வு செய்வதன் மூலம் கணினியின் திரையில் தெரிவது அனைத்தும் tv யிலும் தெரியும்.




மூன்றாவதாக இருப்பதுதான்(extend)மிக மிக அற்புதமான பயன் தரக்கூடியது




3 Extend இதைதேர்வுசெய்தால் நமது கணினியின் ஸ்க்ரீன் மட்டும் TV யில் தெரியும்.
நமது மௌசின் கர்சரை(mouse cursor) tv பக்கம் இழுத்து செல்லுங்கள் கர்சர் tv யில் தெரிவதை பார்க்கலாம்.




Extend தேர்வு செய்வதால் வசதிகள்என்ன என்று பார்போம். இரண்டு நண்பர்கள் இருக்கும் அறையில் ஒருவர் இணையத்தில் ஏதேனும் ஒரு வீடியோ பார்க்க அல்லது டிஸ்கில் ஏதேனும் படம் பார்க்க விரும்புகிறார் மற்றவரோ இணையத்தில் வேறஎதேனும் பக்கங்களை பார்க்க விரும்புகிறார் அல்லது ஆலுவலகம் சம்மந்தமாக ஏதேனும் ஒருவேலை கணினியில் செய்யவேண்டும் இருபதோ ஒருகணினி! இதற்க்கு இந்த Extend மூலம் அற்புதமான தீர்வு கிடைத்து விடுகின்றது.




அதாவது நண்பர் பார்க்க விரும்பும் அந்த விண்டோவை மட்டும் மௌசின் கர்சர்(mouse cursor) வுதவியுடன் இழுத்து சென்று டிவி பக்கம் வைத்து விடுங்கள் நண்பர் tv யில் அவருக்கு தேவையான வீடியோ வந்து விட்டதால் வுன்களை தொந்தரவு செய்யாமல் tv யை பார்க்க ஆரம்பித்து விடுவார் இந்த EXTEND என்கின்ற மந்திர சாவிமூலம்.




இன்னு விபரம் தேவையெனில் கீழே வீடியோவை பார்க்கவும்






















4 projector only இதனை தேர்வுசெய்வதன்மூலம் கணினியின் திரையை மூடிவிட்டு tv கணினியின் திரையை பார்க்கலாம் இது எதற்கு பயன் படும் என்றால் எதேனு படம் பார்பதாக இருந்தால் கணினியின் திரையில் பார்பதைவிட கணினியில் இருந்து tv யில் பார்ப்பது நன்றாக இருக்கும் ஒரு DVD பிளயரின் தேவையை இது பார்த்துவிடும்.








இப்போது எப்படி டிவியுடன் கணினியை இணைப்பது என்றுபார்போம்.








கணினியையு டிவியையும் இணைக்க கீழே இருக்கும் படத்தில் ஏதேனும் ஒரு கேபிள் மட்டு இருந்தால் போதும்.










இதில் நமது கணினிக்கும் டெலிவிசனுக்கும் பொருத்தமான கேபிளை வாங்கவும் குவைத்தில் இதன் விலை இரண்டுதினார்கள் மட்டுமே.








ஆடியோவிற்கு தனியாக இணைக்க வேண்டும் கீழே பார்க்கவும்





இதில் சிவப்பு மற்று வெள்ளையாக இருப்பதை டிவி யில் ஆடியோ இடத்திலும் கருப்பாக இருப்பதை கணினியல் ஹெட்செட் பொருத்தும் இடத்திலும் பொருத்தவேண்டும் (கணினிக்கும் tv க்கும் கேபிள் தொடர்பு குடுக்கும் சமயம் மின்சாரத்தை முழுவதுமாக துண்டித்து விடவேண்டும்)




கேபிள் பொருத்தி தொடர்பு ஏற்படுத்தியதும் டிவியை ஆன் செய்து ரிமோட்டில் TV/AV
மாற்றம் செய்து மேற்கூறிய connect to a projector வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.




இப்போது தொலைபேசி கணினி டெலிவிசன் மூன்றையும் இணைத்தாகிவிட்டது.


HS.




(6)

கணினியில் தொலைந்து போன பைல்களை மீட்டெடுக்க மென்பொருள்

கணினியில் தொலைந்து போன பைல்களை மீட்டெடுக்க மென்பொருள்










கணினியில் தொலைந்து போன பைல் களை மீட்டெடுக்க அனைத்து மென்பொருள்களின் லிங்க் கீழே உள்ளது .
நாம் கணிணியில் delete செய்த பைல்களையும், shift + delete செய்த பைல்களையும், FORMET & PARTITION செய்த பைல்களையும் மீட்டெடுக்கலாம்.


http://www.4shared.com/file/ioW7dozB/RECOVERY_SOFTWARE.html


[7]

Laptop Recovery: அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டியது.

