Tuesday, May 31, 2011

தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் கவனத்திற்கு...!


நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் கவனத்திற்கு
கடந்த மே மாதம் 13, 2011 – தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க இயலாத ஒரு நாள் என்றால் அது மிகையில்லை. பணபலம், மத்திய மாநில அரசுகளின் செல்வாக்குகள், மீடியா பலம், அரசு பணியார்களின் ஒட்டுமொத்த ஆதரவு என்று அசுர பலத்துடன் காட்சியளித்த திராவிட முன்னேற்றக்கழத்தின் ஆட்சியை தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்பிய நாள். தமிழகம் ஒளிர்கிறது என்று திரு.கருணாநிதி அவர்கள் என்னாதான் கூப்பாடு போட்டாலும் அவரது கட்சியினர் செய்த அராஜகங்கள், ஊழல்கள், விலைவாசி உயர்வு, மின்வெட்டு என்று மக்களை பாதித்த விஷயங்களுக்காக மதம், இனம், ஜாதி வேறுபாடுகளின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்கட்சியாக இருந்த அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்துள்ளனர் என்பதே உண்மை.
இதில் முஸ்லிம் சமுதாயத்தின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது. அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினரின் தன்னலம் கருதாத உழைப்பு கூட்டணி கட்சியினரே பாராட்டும் அளவுக்கு இருந்துள்ளது என்பதை எவரும் மறக்கவியலாது.
அராஜகத்தையும் வன்முறையையும் ஒழித்து சட்ட ஒழுங்கை சரிவர நிலைநாட்ட வேண்டும், ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காகவும், மாநிலத்தில் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து ஊழலற்ற நேர்மையான ஆட்சி வேண்டும் என்பதற்காகவுமே கட்சி, மதம், இனம், ஜாதி வேறுபாடுகளின்றி அனைத்துத் தரப்பு மக்களும் அதிமுக அணிக்கு வாக்களித்து இமாலய வெற்றியை அளித்துள்ளனர் என்பதை  மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவியேற்றுள்ள ஜெயலலிதா அம்மையார் அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
கடந்த காலங்களில் ஜெயலலிதா அம்மையாரின் அரசியல் வாழ்க்கை திரு. கருணாநிதிக்கு மாற்று உருவமாகத்தான் இருந்தது என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. திமுக 5 ஆண்டுகள் பதவியேற்று  தங்கள் வியாபாரத்தை நடத்தும் என்றால் அடுத்துவரும் அதிமுக வும் அதே பாணியில் மக்களை சுரண்டி ஊழலை நடத்தும் என்ற நிலைதான் இதுவரை இருந்துள்ளது. ஜெயலலிதாவும் கருணாநிதியும் இவ்விஷயத்தில் ஒத்த நிலையில்தான் இருந்துள்ளனர். எனவே இந்நிலையிலிருந்து  ஜெயலலிதா அம்மையார் இந்தமுறை மாறியாக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தமது பதிவயேற்பு நிகழ்ச்சிக்கு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையாளன் நரேந்திர மோடியை அழைத்துள்ளது தமிழக மக்களில் நடுநிலையாளர்கள் உட்பட ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் முகம்சுளிக்க வைத்துள்ளது. ஜெயலிதா அம்மையார் தான் பழையபடி நரேந்திர மோடியின் அன்புச் சகோதரியாகத்தான் இருப்பேன் என்ற நிலையை எடுத்தால், இன்று கருணாநிதியும் அவருடைய கட்சியும் எந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதோ இதைவிட மோசமானதொரு நிலையை வருங்காலத்தில் அதிமுக நிச்சயமாக அடையநேரிடும் என்பதை ஒரு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம். 
சிறப்பு விருந்தினராக அழைப்பதற்கு எத்தனையோ தகுதிமிக்க பிரமுகர்கள் நாட்டில் இருந்தும் நரேந்திரமோடியை அழைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஒருவேளை ஜெயலலிதா அம்மையாரின் இந்த முடிவிற்கு குருமூர்த்தி, துக்ளக் சோ போன்ற பார்ப்பன துவேஷக்காரர்களின் திட்டமிட்ட சதியாக இருக்கமோ என்று அரசியல் நோக்கர்கள் சந்தேகிக்கின்றனர்.
முதலில் சங்பரிவார தீயசத்தியான நரேந்திரமோடி யார் என்பதை ஜெயலலிதா அம்மையார் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்

