Wednesday, March 17, 2010

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்.? Dr பெரியார்தாசன்.

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்.? Dr பெரியார்தாசன். >> MONDAY, MARCH 15, 2010 பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார். சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். "நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். டாக்டர் பெரியார்தாசன் அவர்கள், சிறு வயதில் இந்து மத நம்பிக்கையாளராக இருந்து, பிறகு நாத்திகராக மாறி, பல ஆயிரம் பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக ஆவதற்கு காரணமானவர், ஒரு கட்டத்தில் முன்னால் கல்லூரி நண்பன் கேட்ட கேள்வி, “கடவுள் இருக்கிறாரா? இல்லையா?” என்பது பற்றியும் “இறந்த பிறகு நாம் எழுப்பப்படுவோமா? இல்லையா?” என்பது பற்றியும் தன்னை சிந்திக்கத் தூண்டியதாக தெரிவித்தார். நண்பரின் கேள்வி, மன நல நிபுணரான தன்னை, ஆழமான சிந்தனையிலும் மன உளைச்சலில் வீழ்த்தியதாக தெரிவித்தார். அதன்பிறகு சுமார் 10 ஆண்டுகளாக கடவுள் மற்றும் மறுமை தொடர்பான ஆராய்ச்சி சிந்தனையில் இருந்ததாகவும், முதலில் இந்துத்துவத்தை பற்றியும், கிருஸ்துவத்தைப் பற்றியும் ஆராய்ந்த பிறகு இறுதியாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க முற்பட்டதாகக் குறிப்பிட்டார். தான் பல பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக வளைத்துவிட்டதாகவும் அவர்களை நிமிர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். முன்பு “கடவுள் யாருமில்லை” என்று பிரச்சாரம் செய்தவர் இப்பொழுது “கடவுள் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர” என்று கூறுவதற்கான காரணங்களை கண்டறிந்துவிட்டதாக குறிப்பிட்டார். “அல்லாஹ்” முஸ்லிம்களுக்கு மட்டும் கடவுளல்ல. “அல்லாஹ்”தான் இவ்வுலகின் அனைவருக்கும் கடவுள் என்றார். ஒரு பக்கம் இஸ்லாமியர்கள் தன்னுடைய மாற்றத்தினால் சந்தோசமடைந்தாலும் இன்னொரு சாரார் தனக்கு எதிராக இப்பொழுதே கிளம்பிவிட்டதாகவும், டாக்டருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளதாகவும், எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதனை சந்தோசமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார் பலபேர் ஆராய்ச்சி செய்து ஏற்றுக்கொள்ளும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை, முஸ்லிம்கள் கற்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் முஸ்லிமல்லாத சகோதரர்கள் இஸ்லாம் சொல்லும் “கடவுள்” கோட்பாட்டினை காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ********** சுட்டுப்போட்டாலும் இவனுக்கு சரிவராது என்று இவரை கேவலப்படுத்தியவர்களுக்கே அவர்களை சுட்டிக்காட்டும் வகையில் தன் விடாமுயற்சியால் உயர்ந்து அவமானப்படுத்தியவர்களின் தலைகளை குனியச்செய்தவர். இன்று உலகம் போற்றும் பேச்சாளராக இருந்தபோதிலும் இளமைப்பருவத்தில் அவருக்கு இருந்த திக்குவாயினை ஒரு குறையாக நினைக்காமல் தான் எதிர்காலத்தில் பெரிய பேச்சாளனாக வரவேண்டும் என கடுமையான பயிற்சிகளை செய்து திக்குவாயினை போக்கி இன்று உயர்ந்த நிலையில் உள்ளார். பெரியாரை பார்க்கும், அவரை வாழ்த்தி கவிதை பாடும் அவசரத்திலேயே சேஷாசலம் என்ற அவரது இயற்பெயர் பெரியார்தாசன் ஆனது. பெரியாரைப்போலவே… “தனது கருத்து என்பதற்காக தனது பேச்சினை அனைவரும் ஏற்றாகவேண்டும் என்ற எண்ணம் ஒரு துளியும் இன்றி தனது பேச்சுக்களையும் உங்கள் அறிவினால் திறனாய்வு செய்து பாருங்கள் என்ற எண்ணத்தில் உள்ளவர்”. “தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களுக்கே உரிய ஒரு குணம், அவர்கள் தமக்கான ஒரு நிலையினை எடுத்தவுடன் புதிதாக வருபவர்களுக்கு, முன்னுக்கு வருபவர்களுக்கு இடம்கொடுப்பதில்லை” அனால் பேராசிரியர் பெரியார்தாசன் வித்தியாசமானவர். பலபேர் முன்னுக்குவர ஏணியாக இருந்தவர். இன்றைய பிரபலங்கள் பலரை தன் கையால் அரவணைத்து வழர்த்துவிட்டவர். தான் சிகரங்களில் இருந்தாலும்கூட, புதிதாக ஒருவன் சிகரத்திற்கு வர எண்ணி இரண்டு எட்டு வைத்தாலும் ஓடிவந்து அவனுக்கு கைகொடுத்து வாழ்த்து சொல்பவர்.
Please Watch Dr.Abdullah first meeting from Jeddah & Riyadh
http://www.islamkalvi.com/

