[1]
வீடியோவில் ஆபாச காட்சிகளை நீக்க
சில ஆங்கில படங்கள் - தமிழ்படங்கள் - மற்றும் பிற மொழிப்படம் என எல்லா படங்களிலும் கதை - நகைச்சுவை - சண்டைக்காட்சி என அருமையாகஇருக்கும். ஆனால் நடுவில் சில படுக்கை அறை காட்சிகளையும் - ஆபாச காட்சிகளையும் -வன்முறை காட்சிகளையும் இணைத்துவிடுவார்கள். குடும்பம் - குழந்தைகளுடன் அமர்ந்து படம் பார்க்கும் சமயம் நமக்கு தர்மசங்கடமாகிவிடும். அந்த மாதிரி சமயங்களில் வீடியோக்களில் உள்ள அந்த மாதிரி ஆபாச காட்சிகளைxxx,18 +,adults only நாம் சுலபமாக இந்த சாப்ட்வேர் மூலம நீக்கி விடலாம்.11 எம்.பி. உள்ள இந்த சாப்ட்வேர் முற்றிலும் இலவசமே.இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.,இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் input file என்கின்ற இடத்தில் படத்தினை தேர்வு செய்யுங்கள். அதைப்போலOutput file என்கின்ற இடத்தில் பைலை சேமிக்கும் இடத்தை தேர்வு செய்யுங்கள்.
கீழே உள்ள பிளே பட்டனை அழுத்தி படத்தினை ஓடவிடுங்கள்.
ஆபாச காட்சிகள் -வன்முறை காட்சிகள் எங்கு துவங்குகின்றதோ அந்த இடத்தில் கீழே உள்ள கத்தரி போன்ற ஐ-கானை கிளிக் செய்யுங்கள்.அதைப்போல முடியும் இடத்திலும் மீண்டும் கத்தரிபோன்ற ஐ-கானை கிளிக் செய்யுங்கள்.இப்போது X என்கின்ற டெலிட் பட்டனை கிளிக் செய்து பின்னர் Save Video கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.
உங்கள் பணிமுடிந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ மீண்டும் வரும்.
இப்போது நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தீர்களேயானால் உங்கள் வீடியோ சென்சார் செய்து இருக்கும்.இனி தைரியமாக அனைவருடன அமர்ந்து படத்தை பார்ககலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
உங்கள் ஹயாஸ்.
ஒரு தாமரைக்கு எத்தனை சுழியம்?
[எழுத்தோவியங்கள்]
ஒரு தாமரைக்கு எத்தனை சுழியம்?
ஒரு தாமரைக்கு எத்தனை சுழியம்?
எனக்கு வந்த ஒரு மடல் கீழே சாய்வெழுத்துகளில் :
அமெரிக்க முறைப்படி எண்களை மில்லியன், பில்லியன், ட்ரில்லியன்,க்வாட்ரில்லியன், குயின்டில்லியன், என்று துவங்கி சென்டில்லியன்வரை
நீட்டிக்கொண்டே போகலாம். (சென்டில்லியன் என்றால் ஒன்று போட்டு303ஸைஃபர் போடவேண்டும்).
ஆனால், நம் இந்தியாவிலோ கோடியைத் தாண்டிவிட்டால் பிறகு வேறுவார்த்தை
கிடையாது. அதன் பிறகு நூறு கோடி, ஆயிரம் கோடி, லட்சம் கோடி,கோடி கோடி
என்று கூறித்தான் மக்களைக் குழப்ப வேண்டி யிருக்கிறது. ஒருகாலத்தில்
கோடி என்பது மிகப் பெரிய எண்ணாக இருந்ததால், அதற்கு மேல்வார்த்தை
தேவைப்படவில்லை. ஆனால், இப்போதெல்லாம் ஒரு ஊழல் மட்டுமே ஒரு லட்சத்து 76ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடத்தப்படுகிறது.
வருகிற காலத்தில் கோடி கோடி ஊழல் எல்லாம் வரக்கூடும். எனவே,கோடிக்கு
மேல் புதிய சொற்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு
ஏற்பட்டுள்ளது.
இதை வைத்து நம் இன்டெர்நெட் அரசியல் ஆர்வலர்கள் விளையாட ஆரம்பித்து
விட்டார்கள். எப்படி ?
1000 கோடி = 1 ராடியா
10,000 கோடி = 1 கல்மாடி
1,00,000 கோடி = 1 ராசா
ஆக, இனிமேல் பெரிய தொகைகளைக் குறிக்கும் தகவல்களைக் கீழ்க்கண்டவாறு
குறிப்பிடலாம்:
அனில் அம்பானி புதிதாகக் கட்டியிருக்கும் வீட்டின் மதிப்பு சுமார்
4.5 ராடியா ரூபாய் (4,500 கோடி ரூபாய்) மதிப்பிருக்கும்.
ஆண்டுதோறும் கெரஸினுக்கு மத்திய அரசு வழங்கும் மான்யம்
2 கல்மாடி ரூபாய் ஆகும் (20,000 கோடி ரூபாய்)
ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் தொகை
50 ராசா ரூபாய் (50 லட்சம் கோடி ரூபாய்) இருக்கக் கூடுமெனத் தெரிகிறது.
-இந்த ஐடியாவை மத்திய அரசு பரிசீலிக்கலாம்.
