Monday, August 30, 2010

குரானின் இலக்கிய ஆச்சர்யங்களில் இன்னும் சில உங்கள் பார்வைக்காக...!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்

குரானின் இலக்கிய ஆச்சர்யங்களில் இன்னும் சில உங்கள் பார்வைக்காக...இன்ஷா அல்லாஹ்...



2. குரான் தன்னை எதிர்ப்பவர்களுக்கு பல சவால்களை விடுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். அதில் முஸ்லிம்களால் அதிகம் உபயோகப்படுத்தப்படும் ஒரு வசனம்...

افلا يتدبرون القران ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا
Afala yatadabbaroona alqur-ana walaw kana min AAindi ghayri Allahi lawajadoo feehi ikhtilafan katheeran

"அவர்கள் இந்த குர்ஆனை கவனமாக சிந்திக்க வேண்டாமா, அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை நிச்சயமாக அவர்கள் கண்டிருப்பார்கள்" (திருக்குர்ஆன் 4 : 82)

"Do they not then consider the Quran carefully? Had it been from other than Allah, they would surely have found therein much contradictions." (Noble Qur'an 4:82)

இங்கே "முரண்பாடுகளை (contradictions)" என்ற சொல்லுக்கு அரபியில் "இக்ஹ்டிலாபான் (ikhtilafan)" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது, இந்த இக்ஹ்டிலாபான் என்ற வார்த்தை குரான் முழுவதிலும் இந்த ஒரு இடத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதாவது இந்த வார்த்தை குரானில் வேறு எங்கும் திரும்ப வரவில்லை. அந்த ஒரு இடத்தில மட்டுமே, அந்த ஒரு உச்சரிப்பில். சுபானல்லாஹ்....

3. அது போல நாம் நன்கு அறிந்த ஒரு சூரா, சூரத்துல் இக்லாஸ். அந்த சூராவின் முதல் ஆயத் பின்வருமாறு இருக்கும்...

قل هو الله احد - Qul huwa Allahu ahadun
"நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே" (குரான் 112:1)
"say `He is ALLAH, the One!" (Holu Qur'an 112:1)
இங்கு "ஒருவனே (the one)" என்ற சொல்லுக்கு "அஹத் (ahadh)" என்ற வார்த்தை உபயோக படுத்தபட்டிருக்கிறது. இந்த ஒரு வார்த்தையும் அந்த ஒரு வடிவத்தில் இந்த ஒரு சூராவில் மட்டுமே வருகிறது, குர்ஆனில் வேறு எங்கும் திரும்ப உபயோகப்படுத்தப் படவில்லை.

அதாவது இறைவன் தன்னை ஒருவனே என்று சொல்லுவதற்கு உபயோகப்படுத்திய வார்த்தை, அந்த ஒரு வடிவத்தில் முழு குரானிலும் ஒரு சூராவில் மட்டுமே வருகிறது. சுபானல்லாஹ்...



4. குர்ஆனின் இரண்டாவது சூரா, சூரத்துல் பகரா. இந்த சூராவின் மொத்த வசனங்கள் 286. இந்த சூராவில் ஒரு இடத்தில் கீழ்க்கண்ட வசனம் வருகிறது.

"இதேமுறையில் நாம் உங்களை நடுநிலை சமுதாயமாக ஆக்கிஉள்ளோம் "
"Thus have we made you a middle nation, to be witnesses against men, and that the Apostle may be a witness against you"

"உங்களை நடுநிலை சமுதாயமாக ஆக்கிஉள்ளோம்" என்ற இந்த வசனம் மிச்சரியாக அந்த சூராவின் நடுவிலே வருகிறது, அதாவது 143 வது வசனம் தான் இது.

இங்கு ஒன்றை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும், குரானின் சூராக்களின் ஆயத்துக்கள் நாம் இப்போது படிப்பது போல வரிசையாக அருளப்பட்டதல்ல, அங்கொன்றும் இங்கொன்றுமாக இறக்கியருள பட்டது, சூராவில் எந்த வசனம் எங்கு வரவேண்டும் என்பதெல்லாம் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி நடந்த ஒன்று. அதுபோல வசனங்களுக்கு எண்களிடும் முறையும் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லை. பிறகுதான் ஏற்படுத்தப்பட்டது.

ஆக மாறி மாறி அருளப்பட்ட வசனங்களிலும் இந்த "நடுநிலை" வசனம் சரியாக அந்த சூராவின் நடுவிலே வருகிறது.

5. குரான் அருளப்பட்ட சமயம், நான் ஏற்கனவே கூறியது போல் அரபி மொழி அதன் உச்சத்தில் இருந்த நேரம். அப்பொழுது அரபி மொழி இலக்கணம் மூன்றாக அறியப்பட்டிருந்தது,

a. கவிதைநடை (poetry), அரபியில் "பிஹார்" எனப்படும்.
b. உரைநடை (common speech), அரபியில் "முர்ஸல்" எனப்படும்.
c. கவிதையும் உரையும் சேர்த்த நடை (combination of both poetry and common speech), அரபியில் "சாஜ்" எனப்படும்.

அரேபிய மக்களோ அல்லது இலக்கியவாதிகளோ ஒன்றை சொல்ல அல்லது எழுத நினைத்தால், அது மேற்கூறிய ஒன்றில் அமைந்து விடும்.
ஆனால் குரானை பார்த்து இந்த அரேபிய இலக்கியவாதிகள் அதிர்ந்ததற்க்கு மற்றுமொரு காரணம் குரானின் வசனங்கள் மேற்கூறிய எந்த நடையிலும் இல்லை என்பதுதான். குரானின் நடை அவர்கள் இதுவரை கண்டிராதது, கற்பனை செய்ய முடியாதது.
சாதாரண மக்களுக்கோ, அந்த வசனங்களின் நெஞ்சை ஊடுருவச்செய்யும் பொருளும், அந்த பொருளை தாங்கி வந்த சொற்களின் அசாதாரண நடையும், அந்த சொற்கள் உச்சரிக்கப்பட்ட விதமும் மனதை கொள்ளைக்கொண்டன.
இன்று வரை குரான் போன்றை ஒன்றை எவராலும் உருவாக்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணம்.
குரான் அருளப்பட்ட நாளிலிருந்து இன்று வரை முஸ்லிம்கள் அதிசயமாக பார்ப்பது தாஜ் மஹாலையோ பிரமீடைய்யோ அல்லது வேறொன்றையோ இல்லை, குரானைத்தான். நம்முடைய பலமும் அதுதான்.
அன்றும் சரி இன்றும் சரி குர்ஆன் ஆச்சர்யங்கள் அளிப்பதில் தவறியதில்லை, ஆனால் இதையெல்லாம் ஆராயாத, காதில் போட்டுக்கொள்ளாத சிலர் இருப்பதுதான் ஆச்சர்யம்.
"அவர்கள் இந்த குர்ஆனை கவனமாக சிந்திக்க வேண்டாமா, அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை நிச்சயமாக அவர்கள் கண்டிருப்பார்கள்" (திருக்குர்ஆன் 4 : 82)

இறைவனே எல்லாம் அறிந்தவன்..
இறைவன் நம் அனைவருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்...
My sincere thanks to:
1. Br.Nouman Ali Khan , founder and CEO of Bayyinah Institute.
2. Br.Eddie of thedeenshowdotcom.
3. Dr.Sabeel Ahmed, Director of Outreach, Gainpeacedotcom, ICNA
4. Dr.Lawrence Brown, Canadian Dawah Association.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக..

குர்ஆன் அருளப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை அது மிக ஆழமான ஆராய்ச்சிக்கு உட்படுத்த பட்டிருக்கிறது. அறிவியல், இலக்கியம் என பல பிரிவுகளில் அது ஆராயப்பட்டிருக்கிறது. உலகில் அதிகம் ஆராயப்பட்ட புத்தகங்களில் குரானும் ஒன்று.
குரானின் இலக்கிய (literary miracles) ஆச்சர்யங்களை இந்த பதிவில் சிறிது பார்க்கவிருக்கிறோம்.



1. குரானை எந்த மொழிகளிலும் முழுமையாக மொழிப்பெயர்க்க முடியாது என சிலர் சொல்லி கேட்டிருப்பீர்கள். அது முற்றிலும் உண்மைதான். நீங்கள் அரபி தெரியாமல் தமிழ் மொழிப்பெயர்ப்பை மட்டுமே படிப்பவரா? அப்படியெனில் நீங்கள் குரானின் அழகை மிக சொற்பமே உணர்கிறீர்கள்.
ஏன்? இந்த பதிவின் முடிவில் அறிந்துக்கொள்வீர்கள்.
குர்ஆன் அருளப்பட்ட சமயம், மக்கா நகரம் அரேபிய ஷேக்ஸ்பியர்கள் நிரம்பி இருந்த நேரம். அரபி மொழி புகழின் உச்சத்தில் இருந்த தருணம். அப்படிப்பட்ட சமயத்தில் தான் குரான் இறங்கி அரேபிய இலக்கியவாதிகளை ஆச்சர்யத்தில் அதிர்ச்சி அடையச்செய்தது. தாங்கள் இதுவரை நினைத்திராத எழுத்து நடை. கொள்ளை அழகான வார்த்தைகள். நெஞ்சை ஊடுருவ செய்யும் பொருள்கள்.
அரேபிய புலவர்களால் நம்ப முடியவில்லை, நேற்று வரை நம்முடன் இருந்த எழுதப் படிக்க தெரியாத முஹம்மதா இந்த அற்புத வாக்கியங்களை கற்பனை செய்தார்? நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிசயம் இது. வேறு வழியில்லாமல் நம்பினார்கள், ஏனென்றால் இறைவனிடத்தில் இருந்து வந்ததென நம்புவது இன்னும் கடினமானது. அதற்கு முஹம்மது (ஸல்) அவர்களின் கற்பனை வளத்தை பாராட்டுவது எவ்வளவோ மேல்.
நபிகள் நாயகம் (ஸல்) எவ்வளவோ எடுத்து கூறியும் இது இறைவனின் வார்த்தைகள் என்பதை நம்ப மறுத்து விட்டார்கள். குரான் அடுத்த அதிர்ச்சியை கொடுத்தது.
நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால் இது போன்ற ஒரு புத்தகத்தை, அல்லது பத்து சூராக்களை அல்லது ஒரு சூராவையாவது கொண்டு வாருங்கள் என்று அந்த அரபு ஷேக்ஸ்பியர்களை சவாலுக்கு அழைத்தது.
இன்று வரை எந்த அரபியராலும் அல்லது அரபி தெரிந்த எவராலும் குரானின் சவாலை எதிர்க்கொள்ள முடியவில்லை.

நீங்கள் கேட்கலாம், சரி முஸ்லிம் அரபியரால் தான் குரான் போன்ற ஒன்றை உருவாக்க முடியவில்லை, ஏனென்றால் அது அவர்களது உயிர் மூச்சு, குரான் போன்ற ஒன்றை உருவாக்க அவர்கள் தயக்கம் காட்டலாம், ஆனால் வளைகுடாவில் தான் பத்து மில்லியன் அரேபிய கிருத்துவர்களும், யூதர்களும் இருக்கிறார்களே, அவர்களால் கூடவா குரானை போன்ற ஒன்றை உருவாக்க முடியவில்லை?.
மிகச்சரியான கேள்விதான். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், யாராலும் குரானின் சவாலை எதிர்க்கொள்ளமுடியாது , முறியடிக்கமுடியாது...
ஏன்?
இதற்கு ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் விடை சொல்லிவிடலாம்.
நாம் பல புத்தகங்களை படித்திருப்போம், புத்தகத்தின் ஆசிரியர் ஒன்றை கூறிக்கொண்டே வரும்போது நடுவில் ஒரு சொல்லுக்கு அதிக விளக்கம் தேவைப்பட்டால் அந்த சொல்லுக்கு பக்கத்தில் ஒரு எண்ணை (called superscript, eg. Hello1) குறிப்பிட்டு அந்த எண்ணுக்கான விளக்கத்தை அந்த பக்கத்தின் அடியில் (footnote) விளக்கமாக எடுத்துரைப்பார். இதை நாம் பல இடங்களில் பார்த்திருக்கலாம்.



