Monday, October 25, 2010

சிறப்பு பதிப்புகள்:




.

current vacancy in MITSUBISHI company.






SALES MANAGER ( )
Mitsubishi Electric ( Riyadh )
SALES MANAGERS Bachelors / Masters Degree in Engineering preferably (...
View Details
Posted On : 16 October 2010
Salary Range :  | Keyskills : | Industry :Software
SALES ENGINEER ( )
Mitsubishi Electric ( Riyadh )
Bachelors / Masters Degree in Engineering preferably (Electrical/Elect...
View Details
Posted On : 16 October 2010
Salary Range :  | Keyskills : | Industry :Software
PROJECT MANAGER ( )
Mitsubishi Electric ( Riyadh )
PROJECT MANAGERS Bachelors / Masters Degree in Engineering preferably...
View Details
Posted On : 16 October 2010
Salary Range :  | Keyskills : | Industry :Software
PROJECT ENGINEER ( )
Mitsubishi Electric ( Riyadh )
PROJECT ENGINEERS Bachelors / Masters Degree in Engineering preferabl...
View Details
Posted On : 16 October 2010
Salary Range :  | Keyskills : | Industry :Software
MANAGERS -INSTALLATION & MAINTENANCE ( )
Mitsubishi Electric ( Riyadh )
MANAGERS - INSTALLATION & MAINTENANCE Bachelors / Masters Degree in E...
View Details
Posted On : 16 October 2010
Salary Range :  | Keyskills : | Industry :Software
TESTING AND COMMISSIONING ENGINEERS ( )
Mitsubishi Electric ( Riyadh )
TESTING AND COMMISSIONING ENGINEERS Graduate of Engineering preferabl...
View Details
Posted On : 16 October 2010
Salary Range :  | Keyskills : | Industry :Software
QUALITY CONTROL ENGINEERS ( )
Mitsubishi Electric ( Riyadh )
QUALITY CONTROL ENGINEERS - Graduate of Engineering preferably in Elec...
View Details
Posted On : 16 October 2010
Salary Range :  | Keyskills : | Industry :Software
SUPERVISOR & FOREMAN ( )
Mitsubishi Electric ( Riyadh )
SUPERVISORS & FOREMEN - ELEVATOR INSTALLATION & MAINTENANCE Diploma i...
View Details
Posted On : 16 October 2010
Salary Range :  | Keyskills : | Industry :Software
TECHNICIAN- ELEVATOR INSTALLATION & MAINTENANCE ( )
Mitsubishi Electric ( Riyadh )
TECHNICIANS - ELEVATOR INSTALLATION & MAINTENANCE ITI or Diploma in E...
View Details
Posted On : 16 October 2010
Salary Range :  | Keyskills : | Industry :Software









DRAFTSMAN ( Saudi Arabia - 5) (3+)
saudi transformer
Job Id:
45
Posted on:
02 October 2010
Location:
dammam

Key Skills :

Job Function :
DESIGNING
Industry :
Manufacturing
Qualification :
Diploma
Level :
ELECTRICAL ENGINEERING
Experience :
3+
Job Details :
1. To get the details from Design Engineer 2. To prepare the drawing for NMR submittal 3. To arrange the drawing for production release, both mechanical and electrical 4. To do the site survey/inspection together with design engineer 5. Prepare the As-Built drawing for the final submittal Candidate’s Profile: 1. Minimum 3-4 years experience in Transformer or Switchgear manufacturing 2. Diploma in Electrical or Mechanical Engineering 3. Well-versed in Autocad, Microstation and MS Office 4. Fluen

DESIGNING - 5 Jobs
DESIGN ENGINEER (TRANSFORMERS / SWITCHGEAR) ( Saudi Arabia - 5) (2 TO 10)
saudi transformer
Job Id:
43
Posted on:
02 October 2010
Location:
dammam

Key Skills :

Job Function :
DESIGNING
Industry :
Manufacturing
Qualification :
B.Sc
Level :
ELECTRICAL ENGINEER
Experience :
2 TO 10
Job Details :
1. Responsible for design preparation of Distribution/Power Transformers, Substation or Switchgear. 2. Bill of material preparation 3. Checking of technical file and PDI files. Candidate’s Profile: 1. BS degree in Electrical/Mechanical Engineering 2. Min. 2 years experience as Design Engineer in Transformer or Switchgear Manufacturing 3. Knowledge in Foxpro, DesDT, and MS Windows.