குஜராத்தில் நரபலி நரந்திர மோடியின் கூலிப்படையினர் அவரது நேரடி கட்டளையின் பேரில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த காட்சிகளை உலகம் எளிதில் மறக்க இயலுமா? டெகல்கா இணையதளம் கிழித்தெறிந்த சங்பரிவாராத்தின்  கோர முகமூடிகளை கட்டுரைகள் மூலம் சொல்லிவிடத்தான் முடியுமா? அங்கு முஸ்லீம் இளம் பெண்களை முழுநிர்வானமாக நடுத்தெருவில் ஓடவிட்டு, அத்தெருவின் மறுமுனையில் சங்பரிவாரக் குண்டர்கள் அவர்களை ஒவ்வொருவரையும் பிடித்து கற்பழித்து அதை வீடியோ படம் எடுத்தனர். எடுக்கப்பட்ட அப்படங்களை ஆர்எஸ்எஸ் இன் குண்டர்படை கேம்ப்புகளில் அவற்றை போட்டுக்காண்பித்து, முஸ்லீம் பெண்களை இப்படித்தான் கற்பழிக்கவேண்டும் என்று பயிற்சியும் அளிக்கப்பட்டு, பார்த்து ரசித்ததை நாங்கள் மறந்துவிடுவோமா?.

குஜராத்தில் நிறைமாதக் கற்பிணி என்றும் பாராமல் அவளின் வயிற்றை கிழித்து உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சிசுவை சூழாயுதத்தில் குத்தி எடுத்து அதை பெட்ரோல் ஊற்றியும் எறித்தார்களே சங்பரிவாரக் குண்டர்கள், அவற்றை ஜெயலலிதா மறந்தாலும் மறக்கலாம் ஆனால் முஸ்லிம்கள் எவரும் மறக்க தயாரில்லை.
கனவன் பார்க்க ஆசை மனைவியை, தந்தை கண்முன்னர் அருமை மகளை, அண்ணனை பார்க்கச்செய்து தங்கையை, பெற்ற பிள்ளைகள் எதிரே தாயை கற்பழித்து குற்றுயிராக்கி, அவர்களின் பெண்ணுறுப்பில் மரக்கட்டையையும் சொருகி, அம்முஸ்லிம் பெண்களை நெருப்புக் குண்டத்தில் துடிக்கத்துடிக்க வீசிஎறிந்த கர்மகொடூரத்தை செய்த நரேந்திர மோடி என்ற பயங்கரவாதிக்கு அம்மையார் இனியும் முக்கியத்துவம் கொடுத்தால் தமிழக மக்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலேயே தக்க பாடத்தை அளித்துவிடுவார்கள் என்தை ஜெயலலிதா கவனத்தில் கொள்ளட்டும்.

இந்து ராஷ்ட்டிரத்தை அமைக்கப் போகிறோம் என்ற வெறிக்கூச்சலோடு சங்பரிவாரங்கள், நரந்திர மோடியின் கூலிப்படையினர் இந்திய முஸ்லிம்களைக் கூட்டம் கூட்டமாக கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். யூதவெறி ஜியோனிஸ மொசாத்தோடு கைகோர்த்துக் கொண்டு, 1921 முதல் இன்று வரை இந்துத்துவத் தீவிரவாதிகள் முஸ்லிம்களை கிராமம் கிராமமாக கொலை செய்கின்றனரே அது எதற்காக என்று ஜெயலலிதா அம்மையாருக்கு விளங்காதா? இவ்வாறு நரந்திர மோடியின் இந்து ராஷ்ட்டிரம் அமைப்பதற்காக பூண்டோடு அழிக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்களின் சிலவற்றின் பட்டியல் இதோ.

Table1.jpg

இவ்வாறு இந்தியத்திருநாடு நரந்திர மோடியின் இந்துத்துவத் தீவிரவாதிகளால் சுடுகாடாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் தனது பதவியேற்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அவரை ஜெயலலிதா அழைப்பது முறைதானா? மோடியின் வகையறாக்கள் திட்டமிட்டு நாட்டில் ஏற்படுத்திய கலவரங்கள் ஏராளம். அவைகளில் பாதிக்கபட்டவர்களும், உயிர்நீத்தவர்களும் பெரும்பாலும் முஸ்லீம்களே!. நம்நாட்டில் 1960 முதல் 1970 வரை இவர்கள் நடத்திக்காட்டிய வன்முறைகள் 7974, மேலும் 1971 லிருந்து 1981 வரை 5000 கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதில் 1981 ஆண்டு மட்டும் 319 கலவரங்களும், 1982ல் 474 கலவரங்களும், 1983 ம் ஆண்டு 500 கலவரங்களும் ஏற்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்துத்துவத் தீவிரவாதிகள் ஏற்படுத்திய கலவரங்களைப் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பட்டியல் இதோ.

Table2.jpg

கடந்த அக்டோபர் 2007லிருந்து இன்றுவரை உலக அரங்கில் இந்திய ஜனநாயகத்தின் புகழ் நாற்றமெடுத்து நாறும்படி செய்த டெகல்கா புகழ் நரபலி நரேந்திர மோடியின் கொடியசெயலுக்கும், அவனது இந்து ராஷ்ட்டிரக் கனவிற்கும் பச்சைக்கொடி காட்டி பக்கபலமாக ஜெயலிலதா இருந்தால் மோடியும் ஜெயலிலதாவும் சமமானவர்கள்தான் என்ற நிலையாட்டை தமிழக முஸ்லிம்கள் எடுக்க நேரிடும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
இனி பிஜேபி யுடன் எக்காலத்திலும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டேன் என்று கடந்த 1997ல் நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில் வாக்குறுதி அளித்துள்ள ஜெயலலிதா அவர்கள் மேற்காணும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். தமது கட்சியின் இமாலய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முஸ்லிம்கள், மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தவர்கள் முக்கியமா அல்லது நடந்த சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட்டு பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட்டை இழந்த சங்பரிவார பிஜேபி முக்கியமா என்பதை ஜெயலலிதா அம்மையார்தான் முடிவெடுக்க வேண்டும். 

Source : http://kayalnews.com/news/tamilnadu-/271-2011-05-16-08-28-49
-- 
நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 5:2)

30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் ?



30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் ?

இன்னும் ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு குழந்தை பெத்துக்கக் கூடாது. முதல்ல லைஃப்ல செட்டில் ஆயிடணும். சின்னதா ஒரு அப்பார்ட்மெண்டாவது வாங்கணும். அப்புறம் தான் குழந்தையைப் பற்றி யோசிக்கணும். இது தான் பெரும்பாலான இளசுகளின் சிந்தனை. முன்பெல்லாம் கல்யாணம் முடிந்த பத்தாவது மாதம் கையில் குழந்தை இல்லையென்றால் கொஞ்சம் நக்கலாய்ப் பார்ப்பார்கள். இப்போ நிலமை தலை கீழ். “என்னடா அதுக்குள்ள அப்பாவாயிட்டே” என கிண்டல் தான் வரும்.

திருமணத்தையே முப்பது வயதுக்கு மேல் வைத்துக் கொள்ளத் தான் பலரும் விரும்புகிறார்கள். லைஃபை என்ஜாய் பண்ணணும், சம்பாதிக்கணும், ஹாயா இருக்கணும். இதை இளம் வயதினர் தங்கள் தேசிய கீதமாகவே ஆக்கிவிட்டார்கள். இப்படி திருமணத்தைத் தள்ளிப் போட்டு, அப்புறம் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுவது ரொம்பவே ஆபத்து என எச்சரிக்கின்றன அடுக்கடுக்காய் வரும் ஆராய்ச்சிகள்.

இளம் வயதில் அப்பாவாகி விடுபவர்களின் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கின்றன. வயதான பின் குழந்தை பெற்றுக் கொண்டால் குழந்தைகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி விடுகிறது. அவர்கள் நோஞ்சான்களாகவோ, டல்லடிக்கும் பிள்ளைகளாகவோ வளர்கிறார்கள். அவர்களுடைய மூளை வளர்ச்சியிலும், உடல் வளர்ச்சியிலும் ஒழுங்கற்ற தன்மை வந்து விடுகிறது. எனும் நிஜம் திகைப்பூட்டுகிறது.

இதைப்பற்றி விரிவான ஆராய்ச்சி செய்ய களமிறங்கியது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம். அதனுடன் கைகோர்த்துக் கொண்டது இங்கிலாந்தின் கோபன்ஹாகன் மருத்துவமனை. இதற்கு நிதியுதவி செய்தது வெல்கம் டிரஸ்ட் எனும் அமைப்பும், டானிஷ் புற்று நோய் குழுவும்.