ஆனால் குரானிலோ இது வேறு விதமாக வியப்பளிக்கும் விதத்தில் கையாளப்பட்டிருக்கிறது. எப்படியென்றால், ஒன்றை கூறிக்கொண்டே வரும்போது நடுவில் ஒரு வார்த்தைக்கோ அல்லது ஒரு சம்பவத்திற்கோ அதிக விளக்கம் தேவைப்பட்டால் அந்த வாக்கியம் அதே இடத்திலேயே நிறுத்தப்பட்டு எந்த சொல்லுக்கு விளக்கம் தேவையோ அதை விளக்க சென்றுவிடுகிறது. அந்த சொல்லை விளக்கியபிறகு மறுபடியும் பழைய இடத்திலிருந்து தொடர்கிறது.
இங்கு நீங்கள் ஒன்றை மிக கூர்மையாக கவனிக்க வேண்டும். ஒன்றை முதலில் சொல்லிவிட்டு நடுவில் வேறொன்றை விளக்கிவிட்டு மறுபடியும் பழைய இடத்திலிருந்து தொடர்கிறது.
குரானின் தனித்துவம் என்ன தெரியுமா? சொன்னால் மிரண்டு விடாதீர்கள்....
ஒன்றை சொல்லிக்கொண்டே வரும்போது அதை ஒரு சத்தத்திலும் (ஒரு வார்த்தையை உச்சரிப்பதால் ஏற்படக்கூடிய சத்தம்), நடுவில் ஒரு சொல்லுக்கு விளக்கம் தேவைப்பட்டால் அந்த விளக்கத்தை வேறொரு சத்தத்திலும், அந்த விளக்கத்தை முடித்துவிட்டு பழைய இடத்திலிருந்து தொடரும்போது மறுபடியும் பழைய சத்தத்திலும் தொடர்கிறது (Qur'an distinguishes those in an amazing audio format).
எளிமையாக சொல்லப் போனால் இரண்டு பழைய சத்தத்திற்கு நடுவில் ஒரு புது சத்தம். புது சத்தம் ஒரு சொல்லுக்கான விளக்கத்தை நடுவிலே அறியவைப்பதற்காக.
குரானை ஓதுபவரும் எளிதிலே அறிந்து கொள்வார், இது ஒரு சொல்லுக்கான விளக்கம் என்று. என்ன வியப்பின் நுனிக்கே சென்று விட்டீர்களா? இது குரானின் அதிஅழகான (The royal literature) இலக்கணத்திற்கு ஒரு சிறிய உதாரணம் தான்.

இப்போது சொல்லுங்கள், எந்த அரேபிய புலவரால் சத்தத்தை மாற்றி மாற்றி, அதே சமயம் பொருளும் மாறாமல் ஒரு முழு சூராவை கொண்டுவரமுடியும். சத்தத்தை மாற்றுவதெல்லாம் அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. குரான் முழுக்க இந்த நடை பின்பற்றப்படுகிறது, பொருள் மாறாமல் சுவை மாறாமல். படிப்பவரை கட்டிப் போடும் வல்லமை. ஒரு சிறிய உதாரணம் தான் இது, இன்னும் பல பல காரணங்கள் இருக்கின்றன ஏன் அவர்களால் முடியவில்லையென்று. இன்ஷா அல்லாஹ் மற்றுமொரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
இப்போது என் முதல் கேள்விக்கு வாருங்கள், ஏன் தமிழிலோ அல்லது வேறொரு மொழியிலோ குரானை முழுமையாக மொழிப்பெயர்க்க முடியவில்லை?
விளக்கம் இந்நேரம் கண்டுபிடுத்திருப்பீர்கள், வார்த்தைகளை மொழிப்பெயர்க்கலாம் (இதுவும் குரானை பொறுத்தவரை கடினந்தான்), சத்தங்களை?
Qur'an is the most difficult book on the face of earth to translate...
இறைவனே எல்லாம் அறிந்தவன்....
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியை காட்டுவானாக...ஆமின்


இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Note:
My sincere thanks to Br.Nouman of Bayyinah Institute for inspiring me to write this article.

Thanks,
ஆஷிக் அஹ்மத் அ.

Saturday, August 28, 2010

இஸ்லாத்தின் பார்வையில் சோம்பல்

சுறுசுறுப்பின்எதிரிதான்சோம்பல்!
முன்னேறிச்சென்றிடதடைசெய்யும்சோம்பல்!
முயற்சியை வீணாய்ச் சிதறடிக்கும் சோம்பல்!

சோம்பல் மிக்கவர்கள் படுக்கையைவிட்டு மட்டுமல்லாமல், உட்கார்ந்துவிட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள். சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக்கொள்வார்கள்; மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள். இவ்வாறு இந்த சோம்பலைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட சோம்பலைப்பற்றி, சோம்பேறிகளைப் பற்றி இஸ்லாத்தின் பார்வையில் சுருக்கமாகப் பார்ப்போம். அல்லாஹ் தன் திருமறையிலே பல இடங்களில் நயவஞ்சகர்களைப் பற்றி குறிப்பிடும் போது, இந்த சோம்பலைப்பற்றியும் குறிப்பிடுகின்றான். யார் ஒருவர் தொழுகையில் சோம்பலுடன் தொழுகிறாரோ அவரை அல்லாஹ் ‘நயவஞ்சகர்கள்’ என்று அல்லாஹ் அடையாளம் காட்டுகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்:

“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை” (அல்-குர்ஆன் 4:142)
எனவே, சோம்பல் என்பது நயவஞ்சகத்தின் அடையாளம் என்பதை உணர்ந்து அதிலிருந்து விடுபடவேண்டும்.

சோம்பலைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:

1) அதிகாலையில் எழுந்து பஜருடைய தொழுகையை நிறைவேற்றுதல்: -
ஒருவர் சோம்பலில் இருந்து விடுபட்டு, அன்றைய காலைப்பொழுதை சுறுசுறுப்புடன் அடையவேண்டுமா? அதற்கு, நபி (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த வழியை நமக்கு காட்டியிருக்கிறார்கள்.
உண்மையிலேயே பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால், நம்மில் பலர் இந்த வழியைப் பின்பற்றி நடப்பதில்லை.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘உங்களில் ஒருவர் உறங்கும் போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது; உறங்கு என்று கூறுகின்றான். அவர் அதிகாலையில் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’ {அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி}
பஜ்ர் தொழுகைக்கும் சுறுசுறுப்புக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது. சுறுசுறுப்புடன் அன்றைய தினத்தைத் தொடங்குபவர் பஜ்ர்
தொழுதவராவார். சோம்பல் நிறைந்தவராக அன்றைய தினத்தை அடைந்தவர் ஷைத்தானோடு சேர்ந்து உறங்கி, பஜ்ர் தொழுகையை தொழாதவர் ஆவார். மேற்கண்ட இரண்டு பிரிவினரில் நாம்
எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

2) வயிறு புடைக்க சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்!
இந்த விஷயத்தில் நாம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைக் கடைபிடிக்காததால் சோம்பேறிகளாகக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். அளவுக்கு மீறி உண்பது நம்மைச் சோம்பேறிகளாக்குகின்றது. ஒருவரைப் பார்த்து, ஏன் சோம்பலாக இருக்கிறாய் என்று கேட்கும் போது அவர், ‘உண்ட மயக்கம்; அது தான் காரணம்’ என்று கூறுவதை இன்று நாம் சர்வ சாதாரணமாக காண்கிறோம். நபி (ஸல்) அவர்கள், அரை வயிறு சாப்பிட்டு, கால் வயிறு தண்ணீர் குடித்து, கால் வயிறை காலியாக வைப்பார்கள். நாமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றினால் சோம்பலில் இருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.

3) இரவில் தாமதமாக படுக்கைக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்!
நம்மில் பலர் இரவில் தாமதமாக உறங்கி காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருக்கக் கூடியவர்களாக இருக்கிறோம். இதுவும் நபி (ஸல்) அவர்களின் வழக்கத்திற்கு மாறான செயலாகும். நபி (ஸல்) அவர்கள் இரவில் முன்னேரத்தில் உறங்கி, தஹஜ்ஜத் தொழுகைக்காக சீக்கிரம் எழுந்திருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆகையால் நாம் சீக்கிரமாக உறங்கி, அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் சோம்பலில் இருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.

4) சோம்பலை விட்டும் நம்மை பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்தல்!
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில், சோம்பலை விட்டும் பாதுகாவல் தேடுபவர்களாக இருந்தார்கள்.
‘யா அல்லாஹ்! கவலை, துயரம், இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், மனிதனின் ஆதிக்கம் மற்றும் கடனின் சுமை ஆகியவற்றைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்ற துஆவை தொழுகையில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். (ஆதாரம் : புகாரி)

ஆகையால், ஈருலக வெற்றிக் கனியை நம்மிடமிருந்து பறித்துவிடுகின்ற அளவிற்கு மோசமான இந்த சோம்பலை நாம் மேற்கண்ட நபிவழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விரட்டுவதற்கு முயற்சி செய்ய செய்ய வேண்டும். ‘நாளையிலிருந்து நமது முயற்சியைத் துவங்கலாம்’ என்று சோம்பலின் காரணமாகத் தள்ளிபோடாமல் அதை இப்பொழுதிலிருந்தே கடைப்பிடிக்க வேண்டும்.

‘சோர்வு’ என்பதிலுள்ள முதல் எழுத்தை மாற்றினாலேயே நமக்கு பிறந்து விடும் ‘தீர்வு’.
சோம்பல்மிக்கவர்கள் வாழ்க்கையில் இழப்பது எத்தனையோ! சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ! எனவே சோம்பலை விரட்டி நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாகவும்.

Wednesday, August 25, 2010

விண்டோஸ் டிரைவர்ஸ் அனைத்தையும் பேக்கப் செய்யும் இலவச யுட்டிலிட்டி


புதிதாக கணணி வாங்குபவர்களுக்கு டிரைவர் சிடி தருவார்கள். கணனியின் இயங்குதளத்தை மீண்டும் நிறுவும் போது இந்த சிடி மூலம் எல்லா டிரைவர்ஸையும் நிறுவி விடலாம். எனினும் டிரைவர் சிடி தொலைந்துவிட்டால் என்ன செய்வது. இவ்வாறான சநதர்ப்பததில் உதவுவது தான் Double Driver எனும் இலவச யுட்டிலிட்டியாகும்.



Double Driver ஐ கணனியில் நிறுவி ஸ்கான் செய்து பின்னர் பேக்கப் செய்யுமாறு பணித்தால் எல்லா டிரைவர்களையும் தனித்தனியாக பால்டர்களில் சேமித்துவிடும்.
இனி இலகுவாக கணனியை ரீஇன்ஸ்டால் செய்யும் போது பயன்படுத்தலாம்.

டவுண்லோட் செய்ய http://www.boozet.co.cc/dd.htm

By

HS.

Monday, August 23, 2010

டெலிபோன் கம்ப்யூட்டர் டெலிவிசன் மூன்றையும் அற்புதமாக இணைக்க!

mobile witch remote


connect to a projector


நோக்கியோ டெலிபோன்,கணினி மற்றும் டெலிவிசன்(tv) இந்த மூன்றுக்கும் ஒரு அற்புதமான தொடர்பை ஏற்படுத்தினால் நமக்கு மிக பெரிய வுதவியாக இருக்கும்.


அந்த அற்புதம் இன்றயபதிபில் பார்போம்.


நம்மிடம் இருக்கும் நோக்கியா போனையே நமது லாப்டபுக்கு மைஸாக (bloutooth)மற்றும் ரிமோட்டாக ப்லூடூத் வுதவியுடன் பயன் படுத்தமுடியும் அப்படியே TVயையும் இயக்கமுடியும். இந்த mobile witch remote மென்பொருள் வுங்கள் கணினியில் இருந்தால்.


மிகவும் பயன்வுள்ள இந்த மென்பொருள் குறைந்த கொள்ளளவே கொண்டுள்ளது (3.32 MB) இந்த மென்பொருளை இலவசமாக பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.


பதிவிறக்கம் முடிந்ததும் save or run வரும் கணினிக்கு புதியவர்கள் run தேர்ந்துஎடுக்கவும்,





i accept என்று இருக்கும் கட்டத்தில் மார்க்கை எடுத்துவிடவும் இல்லையேன் டூல்பரும் சேர்ந்து நிறுவப்பட்டுவிடும்.


இப்போது மென்பொருள் வுங்க கணினியில் நிறுவப்பட்டு கொண்டு இருக்கும்.


கணினியில் நிறுவிக்கொண்டு இருக்கையிலேயே நமது கணினியில் java இலையெனில் அதுவாகவே ஜாவா நிறுவுவதற்கு ஒருதளம் திறந்து குடுக்கும்.


ஜாவா தளம் திறக்கப்படவில்லை என்றால்?வுங்கள் கணினியில் முன்போ ஜாவா நிறுவப்பட்டு இருக்கலாம் ஒருவேளை ஜாவா இல்லையேன் தேவைபட்டால் மட்டும் இங்கு கிளிக் செய்து ஜாவா இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும்(ஜாவா நிறுவும் போது இணையதொடப்பு இருப்பது சிறந்தது)ஜாவாவையும் நிருவிகொல்லுங்கள்.


கணினியில் mobile witch remote மென்பொருள் நிறுவியதும் இதன் icon கணினித்திரையில் தோன்றும் கீலிருக்கும் படத்தில் இருபதைபோல்.



இப்பொது ஒருமுறை மௌஸின் வுதவியுடன் refresh செய்தால் இரண்டு icons திரையில் வந்துவிடும் கீழே இருபதைபோல்.



இதில் மேல் இருபது கணினிக்காக கீழே இருபது (Nokia Application Installer)போனில் நிறுவ.


