Wednesday, December 30, 2009

3வது காதாக மொபைல் உள்ளதா? இதைப் படிங்க


எ‌ந்த நோயு‌ம் வ‌ந்த ‌பிறகு ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வதை ‌விட,

வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே ‌சிற‌ந்தது எ‌ன்று கூறு‌கிறா‌ர் மூளை

அறுவை ‌சி‌கி‌ச்சை ‌நிபுண‌ர் சா‌‌ர்‌லிடியோ.

ம‌‌‌னித‌ர்க‌ள் த‌ங்களது செ‌ல்போனை ல‌வ்டு‌ஸ்‌பீ‌க்க‌ரி‌ல்

வை‌த்து‌ப் பேசுவது‌ம், மை‌க்ரோவேவ‌னி‌ல் வேலை

முடி‌ந்தத‌ற்காக ‌பீ‌ப் ஒ‌லி எழு‌ம்‌பிய ‌பிறகு ‌சி‌றிது

நேர‌ம் க‌ழி‌த்து ‌திற‌ப்பது‌ம் ந‌ல்லது எ‌ன்று‌ம் நம‌க்கு

அ‌றிவுறு‌த்து‌கிறா‌ர் இ‌ந்த புக‌ழ்பெ‌ற்ற மரு‌த்துவ ‌நிபுண‌ர்.

மூளை அறுவை ‌சி‌கி‌ச்சை‌யி‌ல் கைரா‌சியான,

சி‌ட்‌னியை‌ச் சே‌ர்‌ந்த இ‌ந்த ‌நிபுண‌ர், ‌மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ல்

இரு‌ந்து வரு‌ம் க‌தி‌ர்‌வீ‌ச்‌சி‌ல் இரு‌ந்து ந‌ம்மை‌‌க் கா‌த்து‌க்

கொ‌ள்ள வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம் எ‌ன்று‌ம்,

அதுபோ‌ன்ற பொரு‌ட்களை ந‌ம்முடனேயே வை‌த்து‌க்

கொ‌ண்டு வா‌ழ்‌க்கை‌யி‌ல் இதுபோ‌ன்ற சவாலை யாரு‌ம்

ச‌ந்‌தி‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று‌ம் கூறு‌கிறா‌ர்.

‌உ‌ங்க‌ள் படு‌க்கை அறை‌யி‌ல் உ‌ள்ள ‌மி‌ன்சாதன‌ங்கள‌்

எ‌ல்லா‌ம் தலை‌க்கு அருகே இ‌ல்லாம‌ல், கா‌ல் ப‌க்கமாக

இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் பார‌்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்று

கூறு‌கிறா‌ர்.

அதாவது படு‌க்கை அறை‌யி‌ல் இரு‌க்கு‌ம் ‌மி‌ன்சார அலரா‌ம்

பொரு‌த்‌த‌ப்ப‌ட்ட கடிகார‌ம், ரேடியோ, நை‌ட் லே‌ம்‌ப், ஏ‌சி

போ‌ன்றவை.

அ‌வ்வாறு இ‌ல்லையெ‌னி‌ல், ‌இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம்

மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ன் இணை‌ப்‌பை‌த் து‌ண்டி‌த்துவ‌ி‌ட்டு

படு‌க்கை‌க்கு‌ச் செ‌ல்லு‌ங்க‌ள். அதுபோல மை‌க்ரோவே‌வி‌ல்

சமைய‌ல் முடி‌ந்தது‌ம் 5 ‌பீ‌ப் ஒ‌லிக‌ள் வ‌ந்தது‌ம் உ‌ங்க‌ள்

கைகளை உ‌ள்ளே‌ ‌‌வி‌‌ட்டு உணவு‌ப் பொரு‌ட்களை எடு‌க்கவு‌ம்

எ‌ன்‌‌கிறா‌ர் அவ‌ர்.

மேலு‌ம், செ‌ல்பே‌சிக‌ளி‌ல் ஒரு நபரை அழை‌க்கு‌ம் போது

அவ‌ர் இணை‌ப்‌பி‌ற்கு வரு‌ம் வரை செ‌ல்பே‌சியை உ‌ங்க‌ள்

காத‌‌ல் இரு‌ந்து ‌சி‌றிது தூர‌ம் நக‌ர்‌த்‌தி வை‌ப்பது‌ம்,

பொதுவாக ல‌வ்டு ‌ஸ்‌பீ‌க்க‌‌ரி‌ல் பேசுவது‌ம் உ‌ங்க‌ள்

மூளையை‌க்

கா‌ப்பா‌ற்‌றி‌க் கொ‌ள்ள உதவு‌ம் எ‌ன்‌கிறா‌ர் சா‌ர்‌லி டியோ.