நாம் புதிதாக லேப்டாப் வாங்கும் பொழுது, அதனுடன் அதற்கான Recovery DVD களை தருவார்கள். ஆனால் ஒரு சில லேப்டாப்களுக்கு இந்த DVD களை வாங்கும் பொழுது தருவதில்லை. கேட்டால் 'Recovery partition உள்ளேயே இருக்கு' என்று கூறிவிடுகிறார்கள். மற்றும் சிலர் புதிய லேப்டாப் வாங்கும் பொழுது, இது பற்றி யோசிப்பதில்லை என்பது வேறு விஷயம்.





இப்படி Recovery Disc தரப்படவில்லை எனில் பெரும்பாலும் உங்கள் லேப்டாப்பின் வன்தட்டில் Recovery partition என ஒன்று இருக்கும்.





இந்த பார்ட்டிஷனை திறக்க முயற்சிக்கும் பொழுது கீழே திரையில் உள்ளது போல எச்சரிக்கை செய்தி வருவதை கவனித்திருக்கலாம்.





இந்த Recovery Disc அல்லது Recovery partition நமக்கு எந்த வகையில் பயன்படுகிறது என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். நமது லேப்டாப்பில் வைரஸ் தாக்குதல், அல்லது வேறு ஏதாவது இயங்குதளத்தை நிறுவலாம் என்ற எண்ணத்தில் முயற்சிக்கும் பொழுது, லேப்டாப்புடன் வந்த இயங்குதளம் மற்றும் டிரைவர்கள், மென்பொருட்கள் ஆகியவை அழிக்கப்பட்டிருக்கலாம். அந்த சமயத்தில் இந்த வசதியை பயன் படுத்தி நாம் நமது லேப்டாப்பை ஃபேக்டரி Default Settings இற்கு ரீஸ்டோர் செய்துக் கொள்ளும் பொழுது, புதிதாக நாம் லேப்டாப் வாங்கும் பொழுது அதில் இயங்குதளம் மற்றும் மென்பொருட்கள், டிரைவர்கள் எவ்விதம் இருந்தனவோ அவ்விதம் திரும்ப பெற முடியும்.


இந்த Recovery Disc அல்லது Recovery partition இல் உள்ள இயங்குதளம் உரிமம் பெற்றது (Licensed OS) என்பதும் இதற்காக நாம் லேப்டாப் வாங்கும் பொழுது, ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தியிருக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.


சரி இப்படி Recovery Disc இல்லாத லேப்டாப்பிற்கு அதன் Recovery partition -இல் இருந்து Recovery டிஸ்க் உருவாக்கி வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது. அதுவும் லேப்டாப் வாங்கி குறுகிய காலத்திற்குள்ளாக, அதாவது இந்த Recovery partition சேதம் எதுவும் ஆவதற்கு முன்பாக உருவாக்கி வைத்துக் கொள்வது மிகவும் புத்திசாலித்தனமானது. இதை HP லேப்டாப்பில் எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.


இதை உருவாக்குவதற்கு நம்மிடம் தயாராக இரண்டு DVD + R டிஸ்க்குகள் இருக்கவேண்டும். (ஒரு சில Recovery disc உருவாக்கும் மென்பொருட்கள் DVD-RW, DVD+RW போன்ற டிஸ்க்குகளை ஏற்றுக் கொள்வது இல்லை). மேலும் லேப்டாப் பாட்டரி அளவை சோதித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த உருவாக்கத்தின் நேரம் சுமார் ஒரு மணி நேரம் என்பதால், இடையில் மின் வெட்டு ஏதும் இல்லாமலிருத்தல் நலம்.


முதலில் உங்கள் லேப்டாப் ஏற்கனவே இயக்கத்தில் இருந்தால் ரீஸ்டார்ட் செய்து கொள்ளுங்கள். இணைய இணைப்பு மற்றும் Wireless ஐ அனைத்து விடுங்கள். இந்த செயல்பாட்டின் போது மற்ற எந்த அப்ளிகேஷனையும் இயக்க வேண்டாம்.


Start பட்டனை க்ளிக் செய்து All Programs சென்று PC Help & Tools மற்றும் Recovery Disc Creation ஐ க்ளிக் செய்து கொள்ளுங்கள். அல்லது ஸ்டார்ட் மெனுவில் சர்ச் பாக்ஸில் Recovery Disc Creation என டைப் செய்து HP Recovery Manager ஐ திறந்து கொள்ளுங்கள்.





Welcome திரையில் Next பட்டனை க்ளிக் செய்யுங்கள். Insert Blank Recordable disc திரை வரும் வரை Next பட்டனை க்ளிக் செய்து வாருங்கள்.





இப்பொழுது Blank DVD+R டிஸ்க்கை நுழையுங்கள். இச்சமயத்தில் ஏதேனும் AutoPlay திரை வந்தால் அதனை மூடி விடுங்கள்.





Next பட்டனை அழுத்தி பொறுமையாக காத்திருங்கள்.





முதல் DVD உருவான பிறகு தானாகவே eject ஆகிவிடும். இதை எடுத்து முதலில் "Recovery Disc 1 of 2" என எழுதி வைத்துக் கொண்டு, அடுத்த DVD ஐ நுழைத்து Next பட்டனை க்ளிக் செய்யுங்கள்.