அவர்கள் கண்டுபிடித்த விஷயம் அதிர்ச்சிகரமானது. மருத்துவ உலகில் கண்களில் விரலை விட்டு ஆட்டும் பல்வேறு நோய்களுக்கான மர்ம முடிச்சை அது அவிழ்த்திருக்கிறது. அதாவது ஆண்கள் வயதாகும் போது அவர்களுக்கு பெனிங் விரை புற்றுநோய் எனும் ஒரு நோய் வந்து விடுகிறது. இந்த நோயை ஸ்பெரோமைட்டிக் செமினோமாஸ் என்கிறது மருத்துவம். இது ஆபத்தான புற்று நோய் என்று அலறாதீர்கள். இது இருப்பதே கூட பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை.

அமைதியாக குட்டிக் குட்டியாக இருக்கும் இந்த புற்று நோய் அணுக்கள் ஜெம் செல்களில் பாதிப்பை உருவாக்கி விடுகின்றன. இந்த ஜெம் செல்கள் தான் உயிரணுக்களை உருவாக்க வேண்டும். அப்படி அவை உயிரணுக்களை உருவாக்கும் போது இந்த நோயின் தாக்கமும் உயிரணுவில் பதிவாகி விடுகிறது. அந்த பாதிப்பு பிறக்கும் குழந்தைகளின் டி.என்.ஏக்களில் சைலண்டாய் போய் அமர்ந்து கொள்கிறது. குழந்தை வளர வளர இந்த டி.என்.ஏ தனது சுய ரூபத்தைக் காட்டுகிறது. இது தான் குழந்தைகளின் உடல் வளர்ச்சியிலும், மன வளர்ச்சியில் விரும்பத் தகாத மாற்றங்கள் உருவாகக் காரணம். குழந்தை இறந்தே பிறப்பதற்கும் கூட இது ஒரு காரணமாகி விடுகிறது.

மிகச் சிறிய துணிக்கைகளாக இந்த புற்று நோய் ஆரம்பமாகிறது. வயதாக வயதாக இந்த செல்கள் பலுகிப் பெருகுகின்றன. விளைவு ? உயிரணுக்களும் அதிக அளவில் பாதிப்படைய ஆரம்பிக்கின்றன. கடைசியில் இந்த உயிரணுக்களால் உருவாகும் குழந்தைகள் சிக்கலில் சிக்கிக் கொள்கின்றன. வயதான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சில பொதுவான நோய்கள் வர இதுதான் காரணம் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரூ வில்கீ. பிறவிச் சிக்கல்களுக்கும் விரை புற்று நோய்க்கும் இடையேயான தொடர்பை விளக்கும் முதல் ஆராய்ச்சி இது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த பாதிப்பினால் வரும் நோய்களின் பட்டியல் அதிர்ச்சியூட்டுகிறது. அக்கோண்ரோபிளாசியா எனப்படும் நோய் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதித்து குள்ளமாக்கி விடுகிறது. அபெர்ட் எனப்படும் நோய் ஒழுங்கற்ற முகம், ஒழுங்கற்ற கை, கால்களைக் குழந்தைக்குத் தந்து விடுகிறது.  நூனன் சிண்ட்ரோம் எனப்படும் நோய் குழந்தைகளை குறுகிய கழுத்து, கோணலான முகம், கூடு கட்டும் நெஞ்சு என ஊனமாக்கி விடுகிறது. கேஸ்டிலோ சிண்ட்ரோம் எனப்படும் நோய் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது. இதனால் உடலில் தேவையற்ற தோல், வலுவற்ற மூட்டுகள், சமநிலையற்ற ஹார்மோன் வளர்ச்சி என ஏகப்பட்ட சிக்கல்கள். லேட்டாக குழந்தை பெற்றுக் கொள்வது எனும் சிம்பிள் மேட்டர் தான் இத்தகைய அச்சுறுத்தும் நோய்களுக்கெல்லாம் காரணம் என்பது தான் அதிர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

நேச்சர் ஜெனடிக்ஸ் எனும் புத்தகம் இந்த ஆராய்ச்சியின் முழு தகவல்களையும் புட்டுப் புட்டு வைக்கிறது. இப்போது இந்த ஆராய்ச்சி மேலும் சில நோய்களின் மூலத்தை அறிய களமிறங்கியிருக்கிறது. அதில் முக்கியமான மூன்று நோய்கள் ஆட்டிஸ்ம், ஸ்கிட்ஸேப்ரேனியா மற்றும் மார்பகப் புற்று நோய்.