------------------------------
----------------------------------------நன்றி : துக்ளக் வார இதழ் 16.02.2011
----------------------------------------------------------------------
நகைச்சு வைப்பதற்காக மேலுள்ளதைக் குறிப்பிட்டாலும்,
உண்மையில் கோடிக்கு அப்பாலும் எண்களைச் சொல்வதற்கு தமிழில் முடியும் என்று தொல்காப்பியம் சுட்டுகிறது:
ஒன்று = 1பத்து = 10நூறு = 102ஆயிரம் = 103பத்தாயிரம் = 104நூறாயிரம் = 105பத்து நூறாயிரம் = 106கோடி = 107தாமரை (=கோடிகோடி) = 1014வெள்ளம் (=கோடிதாமரை) = 1021 ஆம்பல் (=கோடிவெள்ளம்) = 1028
இன்று படித்த ஒரு செய்தி இங்கே கூறத்தக்கது:
1.76 லட்சம் கோடிக்கு எத்தனை "ஜீரோ'? பதிலளித்த மாணவிக்கு ரூ. 10 ஆயிரம்.
--
Posted By இப்னு ஹம்துன் to எழுத்தோவியங்கள் at 2/13/2011 04:12:00 AM
--
H.FAKHRUDEENபஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 +966 050 7891953 / 050 1207670 050 1207670 www.ezuthovian.blogspot.com
www.mypno.com
+966 050 7891953 +966 050 7891953 / 050 1207670 050 1207670 www.ezuthovian.blogspot.com
www.mypno.com
தன்னை அறிதலும் தக்கபடி வாழ்தலும்
தேடலில் எல்லாம் தலை!
உங்கள் ஹயாஸ்.
[3]
இரவில் பாதுகாப்பான டிரைவிங்குக்கு சில டிபஸ்...
பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது வேகத்தையும்,தூரத்தையும்கணிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.தவிர,எதிரே வரும் வாகனங்களின்ம முகப்புவிளக்குகளின் வெளிச்சம் நம் கண்களை சில வினாடிகள் இருளாக்கி விடும்.இதனால்,இரவுநேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன.பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில்,விபத்துக்கள் மூன்று மடங்கு அதிகம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும்,பார்வைதிறனும் கிடைப்பதில்லை.வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமேவெளிச்சத்தை தருகின்றன.இதனால்,இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்துஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே,இரவு நேர பயணங்களில் டிரைவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள்...
•கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும்,தவிர்த்து விடுங்கள்.தவிர்க்க முடியாதகாரணங்களால் செல்லும்போது,டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் காரில் இருப்பது அவசியம்.அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோமற்றொருவர் காரை ஓட்டலாம்.
•கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால்,வெள்ளை நிற காரில் செல்வதுபாதுகாப்பானது.கார் வாங்கும்போதே இதை நினைவில் கொள்ளுங்கள். இரவில் சாலை ஓரங்களில்நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும்போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள்மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாக தெரியும்.
•பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
•இரவு நேர பயணத்தின்போது முகப்பு கண்ணாடிகள்,முகப்பு விளக்குகள்,பின்பக்கமுள்ள எச்சரிக்கைவிளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
•முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்கவேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தைஏற்படுத்தும்.
•மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம்,ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்துவிடக்கூடும்.
•முன்னால் செல்லும் வாகனத்துக்கும்,உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள்.மேலும்,வாகனத்தை பின்தொடரும்போதும்,எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள்.
•தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள்.குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை காரை நிறுத்திடீ,காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
•எதிரில் அதிக வெளிச்சத்துடனும்,அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால்,வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள்.
நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால்,பார்க்கிங் லே-பை அல்லது மக்கள் நடமாட்டமிக்கபகுதிகளில் காரை நிறுத்திவிட்டு குட்டி தூக்கம் போடுங்கள்.அதன்பின்,முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது.
•எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும்,முன்னாள் செல்லும் வாகனத்தைஅவசரப்பட்டு ஓவர்டேக் செய்ய வேண்டாம்.இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனம் தொலைவுமற்றும் வேகத்தை கணிப்பது கடினம்.இதுபோன்று ஓவர்டேக் செய்வதால்தான் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன.
காரில் இரவு பயணம் செல்லும்போது மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால்,உங்கள் இரவு பயணமும் மகிழ்ச்சியானதாகவே அமையும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.
பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும்,பார்வைதிறனும் கிடைப்பதில்லை.வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமேவெளிச்சத்தை தருகின்றன.இதனால்,இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்துஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே,இரவு நேர பயணங்களில் டிரைவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள்...
•கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும்,தவிர்த்து விடுங்கள்.தவிர்க்க முடியாதகாரணங்களால் செல்லும்போது,டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் காரில் இருப்பது அவசியம்.அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோமற்றொருவர் காரை ஓட்டலாம்.
•கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால்,வெள்ளை நிற காரில் செல்வதுபாதுகாப்பானது.கார் வாங்கும்போதே இதை நினைவில் கொள்ளுங்கள். இரவில் சாலை ஓரங்களில்நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும்போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள்மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாக தெரியும்.
•பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
•இரவு நேர பயணத்தின்போது முகப்பு கண்ணாடிகள்,முகப்பு விளக்குகள்,பின்பக்கமுள்ள எச்சரிக்கைவிளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
•முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்கவேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தைஏற்படுத்தும்.
•மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம்,ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்துவிடக்கூடும்.
•முன்னால் செல்லும் வாகனத்துக்கும்,உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள்.மேலும்,வாகனத்தை பின்தொடரும்போதும்,எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள்.
•தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள்.குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை காரை நிறுத்திடீ,காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
•எதிரில் அதிக வெளிச்சத்துடனும்,அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால்,வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள்.
நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால்,பார்க்கிங் லே-பை அல்லது மக்கள் நடமாட்டமிக்கபகுதிகளில் காரை நிறுத்திவிட்டு குட்டி தூக்கம் போடுங்கள்.அதன்பின்,முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது.
•எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும்,முன்னாள் செல்லும் வாகனத்தைஅவசரப்பட்டு ஓவர்டேக் செய்ய வேண்டாம்.இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனம் தொலைவுமற்றும் வேகத்தை கணிப்பது கடினம்.இதுபோன்று ஓவர்டேக் செய்வதால்தான் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன.
காரில் இரவு பயணம் செல்லும்போது மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால்,உங்கள் இரவு பயணமும் மகிழ்ச்சியானதாகவே அமையும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.
நன்றி: http://thatstamil.oneindia.in/lifestyle/automobiles/2011/night-driving-safety-tips-aid0090.html
உங்கள் ஹயாஸ்.
[4]
பன்றிக் கொழுப்பு.. உஷார்..
கடந்த மாதத்தில் இணையத்தில் தமிழ் சகோதரர்களுக்கு மத்தியில் உலா வந்த மின்னஞ்சல் செய்தி சற்று அதிர்ச்சியளிக்கு முகமாகவே இருந்தது. அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த செய்தி:
அதாவது ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால் (Pegal) என்ற நகரத்தில் உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றும் துறை தரத்தை நிர்ணயம் செய்யும் துறை (Quality Control) என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தை பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.
எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் தயாரிப்பை விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் போது உணவுப் பொருளாக இருந்தாலும், மருந்துப் பொருளாக இருந்தாலும் அதை சோதனைக்குட்படுத்திய பின்பே அறிமுகப்படுத்தும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனையில் விற்பனைக்கு வரவிருக்கும் உணவு மற்றும் மருந்துகளின் கலவையை (ingredients) சோதனை செய்து அதை பிரான்ஸ் நாட்டின் உணவு தரக்கட்டுப்பாடு மையம் அங்கீகாரம் அளித்தபின் மட்டுமே விற்பனைக்காக வெளிவரும். உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தில் உணவுப்பொருட்களை பிரித்து அதன் கலவையை (ingredients) ஆய்வு செய்வார்கள். இந்த கலவைகள் சிலவற்றிற்கு அறிவியல் பெயர்களும் இருக்கும், சிலவற்றிற்கு குறியீட்டுப் பெயர்களும் இருக்கும். எடுத்துக்காட்டாக E-904, E-141 என்று.
இவ்வாறு சோதனை செய்து கொண்டிருந்த ஷேக் சாஹிப் சில கலவைகளைக் (ingredients) குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது 'உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்யுங்கள், எந்தவித கேள்விகளும் கேட்கவேண்டாம்' என்ற பதில்தான் வந்தது. இவர்களின் இந்த பதில் ஷேக் சாஹிப்பின் சிந்தையில் மேலும் சந்தேகங்களை எழுப்பியது. அதற்கடுத்து அவர்களின் கோப்புகளை ஆய்ந்து பார்க்கும் போது உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை கிடைக்கப்பெற்றுத் திகைத்தார்.
சற்றேறக்குறைய எல்லா மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பாவிலும் முதலாம் வகை மாமிசமாக உணவுக்குத் தேர்ந்தெடுப்பது பன்றியே ஆகும். எனவேதான் பலவகை பன்றிகளை உற்பத்தி செய்யும் பன்றிப் பண்ணைகள் அதிகமாக அந்நாடுகளில் உள்ளன. பிரான்ஸில் மட்டும் இதுபோன்ற பன்றிப் பண்ணைகள் 42,000 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. ஏனைய விலங்கினங்களைக் காட்டிலும் பன்றியின் மாமிசத்தில் அதிகமான கொழுப்பு உள்ளது. ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் அதிகப்படியான கொழுப்பைத் தவிர்க்கவே முயற்சி செய்கின்றனர்.
இந்நிலையில் பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்பு எங்கே செல்கிறது என்பதுதான் கேள்வி?
உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தின் மேற்பார்வையில்தான் எல்லாப் பன்றிகளும் அறுக்கும் கொட்டில்களில் அறுக்கப்படுகின்றன. அறுத்த பன்றிகளிலிருந்து நீக்கிய பெரும்பான்மையான கொழுப்பை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதுதான் இவர்களுக்குத் தலைவலி. ஆரம்ப காலத்தில் முறையாக இதை எரித்துவிடுவார்கள்.
இவர்கள் பன்றிக் கொழுப்பை எரிப்பதால் எவ்வித பயன்பாடும் இல்லை. எனவே இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என எண்ணத்தொடங்கினர். பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்புகளைக் கொண்டு முதல்கட்டச் சோதனையாக சோப்புகளைத் தயார் செய்து பார்த்தனர். இவர்களின் இந்த முயற்சி பலன் கொடுத்தது. அதற்கடுத்த கட்டமாக முழுவீச்சில் இந்த பன்றிக் கொழுப்பை பல வேதியியல் நொதிப்பொருட்களைக் கொண்டு அமிலங்களாக மாற்றி விற்பனைக்கு இறக்கி விட்டனர்.