Wednesday, March 10, 2010

யூசுப் எஸ்டஸ்...

யூசுப் எஸ்டஸ்...




அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சாமாதானமும் நிலவுவதாக...ஆமின்...
யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes), நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர். மிக நகைச்சுவையாக பேசுபவர், அதே சமயம் கண்கலங்கவும் வைத்து விடுவார்.

மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர். இவரால் இஸ்லாத்தை தழுவியோர் ஏராளமானோர். அல்ஹம்துலில்லாஹ்...

இவர் இஸ்லாத்தை தழுவிய விதம் பற்றி இவர் சொல்ல நான் கேட்ட சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்

யூசுப் எஸ்டஸ் அவர்கள் அமெரிக்காவின் டெக்சஸ் ( Texas ) மாகாணத்தை சேர்ந்தவர் (ஜார்ஜ் புஷ்சும் இந்த மாகாணத்தை சேர்ந்தவர் தான்). கிருத்துவ மத போதகராக இருந்தவர் (Preacher).

இவர் வாழ்வின் முக்கியமான மாற்றத்தை ஏற்ப்படுத்திய அந்த ஆண்டு 1991. யூசுப் எஸ்டஸ் அவர்கள் செல்வ செழிப்பான குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரும் இவரது தந்தையும் பல தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்தவர்கள். தொழிலை கவனித்துக்கொண்டே கிருத்துவத்தையும் போதித்து வந்தார். இறைபக்தி அதிகம் உடையவர்.

1991 ஆம் ஆண்டு, ஒரு வியாபார விஷயமாக எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பரை சந்திக்க வேண்டிய நிர்பந்தம். அதுதான் அவர் வாழ்வை திருப்பிப்போட்ட சமயமும் கூட.

அப்போது வரை யூசுப் எஸ்டஸ் அவர்கள் இஸ்லாத்தை பற்றி எண்ணியிருந்தது ...

"முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், பாலைவனத்தில் இருக்கும் ஒரு கருப்பு வடிவத்தை வணங்குபவர்கள், தினமும் ஐந்து முறை தரையை முத்தமிடுபவர்கள்...இது தான் இஸ்லாத்தை பற்றி நான் அறிந்திருந்தது"

"1991 ஆம் ஆண்டின் முற்பகுதி, எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பவருடன் தாம் வியாபார ஒப்பந்தம் செய்யப் போவதாக என் தந்தை என்னிடம் கூறினார். என்ன முஸ்லிமுடனா?, நான் மறுத்து விட்டேன். ஆனால் என் தந்தை வேறு வழி இல்லையென்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இது வியாபாரம் என்பதால் என்னால் முஹம்மதை நிராகரிக்க முடியவில்லை. சரி அவருடன் சேர்ந்து பணியாற்றுவோம். உண்மையான என்னுடைய மார்க்கத்தையும் அவருக்கு போதிப்போம். இதுதான் நான் முதலில் நினைத்தது...

நான் அவரை சந்திக்க தயாரானேன். ஏசு என் கடவுள் (Jesus is my Lord) என்று எழுதப்பட்டிருந்த ஒரு தொப்பியை அணிந்துக்கொண்டு, கழுத்தில் ஒரு பெரிய சிலுவையை அணிந்து கொண்டு, கையில் பைபிளை வைத்துக்கொண்டு அவரை வரவேற்க காத்திருந்தேன்.

