Tuesday, December 28, 2010

வீடியோவில் ஆபாச காட்சிகளை நீக்க

சில ஆங்கில படங்கள் - தமிழ்படங்கள் - மற்றும் பிற மொழிப்படம் என எல்லா  படங்களிலும் கதை - நகைச்சுவை - சண்டைக்காட்சி என அருமையாக இருக்கும். ஆனால் நடுவில் சில படுக்கை அறை காட்சிகளையும் - ஆபாச காட்சிகளையும் -வன்முறை காட்சிகளையும் இணைத்துவிடுவார்கள். குடும்பம் - குழந்தைகளுடன் அமர்ந்து படம் பார்க்கும் சமயம் நமக்கு தர்மசங்கடமாகிவிடும். அந்த மாதிரி சமயங்களில் வீடியோக்களில் உள்ள அந்த மாதிரி ஆபாச காட்சிகளைxxx,18 +,adults only நாம் சுலபமாக இந்த சாப்ட்வேர் மூலம நீக்கி விடலாம்.11 எம்.பி. உள்ள இந்த சாப்ட்வேர் முற்றிலும் இலவசமே.இந்த சாப்ட்வேரை பதிவிறக்க  இங்கு கிளிக்   செய்யவும்.,இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் input file என்கின்ற இடத்தில் படத்தினை தேர்வு செய்யுங்கள். அதைப்போல Output file என்கின்ற இடத்தில் பைலை சேமிக்கும் இடத்தை தேர்வு செய்யுங்கள்.

கீழே உள்ள பிளே பட்டனை அழுத்தி படத்தினை ஓடவிடுங்கள்.

ஆபாச காட்சிகள் -வன்முறை காட்சிகள் எங்கு துவங்குகின்றதோ அந்த இடத்தில் கீழே உள்ள கத்தரி போன்ற ஐ-கானை கிளிக் செய்யுங்கள்.அதைப்போல முடியும் இடத்திலும் மீண்டும் கத்தரிபோன்ற ஐ-கானை கிளிக் செய்யுங்கள்.இப்போது X என்கின்ற டெலிட் பட்டனை கிளிக் செய்து பின்னர் Save Video கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.

உங்கள் பணிமுடிந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ மீண்டும் வரும்.

இப்போது நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தீர்களேயானால் உங்கள் வீடியோ சென்சார் செய்து இருக்கும்.இனி தைரியமாக அனைவருடன அமர்ந்து படத்தை பார்ககலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.


உங்கள் ஹயாஸ்.