பல்வேறு காரணங்களுக்காக உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் இதை வாங்கத் துவங்கினர். அவ்வேளையில் ஐரோப்பாவில் உணவுப் பொருட்களுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. எல்லா உற்பத்தி நிறுவனங்களும் அவை உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள், காஸ்மெடிக் பொருட்கள் (சோப்பு, ஷாம்பூ, முகக் கிரிம், ஹேர் கிரிம்..) மற்றும் மருந்துப் பொருட்களின் அட்டையில் அவற்றில் கலந்துள்ள கலவைகளை (ingredients) கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் என்று. இதனால் பன்றிக் கொழுப்பு கலந்துள்ள பொருட்களில் இதை பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்றே குறிப்பிட்டு வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இஸ்லாமிய நாடுகளில் இதுபோன்ற பன்றிக் கொழுப்பு சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இத்தடையின் விளைவாக பன்றிக் கொழுப்பைச் சேர்த்துள்ள பொருட்களின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டது.
பன்றிக் கொழுப்பு என்று எழுதியிருந்தாலும் ஐரோப்பியர்களால் அப்பொருட்கள் விரும்பி வாங்கப்பட்டே வந்தன. இஸ்லாமிய நாடுகளிலும், முஸ்லிம்களாலும் இவ்வாறான உற்பத்திப் பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்று எழுதுவதற்கு பதிலாக விலங்குகள் கொழுப்பு (Animals Fat) என்று எழுதினர். அப்போது மீண்டும் ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய நாடுகளில் விலங்குகளின் கொழுப்பு அடங்கிய பொருட்களை விற்பனை செய்ய அங்கீகாரம் கேட்டனர். விலங்குகளின் கொழுப்பு என்று ஐரோப்பிய நிறுவனங்கள் கூறிய போது எந்த வகையான விலங்குகள் என்பதற்கு ஆடுகள் மற்றும் மாடுகளின் கொழுப்பு என்று கூறினர். மீண்டும் ஒரு கேள்வி அப்போது எழுந்தது. ஆடு மற்றும் மாடுகளின் கொழுப்பு எனினும் அது முஸ்லிம்களுக்கு ஹராம்தான். ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆடுகள் மற்றும் மாடுகள் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படாததால். இக்காரணத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நாடுகளின் தடையும், முஸ்லிம்களின் புறக்கணிப்பும் இப்பொருட்கள் மீது தொடர்ந்தது. கி.பி.1970-லிருந்து ஐரோப்பிய நாடுகளில் வசித்து வருபவர்களுக்கு இந்த உண்மை தெரியாமலிருக்காது.
இஸ்லாமிய நாடுகளின் தடையால் ஐரோப்பிய பெரும் பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையின் மூலம் கிடைக்கும் 75% வருவாயை இழந்தனர். இந்த 75% என்பது பல பில்லியன்ஸ் டாலர்களுக்கும் அதிகமாகும்.
இதன் முடிவாக அவர்கள் விலங்குகளின் கொழுப்பு என்பதை எழுதுவதும் தவிர்த்து குறியீட்டு மொழியைப் (Coding Language) பயன்படுத்தத் துவங்கினர். குறியீட்டு முறையானது உணவு தரக்கட்டுப்பாடுத் துறையின் நிர்வாகத்தினருக்கு மட்டுமே தெரியும். அப்பொருட்களைப்பயன்படுத்தும் பொதுமக்களுக்கு குறியீட்டு கலவைகள் (E-INGREDIENTS) பற்றி சற்றும் அறிய வாய்ப்பில்லை.
E-INGREDIENTS என்ற கலவைகளை பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பற்பசை, ஷேவிங் கிரீம், சிவிங்கம், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள், பிஸ்கட்ஸ், கார்ன் பிளாக்ஸ் (Corn Flakes), டோஃபி (Toffees), டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லா பொருட்களிலும் இந்த வகையான கலவைகளை கலக்கின்றனர். விட்டமின் மாத்திரைகள் மற்றும் பல மருந்துப் பொருட்களிலும் பன்றிக்கொழுப்பின் கலவைகளைக் கலந்து முஸ்லிம் நாடுகளில் விற்பனைக்காகப் பரவச்செய்துள்ளனர்.
பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும், பயன்படுத்துவதாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் - வெட்கம் அகன்றுவிடுதல், தீய எண்ணங்களை உருவாகிவிடுதல், வன்முறை எண்ணங்களை வளர்த்துவிடல் போன்ற தன்மைகள் தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது என்பது மற்றுமொறு செய்தி. முஸ்லிம்களை இதுபோன்ற தீய தன்மைக்கு ஆளாக்க முயற்சிசெய்யும் அவர்களின் யுக்திகளில் இதுவும் ஒன்று.
இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்கூடிய பொருட்களில் கீழ்கண்ட கலவைக் குறியீடுகள (E-INGREDIENTS) இருக்கின்றனவா என ஒப்பிட்டுப்பார்த்து அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவையாகும்..
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252,E270, E280, E325,
E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440,
E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493,
E494, E495, E542, E570, E572, E631, E635, E904.
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவையாக) ஆக்கிருக்கிறான். ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்-2:173)
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரருக்கும் விரும்பாதவரை, (பரிபூரண) முஃமினாக ஆகமாட்டார் என நபி(ஸல்) கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்: அனஸ்(ரலி))
இதுபோன்ற பன்றிக் கொழுப்பைக் கொண்டுள்ள பொருட்களை நாம் நிராகரிப்போம், மற்றவர்களுக்கும் இச்செய்தியை எடுத்துரைப்போம்!