மூளை‌யி‌ல் உ‌ண்டாகு‌ம் க‌ட்டிகளை அ‌க‌ற்று‌ம் அறுவை ‌

சி‌கி‌ச்சைகளை வெ‌ற்‌றிகரமாக செ‌ய்து வரு‌ம் டியோ,

தலை‌ முடிக்கு‌ப் ப‌ய‌ன்படு‌த்து‌ம் ‌சில ‌நிறமூ‌ட்டிகளு‌ம் (டை),

கு‌றி‌ப்பாக ‌சிவ‌ப்பு ‌நிற மூ‌ட்டிக‌ள், மூளை‌ப் பு‌ற்றுநோ‌ய்

ஏ‌ற்பட வா‌ய்‌ப்ப‌ளி‌க்‌கிறது எ‌ன்‌கிறா‌ர்.

முடி‌க்கு ‌நிறமூ‌ட்டுபவைக‌ள், செ‌ல்பே‌சிக‌ள் போ‌ன்றவை

நேரடியாக மூளையை‌த் தா‌க்‌கி பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்துவ‌தி‌ல்

முத‌ன்மையாக செய‌ல்படு‌கி‌ன்றன எ‌ன்‌கிறா‌ர் இவ‌ர்.

ம‌ற்ற பு‌ற்றுநோ‌ய் செ‌ல்களை ‌விட, மூளை பு‌ற்றுநோ‌ய்

செ‌ல்க‌ள் வேகமாக வள‌ர்‌‌கி‌ன்றன. அதாவது, மா‌ர்பக

பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் த‌ங்களது எ‌ண்‌ணி‌க்கையை ஒரு

வார‌த்‌தி‌ல் அ‌ல்ல‌து ஒரு மாத‌த்‌தி‌ல் அ‌ப்படியே

இர‌ட்டி‌ப்பா‌க்கு‌கி‌ன்றன. ஆனா‌ல் மூளை பு‌ற்றுநோ‌ய்

செ‌ல்க‌ள் இதனை வெறு‌ம் 16 ம‌ணி நேர‌த்‌தில‌்

நட‌த்‌தி‌விடு‌கி‌ன்றன. மேலு‌ம், மூளை‌யி‌ல் க‌ட்டி வளர

எ‌ந்த வயது வர‌ம்பு‌ம், வயது‌த் தடையு‌ம் இ‌ல்லை.

முத‌லி‌ல் செ‌ல்பே‌சிக‌ளி‌ல் அலார‌ம் வை‌த்து‌வி‌ட்டு,

அதனை தலையணை‌க்கு அடி‌யி‌ல் வை‌த்‌திரு‌க்கு‌ம்

பழ‌க்க‌த்தை கை‌விடு‌ங்க‌ள் எ‌ன்‌கிறா‌ர் இவ‌ர்.

எவ‌ர் ஒருவ‌ர் 10 ஆ‌ண்டுகளு‌க்கு‌ம்

மேலாக செ‌ல்பே‌சியை‌ப் பய‌ன்படு‌த்து‌கிறாரோ

அவ‌ர்களு‌க்கு மூளை‌யி‌ல் ‌சில பா‌தி‌ப்புக‌ள்

ஏ‌ற்படு‌கிறது எ‌ன்று‌ம், செ‌ல்பே‌சிகளை ஆ‌ண்க‌ள்

த‌ங்களது பெ‌ல்‌ட் அதாவது இடு‌ப்பு‌ப் பகு‌தி‌யி‌ல்

வை‌த்‌தி‌ரு‌ப்பதா‌ல் எலு‌ம்பு தொட‌ர்பான ‌பிர‌ச்‌சினைக‌ள்

ஏ‌ற்படுவதை ஒரு ஆ‌ய்வு க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளதையு‌ம்

அவ‌ர் மே‌ற்கோ‌ள் கா‌ட்டினா‌ர்.

த‌ற்போது மூளை‌க் க‌ட்டிகளை அக‌ற்ற ப‌ல்வேறு

‌சி‌கி‌ச்சை முறைக‌ள் வ‌ந்து‌வி‌ட்டன. அதாது,

மை‌க்ரோவே‌வ் ‌சி‌கி‌ச்சை போ‌ன்றவை நேரடியாக

க‌ட்டிக‌‌ள் ‌மீது செலு‌த்த‌ப்ப‌ட்டு அவ‌ற்றை

அ‌ழி‌க்கு‌ம் வகை‌யி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. எதுவாக

இரு‌ந்தாலு‌ம் ந‌ல்ல உணவு ம‌ற்று‌ம் பழ‌க்க

வழ‌க்க‌ங்களா‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்‌திரு‌ப்பதே

‌சிற‌ந்தது. வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே நல‌ம் எ‌ன்று ‌மீ‌ண்டு‌ம் ‌

மீ‌ண்டு‌ம் எடு‌த்து‌க் கூ‌று‌கிறா‌ர் சா‌ர்‌லி டியோ.

ஹமீது சுல்தான்

No comments: