Saturday, January 8, 2011

குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!



குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இன்று செல்பேசியும் இடம் பெற்றுவிட்டது. அம்மாவுடைய போன், அப்பாவுடைய போன் மற்றும் மாமா, மாமிகள் வைத்திருக்கும் செல்போனை அந்தக் குழந்தைகள் வாங்கி பெரியவர்கள் பேசுவதுபோலவே காதில் வைத்து ஹலோசொல்வதை பெரும் பேறாகக் கருதி உள்ளம் மகிழ்வார்கள்.
என்னமா பேசுது பாரு; அதுல என்னென்ன ஆப்ஷன் இருக்குன்னு எனக்குத் தெரியாது. அதுக்கு நல்லா தெரியும்பெருமை பொங்க தன் பிள்ளை செல்போன் நோண்டுவதை பெற்றோர் ரசிப்பார்கள்.
என்னதான் விலைதந்து செல்போன் வாங்கினாலும் அதில் அனைத்தும் விஷத்தன்மையுள்ள கதிரலைகளின் வாயிலாகத்தான் இயங்குகின்றன. பெரியவர்களின் எலும்பு ஓரளவு வளர்ச்சியடைந்து கனமாகி இருக்கும். பாதிப்புகள் இதனால் சற்று குறைவு. ஆனால் குழந்தைகள் எலும்பு மெலிதானது. இதனால் கதிரலை உடனடியாக அவர்களை ஊடுருவி தாக்கும் அபாயம் உண்டு.
நாடெங்கும் இரண்டரை இலட்சம் கதிரலை பரப்பும் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2ஜி, 3ஜி என்பது இந்தக் கோபுரங்களிலிருந்து கதிரலை பீய்ச்சி அடிக்கும் திறனைக் குறிப்பது. 2ஜி தகவல் பரிமாறலாம், சேமிக்கலாம், இணையத்தோடு தொடர்பு கொள்ளலாம். 3ஜி இவை அனைத்தையும் தாண்டி முன்னிலும் வேகமான செயல்பாடுள்ளது. நடந்தபடியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, வீடியோக்களை பார்க்கும் வகையில், செல்பேசியில் உள்ள அலை ஈர்ப்புத்திறன் கூட்டப்பட்டுள்ளது. அதைப்போல் அலைவீச்சும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணுகுண்டு கதிர்வீச்சு போலவே இந்தக் கதிரலைகள் வான்வெளி முழுவதும் வியாபித்து தொலைத் தொடர்பை உருவாக்குகிறது.
அறிவியலின் தொலைத்தொடர்பு மகத்தான கண்டுபிடிப்பு இந்த 3ஜி. அதே நேரம் இது ஓர் அறிவியலாகவும் உள்ளது. இளம் பிள்ளைகள் 3ஜி வசதியுள்ள மொபைல்களை கையாளும் போது அதன் கதிரலை பயன்படுத்தும் மனிதனின் மண்டையோட்டை, செவித்திறனை, தோலை, மூளையை வெகுவாக பாதிக்கும் என்கிறார் மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் கிரிஷ்குமார். இதற்காக இவர் நாடெங்கும் உள்ள அலைக்கற்றை கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சை ஆய்வு செய்து இந்த முடிவை தெரிவித்துள்ளார்.
3ஜி என்பதை மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை என்பார்கள்.  ஆனால், அடுத்த தலைமுறை புற்றுநோயாளிகளாக மாறும், மாற்றும் அபாயம் உள்ளதாகத்தான் அதன் முடிவுகள் தெரிவிக்கின்றன.
பெல்ஜியம், போலந்து, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், ருசியா முதலிய நாடுகளில் உள்ளவர்கள் கதிரலை உடலில் பட்டால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த படிப்பாளிகள் என்பதால், அங்கெல்லாம் மொபைலை குழந்தைகள் தொட ஊக்குவிப்பதில்லை.
மீறி என்னதான் நடந்துவிடும் நம் குழந்தைக்கு, பார்த்துவிடலாமே! என  எண்ணும் பணமுள்ள படிப்பில்லாதவர்கள் தங்கள் குழந்தை தவறி கீழே விழுந்தால் ஏற்படும் சிராய்ப்பு, இரத்தக் கசிவை கண்களால் பார்க்க இயலும். ஆனால் கதிரலை பாதிப்பு என்பது சட்டென்று தெரியாது. காலப் போக்கில் தான் அது தெரிய வரும்.
நரம்பு மண்டலம் தாக்கப்படுவதால் மனநல பாதிப்பு, இனம் புரியாத தலைவலி, நினைவாற்றல் குறைபாடு, தலை கிறுகிறுப்பு, அடிக்கடி உடல் சிலிர்ப்பு, தசைப்பிடிப்பு, மரத்துப்போதல், தசை மற்றும் மூட்டுக்களில் வலி, மனச்சிதைவு, உறக்கமின்மை இவைகளுடன் சமயங்களில், கைகால் செயலிழப்பு, வலிப்பு, மனநோய் என பலவும் கதிர்வீச்சால் உண்டாவது. குறிப்பாக விலை என்ன இருந்தாலும் சில மொபைல்களில் தொடர்பு கொண்டால் உரிய சிக்னல் கிடைக்காமல் நீண்ட நேரம் அழைப்பு சென்றபடி இருக்கும். இது போன்ற நிலை ஆபத்தானது. வலுவில் கதிரலையை தன்னால் இயன்ற அளவைவிட கூடுதலாக திறனை பயன்படுத்திடும்போது அந்த செல்பேசி பன்மடங்கு கதிரலையை நமக்குள் பரவ விடுகிறது.
ஆக நாகரீக பெருமைக்கான ஒரு சாதனமாக செல்பேசி இருந்தாலும் ஏகப்பட்ட ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளதால்  உங்கள் குழந்தைகள் கையில்மட்டும் தயவு செய்து தராதீர்கள். அவர்கள் அழிவை அறியாத பிஞ்சுகள். அவர்கள் உடல் நலனோடு நோய் நொடியின்றி வாழ, அவர்களுக்காகத்தான் நான் சம்பாதிக்கிறேன் என்பது உண்மையானால் உங்கள்  மொபைலை தயவு செய்து அவர்களிடம் விளையாட்டாகக் கூட தராதீர்கள்.
ஆயிரக்கணக்கான கோடிகளை இதில் முதலீடு போட்டு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு உங்கள் மீதும் உங்கள் குழந்தைகள் மீதும் அக்கறை இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. நாம்தான் கேடு வரும் முன்பு காத்துக் கொள்ள வேண்டும்.          