Nokia Application Installerரை போனில் நிறுவுவதற்கு பலவழிகள் இருந்தாலும் நோக்கியா pc suite மூலம் நிறுவுவதுதான் சிறந்தது,nokia pc suite சாப்ட்வேரை போன் வாங்கும் போதே ஒரு டிஸ்க் இலவசமாக தருவார்கள்.


pc suite CD தற்போது கைவசம் இல்லையென்றால்இங்கு கிளிக் செய்து இலவசமாக
Nokia pc suite மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொல்லுங்கள்.(Nokia pc suite சாப்ட்வேர் எப்போதுமே கணினியில் இருப்பதுதான் நல்லது அப்போதுதான் நோக்கியா நிறுவனத்தின் புதிய,புதிய பதிப்புகள் வுங்கள் போனில் நிருவிகொள்ளமுடியும்)


Nokia pc suite மென்பொருளை கணினியில் நிறுவியபிறகு முதலில் பதிவிறக்கம் செய்த ரிமோட் சாப்ட்வேருக்கு(mobile witch remote) வருவோம்.


(Nokia Application Installer)மென்பொருளை போனில் நிறுவ போனையும் கணினியையும் ப்லூடூத் மூலம் இனைதுவிடவேண்டும்.



இப்பொது இந்த படத்தில் கீழே இருபதின்மேல் (Nokia Application Installer) (MWRemot....) மௌஸை வைத்து வலதுகிளிக் செய்தால் install with Nokia Application Installer என்று இருப்பதை தேர்வுசெய்தால் மென்பொருளை போனில் நிருவதுடங்கிவிடும்.


கணினியின் திரையிலும் டெலிபோனின் திரையிலும் நிறுவவேண்டுமா என்று கேட்கும் அனைத்திற்கும் ok குடுத்துவிட்டால் போதும்.


இப்போது டெலிபோனின் மென்பொருள் நிறுவப்பட்டு இருக்கும் நமது டெலிபோனில் (menu + installations + remote) சென்று பார்க்கவும் இதன் ஐகான் தெரியும்.



நிறுவும் வேலைகள் முடிந்துவிட்டது இப்போது ரிமோட்டாக பயன் படுத்தும் முறையை பார்போம்.


முதலில் கணினியின் திரையில் இருக்கும் இதன் iconனை கிளிக் செய்யவும் ஐகானை கீழே பார்க்கவும்.



இப்பொது கீழே இருபதைபோல் ஒரு விண்டோ திறக்கும்.



இப்போது போனில் menu + installations + remote சென்று ரிமோட் ஐகானை திறக்கவும் search for servers வரும் சிறிதுநேரத்தில் நமது கணினியின் பெயர் போனில் வந்துவிடும் கணினியின் பெயர்தெரியும் இடத்தை திறந்தாள் கீழே இருபதைபோல் வரும்.

இது கணினியின் திரையில் தெரிவது


இது போனின் திரையில் தெரிவது.


இதில் mouse mode,keyboard mode, நமக்கு தேவையானதை தேர்வுசெய்யலாம்.


போனில் menu + tools + settings +general + personalisation + standby mode + shortcuts. சென்று shortcuts சொடுக்கி போனில் தேவையான இடத்தில் இதை வைத்து விட்டால் எழிதில் திறக்கவுதவும்.


அவ்ளோதான் வேலைமுடிந்தது இனி தொலைவில் இருந்துகொண்டே தொலைபேசிமூலம் அற்புதமாக கணினியை மௌஸின் மற்றும் கீபோர்டின் வுதவி இல்லாமல் இயக்கலாம். கணினியின் திரை முழுவதுமாக டெலிபோனின் திரைக்கு வந்துவிடும்.



connect to a projector



இப்போது கணினிக்கும் டெலிவிஷனுக்கும் தொடர்பு ஏற்படுத்துவதை பார்போம்



இது பலருக்கு தெரிந்து இருந்தாலும் கணினியின் திரை TV யில்
தெரியும் என்ற அளவிலேயே தெரிந்து வைத்து இருகின்றார்கள் இதில் இருக்கும் வசதிகளை முழுமையாக தெரிந்தால் இவ்ளோநாள் இது தெரியாமல் இருந்துவிட்டோமே என்று வருந்துவார்கள்.


முதலில் கணினியையும் டெலிவிஷனையும் இணைப்பதால் என்ன பயன் என்பதை பார்த்துவிட்டு அதை எப்படி இணைப்பது என்று பார்போம்.



கணினியின் வெரும்திரையில் மௌசை வலது செய்து கீழே கடைசியில் இருக்கும் Personalize கிளிக் செய்தால் கீழ் இருபதைபோல் ஒருவிண்டே திறக்கும்.



இதில் கீழே இடதுபக்கம் display என்பதை கிளிக் செய்தால் கீழே இருபதைபோல் ஒரு விண்டோவ் திறக்கும்.



இதில் இடதுபக்கம் connect to a projector என்பதை தேர்வு செய்தால் கீழ் இருப்பதை போல் ஒருவிண்டோவ் திறக்கும்.



அல்லது சுருக்கமாக் கீபோர்டில் விண்டோ படம் போட்ட கீயையும் P என்னும் கீயையும் சொடுக்கலா.





(விண்டோ 7 மற்றும் Windows Vista ஒரேமாதிரிதான் Windows XP மட்டும் FN key அழுத்திக்கொண்டு(function key) F5, F7 or F8 அழுத்துவதன் மூலம் எழிதில் திறந்து விடலாம்)இதில் இன்னும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இங்கு
கிளிக் செய்துபார்க்கவும்.


இதில் நான்கு வகையான படங்களும் நான்கு வகையான வசதிகளை கொண்டது நமக்கு தேவையானத்தின் மேல் மௌசால் கிளிக் செய்து தேர்வு செய்துகொள்ளலாம்.


1 Computer only இதை தேர்வு செய்வதன்மூலம் கணினிக்கும் tv கும் வுள்ளதொடர்பை துண்டிப்பது.


2 duplicate இதை தேர்வு செய்வதன் மூலம் கணினியின் திரையில் தெரிவது அனைத்தும் tv யிலும் தெரியும்.


மூன்றாவதாக இருப்பதுதான்(extend)மிக மிக அற்புதமான பயன் தரக்கூடியது


3 Extend இதைதேர்வுசெய்தால் நமது கணினியின் ஸ்க்ரீன் மட்டும் TV யில் தெரியும்.
நமது மௌசின் கர்சரை(mouse cursor) tv பக்கம் இழுத்து செல்லுங்கள் கர்சர் tv யில் தெரிவதை பார்க்கலாம்.


Extend தேர்வு செய்வதால் வசதிகள்என்ன என்று பார்போம். இரண்டு நண்பர்கள் இருக்கும் அறையில் ஒருவர் இணையத்தில் ஏதேனும் ஒரு வீடியோ பார்க்க அல்லது டிஸ்கில் ஏதேனும் படம் பார்க்க விரும்புகிறார் மற்றவரோ இணையத்தில் வேறஎதேனும் பக்கங்களை பார்க்க விரும்புகிறார் அல்லது ஆலுவலகம் சம்மந்தமாக ஏதேனும் ஒருவேலை கணினியில் செய்யவேண்டும் இருபதோ ஒருகணினி! இதற்க்கு இந்த Extend மூலம் அற்புதமான தீர்வு கிடைத்து விடுகின்றது.


அதாவது நண்பர் பார்க்க விரும்பும் அந்த விண்டோவை மட்டும் மௌசின் கர்சர்(mouse cursor) வுதவியுடன் இழுத்து சென்று டிவி பக்கம் வைத்து விடுங்கள் நண்பர் tv யில் அவருக்கு தேவையான வீடியோ வந்து விட்டதால் வுன்களை தொந்தரவு செய்யாமல் tv யை பார்க்க ஆரம்பித்து விடுவார் இந்த EXTEND என்கின்ற மந்திர சாவிமூலம்.


இன்னு விபரம் தேவையெனில் கீழே வீடியோவை பார்க்கவும்











4 projector only இதனை தேர்வுசெய்வதன்மூலம் கணினியின் திரையை மூடிவிட்டு tv கணினியின் திரையை பார்க்கலாம் இது எதற்கு பயன் படும் என்றால் எதேனு படம் பார்பதாக இருந்தால் கணினியின் திரையில் பார்பதைவிட கணினியில் இருந்து tv யில் பார்ப்பது நன்றாக இருக்கும் ஒரு DVD பிளயரின் தேவையை இது பார்த்துவிடும்.




இப்போது எப்படி டிவியுடன் கணினியை இணைப்பது என்றுபார்போம்.




கணினியையு டிவியையும் இணைக்க கீழே இருக்கும் படத்தில் ஏதேனும் ஒரு கேபிள் மட்டு இருந்தால் போதும்.







இதில் நமது கணினிக்கும் டெலிவிசனுக்கும் பொருத்தமான கேபிளை வாங்கவும் குவைத்தில் இதன் விலை இரண்டுதினார்கள் மட்டுமே.





ஆடியோவிற்கு தனியாக இணைக்க வேண்டும் கீழே பார்க்கவும்



இதில் சிவப்பு மற்று வெள்ளையாக இருப்பதை டிவி யில் ஆடியோ இடத்திலும் கருப்பாக இருப்பதை கணினியல் ஹெட்செட் பொருத்தும் இடத்திலும் பொருத்தவேண்டும் (கணினிக்கும் tv க்கும் கேபிள் தொடர்பு குடுக்கும் சமயம் மின்சாரத்தை முழுவதுமாக துண்டித்து விடவேண்டும்)


கேபிள் பொருத்தி தொடர்பு ஏற்படுத்தியதும் டிவியை ஆன் செய்து ரிமோட்டில் TV/AV
மாற்றம் செய்து மேற்கூறிய connect to a projector வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.


இப்போது தொலைபேசி கணினி டெலிவிசன் மூன்றையும் இணைத்தாகிவிட்டது.

HS.

கல்வித் தகவல்

இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள்


தமிழக அரசு தருகிறது இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள்



சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு அளிக்கும் பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மேற்கொண்டு வருகின்றன.



இப்பயிற்சிகள் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன.


எலெக்ட்ரிகல் டெக்னீஷியன், ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன், டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பிரிவுகளில் பயிற்சிகள் தரப்படுகின்றன.




யாரெல்லாம் இப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்?



எலக்ட்ரிகல் டெக்னீஷியன் பயிற்சிக்கு 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும். 32 வயதுக்கு உள்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு ஓராண்டு ஆகும்.



ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன் பயிற்சி: இப்பயிற்சிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 25 வயதுக்கு உள்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் கால அளவு 6 மாதங்கள் ஆகும்.




டி.டி.பி. (டெஸ்க் டாப் பப்ளிஷிங்), டேட்டா என்ட்ரி பயிற்சிகள்:



டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பயிற்சிகளுக்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 32. இது மூன்று மாதப் பயிற்சி ஆகும்.




பயிற்சிக்கு விண்ணப்பிக்க என்ன நடைமுறை?



விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்கள், நகல்கள் ஆகியவற்றை ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி இட்ட உறையையும் கொண்டு வரவேண்டும்.




தொடர்பு கொள்ள வேண்டிய இடம் எது?



மேற்கண்ட பயிற்சிகளை நடத்தும் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர், 42/25, ஜி.ஜி. காம்ப்ளெக்ஸ் இரண்டாவது தளம் (வி.ஜி.பி. அருகில்), அண்ணா சாலை, சென்னை -600 002. தொ.பே.: 044- 2852 7579, 2841 4736, 98401 16957.


சி.ரங்கநாதன், இயக்குநர், தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர், 93822 66724.




ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி:



ஆதி திராவிடர்கள், பழங்குடியினத்தவருக்காக இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சியை மத்திய தொழிலாளர் நலத் துறை நடத்துகிறது. மேல்நிலைப் படிப்பை முடித்தவர்கள், 27 வயதுக்கு உள்பட்டோர் இதில் பங்கு பெறலாம்.




தொடர்புக்கு:



ஆதிதிராவிட, பழங்குடியின பயிற்சி வழிகாட்டு மையம், மாவட்ட வேலைவாய்ப்பக வளாகம், 56, சாந்தோம் நெடுஞ்சாலை, மூன்றாவது மாடி, சென்னை -600 004. தொலைபேசி: 2461 5112.



விமானப் பணிப்பெண் ஆவதற்குப் பயிற்சி


விமானப் போக்குவரத்தில் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு விமான சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், நாளுக்கு நாள் விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.



இத்தொழிலில் இப்போது லாபம் அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். இந்நிலையில், இத்தொழிலில் வேலைவாய்ப்பும் விரிவடைந்து கொண்டே வருகிறது. விமானப் பணிப் பெண் வேலையில் சேர்ந்தால், நல்ல ஊதியமும் உண்டு.