ஆட்டிஸ்ம் ( autism) என்பது  மூளையைத் தாக்கும் நோய். இந்த நோய் வரும் குழந்தைகள் சுமார் மூன்று வயது வரை வெகு சாதாரணமாய் இருப்பார்கள். அதன் பின் குழந்தையின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரியும். இத்தகைய குழந்தைகளிடம் வந்து சேரும் பிரச்சினைகள் கவனச் சிதைவு, ஒரே போன்ற செயல்களைச் செய்து கொண்டே இருப்பது, உற்சாகம் இல்லாமை, பேசுவதில் பிரச்சினை போன்றவை. இந்தக் குழந்தைகள் தங்களைத் தாங்களே காயப்படுத்தவும் செய்வார்கள்.

ஸ்கிட்ஸேப்ரேனியா (Schizophrenia) என்பது மூளையின் செயல்பாடுகளில் இயல்பற்ற நிலையை உருவாக்கும் ஒரு நோய். இந்த நோய் வந்த குழந்தைகள் எதையெதையோ பிதற்றுவார்கள், ஏதேதோ கதைகள் சொல்வார்கள். அவர்களுடைய சிந்தனை, பழக்கம் எல்லாவற்றிலும் பளிச் என வேறுபாடு தெரியும். இந்த நோய்கள் வரக் காரணம் இந்த ஸ்பெரோமைட்டிக் செமினோமாஸ்  அல்லது இது போன்ற வேறு ஏதோ ஒன்று என்பதே ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை.

முன்பெல்லாம் குழந்தைப் பிறப்புக்கு பெண்களின் வயது தான் முக்கியம் என்பார்கள். ஆண்களென்றால் எந்த வயதில் வேண்டுமானாலும் அப்பாவாகலாம் என மீசை முறுக்கினார்கள். ஆனால் சமீப காலமாக வருகின்ற ஆராய்ச்சிகள் ஆண்களின் முறுக்கு மீசையில் மண் அள்ளிப் போடுகின்றன. இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி முப்பது வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறது. நாற்பதைத் தாண்டி விட்டால் குழந்தைக்கு பெரிய பெரிய நோய்கள் வரும் வாய்ப்பு 6 மடங்கு அதிகரிக்கிறதாம்.

இளம் வயதில் குழந்தை பெற்றுக் கொள்வதே நல்லது. குறிப்பாக உயிரணுக்களின் இயக்கமும், வலிமையும் இளமையில் ஆரோக்கியமாக இருக்கின்றன. எனவே குழந்தை பிறக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது, பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. வயதான ஆண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் கணிசமாகக் குறைகின்றன. நவீன தம்பதியரில் ஐந்தில் ஒரு தம்பதியருக்கு கருத்தரிப்பதில் தாமதம் நிலவுகிறது என்பது அதிர்ச்சிகர உண்மை!.

வாழ்க்கையில் பணமும் அந்தஸ்தும் முன்னிருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டால், குடும்ப ஆனந்தம் பின் இருக்கைக்குத் தள்ளப்பட்டு விடும். இந்த கசப்பான உண்மையையே இந்த ஆராய்ச்சிகள் அதிர்ச்சியுடன் விவரிக்கின்றன.



ஹயாஸ்.

Sunday, May 29, 2011

கொசுவை விரட்டும் மென்பொருள்!


கொசுவை விரட்டும் மென்பொருள்!

இந்தியாவில் மக்கள் தொகை பெருகுவதைவிட பல மடங்கு வேகத்தில் ரீங்காரமிட்டுப் பெருகி வருபவை கொசுக்கள்.நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களிலும் கூட மனிதர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்கும் இந்தக் கொசுக்களை விரட்ட, கொசுவிரட்டிகளை வாங்கியே மனிதன் போண்டியாகிவிடுவான் போலிருக்கிறது!இந்தக் கொசுவிரட்டிகளில் இருந்து வருகிற புகை, வேதிப் பொருட்கள் மனித உடலுக்கு எந்த அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது வேறு கதை.உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறதா? அப்படியானால் இனிமேல் நீங்கள் கொசுவிரட்டிகளை வாங்கத் தேவையில்லை.ஆண்ட்டி மஸ்கிட்டோ சாஃப்ட்வேர் என்ற மென்பொருளை நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் முதலில் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்பு அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.அப்போது கம்ப்யூட்டரின் ஸ்பீக்கரின் வழியாக வெளிப்படும் அல்ட்ரா சவுண்ட், கொசுக்களை விரட்டியடித்துவிடும். உங்களுக்கும் இந்த சாஃப்ட்வேர் வேண்டுமா?"

கீழே உள்ள லிங்க்கை: கிளிக்'செய்யுங்கள் ....!