 "எங்கள் இறைவா!  என்னையும்என் பெற்றோர்களையும்முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.


இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.

Friday, January 7, 2011

மேலே செல்லச் செல்ல...!

கீழிருந்து மேலே செல்லச் செல்ல அல்லது மேலிருந்து கீழே செல்லச் செல்ல நாம் என்ன வெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை அழகாக எடுத்துக்காட்டும் விளக்கப்படம் இது. படத்தை சொடுக்கி மீப்பெரிதாக்கி மேலும் விவரங்கள் அறியலாம். உலகின் மிக உயரமான கட்டடமான பர்ஜ் கலீபா 2,717 அடி என்றால் அதை விட உயரமான இடத்தில் இருக்கின்றதாம் டென்வர் நகரம். கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி உயரத்திலிருக்கின்றது அது. நம் தலைக்கு மேலே மிதந்து செல்லும் மேகங்கள் 7,000 அடி உயரத்திலிருக்கின்றதாம். இன்னும் மேலேச் செல்லச் செல்ல 10,000 அடியையும் தாண்டி 11,450 அடி உயரத்தில் இருக்கின்றது திபெத்திய தலைநகரம் லாசா.

 இன்னும் மேலே நாம் மூச்சு வாங்கச் சென்றால் 19,334 அடி உயரத்தில் இருக்கின்றது ஆப்ரிக்க கிளிமஞ்சாரோ சிகரமும், 20,320 அடி உயரத்தில் இருக்கின்றது வட அமெரிக்க மவுண்ட் மெக்கின்லே சிகரமும். 23,000 அடி உயரத்தில் தான் நாம் தூரத்தில் கண்டு வியக்கும் உயர் மேகங்கள் நம்மை மூடிக்கொண்டிருக்கின்றன. தப்பித்தவறி 26,000 அடியையும் எட்டி விட்டால் அங்கே வாயு மண்டலத்தின் எல்லை போல மரண மண்டலம்தொடங்குகின்றது. 

இங்கே நாம் உயிர்வாழ தேவையான பிராணவாயு கிடைப்பது குறையத்தொடங்குவதால், மலை ஏறுபவர்கள் சிலிண்டர்கள் தூக்கத் தொடங்க வேண்டும். 29,029 அடியில் எவரெஸ்ட் வந்துவிடும். அதற்கு மேலே நாம் நடக்க முடியாது. பறக்கத்தான் வேண்டும். 32,000 அடி உயரங்களில் விமானங்கள் பறக்கின்றன. சில வல்லூறுகளும் பறக்கின்றன. அதற்கு மேலே என்னவென இன்னும் மேலே அறிய ஆசை. என்ன அழகான பூமி இது.

Go green
எனச் சொல்லி பிளாஸ்டிக்கை குறை, காகிதத்தை தவிர் என ஜனங்களை உளுக்கெடுத்துவிட்டு அங்கே கடலில் எண்ணெயை கசிய விட்டு பூண்டோடு சுற்றுச் சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். சாண் ஏற முழம் சறுக்கின கதையாய் இயற்கையை மனிதன் காப்பாற்ற விழைய, அது கேலிக் கூத்தாகி, கடைசியில் இயற்கையை இயற்கைதான் காப்பாற்ற வேண்டுமோ?

எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.