முஹம்மதும் வந்தார். நான் அதிக நேரம் வீணாக்கவில்லை...

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?


ஆம்...

ஆச்சர்யமான பதில். நான் தொடர்ந்தேன். இப்ராகிம்(அலை), இசாக்(அலை), இஸ்மாயில்(அலை) என்று பைபிளில் இருக்கும் நபிமார்களிடம் இருந்து ஆரம்பித்தேன். அதன் பிறகு நான் பலமுறை அவருடன் என் மார்க்கத்தை பற்றி பேசியிருக்கிறேன், விவாதித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் தான் வென்றதாக நினைப்பேன். ஆனால் இன்றோ, அதைப் பற்றியெல்லாம் நினைக்கும் போது, உண்மையில் முஹம்மது தான் வென்றார் என்பது புரிகிறது.

முஹம்மதின் பண்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. முஹம்மதை அவர் வழியில் விட்டுவிடுமாறு என் தந்தை என்னிடம் கூறினார். என்ன, இப்படி ஒரு பண்புள்ளவர் ஒரு தவறான கொள்கையில் இருப்பதா? இல்லை.. இவரை எப்படியாவது என் மதத்திற்கு அழைத்து வருவேன்.




இதற்கு நான் முதலில் செய்தது, அவரை என் வீட்டிலேயே குறைந்த வாடகைக்கு தங்க வருமாறு அழைத்தது. பணம் முக்கியமல்ல, அவருக்கு நான் கொடுக்கக் கூடிய போதனை தான் முக்கியம். முஹம்மதும் எங்களுடன் தங்க ஒப்புக்கொண்டார்.

இது நடந்து கொண்டிருந்த அதே வேலையில், என்னுடைய நண்பரான மதகுரு ஒருவர்(Priest, father) மாரடைப்பு காரணமாக மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தினமும் சென்று சந்தித்து வருவேன். அப்போது அந்த அறையில் தங்கிருந்த பாதர் பீட்டர் ஜகோப்ஸ் (Father Peter Jacobs) அவர்கள் எனக்கு நன்கு பழக்கமானார். அவரும் மாரடைப்பு காரணமாக தான் அந்த மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நலமாகி வந்தவுடன் அவரை என்னுடன் வந்து வசிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் எங்களுடன் வசிக்க சம்மதித்தார்.

இதுதான் நான் எதிர்பாத்த நேரம். மாட்டினார் முஹம்மது. இப்போது ஒரே வீட்டில் நான், என் மனைவி, என் தந்தை மற்றும் பாதர் பீட்டர் ஜகோப்ஸ், எல்லோரும் கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள். இனி முஹம்மதை எங்கள் வழிக்கு கொண்டு வந்து விடவேண்டியதுதான்.

ஒவ்வொரு நாளும், இரவு உணவின் போது நாங்கள் அனைவரும் முஹம்மதை சுற்றி அமர்ந்து கொள்வோம். கேள்விகளை தொடுப்போம்.

பல கேள்விகள்...

நாங்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான பைபிளை வைத்திருப்போம், உதாரணத்துக்கு நான் RSV (Revised Standard version) பைபிள், என் தந்தை கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James version) பைபிள் என்று பல பைபிள்கள்"

கிருத்துவத்தை பற்றி தெரியாதவர்களுக்கு, இங்கு ஒரு தகவல். கத்தோலிக்க கிருத்துவர்களின் பைபிள் 73 புத்தகங்களை கொண்டது. protestant கிருத்துவர்களின் பைபிள் 66 புத்தகங்களை கொண்டது.

"ஆனால் முஹம்மதோ ஒரே ஒரு புத்தகத்தை கொண்டு வந்து வைத்தார். அது கடவுளிடமிருந்து வந்தது என்றும், அன்றிலிருந்து இன்றுவரை மாற்றமடையாதது என்றும் கூறினார். இது எனக்கு ஆச்சர்யமான தகவல்கள்.

பிறகு ஒருமுறை திரித்துவத்தை (Trinity, it is nothing but a christian belief that teaches the unity of Father, Son, and Holy Spirit as three persons in one Godhead). பற்றி விவாதம் திரும்பியது. முஹம்மது, திருத்துவத்தை லாஜிக்காக நிரூபியுங்கள் என்று கேட்டார்...