இந்த பணி முடிந்த பிறகு, இரண்டாவது DVD க்கும் அதே போல பெயர் எழுதி வைத்துக் கொண்டு, Finish பட்டனை க்ளிக் செய்து மூடி விடுங்கள்





பெரும்பாலான லேப்டாப்களில் இந்த Recovery டிஸ்க் உருவாக்குவது ஒரே ஒருமுறை மட்டும்தான் அனுமதிக்கப் படுகிறது என்பதனால், இந்த செயல்பாட்டின் பொழுது மிகவும் கவனமாக இருப்பதுடன், நல்ல தரமான DVD களை பயன்படுத்துவதும், அவற்றை பத்திரமாக வைத்திருப்பதும் அவசியம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.





அவ்வளவுதான். இனி உங்கள் லேப்டாப்பில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு, ரீஸ்டோர் செய்ய வேண்டுமெனில் இந்த DVD களின் மூலம் பூட் செய்து சரி செய்ய முடியும்.




(8)


போட்டோஷாப் பாடம் 

http://tamilpctraining.blogspot.com/








[9]

மொபைலுக்கான தரவிறக்க இணையதளங்கள்!




மது கைப்பேசிக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், மென்பொருட்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று அனைத்தையும் நாம் பைசா செலவில்லாமல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணைய உலகில் பல தளங்கள் உள்ளன. அதிகபட்சம் நாம் சம்பந்தப்பட்ட தளங்களில் மெம்பராகி விட்டால் (அதுவும் இலவசம் தான் ) போதும். நாம் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கீழே மொபைலுக்கான சில இலவச தரவிறக்க தளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று உங்கள் போனுக்கு தேவையான எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.அதற்கு நீங்கள் இதில் மெம்பராகி நமது கைப்பேசி மாடலையும் தேர்வு செய்து விட்டு வேலையை ஆரம்பிக்கலாம்.அதிகபட்ச நிறுவனங்களின் பலதரப்பட்ட மாடல் கைப்பேசிகளுக்கு இங்கே எல்லாமும் கிடைக்கிறது.அது மட்டுமல்லாமல் நேரடியாக நமது கைப்பேசியிலேயே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அதற்கு உங்கள் கைப்பேசியின் பிரவுசரில் http://m.zedge.netஎன்று டைப் செய்து இணையலாம்.

நமது கைப்பேசிக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், ரிங்டோன்கள்,தீம்ஸ்,மென்பொருட்கள் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் மெம்பராகவில்லை என்றால் ஒவ்வொரு தரவிறக்கத்துக்கும் குறைந்தது 10 நொடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும், அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.பின்பு தரவிறக்கம் செய்ய ஆரம்பியுங்கள்.
மேலும் இந்த தளத்தில் உங்களிடம் இருப்பவற்றையும் தரவேற்றம் செய்து மற்றவர்களின் பார்வைக்கு வைக்கலாம்.

* www.getjar.com     
முழுக்க முழுக்க ஜாவா,மற்றும் சிம்பியன் வகையை சார்ந்த போன்களுக்கான கேம்ஸ்,மென்பொருட்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் தளம் இது.
பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் மென்பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. மெம்பராகாமல் நேரடியாக தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம்.கைப்பேசியில் நேரடியாக தரவிறக்கம் செய்ய உங்கள் கைப்பேசியின் பிரவுசரில் http://m.getjar.net என்று டைப் செய்து இணையலாம்.

ஐ-போன்,சிம்பியன்,ஜாவா வகையை சேர்ந்த போன்களுக்கான மென்பொருட்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தரவிறக்கம் செய்து கொள்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மேன்போருளைப்பற்றிய சிறு குறிப்பும் உள்ளது,அதை படித்து பார்த்து உங்கள் போனுக்கு தேவையானால் மென்பொருளை தேர்ந்தேடுக்கலாம்.

வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ்,மென்பொருட்கள்,ஸ்க்ரீன் சேவர்ஸ் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மெம்பராக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஐ-போன்,சிம்பியன்,ஜாவா,ஆன்ராய்டு வகையை சேர்ந்த போன்களுக்கு வால்பேப்பர்கள்,கேம்ஸ்,தீம்ஸ்,மென்பொருட்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கியமாக இதில் முதலில் மெம்பரான பிறகு தான் தரவிறக்கம் செய்ய முடியும்.அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.கூடுதலாக மொபைல் உலகில் வந்திருக்கும் புதிய சம்மாச்சரங்கள் அனைத்தையும் இந்த தளம் உடனுக்குடன் நமக்கு தருகிறது.

இந்த தளத்தில் Fun, Games and Entertaining என்ற பிரிவில் சென்று நமது எந்த வகை  கைப்பேசிக்கும் தேவையான தரவிறக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.தரவிறக்கத்தை ஆரம்பிக்க முதலில் இதில் மெம்பராக வேண்டும்.புதிய மென்பொருட்களையும்,பழைய மென்பொருட்களின் புதிய அப்டேட் செய்யப்பட்ட மென்பொருட்களும் உடனுக்குடன் தருகிறார்கள்.
HS.