இந்நிலையில், ஆதி திராவிட பெண்களுக்கு தமிழ்நாடு ஆதி திராவிடர் -வீட்டுவசதிக் கழகம் (தாட்கோ) மூலம் விமானப் பணிப்பெண் வேலைக்கான பயிற்சி தரப்படுகிறது. ஓராண்டுக்கான இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.



பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள் இதில் சேரலாம். 18 வயது முதல் 24 வயது வரையில் இருக்க வேண்டும். 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். சரளமாகப் பேச வேண்டும். அழகான தோற்றம் தேவை.


இது குறித்து அவ்வப்போது விளம்பரங்களைத் தாட்கோ நிறுவனம் வெளியிடும். விமானப் பணிப் பெண் பணியில் சேருவதற்குத் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன.



ஏர் ஹோஸ்டஸ் அகாதெமி (ஆஹா) என்ற கல்வி நிறுவனம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சார்பில் சர்வதேச அளவில் தேர்வுகளை நடத்தும் சி.ஐ.இ. நிறுவனத்துடன் இணைந்து "ஆஹா' ஓராண்டு டிப்ளமோ படிப்பை நடத்துகிறது.



இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 9 நகரங்களில் மொத்தம் 18 கிளைகள் இதற்கு உண்டு. அவற்றில் படித்து ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேர் பயிற்சி பெறுகின்றனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச தேர்வு மையம் நடத்தும் படிப்புகளுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது.



150 நாடுகளில் இப்படிப்பின் சான்றிதழ்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி. ஏவியேஷன், ஹாஸ்பிடாலிட்டி, டிராவல்ஸ் அண்ட் டூர் என்ற துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.


பிற்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி


பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசு அளிக்கிறது.



வேலை தேடும் பிற்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் திறன்களை வளர்ப்பதற்கு இப்பயிற்சிகள் பெரிதும் உதவும். இதன்படி எலெக்டிரிகல் டெக்னீசியன், டிடிபி, டேட்டா என்ட்ரி உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி தரப்படும்.



எலெக்ட்ரிகல் டெக்னீசியன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 32 வயதுக்குள்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவைச்சேர்ந்தவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். டிடிபி, டேட்டா என்ட்ரி உள்ளிட்ட பயிற்சிகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.



விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றுகளையும் அவற்றின் நகல்களையும் ரூ. 5 அஞ்சல் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையையும் எடுத்து வர வேண்டும்.


முகவரி:




தமிழ்நாடு இன்டஸ்ட்ரியல்


டிரெய்னிங் சென்டர், 42/25, ஜிஜி காம்ப்ளக்ஸ்,


2-வது தளம் (விஜிபி அருகில்), அண்ணா சாலை, சென்னை-2.



தொலைபேசி : 2852 7579, 2841 4736.


செல்: 98401 16957.

Saturday, August 21, 2010

BE ADVISED

Friday, August 20, 2010

ஒருவனுக்கு ஒருத்தி





ஏகஇறைவனின் திருப்பெயரால்....

وَلاَ تَقْرَبُواْ الزِّنَى إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاء سَبِيلاً 32

விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. 17:32
________________________________________
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
இந்தியாவிலும், இந்தியாவிலிருந்து வெளியில் வாழும் ஒட்டு மொத்த இந்தியரையும், தலைகுணியச் செய்த சம்பவம் சமீபத்திய முறையற்றப் பாலியல் விவகாரத்தில் என்.டி.திவாரி மாட்டிக் கொண்ட சம்பவமாகும்.
மத்திய அமைச்சராகவும், மூன்று தடவை முதலமைச்சராகவும், இன்னும் பல முக்கிய அரசு கேந்திரப் பொறுப்புகளையும் வகித்து இறுதியாக ஆளுநராக பதவி உயர்வு பெற்று 87 வயது நிரம்பப்பெற்ற முதியவர் விபச்சாரப் பெண்களுடன் மரியாதைக்குரிய ஆளுநர் மாளிகையில் உல்லாசமாக இருந்து மாட்டிக்கொண்டு இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் தலைகுணிவை ஏற்படுத்தி விட்டார்.
செய்தி அறிந்து கொதிப்படைந்த பெண்கள் அமைப்பினர் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு இறுதியாக அவரது வீட்டையும் முற்றுகையிட்டு கேட் கதவுகளின் மீதேறி நாகூசும் வார்த்தைகளைக் கூறி கோஷமிட்டு தனது எதிர்ப்பை பதிந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரப் பெண்கள் எழுப்பிய நாகூசும் கோஷங்களை நேரில் கேட்ட அவரது குடும்பத்தினர் வெட்கி தலைகுணிந்தனர் எத்தனைக் கோடிகளை அவர்களுக்காக இவர் குவித்துக் கொடுத்திருந்தாலும் இதன் மூலம் அவர்கள் அடைந்த அவமானம் அதற்கு நிகராகாது.
இதை விடவும் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்து உயர்ந்த பதவிகளை அளித்த காங்கிரஸ் தலைமை, மற்றும் அதன் உறுப்பினர்கள் எத்தனை வேதனைப் பட்டிருப்பார்கள்.
இதை செவியுற்ற திருமனம் ஆகாத ராகுல் காந்தி இவரை எத்தனை அசிங்கமாக கருதி இருப்பார்.
காடு வா !! வா !! என்றழைக்கும் பதிமூன்றுக் குறைய நூரு வயதைத் தொட்ட திவாரி அவர்களுக்கு இளம் பெண்கள் என்றால் கொள்ளைப் பிரியமாம் ??
இதுப் போன்ற பெரிய இடத்து ( பெரியவாள்கள் செய்யும் ) சில்மிஷன்கள் ஒண்றிரண்டு மட்டுமே அவ்வப்பொழுது வெளிச்சத்திற்கு வருகின்றன ஏராளமானவைகள் கும்மிருட்டுக்குள் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விடுகின்றன பெரியவாள்கள் சமாச்சாரம் நமக்கு எதுக்கு என்று விட்டு விடுகின்றனர்.
 மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை என்;று ஆண்களைக் கூறுவதுண்டு.
 கூந்தல் நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை என்றுப் பெண்களைக் கூறுவதில்லை.
காரணம் பெண்கள் தாய்மை அடையும் ஒவ்வொரு முறையும் அவர்களது அழகும், உடல் வனப்பும் குறைவதுடன் சேர்ந்தே செக்ஸின் மீதான ஆர்வமும் குறைந்து கொண்டு வரும் முதுமையை நெருங்குவதற்கு முன்பே பெரும்பாலனவர்கள் செக்ஸ் உறவை வெறுத்து விடுவார்கள் அதனால் ஆசைக் குறையாத ஆண்களுக்கு அவர்களால் முதுமையில் ஈடுகொடுக்க முடிவதில்லை இதனால் வெறுப்படைந்த ஆண்கள் தள்ளாடும் வயதிலும் வேலி தாண்டும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
( பொருளாதாரத்தில் குறைவானவர்கள் தங்களுடைய பார்வையை தாழ்த்திக் கொண்டு அதே மனைவியுடன் திருபதி அடைந்து கொண்டு கண்ணியத்தைப் பேணிக் கொள்வார்கள். பைசாப் பார்ட்டிகள் பார்வையை இளசுகளின் மீதுப் பாய விட்டு மாட்டிக் கொள்வார்கள் )
நடுத்தர வயதை உடையவர்கள்.
இன்னும் நடுத்தர வயதை உடையவர்களில் பைசாப் பார்ட்டிகளாக இருப்பவர்கள் இளம் மனைவி ஒன்றுப் போதாமல் ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களை அடைய ஆசைப்பட்டு விபச்சாரப் பெண்களை அல்லது நெருக்கடியில் இருக்கும் சில குடும்பப் பெண்களை வளைக்க முயலுகின்றனர்.
துணைப் பாத்திரங்களில் ஒன்றிரண்டு படங்களில் மட்டும் தோன்றும் நடிகைகள் கூட திடீரென கார், பங்களாவிற்கு மாறி விடுவதற்;கு இவர்களைப் போன்ற பலப் பெண்ணாசைக் கொண்ட பணக்காரர்கள் ஒருக் காரணமாகின்றனர்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவமேக் காரணம்.
 அழகும் வனப்பும் வாய்ந்த எண்ணிலடங்கா ஏழைப்பெண்கள் வரதட்சனைக் கொடுமையால் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
 கணவன் மார்களை விபத்துகளில், அல்லது இயற்கை மரணத்தில் இழந்து ஒன்றிரண்டு குழந்தைகளுடன் அல்லது தனித்து தவிக்கும் ஏராளமான விதவைகள் மறுவாழ்வு கிடைக்காமல் முடங்கி கிடக்கின்றனர்,
 திருமணமாகி சில நாட்களிலேயே கருத்து வேற்றுமை காரணத்தால் விவாகரத்துப் பெற்று மறுவாழ்வு கிடைக்காமல் ஏராளமானப் பெண்கன் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

இவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க இளைஞர்கள் பெரும்பாலும் முன்வருவதில்லை ஒருத்தி மட்டும் தான் என்பதால் அந்த ஒருத்தி புதியவாளாக இருக்க வேண்டும் என்றேப் பெரும்பாலும் விரும்புகின்றனர்.
இனி நமக்கு வாழ்வு கிடைக்கப் போவதில்லை என்று விரக்தி அடைந்த அபலைப் பெண்களில் பலர் ஒருத்தியை மனந்து கொண்டவனுக்கு அந்தப் புறத்தில் ஆசை நாயகியாகி விடுகின்றனர். பலப் பெண்கள் விபச்சார புரோக்கர்களால் விபச்சார சந்தைகளுக்கு எற்றுமதி செய்யப்படுகின்றனர் இவ்வாறு வழி தவறும் அபலைகள் ஏராளம் !! ஏராளம் !!
பலப் பெண்ணாசைக் கொண்டவர்கள் மேற்காணும் திக்கற்ற அபலைப் பெண்களில் ஒருவரைத் தேர்வு செய்து முறையாக திருமனம் செய்து கொண்டு தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இதன் மூலம் அப்பெண்கள் வழி தவறுவதிலிருந்து காப்பாற்றப்படுவர், குவிந்து கிடக்கும் அவர்களது செல்வங்களுக்கு அவர்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளை வாரிசாக்கலாம் !! இதுப் போன்று செய்து கொள்ள ஒருவர் முன் வந்தால் அவரை அல்லாஹ் இன்னும் மிகப் பெரிய செல்வந்தராக்கி விடுவான்.
உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். 24:32
மிகப்பெரும் செல்வந்தரும், அரசின் கேபினட் அதிகாரியுமாகிய என்.டி.திவாரி அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பெண் குலத்தை அழிவில் ஆழ்த்தும் கோட்பாட்டை உடைத்தெறிந்து மேற்காணும் அபலைப் பெண்களில் ஒருப் பெண்ணை முறையாக திருமனம் செய்துகொண்டு தனது ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தால் ?
 அவர்களது அந்தரங்க உறவை எவரும் ரகசியமாகப் படமெடுத்து தொலைகாட்சியில் ஒலிபரப்பி நாரடித்திருக்க முடியாது,
 பலதார மணம் புரிந்து விட்டார் என்றுக் கூறி அதை எதிர்த்து பெண்கள் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வீட்டை முற்றுகை இட்டு கேட்டைத் தாண்டிக் குதித்து நாகூசும் கோஷங்களை எழுப்பி இருக்க முடியாது.
 மறுமனம் முடித்ததைக் காரணம் காட்டி அவருடையப் பதவியைத் தலைமைப் பறித்திருக்காது,
இத்தனைப் பெரிய அவமானத்தை ஈட்டித் தந்தது பழமைவாத ஒருவனுக்கு ஒருத்தி என்றக் கொள்கையே !
ஆண்களின் உடல் உறுப்புகளின் செயல் திறன்கள் இவ்வாறுத் தான் இருக்கும் என்பதை அறிந்த இறைவன் அவர்களுக்கு பலதார மணத்தை அனுமதித்தான்.
பெண்களின் உடல் உறுப்புகளின் செயல் திறன்கள் இவ்வாறுத் தான் இருக்கும் என்பதை அறிந்த இறைவன் கணவன் இறந்தால், அல்லது இழந்தால் மட்டுமே மறுமணத்தை அனுமதித்தான்.
முஸ்லீம்களே !!
ஒரு சில முஸ்லீம் செல்வந்தர்களும் கூட இதுப் போன்ற ஈனச் செயலில் ஈடுப்படுவதாக செய்தித் தாள்கள் மூலம் அறிகிறோம் அவ்வாறு நடப்பவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்
ஆண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட (நான்கிற்குள்) திருமனம் செய்து கொள்வதற்கு இறைவனாhல் சலுகை வழங்கப்பட்டப் பின்னரும் சமுதாயத்திற்கு வெட்கப்பட்டு ஒன்றை மட்டும் மனைவியாக்கிக் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களை ஆசை நாயகிகளாக்கினால் அவர்கள் மீது இறைவனின் கோபம் ஏற்படும், அதிலும் வயது முதிர்ந்தவர்கள் இதைச் செய்தால் அவர்கள் மீது இன்னும் இறைவன் அதிகமாக இறைவனின் கோபம் ஏற்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள்.
கீழ்கானும் மூவரையும் அல்லாஹ் மறுமையில் மன்னிக்க மாட்டான், கொடிய வேதனையை கொடுப்பான். விபச்சாரம் செய்யும் வயோதிகர்,( கிழவர் ) பொய்யுரைக்கும் அரசன், பெருமையடிக்கும் ஏழை என்று அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள். நூல்கள் : முஸ்லிம் , நஸயீ
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