என்ன லாஜிக்கா? மதம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது, இங்கு லாஜிக்கெல்லாம் பார்க்ககூடாது...

எங்கள் மார்க்கத்தில் இரண்டும் உண்டு....

இது போன்ற பதில்கள் தான் எங்களை திக்குமுக்காட செய்தன... நான் வீம்புக்காக அவருடன் வாதம் செய்துகொண்டிருந்தேன், ஆனால் அவருடைய பதில்களில்தான் அதிகம் அர்த்தமிருந்தது...இப்படியே சில நாட்கள் சென்றன..

ஒருமுறை பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள், முஹம்மதிடம், தன்னை மசூதிக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார். சென்று வந்த அவரிடம்...

பாதர்...அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பலி கொடுத்து இறைவனை வணங்கி கொண்டிருந்தார்களா?

இல்லை..அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...வந்தார்கள், தொழுதார்கள், சென்றுவிட்டார்கள்...



என்ன அவ்வளவுதானா....எந்த மாதிரி பாடல்களை பாடினார்கள்? எந்த மாதிரி இசைக்கருவிகளை வைத்திருந்தார்கள்?

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை?
என்ன இசைக்கருவிகள் இல்லாமல் கடவுள் வழிப்பாடா?

இவையெல்லாம் எனக்கு வியப்பை தரும் தகவல்கள். முஸ்லிம்களின் கடவுள் வழிபாடு என்பது மிகவும் எளிதான, வலிமையான ஒன்று என்பதை புரிந்துக்கொண்டேன்.

இஸ்லாம் என்னை நெருங்கி வந்துக்கொண்டே இருந்தது. இப்போது என் மதத்தில் பல கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்...

சில தினங்களுக்கு பிறகு, பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் மறுபடியும் முகம்மதுடன் மசூதிக்கு சென்றார். அவருக்காக நான் காத்திருந்தேன். இந்த முறை என்ன புது செய்தி கொண்டுவருவார் என்று பார்ப்பதற்காக.

கார் வந்தது, இருவர் இறங்கினார்கள். ஒருவர் முஹம்மது, அது எனக்கு நன்றாகவே தெரிந்தது, யார் அந்த மற்றொருவர்?, நீண்ட ஆடையுடன், தலையில் குல்லா அணிந்துக்கொண்டு, யாரவர்?...

உற்று கவனித்தேன்....என்னால் நம்பமுடியவில்லை...பாதர் பீட்டர் ஜகோப்ஸ்சா அது? ஆம் அவரேதான்...என்ன, அவர் இப்போது முஸ்லிமா? அமெரிக்கா, மெக்ஸிகோ என்று நாடு நாடாக சென்று கிருத்துவத்தை போதித்தாரே, அவரா இவர்? அதிர்ச்சியில் உறைந்தேன்.




பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் என்னிடம் வந்தார்,

நிச்சயமாக இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்...

நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என்னிடத்தில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தியது அது.

மாடியில் இருந்த என் மனைவியிடம் சென்றேன்.

கவனித்தாயா?, இப்போது பாதர் பீட்டர் ஜகோப்ஸ் ஒரு முஸ்லிம். இஸ்லாமிய மார்க்கம் நான் நினைத்தது போல் இல்லை, அது எனக்கு நல்ல மார்க்கமாகவே படுகிறது.

எனக்கு உங்களிடமிருந்து விவாகரத்து வேண்டும்...

ஹேய்... இரு..................இரு..................நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டாயா? நான் முஸ்லிமாகவில்லை, அவர்தான் முஸ்லிம். நான் இன்னும் கிருத்துவன் தான். அப்படியே நான் முஸ்லிமாகினாலும் நீ என்னுடன் தாராளமாக வாழலாம், ஏனென்றால் ஒருமுறை முஹம்மது சொல்ல கேட்டிருக்கிறேன், இஸ்லாமில் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு கிருத்துவ பெண்ணை திருமணம் செய்யலாம். ஆனால் ஒரு முஸ்லிம் பெண்தான் கிருத்துவ ஆணை திருமணம் செய்யக்கூடாது...