சற்று காலத்தின் பின்சென்று சில நிகழ்வுகளை இதோடு தொடர்புபடுத்திப் பார்ப்போம். கி.பி 1857-ல் தெற்காசிய நாடுகளில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலம், கிழக்கிந்தியக் கம்பெனியில் பல்வேறு இந்தியர்கள் சிப்பாய்களாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்பொழுது பாதுகாப்புக்குத் தேவையான குண்டுகளும், துப்பாக்கித் தோட்டாக்களும், வெடிபொருட்களும் ஐரோப்பாவில் தயாரித்து ஆசிய நாடுகளுக்கு கடல்வழி மூலம் கொண்டுவந்தனர். ஐரோப்பாவிலிருந்து ஆசிய நாடுகளுக்கு கடல் மூலம் பயணிக்க அப்போது ஒரு மாதத்திற்கும் மேலாகியது. கடற் பயணத்தின்போது வெடிமருந்துப் பொருட்களும், தோட்டாக்களும் ஒன்றோடு ஒன்று உராய்வதாலும் வேறுபட்ட வெட்பநிலையாலும் வெடித்துவிடுவதும் உண்டு, வீணடைந்துவிடுவதும் உண்டு. இத்தகைய நிலையைத் தவிர்க்க தோட்டாக்கள்மீதும், வெடிகுண்டுகள் மீதும் கொழுப்பு பூச்சை மேற்கொண்டனர். அதற்கு பயன்படுத்திய கொழுப்பு பன்றிகளின் கொழுப்பும் மற்றும் மாடுகளின் கொழுப்புமாகும்.
இக்கொழுப்புகள் பூசப்பட்ட குண்டுகள் அனைத்தும் அதன் மூடியைத் திறப்பதற்கு பற்களைப் பயன்படுத்துவது போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன. பன்றிக் கொழுப்பு மற்றும் மாடுகளின் கொழுப்பு பற்றிய செய்தி சிப்பாய்களிடையே பரவ ஆரம்பித்த்தது. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியில் இருந்த பெரும்பாலான முஸ்லிம் இராணுவ வீரர்கள் பன்றி இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பிராணி என்பதாலும், இந்துமதத்தில் பசுவை தெய்வமாக வணங்குவதாலும் அதைப் பயன்படுத்தத் தயங்கினர். மேலும் இத்தகைய செயலை எதிர்த்து இந்திய சிப்பாய்கள் டில்லிக்கு அருகேயுள்ள மீரத் என்ற இடத்தில் 1857, மே 10ம் தேதி பஹதுர் ஷா தலைமையில் போராடினர். இப்போராட்டத்தில் 100 க்கும் மேலான ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டார்கள். இந்நிகழ்ச்சி 'சிப்பாய்க் கலகம்' என்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளதை வரலாறு படித்தவர்கள் அறிவார்கள்.
சென்ற ஆண்டு நடந்த சில நிகழ்ச்சிகளையும் இதோடு சற்று தொடர்புபடுத்திப் பார்ப்போம். பாலஸ்தீனத்தில் முஸ்ஸிம்களைக் கொன்று குவித்தும் அராஜகம் புரிந்தும் வரும் யூதர்கள் தங்களைப் பாலஸ்தீனப் போராளிகளிடமிருந்து காத்துக்கொள்ள இத்தகைய செயலையே கையாண்டனர். அதாவது முஸ்லிம்கள் பன்றியைத் தொடவும் மாட்டார்கள், அது அவர்களுக்கு விலக்கப்பட்டதாகும் என்பதன் அடிப்படையில் யூத மத போதகரான எலிசர் பிசர் (Eliezer Fisher) பன்றிக் கொழுப்புகளை அடங்கிய பைகள் பேருந்துகளிலும், வியாபார வர்த்தகக் கட்டிடங்களிலும், அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளிலும் அதிகமாக கட்டித் தொங்கவிட ஆலோசனையளித்தார்.
தற்கொலைப் படைகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் மேல் இந்த பன்றிக்கொழுப்பு படிந்து அசுத்தமான முறையில் இறந்துகிடப்பர். அதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். எனவே தற்கொலைப் படைகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இந்த அணுகுமுறையை இஸ்ரேலிய பாதுபாப்பு அமைச்சராகிய யாக்கூ எட்ரி (Yaacov Edri)யும் பரிந்துரை செய்தார். இச்செய்தியை பெரும்பாலான ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.
ஆரம்ப காலம் தொட்டே இஸ்லாத்தின் எதிரிகளான இதுபோன்றவர்கள் தங்களின் காழ்ப்புணர்ச்சிகளால் இவ்வாறான செயல்கள் புரிந்து வருவது புதிதல்ல. முஸ்லிம்களாகிய நாம் விழிப்புடன் இருப்போம் மேலும் அவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்.
'நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள். நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்' என்று அவர்கள் கூறுகிறார்கள். 'அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை' என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்-குர்ஆன் - 2:135)
நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்த அல்லாஹ் போதுமானவன்.
HS.
[5]
திருக்குர்ஆன் இறைவேதம்தான்...!
இது இறை வேதம்
திருகுர்ஆனை அணுகுவதற்கு முன் திருக்குர்ஆன் பற்றிய அடிப்படையான சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியம். திருகுர்ஆனை இறைவனுடைய வேதம் என்று முஸ்லிம்கள் நம்பினாலும் முஸ்லிமல்லாதவர்கள் பலர் முஹம்மது நபி அவர்களால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் என்று நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.
அகிலத்ததாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு- பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். (அல்குர்ஆன் 69:44)
அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், 'இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்' என்று கூறுகிறார்கள். அதற்கு என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்' என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 10:15)
(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) 'நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்' என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:101)
இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை.
இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: 'நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானர்வகளை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!' என்று.
(அல்குர்ஆன் 10:37-38)
அல்லது 'இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்' என்று அவர்கள் கூறுகிறார்கள்? '(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்' என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 11:13)
(நபியே! நீர் இதைக் கூறும் போது:) 'இதனை இவர் இட்டுக் கட்டிச் சொல்கிறார்' என்று கூறுகிறார்களா? (அதற்கு) நீர் கூறும்: 'நான் இதனை இட்டுக் கட்டிச் சொல்லியிருந்தால், என் மீதே என் குற்றம் சாரும்¢ நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவேன்.' (அல்குர்ஆன் 11:35)
முரண்பாடின்மை!
முஹம்மது நபி அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து 'அதை இறைச் செய்தி' என மக்களிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைக்கக்கூடும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தாமாக உருவாக்கி இதைக் கூறியிருக்க முடியாது என்பதற்கு ஏற்கத்தக்க நியாயமான பல காரணங்கள் உள்ளன. பொதுவாக மனிதர்களின் பேச்சுக்களில் முரண்பாடுகள் காணப்படும். ஒரு நாள், இரண்டு நாட்கள் வேண்டுமானால் முரண்பாடு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாகப் பேசிட இயலும். எவ்வித முரண்பாடும் இன்றி எவராலும் ஆண்டுக்கணக்கில் பேசிட இயலாது.
எந்த மாபெரும் அறிஞரின் ஐந்து வருடப் பேச்சுக்களை ஆய்வு செய்தாலும் ஏராளமான விசயங்களில் அவர் முரண்பட்டுப் பேசியிருப்பதைக் காண முடியும்.
• முன்னர் பேசியதை மறந்து விடுதல்!
• முன்னர் தவறாக விளங்கியதைப் பின்னர் சரியாக விளங்குதல்!
• கவலை, துன்பம் போன்ற பாதிப்புகள் காரணமாக போதுமான கவனமின்றி பேசுதல்!
யாரிடம் பேசுகிறோமோ அவர்கள் மனம் கோணக் கூடாது என்பதற்காக அல்லது அவர்களிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக வளைந்து கொடுத்துப் பேசுதல்!
• வயது ஏற ஏற மூளையின் திறனில் ஏற்படும் குறைபாடுகள்!
• விளைவுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் அஞ்சி இரட்டை நிலை மேற்கொள்ளுதல்!
மற்றும் இது போன்ற ஏராளமான பலவீனங்கள் மனிதனுக்கு இருப்பதால் முரண்பாடுகள் இல்லாத ஒரே ஒருவரைக் கூட காண முடியாது.
ஆனால் திருக்குர்ஆனை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சிறிது சிறிதாக 23 ஆண்டுகளாக மக்களிடம் போதித்தார்கள். இது அவர்களின் சொந்தக் கற்பனையாக இருந்திருந்தால், 23 வருடப் பேச்சுகளில் ஏராளமான முரண்பாடுகள் அவர்களிடம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆனில்; முரண்பாடுகள் எள்ளளவும் இல்லை.
மேலே சுட்டிக் காட்டிய பலவீனங்கள் எதுவுமே இல்லாத ஏக இறைவனின் வார்த்தையாக இருந்தால் மட்டுமே முரண்பாடு இல்லாமல் இருக்க முடியும்.
இறைவனிடமிருந்து வந்ததால்தான் தன்னுள் முரண்பாடு இல்லை என்று மனித குலத்துக்கு திருக்குர்ஆன் அறைகூவல் விடுகிறது.
அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82 )
மிக உயர்ந்த தரம்!
திருக்குர்ஆனை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறைவனின் செய்திகள் என்று அறிமுகம் செய்தார்கள். இறைவனின் செய்திகள் என்றால் அது மனிதர்களின் செய்திகளைப் போல் அல்லாமல் அனைத்து வகையிலும் அனைத்தையும் மிஞ்சும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.
திருக்குர்ஆன் இப்படி அமைந்துள்ளதா என்றால் அரபுமொழி அறிந்த முஸ்லிம் அல்லாதவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்தால் கூட மனிதனால் எட்ட முடியாத உயர்ந்த தரத்தில் அது அமைந்திருப்பதை அறிந்து கொள்வர்.
அரபு மொழியின் மிக உயர்ந்த இலக்கியமாக திருக்குர்ஆன் 14 நூற்றாண்டுகளாக மதிக்கப்பட்டு வருகிறது.
மாபெரும் இலக்கியங்களில் பொய்களும், மிகையான வர்ணனைகளும் அவசியம் இடம் பெற்றிருக்கும். ஆனால் திருக்குர்ஆனில் பொய் இல்லை! முரண்பாடு இல்லை! ஆபாசம் இல்லை! மிகையான வர்ணனைகள் இல்லை! கற்பனைக் கலவை இல்லை! நழுவுதலும் மழுப்புதலும் இல்லை! மன்னர்களையும், வள்ளல்களையும் மிகைப்படுத்திப் புகழுதல் இல்லை!