Thursday, August 19, 2010

ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மனைவியைத் தண்டித்தல்



ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மனைவியைத் தண்டித்தல்

பெண்கள் பாரிய குடும்ப வன்முறைகளைச் சந்தித்து வருகின்றனர். அறிவியலிலும், நாகரிகத்திலும்(?) முன்னேற்றம் கண்ட நாடுகளில் கூட பெண்கள் தமது கணவர்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். சில ஆய்வுகள் 80 வீதமான பெண்கள் தமது கணவர்களினால் பெரியளவோ, சிரியளவோ வன்முறைக்குள்ளப்படுவதாகக் கூறுகின்றது. குடிகாரக் கணவர்களினால் மட்டுமன்றிப் படித்தவர்கள், பண்பட்டவர்கள், உயர் அரச உத்தியோகத்தினரால் கூட மனைவியர் மாடுகளைப் போன்று தண்டிக்கப்படுகின்றனர். இது குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாட்டை இவ்வாக்கத்தினூடாகத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
மனைவிக்குச் சிறந்தவரே மனிதர்களில் சிறந்தவர்:
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
‘தன் மனைவிக்கு யார் நல்லவராக இருக்கின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர். நான் என் மனைவியருக்குச் சிறந்தவனாக நடந்துகொள்கின்றேன்’ என நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (இப்னுமாஜா, தாரமி, பைஹகீ)
எனவே, ஒருவர் நல்லவர் எனச் சாட்சி பகர வேண்டுமென்றால் அவர் அவரது மனைவியிடம் நல்லவர் என்ற பெயர் எடுத்திருக்க வேண்டும்.
‘அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும் (பொறுத்துக்கொள்ளுங்கள்.) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.’ (4:19)
மேற்படி வசனம் மனைவியருடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறு பணிக்கின்றது.
நபி(ஸல்) அவர்கள் கூடத் தமது இறுதி ஹஜ் உரையில்;
‘பெண்கள் விடயத்தில் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்!’ என உபதேசித்துள்ளார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)
அலட்டிக்கொள்ளக் கூடாது:
பெண்களிடம் சில நாணல்-கோணல்கள் இருக்கும். அவற்றை அலட்டிக்கொள்ளக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பெண்கள் வளைந்த எலும்புகளால் படைக்கப்பட்டவர்கள். அவர்களை ஒரேயடியாக நிமிர்த்த முயன்றால் முறித்து விடுவீர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நிறைகண்டு நிம்மதி பெறுங்கள்!
மனைவியிடம் குறை தேடாமல் நிறைகண்டு நிம்மதி பெறவேண்டும்.
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
‘முஃமினான் ஆண் தனது முஃமினான மனைவியை விட்டும் பிரிந்து விடவேண்டாம்! அவளிடத்தில் ஒரு விடயத்தில் குறைகண்டால் அவளிடத்தில் காணப்படும் நல்ல விடயத்தை நினைத்துத் திருப்தி கொள்ளுங்கள்!’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (சுனனுல் குப்ரா)
தண்டிக்கும் அனுமதி:
நன்மை செய்பவர்களுக்கு நற்கூலியும், தவறு செய்பவர்களுக்குத் தண்டனையும் வழங்குவது அல்லாஹ்வின் வழிமுறையாகும். இந்த அடிப்படையில் மனைவியின் நற்பண்புகளைப் பாராட்டி, தீமைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவதற்கு முற்பட்டு, இறுதிக் கட்டமாக தண்டிக்க அனுமதி உள்ளது. இந்த அனுமதி அளவோடும், நிதானமாகவும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் மட்டும் பயன்படுத்துவதற்குரியதாகும் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
தண்டனை என்பது மருந்து போன்றதாகும். நோய் தீர்ந்த பின்னர் மருந்து தேவைப்படாது. எனவே உரிய பிரச்சினைக்கு மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும்.
அடுத்தது, ‘தண்டித்தல்’ என்பது திருத்துவதற்கான ஆரம்ப விதிமுறையல்ல. திருத்துவதற்கான இறுதி வழிமுறை என்பதும் கவனிக்கத்தக்கதாகும். மனைவி விடயத்தில் தவறான போக்கைக் காணும் போது பண்பாக எடுத்துச் சொல்ல வேண்டும். மாற்றம் இல்லையென்றால் படுக்கையை விட்டும் பிரிந்து உளவியல் ரீதியில் அவளிடம் மாற்றத்தைக் கொண்டுவர முயலவேண்டும். அறிவு ரீதியான முயற்சியும், உளவியல் ரீதியான வழிமுறையும் பயனளிக்காத போது இறுதிக்கட்டமாக உடல் ரீதியான அணுகுமுறையை இஸ்லாம் அனுமதிக்கின்றது.
இது குறித்துக் குர்ஆன் கூறும் போது;
பெண்களை நிர்வகிக்க ஆண்கள் தகுதியுடையோராவர். அவர்களில் சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், (ஆண்களாகிய) அவர்கள் தமது செல்வங்களிலிருந்து செலவழிப்பதாலும் ஆகும். எனவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் கட்டுப்பட்டு நடப்போராகவும், (கணவனில்லாது) மறைவாக இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வோராகவும் இருப்பர். எவர்கள் கணவருக்கு மாறுசெய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ, அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். (திருந்தா விட்டால்) படுக்கைகளில் அவர்களை வெறுத்து விடுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களுக்கு (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உயர்ந்தவனும், பெரியவனுமாக இருக்கின்றான். (4:34)
‘அவர்களுக்குக் காயம் வராத முறையில் கடுமை இல்லாத விதத்தில் மென்மையாக அடியுங்கள்!’ என நபி(ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)
‘முறையற்ற தண்டித்தல்’ குடும்பத்தில் குழப்பத்தை அதிகரிக்கச் செய்யுமே தவிர குறைக்காது. மனைவியின் மனதில் கணவன் மீது வெறுப்பை விதைக்கும். இதனால் சில பெண்கள் கணவனைப் பழிவாங்க நினைத்துக் கொலை கூடச் செய்கின்றனர். சிலர் தன் மீது அன்பில்லாதவனைத் வஞ்சம் தீர்ப்பதற்காக கள்ளக் காதலர்களை நாடுகின்றனர். இதற்கும் துணியாத சில மனைவியர் எதற்கெடுத்தாலும் முரண்பட்டுக் கணவனின் நிம்மதியையும், கண்ணியத்தையும் குறைக்க முற்படுகின்றனர்.
மற்றும் சிலர் தற்கொலை செய்து தாம் பிரச்சினையிலிருந்து தப்பி விடுகின்ற அதேவேளை கணவனுக்குக் கேவலத்தையும், தண்டனையையும் கொடுக்க முற்படுகின்றனர்.
எனவே, பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கும் வழி பிரச்சினையைத் தீர்ப்பதாக அல்லது குறைப்பதாக இருக்க வேண்டுமே தவிர குழப்பத்தைக் கூட்டுவதாக இருக்கக் கூடாது.
ஷரீஆவின் வரையறைகள்:
அபூதுபாப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
பெண்கள் என்ன செய்தாலும் அவர்களைத் தண்டிக்கக் கூடாது என ஆரம்பத்தில் தடை விதித்திருந்தார்கள். அதனால் பெண்கள் ஆண்களை மிகைக்கும் வண்ணம் நடந்து கொண்டார்கள். அப்போது ஆண்கள் மனைவியருக்கு அடிக்கும் அனுமதியைக் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் அனுமதியளித்தார்கள். அன்று இரவே பல மனைவியர்கள் தமது கணவர்களினால் தாக்கப்பட்டார்கள். இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் முறையிடப்பட்ட போது அவ்வாறு தாக்கியவர்களைக் கண்டித்ததுடன் அவர்கள் (தாக்கியவர்கள்) நல்லவர்கள் அல்ல என்றும் கூறினார்கள். (அல்முஸ்தத்ரக்)
எனவே, மனைவியருக்கு அடிக்கும் அதிகாரம் என்பது விருப்பத்திற்குரிய ஒன்று அல்ல. ‘தவிர்த்தால் நல்லது; தவிர்க்க முடியாது’ என்ற அளவுக்குத் தலைக்கு மேல் வெள்ளம் என்ற நிலை ஏற்பட்டால், சில வரையறைகளுடன் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அப்படி மனைவியைத் தண்டிப்பது என்றால் பின்வரும் நிபந்தனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்:
(1) முகத்தில் அறையக் கூடாது:
முகம் கண்ணியத்திற்குரிய உறுப்பு. அதன் மூலந்தான் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யப்படுகின்றது. ‘முகத்தில் அறைய வேண்டாம்!’ என நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். (அபூதாவூத்)
(2) பெண்மையின் தனிப்பட்ட உறுப்புக்களில் தாக்கக் கூடாது:
சில வக்கிரம் கொண்ட ஆண்கள் பெண்களின் மார்பகங்களில் சிகரட்டால் சுடுவது, பிறப்பு உறுப்பில் தாக்குவது போன்ற கொடூரங்களைச் செய்து வருகின்றனர். இஸ்லாம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கின்றது.
(3) கடுமையான அடியாக இருக்கக் கூடாது:
நாம் ஏற்கனவே குறிப்பிட்ட (4:34) வசனமும், ஸஹீஹ் முஸ்லிமின் ஹதீஸும் இதைத்தான் உணர்த்துகின்றன. இது குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) கூறும் போது, ‘பாதிப்பு ஏற்படுத்தாத அடியாக இருக்க வேண்டும்!’ எனக் குறிப்பிடுகின்றார்கள்.
இஸ்லாமியச் சட்டத்துறை அறிஞர்கள் இது பற்றிக் கூறும் போது, ‘அடி ஒரு உறுப்பை முறிப்பதாகவோ, அதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது!’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த வகையில் மனைவியின் கண்கள் சிவக்கும் அளவுக்கோ, உதடுகள் வெடிக்கும் விதத்திலோ, பல்லு உடையும் விதத்திலோ, தோல் வீங்கும் விதத்திலோ அடிப்பவர்கள் தெளிவாக இஸ்லாத்திற்கு முரண்படுகின்றனர். இவர்கள் தமது மனைவியைத் திருத்த முன்னர் தம்மைத் திருத்திக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.
(4) பிறர் முன்னிலையில் தாக்கக் கூடாது:
மனைவி மீது பிறர் முன்னிலையில் வெறுப்பை வெளிப்படுத்துவதைக் கூட இஸ்லாம் விரும்பவில்லை. ‘வீட்டைத் தவிர வேறு இடத்தில் அவள் மீது வெறுப்பை வெளிப்படுத்தாதே!’ நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். சில ஆண்கள் மனைவியின் குடும்பத்தினர் முன்னிலையில் அவளைத் தாக்கி அதன் மூலம் முழுக் குடும்பத்தையும் அவமானத்துக்கும், அவஸ்தைக்கும் உள்ளாக்க விரும்புகின்றனர். இது தவறாகும்.
(5) தவறுக்குத் தக்கதாக இருக்க வேண்டும்:
தவறுக்காகத் தண்டிக்கும் போது அந்தத் தவறுக்குத் தக்கவாறே தண்டிக்க வேண்டும். சின்னக் குற்றம் செய்தவளுக்குப் பெரிய தண்டனையளித்தால் அது குற்றவாளியைத் திருத்தாது. அவளைக் குமுறச் செய்து மீண்டும் வெறியுடன் தவறு செய்யத் தூண்டும்.
(போர் செய்யத் தடுக்கப்பட்ட) புனித மாதத்திற்குப் புனித மாதமே நிகராகும். புனிதப்படுத்தப்பட்டவை (அவற்றின் புனிதம் மீறப்பட்டால் அவை)களுக்கும் பழிவாங்குதல் உண்டு! ஆகவே, எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறினால் அவர் உங்கள் மீது வரம்பு மீறியது போன்று நீங்களும் அவர் மீது வரம்பு மீறுங்கள்! மேலும், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்! (2:194)
நீங்கள் தண்டிப்பதாயின் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்கே தண்டியுங்கள். நீங்கள் பொறுமையுடனிருந்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே மிகச் சிறந்ததாகும். (16:126)
மேற்படி வசனம், எமது எதிரி எம்மைத் தாக்கினால் கூட அவனைப் பதிலுக்குத் தாக்கும் போது வரம்பு மீறி நடக்கக் கூடாது. அவன் தாக்கிய அளவே பதில் தாக்குதல் கொடுக்க வேண்டும் என எமக்குக் கட்டளை இடுகின்றது. எதிரி விடயத்திலேயே இவ்வளவு நேர்மையை இஸ்லாம் வலியுறுத்தும் போது எமது வாழ்க்கைத் துணைவியின் தவறுக்காகக் கண்-மண் தெரியாது கொடூரமாக நடந்துகொள்வதை இஸ்லாம் எப்படி அங்கீகரிக்கும்!?
மனைவியைத் தண்டிக்கும் கணவன் தனது நோக்கம் மனைவியை சீர்திருத்துவது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பழிதீர்ப்பதோ, வஞ்சம் தீர்ப்பதோ தனது இலக்கு அல்ல என்பதில் அவன் அவதானமாக இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாகத் தனது கோபத்தை அவள் மீது கொட்டித் தீர்க்க முடியாது. சில கணவர்கள் தன்னை மறந்து மனைவியைத் தாக்குகின்றனர். அப்போது அவர்களது புலன்கள் அனைத்தும் மரணித்து விடுகின்றன.
அவன் அடிக்கின்றான்; தனது கை அவளது உடலில் எந்த இடத்தில் விழுகின்றது என்பது அவனுக்குத் தெரியாது. உதைகின்றான்; தனது கால் எங்கே படுகின்றது என்பது அவனால் புரிந்துகொள்ள முடிவதில்லை. திட்டுகின்றான்; தனது வாய் பேசியது என்ன என்பது அவனுக்குத் தெரியாது. அடிப்பதை நிறுத்துமாறு அவள் கெஞ்சுகின்றாள்; அந்த வார்த்தைகள் அவனது செவிகளில் விழுவதில்லை. அவள் பாதுகாப்புக் கோறுகிறாள்; இவன் பாதுகாப்பளிப்பதில்லை. அவள் அழுகிறாள்; கத்துகிறாள்; இவனது உள்ளம் இரங்குவதில்லை. சிலபோது அவளது ஆடைகள் களைந்து, கிழிந்து, உடல் இரத்தம் வழிந்தால் கூட இவனது கண்களுக்கு அவை புலப்படுவதில்லை.
இந்த நிலையில் இல்லறத்தைத் தொடர்பவன் தனது மனைவியைத் திருத்தி விட முடியாது. எதற்கும் ஒரு எதிர்வினை உண்டு. இது நல்ல எதிர்வினையை உண்டுபண்ணாது.