அதனால் தான் கேட்கிறேன் எனக்கு விவாகரத்து வேண்டுமென்று...

என்ன?

ஆம், முஸ்லிம் பெண்ணாகிய என்னால் கிருத்துவ ஆணாகிய உங்களுடன் வாழ முடியாது...

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...நான் நிதானத்திலேயே இல்லை...சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டேன்...

இரு...அவரசப்படாதே, உன்னிடம் ஒன்றை நான் சொல்ல வேண்டும். இஸ்லாம் எப்போதோ என் மனதில் வந்து விட்டது. நானும் முஸ்லிம்தான்..

என் மனைவி என்னை நம்பவில்லை.

ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறீர்கள், தயவு செய்து இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்...

நான் வெளியே வந்து விட்டேன். ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். தூக்கம் சரிவர வரவில்லை. எழுந்து சென்று முஹம்மதை எழுப்பி வெளியே அழைத்து சென்றேன். ஏதேதோ பேசுகிறேன் அவரிடம், ஒன்றும் புரியாமல்... இப்போதும் அவர் பொறுமையாகவே பேசினார், விளக்கினார்.

சுப்ஹு நேரம் நெருங்கி விட்டது, முகம்மதுடன் நானும் பள்ளிக்கு சென்றேன். அந்த பிளைவூட் தரையில் சஜிதா செய்தேன்.

இறைவா எனக்கு நல்வழி காட்டு....

இருவரும் வீட்டிற்கு வந்தோம். முஹம்மது மற்றும் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். நான் சஹாதா சொன்ன சிறிது நேரத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். சுபானல்லாஹ்...

என் தந்தையிடம் விஷயத்தை சொன்னேன்.

நான்தான் அப்போதே கூறினேனே இஸ்லாம் ஒரு அழகிய மார்க்கமென்று. எனக்கு நீ இஸ்லாத்தில் இணைந்தது மகிழ்ச்சிதான்.

dad,..... அப்போ நீங்கள்?

இந்த கேள்விக்கு அவரிடமிருந்து பதில் வரவில்லை. மாதங்கள் சென்றன. எப்போதும் என்னை மசூதியில் விட வரும் என் தந்தை சில நாட்களாக என்னுடன் சேர்ந்து தொழ ஆரம்பித்தார்.

பலரும் என்னிடம் வந்து கேட்க ஆரம்பித்தனர்...

எப்பொழுது உங்கள் தந்தை இஸ்லாத்தை தழுவினார்?

நான் விளக்கமளித்தேன். ஒரு சமயத்தில் இந்த கேள்விகள் அதிகமாகவே, நான் அவர்களிடம்,

நீங்கள் ஏன் அவரிடமே இந்த கேள்வியை கேட்கக்கூடாது?

அவர்கள் அவரிடம் சென்று அந்த கேள்வியை கேட்டனர்...

அவர் கூறினார் "கடந்த ஒரு வருடமாக...."

சுபானல்லாஹ்...நான் இப்போது, நடந்ததையெல்லாம் திரும்பி பார்க்கிறேன். ஆம் முஹம்மது வென்றுவிட்டார். ஆனால் நானும் வென்றுவிட்டேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதினால்..."

யூசுப் எஸ்டஸ் அவர்களுடைய இந்த வரலாற்றை அவர் சொல்ல நீங்கள் கேட்க வேண்டும். மிகுந்த நகைச்சுவையுடனும், அதே சமயம் உணர்ச்சிபூர்வமாகவும் சொல்லுபவர்.

இப்போது யூசுப் எஸ்ட்ஸ் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பலரையும் இஸ்லாத்தில்பால் அழைத்து வருகிறார். சென்னைக்கும் ஒருமுறை வந்திருக்கிறார். பல இணையதளங்களை நடத்திவருகிறார்.

இறைவன் இவருக்கு தொடர்ந்து நல்ல உடல் நலத்தையும், மன நலத்தையும் கொடுப்பானாக...ஆமின்

இவருக்கு ஒரு செல்லப்பெயர் உண்டு...அது "ATHEIST KILLER" என்பது...ஏன்? இவரது சில வீடியோக்களை பார்த்தால் தெரியும்...

இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

References:
1. Sheikh Yusuf Estes talk on "priests and Preachers Coming to Islam" - for Islam today.
2. Sheikh Yusuf Estes interview on "How he came to Islam" with eddie - for thedeenshow.
3. Sheikh Yusuf Estes "How Yusuf estes came to Islam" - Islamtomorrowdotcom/yusuf_story.htm

உங்கள் சகோதரன்,

HS.

Monday, March 8, 2010

நாங்கள் முஸ்லிம்கள்....அவ்வளவுதான்...

நாங்கள் முஸ்லிம்கள்....அவ்வளவுதான்...



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்

சமீபத்தில் வெளியான ப்யு ஆய்வறிக்கையில் (PEW REPORT) நான் கண்ட ஒரு சுவாரசியமான தகவலை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்....

முதலில் ப்யு ஆய்வறிக்கையைப் பற்றி சில தகவல்கள்...

இந்த அறிக்கை அக்டோபர், 2009ல் வெளியானது. உலக முஸ்லிம்களின் மக்கட்தொகையைப் பற்றியது. பெரும்பாலான ஊடகங்களால் நம்பத்தகுந்த அறிக்கை என ஏற்றுக்கொள்ளப்பட்டது. மூன்று ஆண்டுகளாக அரும்பாடுபட்டு உருவாக்கி இருப்பதாக அந்த அறிக்கையின் இரண்டாம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

உலக முஸ்லிம்களின் மக்கட்தொகை 157 (1.57 பில்லியன்) கோடி என்றும், இது உலக மக்கட்தொகையில் 23% எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது உலகில் நால்வரில் ஒருவர் முஸ்லிம்.

இதற்கு முன் நாம் அறிந்திருந்த தகவலின் படி, உலகில் 19% முஸ்லிம்கள். ஆக, ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருந்த நிலை போய் இப்போது நான்கில் ஒருவர் முஸ்லிம்.

இந்த அறிக்கையின் சிறு பகுதியை பல ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. நீங்களும் படித்திருக்கலாம்.

முன்பு நான் குறிப்பிட்ட அந்த சுவாரசியமான தகவல் ஷியா-சன்னி முஸ்லிம்களின் மக்கட்தொகையைப் பற்றியது.

ப்யு அறிக்கை, உலக முஸ்லிம்களின் தொகையை துல்லியமாக தந்துள்ளதாக சொன்ன போதிலும், இந்த ஷியா-சன்னி மக்கட்தொகையை பற்றிய அவர்களது கணிப்பு துல்லியமானது அல்ல. இதை அவர்களே அந்த அறிக்கையில் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

அதாவது அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிற 157 கோடி என்ற முஸ்லிம்களின் மக்கட்தொகை சரியானது. ஆனால் அதில் 10-13% ஷியாக்கள் என்றும், 87-90% சன்னிகள் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருப்பது சரியானது இல்லை.

இதற்கு அவர்கள் கூறிய காரணம்தான் சுவாரசியமானது, அதாவது, அவர்களால்
ஷியா-சன்னி மக்கட்தொகையை சரியாக சொல்லமுடியாததற்க்கு காரணம், கணக்கெடுப்பிற்காக முஸ்லிம்களிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டதற்கு, பலரும் "நாங்கள் முஸ்லிம்கள், அவ்வளவுதான்" என்று கூறியதே.

அதாவது பலரும் தங்களை ஷியா என்றோ சன்னி என்றோ வகைப்படுத்த விரும்பவில்லை என்பதுதான்...அட...

இதைப் பற்றி, ப்யு ஆய்வறிக்கை அதன் 38 வது பக்கத்தில் கூறுவதாவது,

"முஸ்லிம்களில் பலர் தங்களை சன்னி என்றோ ஷியா என்றோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.அதனால் நாங்கள் கொடுத்திருக்கும் ஷியா-சுன்னி தகவல் துல்லியமானது இல்லை, இதனை படிப்பவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்"

அப்புறம் எப்படி கணக்கெடுத்தார்கள்? வேறு சில முந்தைய தகவல்களை வைத்து தான். ஆனால் அந்த தகவல்களும் எந்த அளவுக்கு நம்பகமானது என்று தெரியவில்லை என்றும் கூறிவிட்டார்கள். இதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் ப்யு அறிக்கையை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அவர்களின் அறிக்கைப்படி ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழ்வது ஈரான், ஈராக், பாகிஸ்தான் மற்றும் இந்தியா.

என்ன இந்தியாவா? நான் ஆச்சரியப்பட்டேன்.

ஒருவேளை, நம்மூருக்கு வந்து, தர்காக்களுக்கு போகும் நம்மாட்களை பார்த்துவிட்டு அவர்களையும் ஷியா கணக்கில் சேர்த்து விட்டார்களோ என்னவோ...

என் வலைப்பதிவை படிப்பவர்களில் ஷியாக்கள் யாராவது இருந்தால் நான் அவர்களை கேட்டுக்கொள்வது, நன்றாக ஆராய்ந்து உங்கள் கொள்கைகளை திருத்திக்கொள்ள முன்வாருங்கள் என்பதுதான். சொல்ல வேண்டியது எங்களின் கடமை, ஏற்றுக்கொள்வது உங்கள் இஷ்டம்.



அந்த ஆய்வறிக்கையில் நான் கண்ட வேறு சில தகவல்கள்...

ஐரோப்பாவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு ரஷ்யா. சுமார் 1 கோடியே 64 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள், அதற்கடுத்து ஜெர்மனியில் சுமார் 40 லட்சம் முஸ்லிம்களும், பிரான்சில் 35 லட்சம் முஸ்லிம்களும், பிரிட்டனில் 16 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள்.

தென்அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினாவில் சுமார் 7 லட்சம் முஸ்லிம்களும், பிரேசில் நாட்டில் சுமார் 2 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். வட அமெரிக்க நாடுகளான கனடாவில் சுமார் 6.5 லட்சம் முஸ்லிம்களும், அமெரிக்காவில் 24.5 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள்.



உலகிலேயே ஒரு நாட்டில் முஸ்லிம்கள் வாழும் சதவிதம் அதிகமிருப்பது அப்கானிஸ்தானில் தான், இங்கு வாழக்கூடிய மக்களில் 99.7% பேர் முஸ்லிம்கள்.

இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும், இந்த அறிக்கையில் உள்ள மக்கட்தொகை கணக்கெடுப்பு, சில நாடுகளில் 2000,2001,2002 போன்ற ஆண்டுகளில் எடுக்கப்பட்டவை. மற்ற நாடுகளிலோ 2005, 2006 போன்ற ஆண்டுகளில் எடுக்கப்பட்டவை.

இந்த வருட இறுதியில், மற்றுமொரு ஆய்வறிக்கை இதே நிறுவனத்தால் வெளியாகப்போகிறது. அது, எதிர்காலத்தில் முஸ்லிம்களின் மக்கட்தொகை எப்படி இருக்கும் என்பது பற்றியது.

இந்த அறிக்கையே சிலரின் வயிற்றில் புளியைக் கரைத்தது, அது என்ன செய்ய போகிறதோ?

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

வெளிநாட்டிற்கான PCC-Police Clearance Certificate பெறுவது எப்படி?

வெளிநாட்டிற்கான PCC-Police Clearance Certificate பெறுவது எப்படி

முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.

இருமுறை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு PCC விஷயமாக சென்றதில் நான் அறிந்தவற்றை இணையத்தில் பகிர்ந்து கொண்டால் பலருக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் தான் இந்த பதிவு.


Police Clearance Certificate க்குரிய படிவத்தை(form) ஐ பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். http://passport. gov.in/cpv/ miscell.pdf

3.5 x 3.5 செ.மீ அளவு புகைப்படம் ஒட்டி, நிரப்பப்பட்ட அந்த படிவத்துடன் அசல் பாஸ்போர்ட்டும் அதன் நகலும், இருப்பிட சான்றும்,(உதாரணத்திற்கு Ration Card நகல்), சமர்ப்பிக்க வேண்டும்.

காவல் நிலையங்களிலிருந்து எந்த விதமான சான்றிதழ்களும் வாங்கத் தேவையில்லை(உங்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லையென்றால் மட்டும்)

விண்ணப்பிக்கும் நபர் கடந்த ஒரு வருடமாக தற்போது இருக்கும் முகவரியில் இல்லையெனில் அதற்கு என்று தனியாக படிவம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தை பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் https://passport. gov.in/pms/ PPForm.pdf

காலை 9.30 முதல் 12 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். காலை 8.45 க்கு எல்லாம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருக்குமாறு சென்றால் எளிமையாக இருக்கும்.