DESIGNING - 5 Jobs
CHIEF DESIGN ENGINEERS (TRANSFORMERS / SWITCHGEAR) ( Saudi Arabia - 5) (8+)
saudi transformer
Job Id:
44
Posted on:
02 October 2010
Location:
dammam

Key Skills :

Job Function :
DESIGNING
Industry :
Manufacturing
Qualification :
B.Sc
Level :
ELECTRICAL ENGINEER
Experience :
8+
Job Details :
5. Responsible for approval of PDI files, design changes and bill of materials, technical part of enquiry, 6. Taking decision regarding optimization of design. Candidate’s Profile: 1. B S degree in Electrical Engineering 2. Min. 8 years experience as Design Engineer in Transformer or Switchgear Manufacturing 3. Knowledge in Foxpro, DesDT, and MS Windows.














e


முன்னாள் பிரதமர் பிளேரின் மைத்துனி இஸ்லாமுக்கு மாறினார்


லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனியான லாரன் பூத் இஸ்லாமுக்கு மதம் மாறியுள்ளார். இதை அவரே அறிவித்துள்ளார்.

பிளேரின் மனைவி செரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரிதான் இந்த பூத். பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆவார். சமீபத்தில் ஈரான் சென்றிருந்த அவர் அங்கு இஸ்லாம் மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாமியராக மாறியுள்ளார்.

உலக அளவில் பிரபலமாகி வரும், ஈரான் தொடங்கியுள்ள 24 மணி நேர ஆங்கில சர்வதேச தொலைக்காட்சியான பிரஸ் டிவியில் இவர் பத்திரிக்கையாளராகப் பணியாற்றுகிறார். அமெரிக்க, இங்கிலாந்து ஆதரவு சிஎன்என், பிபிசி போன்றவற்றுக்குப் போட்டியாக அறிமுகமான பிரஸ் டிவி தற்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பூத் ஒரு மனித உரிமை ஆர்வலரும் கூட.

சமீபத்தில், இஸ்லாமியர்கள் பலரும் கலந்துகொகண்ட உலக அமைதி மற்றும் ஒற்றுமை என்ற பெயரிலான பேரணியில், பூத்தும் கலந்து கொண்டார். அப்போதுதான் அவர் மதம் மாறியிருக்கலாமோ என்ற பேச்சு எழுந்தது. தற்போது அதை உறுதிப்படுத்தியுள்ளார் பூத்.

43 வயதாகும் பூத், இதுகுறித்து இங்கிலாந்து மீடியாக்களிடம் கூறுகையில், ஈரானில் உள்ள ஒரு தர்காவில் ஆறு வாரங்களுக்கு முன்பு எனக்கு அருமையான இறை அனுபவம் கிடைத்தது. அதன் பின்னரே நான் இஸ்லாம் மார்க்கத்தின் பால் ஈர்க்கப்பட்டேன். இப்போது நான் தினசரி ஐந்து வேளை தொழுகிறேன். சில சமயம் மசூதிக்கும் போகிறேன். கடந்த 45 நாட்களாக நான் ஆல்கஹால் கலந்த பானம் எதையும் அருந்தவில்லை என்றார்.

தற்போது வெளியில் செல்லும்போது முஸ்லீம் பெண்களைப் போல தனது தலையைச் சுற்றிலும் துணி கட்டிக் கொள்கிறார் பூத். எதிர்காலத்தில் புர்க்கா அணியவும் முடிவு செய்துள்ளாராம். குரானை தினசரி படிக்கிறாராம்.

தனது இந்த மதமாற்றம் சர்ச்சைகளை ஏற்படுத்தலாம் என்பது தனக்குத் தெரியும் என்று கூறும் பூத், ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினையுண்டு என்பதை நான் அறிவேன் என்கிறார்.

பூத்தின் மதமாற்றம் குறித்து செரி பிளேரும், டோனி பிளேரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

டோனி பிளேரே 2007ம் ஆண்டு வரை சர்ச் ஆப் இங்கிலாந்தில் உறுப்பினராக இருந்தவர்தான். அதன் பின்னர்தான் அவர் ரோமன் கத்தோலிக்கராக மாறினார். செர்ரி பிளேர் ஆரம்பத்திலிருந்தே ரோமன் கத்தோலிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பூத், மார்னிங் ஸ்டார் என்ற கம்யூனிஸ்ட் நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், டோனி பிளேரை கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், பாலஸ்தீனத்தின் ரபா, நபுலஸ் ஆகிய நகரங்களில் இஸ்ரேலின் தாக்குதல்களில் உயிரிழந்து போன தங்களது உறவினர்களின் உடல்கள் மீது விழுந்து அழும் தாய்மார்களி்ன் கண்ணீரை டோனி பிளேர் மறந்து விட்டார். குறைந்தபட்சம், இந்த நகரங்களின் பெயர்களாவது அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இந்த நகரங்களைச் சேர்ந்த எத்தனையோ தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை இழந்து பரிதவித்து கண்ணீரில் மூழ்கியுள்ளனர். இஸ்ரேலின் இந்த ராட்சத கொடூரத் தாக்குதல்களை அங்கீகரிக்கிறீர்களா பிளேர் என்று காட்டமாக கேட்டிருந்தார்.