எனவேதான் மனைவியைத் தண்டிக்க அனுமதிக்கும் வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது; ‘அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால், அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள். அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கின்றான்’ (3:34) என்று முடிக்கின்றான். தான் தனது தவறுக்கு வருந்துவதாகவோ அல்லது தான் தனது தவறுக்குக் கட்டுப்படுவதாகவோ வார்த்தை மூலமோ, செயல் மூலமோ மனைவி உணர்த்தினால் அதன் பின் அவளுக்கு அடிப்பது தடையாகும்.
இது குறித்து இமாம் இப்னு கதீர் அவர்கள் கூறும் போது;
‘அல்லாஹ் அனுமதியளித்த விடயத்தில் மனைவி கணவனுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவளுக்கு அடிக்கவோ, அவளை வெறுக்கவோ கணவனுக்கு உரிமை இல்லை. அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கின்றான் என இந்த வசனத்தை அல்லாஹ் முடித்திருப்பது, காரணமின்றி பெண்கள் விடயத்தில் அத்துமீறும் ஆண்களை அச்சுறுத்துவதற்காகவும், ஆணாதிக்கச் சிந்தனையில் அவர்கள் மீது அத்துமீறும் காஃபிர்களை விட பெரியவனாக அல்லாஹ் இருக்கின்றான் என்பதை இறுதி வார்த்தை உணர்த்துகின்றது.
நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை:
இஸ்லாம் மனைவியரைத் தண்டிக்க அனுமதியளித்துள்ளது. இருப்பினும் அதைப் பயன்படுத்தாதிருப்பதே சிறந்தது என நாம் ஏற்கனவே குறிப்பிட்டோம். இதற்கான அழகான முன்மாதிரியை நாம் நபி(ஸல்) அவர்களின் குடும்ப வாழ்வில் காணலாம். ‘போர்க் களத்தைத் தவிர வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் நபி(ஸல்) அவர்கள் எவரையும் அடித்ததில்லை. நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியரையோ, தமது பணியாளையோ எப்போதும் அடித்ததில்லை’ (முஸ்லிம்) என்ற நபிமொழி நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியரை அடித்ததில்லை என்று கூறுவதால் நாமும் அந்த வழிமுறையைப் பின்பற்ற முனைய வேண்டும்.
தான் அடிக்காத அதேவேளை அடிப்பவர்களைக் கண்டித்துமுள்ளார்கள்.
‘உங்களில் ஒருவர் தனது மனைவியை அடிமையை அடிப்பது போன்று அடித்து விட்டுப் பின்னர் இரவில் அவளுடன் உடலுறவில் ஈடுபடுகின்றீர்களே!’ எனக் கூறி நபி(ஸல்) கண்டித்தார்கள். (புகாரி)
ஃபாதிமா பின்து கைஸ் என்ற பெண்மனி தன்னை இருவர் பெண் பேசுவதாகவும், அவர்களில் எவரை மணப்பது என்பது குறித்தும் நபி(ஸல்) அவர்களுடன் ஆலோசனை செய்த போது, ‘அபூஜஹ்ம் மனைவிக்கு அடிக்கக்கூடியவர்!’ என்று காரணம் கூறி மாற்று ஆலோசனை கூறினார்கள்.
‘உங்களில் மார்க்கமும், நல்ல பண்பும் உள்ளவர்கள் பெண் கேட்டு வந்தால் அவர்களுக்கு மணம் முடித்துக் கொடுங்கள்!’ (திர்மிதி) எனக் கூறிய நபி(ஸல்) அவர்கள் ‘பெண்களை அடிக்கும் இயல்பு உள்ளவர் பெண் கேட்ட போது மாற்று அபிப்பிராயம் கூறியுள்ளார்கள் என்றால் பெண்களை அடிப்பது வரவேற்கத்தக்க அம்சமோ, பண்போ அல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
காரணங்களைக் கண்டறிவோம்:
கணவன், மனைவியை அடிப்பது அனுமதிக்கப்பட்ட அதேவேளை தவிர்க்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். இது இல்லற வாழ்வின் இனிமையை ஒழித்து விடும். குடும்பத்தின் அமைதியைக் குலைத்து விடும். குழந்தைகளின் உள்ளங்களில் ரணத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும். பிள்ளைகள் தந்தையை வில்லனாகக் காண்பார்கள். எனவே இதைத் தவிர்க்க வேண்டும். இதைத் தவிர்ப்பதாக இருந்தால் இந்தப் பிரச்சினை உருவாகக் காரணமாக இருக்கும் குறைகளைக் களைய வேண்டும்.
மனைவி தரப்பில்:
மனைவி தரப்பில் உள்ள சில குறைகள் அவள் தாக்கப்படக் காரணமாக அமைந்து விடுகின்றன. எனவே, அவள் முதலில் தனது குறைகளை அறிந்து அவற்றைக் களைய முனைய வேண்டும்.
(1) கணவனுக்கு மாறு செய்தல், கட்டுப்பட மறுத்தல், கடமைகளைச் செய்யாதிருத்தல்:
இது மனைவி தரப்பில் ஏற்படும் தவறாகும். இந்தத் தவறை மனைவி களைய வேண்டும். கணவனுக்குக் கட்டுப்படுவதைப் பெண் அடிமைத்துவமாகப் பார்க்காமல் அல்லாஹ்வுக்காகச் செய்யும் இபாதத்தாக அவள் பார்க்க வேண்டும்.
தனது முன்னாள் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பியதனால் இரண்டாம் கணவருக்குக் கட்டுப்படாமல் அவர் ஆண்மை அற்றவர் எனப் பொய் அவதூறு கூறிய பெண்மணிக்கு ஒரு கணவர் அடித்தார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் முறையிடப்பட்ட போது அந்தப் பெண்ணைத் தண்டித்தவரை நபியவர்கள் கண்டிக்கவில்லை என்பதை புகாரியின் (5825) நீண்ட ஹதீஸ் கூறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
(2) கணவன் மீது சந்தேகங்கொள்ளல்:
கணவனுக்கு ஏனைய பெண்களுடன் தொடர்பிருப்பதாக எண்ணுதல் அல்லது கதைத்தல் அல்லது அது குறித்துக் கணவனுடன் தர்க்கித்தல் என்பவை கணவனுக்குக் கோபத்தை உண்டுபண்ணும் செயல்களாகும். அத்தோடு அது கணவனைத் தவறான பாதைக்கும் இட்டுச் செல்லும். கணவன் குறித்து பிறர் தவறாகப் பேசினாலும் ‘அவர் அப்படிச் செய்ய மாட்டார். அவர் என்னுடன் அன்பாக உள்ளார்!’ என்று மறுக்க வேண்டும். இவ்வாறு நடக்கும் போது ‘தன் மனைவிக்கு நாணயமாக நடக்க வேண்டும். அவள் என் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறாள்’ என்ற எண்ணம் கணவனுக்கு ஏற்படும். வெறுமனே சந்தேகத்தைக் கிளப்பினால் ‘நான் செய்வேன். உன்னால் தடுக்க முடிந்தால் தடு பார்க்கலாம்’ என்ற எண்ணம் ஏற்பட்டு கணவன் தவறக் கூடும். சிலபோது இந்தப் பிரச்சினையால் மன உளைச்சலுக்குள்ளாகும் கணவர்கள் விபச்சார விடுதிகளையும், மதுபானச் சாலைகளையும் நாடலாம். எனவே, கணவன் மீது சந்தேகத்தை வெளிப்படுத்தக் கூடாது. சிலபோது கணவனுடன் அந்நியப் பெண்கள் பேசும் போது கணவன் மீதுள்ள அபரிமிதமான அன்பினாலும், பெண்களிடம் இருக்கும் இயல்பான பொறாமையினாலும் சந்தேகம் வருவதுண்டு. அப்படி இருந்தால் கூட அதைக் கணவனிடம் அவனது ஆண்மைக்கோ, நாணயத்திற்கோ பங்கம் ஏற்படாவண்ணம் முறையாகப் பேசித் தீர்த்துக்கொள்ள முனைய வேண்டும்.
(3) இல்லறத்துக்கு இணங்காதிருத்தல்:
பெண்களுக்கு ரோசம் வரும் போது கணவனுக்கு இணங்கிப் போகாத போக்கைக் கடைபிடிக்கின்றனர். இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. கணவன் தாம்பத்திய உறவுக்கு அழைத்து மனைவி காரணமில்லாமல் மறுத்தால் விடியும் வரை அவளை மலக்குகள் சபிக்கின்றனர் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே மலக்குகளின் சாபத்தை அஞ்சி, பெண்கள் இந்தத் தவறைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு பெண்களால் பாதிக்கப்படுகின்றவர்கள் சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்கெல்லாம் மனைவியைத் தாக்கித் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்வதுடன் தவறான தொடர்புகளையும் வளர்த்துக்கொள்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்படும் சிலர் தன்னினச் சேர்க்கையாளர்களாக மாறுகின்றனர்.
(4) கணவனின் அனுமதி இன்றி வீட்டை விட்டும் வெளியேறுதல்:
மனைவி வீட்டை விட்டு வெளியேறுவதென்றால் கணவனின் அனுமதியைப் பெற வேண்டும். அருகில் உள்ள தனது தாய்-உறவினர் வீட்டுக்குச் செல்வதானால் கூட கணவனிடம் கூறாது செல்லக் கூடாது. குறிப்பாகக் கணவன் வீட்டுக்கு வரும் போது அவனுக்குத் தெரியாமல் உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவது குடும்ப வன்முறைகள் உருவாகக் காரணமாக அமைகின்றது.
(5) கணவன் இல்லாத போது கணவன் வெறுக்கக் கூடியவர்களுக்கு வீட்டில் இடமளித்தல்:
ஆண்களின் சுபாவங்களை ஆண்களே அதிகம் அறிவர். கணவன் சில ஆண்களைக் குறிப்பிட்டு, ‘அவனுடன் பேச வேண்டாம்! அவன் நான் இல்லாத போது வந்தால் உள்ளே எடுக்க வேண்டாம்!’ என்று கூறியிருந்தால், அதன்படி செயல்படுவது மனைவிக்குக் கடமையாகும். இதற்கு மாறுசெய்யும் போது மனைவி கணவனால் தண்டிக்கப்படும் நிலைக்காளாகின்றான்.
கணவன் தரப்பில் ஏற்படும் தவறுகள்:
பெண்கள் தாக்கப்படுவதற்குப் பெண்களது தவறான போக்குகள் காரணமாக அமைவது போன்றே சில கணவர்களது ஆளுமையற்ற போக்கும் காரணமாக அமைவதுண்டு. அவற்றில் சிலவற்றைப் பின்வருமாறு சுருக்கமாக நோக்குவோம்.
(1) ஆண்களின் அளவுக்கு மீறிய ரோச குணம்:
சில ஆண்கள் அதிக ரோசம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஷரீஆ சட்டப்படி மஹ்ரமில்லாத ஆண்களுடன் சகஜமாக உரையாடுவது, சாதாரண ஆடையுடன் அவர்கள் முன்னால் வருவது போன்றவற்றை அவர்கள் தடுக்கும் போது மனைவி அதற்கு உடன்பட வேண்டும். தனது கணவன் தன் மீது சந்தேகம் கொள்கிறான் என்ற தொணியில் பெண்கள் எதிர்த்துப் பேசும் போது சண்டையாக அது மாறுகின்றது. சிலபோது சில ஆண்கள் குடும்ப உறுப்பினர்கள், மஹ்ரமான ஆண்களுடன் உரையாடுவதைக் கூடத் தடுப்பதுண்டு. இது தவறாகும். இந்தத் தவறான போக்கிற்கு மனைவி உடன்படாத போது கண்டிக்கின்றான்.
(2) தாயையும், தாரத்தையும் மதிப்பிடும் மதிநுட்பம்:
மனைவியின் உரிமைகளையும், தாயிக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் ஒருமுகப்படுத்திச் செயல்படும் திறன் கணவனிடம் இல்லாமையும் மனைவி தண்டிக்கப்படக் காரணமாக அமைகின்றது. சில தாய்மார்கள் மருமகள் மீது கொண்ட பொறாமையினால் மூட்டி விடுபவர்களாக இருப்பார்கள். மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் விதவையாக வேண்டும் என நினைக்கும் தாய்மாரும் உள்ளனர். தான் பெற்றுக் கஷ்டப்பட்டு வளர்த்த மகனுக்கு இவள் முழுமையாக உரிமை கொள்கின்றாளே! என்ற எண்ணத்தால் சில தாய்மார் இவ்வாறு நடந்துகொள்வதுண்டு. சில ஆண்கள் தாயை முழுமையாக நம்பி மனைவியைத் தண்டிக்கின்றனர். சிலர் மனைவியின் வாக்கை வேத வாக்காக ஏற்று பெற்றோரை நோவினை செய்கின்றனர். இரண்டும் தவறானவைகளாகும். இந்தத் தவறான போக்கால் பெற்றோரை நோவினை செய்தல் அல்லது மனைவியின் உரிமையை மறுத்தல் என்ற இரண்டு ஹறாம்களில் ஏதேனும் ஒன்றில் அல்லது சிலபோது இரண்டு ஹறாம்களிலும் சில ஆண்கள் வீழ்ந்து விடுகின்றனர். தாயையும், மனைவியையும் சரியாக மதிப்பிடும் திறனற்ற போக்கு மனைவி கண்டிக்கப்படக் காரணமாக இருப்பதை இது உறுதி செய்கின்றது.
(3) தவறான பிள்ளைப் பாசம்:
ஆரம்ப காலங்களில் குழந்தைகள் தந்தைக்கே அதிகம் அஞ்சுவர். ஆனால் அண்மைக்கால நிகழ்வுகள் மாறி, குழந்தைகளுக்கு அதிகம் அடிப்பவர்களாகத் தாய்மார் மாறியுள்ளனர். குழந்தைகளுடன் அதிக நேரத்தைக் கழிப்பதனாலும், குழந்தைகளின் குறும்புத்தனங்கள் அதிகரித்து விட்டதனாலும் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். தந்தையர் குழந்தைகளிடம் குறைந்த நேரத்தைச் செலவிடுவதாலும், முற்காலத்தில் தமது தந்தையர் தம்மை தாறு-மாறாகத் தாக்கிய போது தாம் மனமுடைந்தது போன்று தனது பிள்ளைகள் மனமுடையக் கூடாது என எண்ணுவதாலும் தந்தையர் பிள்ளைகளைத் தண்டிப்பது குறைந்திருக்கலாம்.
எனினும், தாய் குழந்தைகளுக்கு அடிக்கும் போது குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு அடிக்கும் போது கணவன் கோபப்பட்டு மனைவியைத் தண்டிக்க முற்படுகின்றான். இது தவறாகும்.
இதன் மூலம் தனது தாய் தவறு செய்கிறாள் என்ற எண்ணமும், தாய்க்கு அறிவும் அன்பும் இல்லை என்ற உணர்வும் குழந்தைகள் மனதில் உண்டாகும். மனைவி தவறாகத் தண்டித்தால் கூட பிள்ளைகளின் முன்னால் அவளைக் கண்டிக்கவோ, அதை விமர்சிக்கவோ கூடாது.
பெண் மாதத் தீட்டுடன் இருக்கும் போது அதிக எரிச்சலடைகின்றாள். அந்த எரிச்சலோ அல்லது மன அழுத்தங்களோ கூட அவளது நடத்தைக்குக் காரணமாக இருக்கலாம். இதையும் ஆண் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்து, குழந்தைகளை நெறிப்படுத்துவதில் மனைவிக்கிருக்கும் உரிமையையும், கடமையையும் இது மறுப்பதாக அமைந்து விடும். அத்துடன் கூட்டமாகக் குதூகலாமாக இருக்க வேண்டிய குடும்பம் தாயைத் தனிமையாகவும், பிள்ளைகள் தந்தையைத் தனி அணியாகவும் ஆக்கி விடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகளைத் தன்பால் ஈர்க்க ஒரு பெண் தவறான வழிமுறைகளைக் கைக்கொள்ளவும் தந்தை பற்றிய தப்பெண்ணத்தைத் குழந்தைகளில் சிலரிடமாவது ஏற்படுத்தவும் முனையலாம்.
(4) கணவனின் கேவலமான வார்த்தைகள்:
சில ஆண்கள் பெண்களைச் சீண்டுவதற்காகக் கேலி செய்கின்றனர். கேலி முற்றிச் சண்டையாக மாறுகின்றது. சிலரிடம் பெண்களைப் பற்றிய இழிவான எண்ணங்கள் உண்டு.
பெண் என்பவள் செருப்புப் போன்றவள்; தேவைக்கு அணிந்து விட்டு, தேவையற்ற போது கழற்றி விட வேண்டும் என்றெல்லாம் கூறுவர்.
சிலர் அவளது அழகு, ஆடை, உணவு பற்றியெல்லாம் கேலியாகப் பேசி அவளைச் சீண்டி விட்டு, அவள் ஏதும் பேசி விட்டால் அடிக்க முற்படுகின்றனர். இவை தவறான வழிமுறைகளாகும். இந்தத் தவறுகளைக் களைந்து, வாழ்க்கை வாழ்வதற்கே! என்று எண்ணி, இஸ்லாமிய விதிமுறைகளைப் பேணி இல்லறத்தை நல்லறமாகவும், இனிமையாகவும் மாற்றிக்கொள்ள கணவன்-மனைவி இருவரும் முனைய வேண்டும்.


தொடர்புடைய பிற இடுகைகள்:
அந்நியப் பெண்ணுடன் தனித்திருக்கும் போது….
நம்ம குடும்பம் நல்ல குடும்பம்
இஸ்லாமிய தம்பதியர்களின் கடமைகள்
பொறாமை கொள்ளாதே.
சந்தேகம் நீங்க தன் மனைவி எனக் கூறுதல்.

மனித குல காலண்டர் (வீடியோ / VIDEO - பார்க்க இங்கே சொடுக்குங்கள் )




இந்தியாவில் மாநிலங்கள் உருவான வரலாறு

இந்தியா, மாநிலங்கள், மொழி





கடந்த 1947ல் நாடு சுதந்திரம் பெற்றபோது, 500க்கும் மேற்பட்ட குறுநில மன்னர்கள் நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களையும் எல்லாம் சுதந்திர இந்தியாவில் ஒருங்கிணைக்க பாடுபட்டு வெற்றி பெற்றவர் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல். அதே நேரத்தில் நாட்டில் முதல் மாநில பிரிவினைக்கு காரணமாக இருந்தவர் பொட்டி ஸ்ரீராமுலு. மாஜி ரயில்வே ஊழியரான ஸ்ரீராமுலு சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கை, அப்போதைய மதராஸ் மாகாணத்தில் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள பகுதிகளை பிரிக்க வேண்டும் என்பதாகும். அப்போது, கோரிக்கைக்கு மத்திய அரசு அடிபணிந்து மதராஸ் மாகாணத்தில் தெலுங்கு பேசுவோர் இருந்த பகுதிகளை பிரித்து ஆந்திரா மாநிலத்தை உருவாக்கியது.
சுதந்திரம் பெறுவதற்கு முன்பே மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க வேண்டி வரும் என்பது காங்கிரஸ் கட்சி தலைவர்களால் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம். ஏனென்றால், ஆங்கிலேயர் அமைத்த மாகாணங்கள் இருந்தாலும், பெரும்பா லான இடங்களில் மொழிவாரியாகத்தான் காங்கிரஸ் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. சுதந்திரம் பெற்றதுமே, மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால், மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க நேரு எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே பாகிஸ்தான் பிரிவினையால் இந்தியா பாதிக்கப்பட்டி ருக்கும் நேரத்தில் மொழிவாரியாக மாநிலங்களை பிரித்தால் நாட்டின் ஸ்திரதன்மை பாதிக்கப்படும் என்று நேரு கருதினார். வல்லபாய் படேலும் நேருவின் கருத்தை ஆதரித்தார். ஆனால், மொழிவாரி மாநிலங்கள் வேண்டும் என்ற போராட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. அந்த போராட்டங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகுவதை நேருவால் தடுக்க முடியவில்லை. கன்னடம், மராட்டி, மலையாளம், குஜராத்தி பேசுவோர் தனிமாநிலங்கள் கேட்டு போராடியபோதும், விசால ஆந்திரா கேட்டு தெலுங்கு மொழி பேசுபவர்கள் நடத்தி போராட்டம் வேகமாக நடந்தது.


1952ல் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற நேருவை தெலுங்கு பேசுபவர்கள் முற்றுகையிட்டனர். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய நேரு, ஒரு சில மொழிவாரி மாநிலங்கள் அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஆனாலும், அதற்கான நேரம் இதுவல்ல என்றும் கூறினார். இதை தொடர்ந்து, சென்னையில் ஸ்ரீராமுலு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். 56 நாட்களுக்கு பின் அவர் இறந்ததும், வன்முறை வெடித்தது. ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, 1952ம் ஆண்டு டிசம்பரில் ஆந்திரா தனி மாநிலம் உருவாக்கப்படுவதாக நேரு அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து மற்ற மொழி பேசுபவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க மாநிலங்கள் மறுசீரமைப்பு கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷனின் பரிந்துரை அடிப்படையில், 1956ல் 14 புதிய மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன. ஏற்கனவே மதராஸ் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ஆந்திராவும், ஐதராபாத் மாநிலமும் இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் உருவானது.


இதைத் தொடர்ந்து 1960ல், பம்பாய் மாகாணம் பிரிக்கப்பட்டது. மராத்தி பேசுபவர்கள் இருந்த பகுதி மகாராஷ்டிரா என்றும், குஜராத்தி பேசுபவர்கள் வசித்த பகுதிகள் குஜராத் என்றும் பெயரிடப்பட்டு தனித்தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. அசாமில் இருந்து நாகா இன மக்கள் வாழ்ந்த பகுதிகள் பிரிக்கப்பட்டு நாகாலாந்து உருவானது. 1966ல் பஞ்சாப் மாநிலம் மூன்றாக பிரிக்கப்பட்டது. அந்த மாநிலத்தில் இருந்து அரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் புதிதாக பிறந்தன. இதைத் தொடர்ந்து 1972ல் வடகிழக்கு பகுதியில் மேகாலயா, மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.


நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2000ம் ஆண்டில் ஜார்கண்ட், சட்டீஸ்கர், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இப்போது, சந்திரசேகர் ராவ் உண்ணாவிரதத்தை தொடர்ந்து ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலை, தெலுங்கானா தனி மாநிலம் அமைய வழிகண்டுள்ளது. கடந்த 1956ல் ஆந்திரா மாநிலத்தோடு, ஐதராபாத் மாநிலம் இணைந்து ஆந்திரப் பிரதேசம் உருவானது. இப்போது, பழைய ஐதராபாத் மாநிலத்தின் பெரும்பகுதி பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட உள்ளது. வரலாறு திரும்புகிறது

Wednesday, August 18, 2010

நம்முடைய பேச்சு.....




ஏகத்துவக் கொள்கையை இகமெங்கும் பரப்பவும், அநாச்சார இருளில் மூழ்கிக் கிடப்பவர்களை வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வரவும் இணையத்தில் இனிய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் நமது கொள்கைச்சகோதர பதிவாகிய 'வெளிச்சம்' வலைப்பதிவில் வெளியான அருமையான கட்டுரை ஒன்றை நன்றியுடன் மீள்பதிவு செய்கிறோம்.
-----------------------------------------------------------------------------------
நம்முடைய பேச்சு.....
ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமை காட்டுபவனாகவும் பிரதிபலிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.
சில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளைக் கூறி விடுகிறோம். நாம் கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளாமல் கேலிக்காக கூறிய போதிலும் கேட்பவர் அதை விபரீதமாக விளங்கிக் கொள்கிறார்.
நாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவனாக சித்தரித்து விடுகிறது. வார்த்தையை விட்டவர் 'நான் ஒரு பேச்சிற்காகத் தான் சொன்னேன்' என்று எவ்வளவு சமாளிப்புகளைக் கூறினாலும் மனதில் பதிந்த காயம் மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது.
விளையாட்டு வார்த்தைகள் பல விபரீதங்களை விதைத்து விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் கலகத்தை உண்டு பண்ணுகின்றன. கனிவான வார்த்தைகள் கல் நெஞ்சம் கொண்டோரையும் கனிய வைத்து விடுகிறது. இது போன்று ஏராளமான இன்பங்களும் துன்பங்களும் நம் பேச்சின் பயனாக வந்தமைகின்றன.மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் அன்றாட வாழ்வில் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
அல்லாஹ்வை நம்பியவன், நம்பாதவன் ஆகிய இருவரும் முறையான பேச்சின் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கு இந்நிகழ்வுகளே போதுமானதாகும்.ஆனால் மனிதன் தனக்கு வழங்கப்பட்ட அறிவை முறைகேடாகப் பயன்படுத்துவான் என்பதால், ஆன்மீக ரீதியில் இஸ்லாம் அவனுக்கு இதை உணர்த்துகின்றது.
அழகிய பேச்சுகளை மட்டுமே பேசும் படி இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பயனில்லாத பேச்சுக்களப் பேச வேண்டாம் என்று தடை விதிக்கின்றது.நல்ல வார்த்தைகளை நவில வேண்டும்நல்ல வார்த்தைகளால் பல நன்மைகள் நிகழும்.
மனம் ஒடிந்தவரிடம் ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவது அவருடைய காயத்திற்குக் களிம்பு தடவியதைப் போன்று இருக்கும். வேலையில் ஈடுபட்டு பரபரப்புடன் வருபவர்களிடம் கூறப்படும் நல்ல வார்த்தை அவர்களை சீரான நிலைக்குக் கொண்டு வரும்.
தவறு செய்தவர்களிடம் நல்ல வார்த்தைகளைக் கூறினால் அவர்கள் புனிதர்களாக மாறுவதற்கு வாய்ப்பாக அமையும்.இது போன்ற ஏராளமான நன்மைகளை, நல்ல வார்த்தைகளின் மூலம் சமுதாயம் அடைகின்றது. இதனால் இஸ்லாம் நல்ல பேச்சுக்களைப் பேசும் படி ஆர்வமூட்டுகிறது.
நற்காரியங்கள் அல்லாஹ்விடம் செல்வதைப் போல் நல்ல வார்த்தைகளும் அவனிடம் செல்கின்றன.நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!அல்குர்ஆன் (33:70)
யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும்.அல்குர்ஆன் (35:10)
ஒருவன் தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வதற்கு நிகரானது அவன் பேசுகின்ற நல்ல வார்த்தைகள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி (2989)
நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்கின்ற சொர்க்கத்தை நாம் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று நல்ல பேச்சுக்களைப் பேசுவதாகும். ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கம் செல்வதற்கான வழியைக் காட்டும்படி கேட்ட போது, அழகிய முறையில் பேசும் படி அவருக்குக் கட்டளையிட்டார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்'' என்றேன். அதற்கு அவர்கள் ''அனைத்தும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள். ''எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்'' என்று கூறினேன். ''சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: அஹ்மத் (9996)
நல்ல பேச்சுக்கள் சொர்க்கத்தை மாத்திரம் பெற்றுத் தராது. கடும் வேதனையான நரக நெருப்பிலிருந்து காக்கும் கேடயமாகவும் பயன்படும். நல்ல பேச்சுக்களைப் பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்).அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)நூல்: புகாரி (6023)
இஸ்லாம் சகுனம் பார்ப்பதைத் தடை செய்கிறது. மனிதன் துற்சகுனம் பார்ப்பதால் அவனுடைய அடுத்தக்கட்ட காரியங்களைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போடுகிறான். அவனுடைய முன்னேற்றத்திற்கு சகுனம் பார்த்தல் முட்டுக்கட்டையாக அமைகிறது.ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும் போது நல்ல வார்த்தையைச் செவியுற்றால் அந்தக் காரியத்தை பின் தள்ளாமல் பூரணப்படுத்துவதற்கு இந்த நல்ல வார்த்தைகள் தூண்டுகோலாக அமைகிறன.
மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனது ஆசையை அதிகப்படுத்தக் கூடியதாக நல்ல வார்த்தைகள் இருப்பதால் இஸ்லாம் இதை மாத்திரம் அனுமதிக்கிறது.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்'' என்று சொன்னார்கள். மக்கள், ''நற்குறி என்பதென்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ''அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்'' என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).நூல்: புகாரி (5754)
தீய பேச்சுக்களைப் பொதுவாக எங்கும் பேசக்கூடாது. குறிப்பாக மக்கள் நடமாடும் இடங்களில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிக மோசமான செயலாகும். ஆனால் இந்த ஒழுக்கத்திற்கு மாற்றமாக பொது வீதிகளில் சண்டைத் தகராறுகள் ஏற்படும் போது கேட்பதற்குக் காது கூசுகின்ற அளவிற்குப் பயங்கரமான வார்த்தைகள் வீசி எறியப்படுகின்றன.சந்தோஷத்திற்காக தெருக்களில் கூடியிருக்கும் இளைஞர்களிடத்திலும் இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு. இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். இதைக் கருத்தில் கொண்டு தெருக்களில் அமர்ந்திருப்போர் நல்லதையே பேச வேண்டும். இல்லாவிட்டால் அமரக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
நாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ''பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன செய்கிறீர்கள்? பாதையோரங்களில் அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். ''தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை. பேசிக் கொண்டும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம்'' என்று கூறினோம். அதற்கு அவர்கள், ''அப்படியானால் அதற்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள். பார்வையைத் தாழ்த்துவதும் சலாமிற்குப் பதிலுரைப்பதும் அழகிய முறையில் பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி)நூல்: முஸ்லிம் (4020)
பிறரை சந்தோஷப்படுத்தும் பேச்சுக்கள் நல்லவையே!நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும் என்பதால் மார்க்கம் சம்பந்தமான விஷயங்களைத் தவிர வேறு எதையும் பேசக் கூடாது என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. பிறரை சந்தோஷப்படுத்தி, நாமும் மகிழ்வதற்காக நகைச்சுவையுடன் பேசுவது குற்றமல்ல. நமது வார்த்தையால் பிறர் புண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.பிறரது மகிழ்சிக்கு நம்முடைய சொற்கள் காரணமாக இருப்பதால் அதுவும் நல்ல வார்த்தைகளின் பட்டியலுக்குள் வந்து விடும். நபி (ஸல்) அவர்களின் முன்பாக நபித்தோழர்கள் சிரித்து மகிழ்ந்து பேசியுள்ளார்கள். பெருமானாரை மகிழ்விப்பதற்காகவே ஒருவர் பிரத்யேகமாக இருந்துள்ளார்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் ஹிமார் (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார்.அறிவிப்பவர்: உமர் (ரலி)நூல்: புகாரி (6780)
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், ''நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்தீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''ஆம்! அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: சிமாக் பின் ஹர்ப்நூல்: முஸ்லிம் (118)
யாகாவாராயினும் நாகாக்க!நாவைப் பாதுகாப்பதை ஒரு முக்கியமான அம்சமாக இஸ்லாம் கருதுகிறது. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு இரத்தினச் சுருக்கமாக மிக அவசியமான போதனையைக் கூறும்படி கேட்கிறார். நபி (ஸல்) அவர்கள் நாவைப் பாதுகாத்துக் கொள்வதையும் முக்கிய போதனையாக அவருக்குச் சொன்னார்கள்.ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ''உங்களுக்குப் பிறகு (வேறு யாரிடமும் விளக்கம்) நான் கேட்காத அளவிற்கு இஸ்லாத்திலே ஒரு விஷயத்தை எனக்கு சொல்லுங்கள்'' என்று கேட்டார். ''அல்லாஹ்வை நம்புகிறேன் என்று கூறி (அதில்) நிலைத்து நில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! நான் எதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது கையால் நாவை சுட்டிக் காட்டினார்கள்.அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்தில்லாஹ் (ரலி)நூல்: அஹ்மத் (14870)
தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம்
தேவையற்ற பேச்சுக்கள் பிரிவினையை உண்டு பண்ணுவதால் அது போன்று பேசாமல் நல்ல விஷயங்களைப் பேசுமாறும் வீணானதை விட்டும் தவிர்ந்து கொள்ளும் படியும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
(முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.அல்குர்ஆன் (17:53)
வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். ''எங்கள் செயல்கள் எங்களுக்கு! உங்கள் செயல்கள் உங்களுக்கு! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர்.அல்குர்ஆன் (28:55)
வீணானதைப் புறக்கணிப்பார்கள்.
அல்குர்ஆன் (23:3)அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.அல்குர்ஆன் (25:72)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி (6018)நாம் நல்ல வார்த்தைகளை மட்டுமே மொழிய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். அஹ்மதில் இடம்பெற்றுள்ள இன்னொரு அறிவிப்பில், 'நல்லதையே பேசட்டும்' என்ற கட்டளைக்கு முன்பாக 'அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்' என்ற கட்டளையும் சேர்ந்து வருகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்போர் அல்லாஹ்வைப் பயந்து தனது அண்டை வீட்டாரிடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ளட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து தனது விருந்தினரை கண்ணியமாக நடத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து நல்லதைûயே சொல்லட்டும். அல்லது அமைதியாக இருக்கட்டும்.அறிவிப்பவர்: சில நபித்தோழர்கள்நூல்: அஹ்மத் (19403)
பொது இடங்களில் மூன்று குரங்குகளை நாம் கண்டிருப்போம். அதில் ஒன்று தீயவற்றைக் கேட்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வண்ணம் தன் காதைப் பொத்திக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பார்க்கக் கூடாது என்பதை எடுத்துரைப்பதற்காக கண்ணை மூடிக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பேசக் கூடாது என்பதற்காக வாயை மூடிக் கொண்டிருக்கும்.இந்த ஓவியத்தை ஏற்பாடு செய்தவர்கள் வலியுறுத்த வரும் செய்தியை ஒரு படி மேல் சென்று இஸ்லாம் எடுத்துரைக்கிறது. தீமையைப் பேசுவதை மட்டும் தடுக்காமல் தேவையில்லாத, பலனில்லாத பேச்சுக்களையும் பேச வேண்டாம் என்கிறது.ஏனென்றால் ஒன்றுக்கும் உதவாத பேச்சுக்கள் தீமையாக உருவெடுத்து விடுகின்றன என்பதே இதற்குக் காரணம்.
நம்மால் முடிந்த அளவு பிறருக்கு நன்மையை செய்ய வேண்டும். இயலாவிட்டால் தம் வார்த்தைகளால் பிறரை துன்புறுத்தாமலாவது இருக்க வேண்டும்.சிலருடைய பேச்சுக்கள் நம்மைத் தாக்கி அமையாது. என்றாலும் அவர்கள் சம்பந்தமில்லாத பல தகவல்களை பேசிக் கொண்டே இருந்தால் கேட்பவருக்கு அவரது பேச்சு எரிச்சலூட்டும். தன் குடும்ப விஷயங்களைப் பிறரிடத்தில் அடிக்கடி கூறுவதும் அவர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணும்.அதுமட்டுமல்லாமல் பேச்சில் அதிகமானது கழிக்கப்பட வேண்டியவையாக இருந்தால் அவர் கூறும் நல்ல கருத்துக்கள் கூட எடுபடாமல் போய்விடும். அவர் பேசும் எதையும் பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், நன்மையைத் தவிர வேறெதையும் பேசாதே! என்று கட்டளையிட்டார்கள்.
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தில் என்னைக் கொண்டு சேர்க்கும் நற்காரியத்தை கற்றுக் கொடுங்கள்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (சில விஷயங்களைக் கூறி விட்டு) ''உன்னால் இதற்கு முடியாவிட்டால் பசித்தவனுக்கு உணவு கொடு! தாகித்தவனுக்கு நீர்புகட்டு! நல்லதை ஏவி தீமையைத் தடு! இதற்கும் உன்னால் முடியாவிட்டால் உனது நாவை நல்லவற்றிலிருந்தே தவிர (மற்றவற்றிலிருந்து) பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அல்பர்ரா பின் ஆசிப் (ரலி)நூல்: அஹ்மத் (17902

MAKING OF CLOCK TOWER - MAKKAH