கட்டணமாக 300 ரூபாய் மட்டும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கட்டினால் போதும். கட்டண விவரம் கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது.

http://passport. gov.in/cpv/ FeeStructure. htm

காலையில் விண்ணப்பித்தால் மாலை 5 மணிக்கு எல்லாம் PCC கிடைத்து விடும்.

PCC குறித்த முழு விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் உள்ளது https://passport. gov.in/pms/ Police%20Clearan ce%20Certificate .htm

விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் தான் நேரில் செல்ல வேண்டுமென்பதுமில்லை,விண்ணப்பிப்பவர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வர இயலாத காரணத்தை குறிப்பிட்டு அவர் கையெழுத்துடன் கூடிய ஒரு கடிதத்தை யாரேனும் கொண்டுசென்றாலும் போதுமானது.

மதுரை பாஸ்போர்ட் அலுவலக முகவரி.

Passport Office,
Bharathi Ula Veethi,
Race Course Road,
Madurai-625 002.
website: http://passport. gov.in/madurai. html

மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க முடியும்.

திருச்சி பாஸ்போர்ட் அலுவலக முகவரி

Passport Office,
Water Tank Building ,
W.B. Road ,
Tiruchirappalli. Pin Code 620 008,
Fax: 0431-2707515
E-mail: rpo.trichy@mea. gov.in

திருச்சி, கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலக முகவரி

Passport Office,
First Floor,
Corporation Commercial Complex,
Opp. Thandumariamman Koil,
Avinashi Road ,
Coimbatore - 641018

Phone: 0422-2304888, 2309009,
Fax: 0422-2306660,
E-mail: rpo.cbe@mea. gov.in, Tele-enquiry: 0422-2309009, 2304888, Web-site: http://passport. gov.in/coimbator e.html

கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

சென்னை பாஸ்போர்ட் அலுவலக முகவரி

Regional Passport Office,
IInd Floor, Shastri Bhavan,
26, Haddows Road ,
Chennai - 600 006
Phones : 91-44-28203591, 28203593, 28203594, 28240696
Fax : 91-44-28252767
E-mail : rpo.chennai@ mea.gov.in

சென்னை, கடலூர், தர்மபுரி, காஞ்சிபுரம், காரைக்கால், கிருஷ்ணகிரி, பாண்டிச்சேரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலுர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

Tuesday, March 2, 2010

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொடக்கம்!

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொடக்கம்!

ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வங்கியும், வட்டியில்லா வங்கி சேவையில் தனது ஈடு பாட்டை தொடங்கியுள்ளது.

இத்தகவலை ஆஸ்திரேலி யாவின் வெஸ்ட்பேக் கார்பரேஷன் பைனான்சியல் அன்ட்



டி ரேடின் தலைவர் இம்மானுவேல் அல் ஃபய்ரீஸ் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வங்கியும், வட்டியில்லா வங்கி சேவையில் தனது ஈடு பாட்டை தொடங்கியுள்ளது.

இத்தகவலை ஆஸ்திரேலி யாவின் வெஸ்ட்பேக் கார்பரேஷன் பைனான்சியல் அன்ட் டிரேடின் தலைவர் இம்மானுவேல் அல் ஃபய்ரீஸ் தெரிவித்தார்.

முதலீட்டாளர்களுக்காக வங்கி தனது வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

தங்களது முதலீடு எந்தவகை யில் பயன்படுத்தப்படுகிறது என் பதை முழுமையாக அறியும் உரிமை முதலீட்டாளர்களுக்கு உண்டு.

மூன்று லட்சத்து 65 ஆயிரம் முஸ்லிம்கள் வாழும் ஆஸ்திரேலியா வில் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் வட்டியில்லா வங்கி மிகுந்த பயனுடையதாக இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.

வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இஸ்லாமிய வங்கி ஆஸ்திரேலியாவின் வங்கியியலில் ஒரு அம்சமாக விளங்கும் என ஆஸ்திரேலிய வணிக அமைச்சர் சைமன் கிரியேன் தெரிவித்தார்.

HS.