இலக்கியத்திற்குச் சுவையூட்டும் இந்த அம்சங்கள் அனைத்தையும் அடியோடு நிராகரித்துவிட்டு உண்மைகளை மட்டுமே மிக உயர்ந்த இலக்கியத் தரத்துடன் திருக்குர்ஆன் பேசியிருப்பது, அன்றைய இலக்கிய மேதைகளையும் பிரமிப்புடன் பார்க்க வைத்தது. இன்று வரை அந்த பிரமிப்பு நீடிக்கிறது.
இவ்வளவு உயர்ந்த இலக்கியத் தரத்தில் முஹம்மது நபி அவர்கள் ஒரு நூலை இயற்ற வேண்டும் என்றால் அவர் மாபெரும் பண்டிதராகவும், அரபு மொழியில் கரை கண்டவராகவும், அவருக்கு முந்தைய இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவராகவும் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் முஹம்மது நபி அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது என்பது ஆச்சரியமான உண்மை.
அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். (அல்குர்ஆன் 29:48)
எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள். (அல்குர்ஆன் 7:157)
அரபு மொழிப்பண்டிதராக இல்லாத, முந்தைய இலக்கியங்களை வாசிக்கவும் தெரியாத முஹம்மது நபி அவர்கள் சொந்தமாகக் கற்பனை செய்தால் அது எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்தில் திருக்குர்ஆன் இல்லை.
அரபு மொழிப் பண்டிதர் கற்பனை செய்தால் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்திலும் இல்லை. மாறாக பல நூறு மடங்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது. எனவே இது இறைச் செய்தியாகத் தான் இருக்க முடியும்.
படிக்காதவர்களுக்கும் புரியும் ஒரே இலக்கியம்
பொதுவாக ஒரு நூல் எந்த அளவுக்கு உயர்ந்த இலக்கியத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படும்.
மிக உயர்ந்த இலக்கியங்கள் எந்த மொழியில் இருந்தாலும் அம்மொழியின் பண்டிதர்கள் மட்டும்தான் அதைப் புரிந்து கொள்ள முடியுமே தவிர அம்மொழி பேசும் சாதாரண மக்களுக்கு அவை புரியாது.
சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் ஒரு நூல் இருந்தால் நிச்சயமாக உயர்ந்த இலக்கியத்திற்குரிய அம்சங்கள் ஏதுவும் அந்த நூலில் இருக்காது.
ஆனால் திருக்குர்ஆன் அரபு மொழியைப் பேச மட்டுமே தெரிந்த மக்களுக்கும் புரிந்தது. பண்டிதர்களையும் கவர்ந்தது. அரபு மொழியில் உள்ள எண்ணற்ற இலக்கிய நூல்களை இன்றைய அரபுகளில் பலரால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அரபு மொழி பேசும் ஒவ்வொருவரும் குர்ஆனைப் புரிந்து கொள்கிறார்.
இன்றைக்கும் கூட எந்த மனிதனாலும் இத்தகைய அம்சத்தில் ஒரு நூலை இயற்றவே முடியாது. எந்த மனிதருக்கும் இயற்ற இயலாத ஒரு நூலை மக்களிடம் முன் வைத்துத் தான் 'இது இறை வேதம்' என்று முஹம்மது நபி அவர்கள் வாதிட்டார்கள்.
குர்ஆன் முஹம்மது நபி அவர்களின் கற்பனை அல்ல என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.
இசை நயம்!
எந்த இலக்கியமானாலும் அதில் ஒசை அழகும், இசை நயமும் கிடைக்க வேண்டுமானால் அதனுடைய சீர்களும் அடிகளும் ஒழுங்கு முறைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதால் தான் அவற்றில் இசை நயத்தை நாம் உணர்கிறோம்.
ஆனால் திருக்குர்ஆனில் ஒழுங்கு முறைப் படுத்தப்பட்ட அடிகள் இல்லை. மாறாக உரைநடை போலவே அதன் வசனங்கள் அமைந்துள்ளன.
அவ்வசனங்களிலும் குறிப்பிட்ட அளவிலான சொற்கள் இடம் பெறவில்லை. மாறாக சில வசனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகளும், சில வசனங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வார்த்தைகளும், சில வசனங்களில் பத்து வார்த்தைகளும்,சில வசனங்களில் ஐந்து வார்த்தைகளும் இருக்கும். ஒரு வார்த்தையே வசனமாகவும் இருக்கும்.
இப்படி அமைந்துள்ள எந்த நூலிலும் இசை நயம் அறவே இருக்காது. ஆனால் எதில் இசை நயத்தை மனிதனால் கொண்டு வர இயலாதோ அந்த நடையில் மனித உள்ளங்களை ஈர்க்கும் இசை நயம் திருக்குர்ஆனுக்கு மட்டுமே இருக்கிறது.
அரபு மொழி தெரியாத மக்களும் கூட அதன் இசை நயத்துக்கு மயங்குகின்றனர்.
இசை நயத்துக்கு எதிரான ஒரு முறையைத் தேர்வு செய்து அதற்குள் இசை நயத்தை அமைத்திருப்பது இது முஹம்மது நபியால் கற்பனை செய்யப்பட்டது அல்ல என்பதற்கு மற்றொரு சான்று.
காலத்தால் முரண்படாதது!
• நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி. 570-ல் பிறந்தார்கள்.
இந்தக் கால கட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.
இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு தான் பெரிய மேதையாக இருந்தாலும், அவரது காலத்து அறிவைக் கடந்து எதையும் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும்.
இதற்கு காரணம் நூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்: என்னென்ன கண்டு பிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது.
பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும்.
ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறை வேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.
• திருக்குர்ஆனைப் பொருத்த வரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.
பூமி மற்றும் ஏனைய கோள்களின் அமைப்பு, வானில் இருக்கின்ற அதிசயங்கள், புவியியல் மற்றும் வானியல் குறித்து பேசும்போது, இந்த நூற்றான்டின் மாமேதையும் வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.
• அது போல் மனிதன் மற்றும் உயிரினங்கள், அவற்றின் உள் அமைப்புகள், உயிரினங்கள் உற்பத்தியாகும் விதம் எனப் பல விசயங்களைக் குர்ஆன் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. இந்த நூற்றாண்டின் தேர்ந்த மருத்துவ மேதை பேசுவதை விட அழகாகப் பேசுகிறது.
தாவரங்களைப் பற்றிப் பேசினாலும், மலைகளைப் பற்றிப் பேசினாலும், நதிகளைப் பற்றிப் பேசினாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்குர்ஆனின் பேச்சு இல்லை.
• அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டு பிடிக்கப்பட்ட பல விசயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.
• இன்று வாழும் பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகத்தின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேர சிந்திக்கும் யாரும் இது முஹம்மது நபி அவர்களின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது: முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும் என்ற முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும்.
• அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆன் கூறுகின்ற அரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர் ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விடவும் அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிகப் பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வார். முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆன் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக் கோரும் அளவுக்கு குர்ஆன் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.
• ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங்களையும் ஆய்வு செய்து பல்வேறு சட்டமேதைகள் உருவாக்கிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டு வரும் நிலையில் இறைச் சட்டங்கள் என முஹம்மது நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது.
• அது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு ஏற்கத் தக்க அற்புதமான தீர்வுகளைக் குர்ஆன் கூறுவதும் இது முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்று இல்லை என்பதற்கான ஆதாரமாக உள்ளது.
குலம், கோத்திரம், சாதி இவற்றால் ஏற்படும் தீண்டாமை ஆகியவை உலகில் பல நாடுகளில் பல நூறு ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகளாக உள்ளன. இந்த சிக்கலான பிரச்சனைக்கும் மிக எளிதான தீர்வை வழங்கி இவற்றை திருக்குர்ஆன் அடியோடு ஒழித்துக் கட்டியதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
எதிர் காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளைக் குர்ஆன் கூறுகிறது. அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன.
வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிய இத்தகைய முன்னறிவிப்புகள் ஏராளம். முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக குர்ஆன் இருக்கவே முடியாது என்பதற்கு இவையாவும் ஆதாரங்களாக உள்ளன.
எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் இதைக் கற்பனை செய்தார் என்று நீங்கள் கூறுவது உண்மையானால் இது போல் ஒரு அத்தியாயத்தையாவது கொண்டு வந்து காட்டுங்கள் என்று குர்ஆன் அறை கூவல் விடுகிறது. ( பார்க்க அல்குர்ஆன் 2:23, 10;:38, 11:13, 17:88, 52:34)
இந்த அறைகூவல் 14 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர் கொள்ளப்படவில்லை. யாராலும் எதிர் கொள்ளப்பட முடியாது எனவும் குர்ஆன் முன்கூட்டியே திட்டவட்டமாக அறிவிக்கிறது.
முஹம்மது நபியவர்கள் இறைவேதம் என்று அறிமுகப்படுத்திய குர்ஆனை விட பல மடங்கு அதிகமாகப் பேசியுள்ளனர். இறைத்தூதர் என்று தம்மை அறிவித்த பின் அவர்கள் வாழ்ந்த 23 வருடங்களில் பேசிய பேச்சுகள் பாதுகாக்கப் பட்டுள்ளன.
அந்தப் பேச்சுக்களையும், குர்ஆனையும் எந்த மொழியியல் அறிஞர் ஆய்வு செய்தாலும் இரண்டும் ஒரே நபரின் கூற்றாக இருக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறுவார். இரண்டுக்குமிடையே இலக்கியச் சுவையிலும், நடையிலும் பெரிய வேறுபாட்டைக் காண்பார்.
முஹம்மது நபி அவர்களின் வழக்கமான பேச்சுக்கு மாற்றமாகவும், அதை விடப் பன்மடங்கு உயர்ந்தும் நிற்கின்ற அதன் அழகே இறை வேதம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க முடியாது என்று ஒப்புக் கொள்ளும் ஆய்வாளர்கள், யூத கிறித்தவ சமுதாய மக்களின் வேதங்களிலிருந்து கற்று இவர் கூறுகிறார் எனக் கூறியதுண்டு. இன்றைக்கும் கூட சில கிறித்துவ நண்பர்கள் இவ்வாறு கூறுவதுண்டு.
ஏனெனில் நபிகள் நாயகத்துக்கு முன் வாழ்ந்த ஆதாம், நோவா, மோசே, யோவான், யோபு, தாவீது, ஸாலமோன், இயேசு போன்ற பல்வேறு இறைத் தூதர்கள் பற்றி யூத கிறித்தவ வேதங்கள் கூறுகின்றன. குர்ஆனும் இவர்களைப் பற்றிப் பேசுவதால் முஹம்மது நபி அவர்கள் முந்தைய வேதங்கள் வழியாக அறிந்து அதைக் கூறுகிறார் எனக் கூறுகின்றனர். பல காரணங்களால் இது தவறாகும்.
HS.
[6]
No comments:
Post a Comment