Hayas.




உன்னத மனிதருக்கு உலக அங்கீகாரம்!




துரை இளைஞர் கிருஷ்ணன்... சி.என்.என். (CNN) தேர்ந்தெடுத்துள்ள உலகின் சிறந்த 10 மனிதர்களுள் ஒருவர்.
சமூக அக்கறை, நம்பிக்கை, விடா முயற்சி இவற்றை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு இந்தப் பூமியில் மாற்றத்தைக் கொண்டு வர முனைந்து செயல்படுவோரைக் கண்டறிந்து, ஆண்டுதோறும் சிறந்த மனிதர்களை உலகுக்கு அடையாளம் காட்டி வரும் திட்டமே 'சி.என்.என். ஹீரோஸஸ்'.
இதில், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 10 மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர், தமிழரான கிருஷ்ணன். (இவர், முதலிடம் பெறுவது உங்கள் கையில்).
தனி மனிதர் ஒருவருக்கு உணவில்லாதபோது, அவரது வயிற்றுச் சோறிட்டு வருபவர் 

நான்கு வருடங்களுக்கு முன் கேட்டரிங் டெக்னாலஜி முடித்துவிட்டுபெங்களூரில் ஸ்டார் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணன். சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வேலை வாய்ப்பு அவருடைய கையைப் பிடித்து இழுக்க... அங்கு புறப்படும் முன் ஒரு வாரம் ரிலாக்ஸ்டாக இருப்பதற்காக சொந்த ஊரான மதுரைக்குப் போயிருக்கிறார் கிருஷ்ணன். அந்த பயணம் ஒட்டு மொத்தமாக அவருடைய வாழ்க்கையையே மாற்றிப்போடஇன்றைக்கு மனித நேயம் மிக்க மனிதராக உருவெடுத்திருக்கிறார் கிருஷ்ணன்



இவர். 

"அப்பாவும், அம்மாவும் வேலைக்கு போனப்புறம் சும்மாதானே இருக்கோம்... ஊரை ஒரு ரவுண்ட் அடிப்போம்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு மதுரை ரயில்வே ஸ்டேஷன் பக்கமா போனேன். மேம்பாலத்தை ஒட்டி ரோட்டோரமா அழுக்குத் துணிபோல கிடந்தார் ஒரு பெரியவர். நெருங்கிப் பார்த்தேன்... மனநிலை சரியில்லாத நபரான அந்தப் பெரியவர், தன்னோட நரகலை தன் கையில எடுத்து சாப்பிட்டுக்கிட்டிருந்தார். எனக்குள்ளே ஷாக் அடிச்ச மாதிரியிருந்தது. உடனே அவரோட கையப் புடிச்சு உதறி விட்டேன். அவரைச் சுத்தப்படுத்தி உட்கார வெச்சுட்டு, ஓட்டல்ல இருந்து இட்லிய வாங்கிவந்து குடுத்தேன். அவரோட கண்கள்ல நீர்கட்டி நின்னுச்சு.

அதே நினைப்போட வீட்டுக்குத் திரும்பி வந்த நான், இந்த மனித வாழ்க்கையில இப்படியெல்லாம் கஷ்டங்கள் இருக்கறத நினைச்சு நினைச்சு ''னு அழுதேன். அதுக்கப்புறம் எனக்கு சுவிட்சர்லாந்து பெருசா தெரியல. 'ஸ்டார் ஓட்டல்ல ஐந்நூறு ரூபாய்க்கு ஃப்ரைடு ரைஸ் வாங்கி, அதுல முக்கால் பிளேட்ட சாப்பிடாம மிச்சம் வெச்சுட்டுப் போறவங்களுக்கு சர்வீஸ் பண்றத விட, தெருவோரத்துல தூக்கி வீசப்பட்டவங்களுக்கு சேவை பண்றதே சரி'னு என் மனசுக்கு பட்டுது. ஊர்லயே தங்கிட்டேன்" என்று படு இயல்பாகச் சொல்லி நம்மை நெகிழவைக்கிறார் கிருஷ்ணன். 
இன்றைக்கு மதுரை தெருக்களில் வேண்டாத பொருளாக எறியப்பட்டுக் கிடக்கும் நூற்று இருபது பேருக்கு மூன்று வேளையும் வயிறார சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணன். மனநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், உழைத்து சாப்பிடமுடியாத முதியவர்கள் என்று பாவப்பட்ட ஜீவன்கள்தான் அவர்கள் அனைவரும்.
"எந்த நேரமும் நான் இதே சிந்தனையா திரியுறத பாத்துட்டு எங்க சொந்தக்காரங்க, 'இவன முனி அடிச்சுருக்கு'னு கிளப்பி விட்டுட்டாங்க. அதக்கேட்டுட்டு எங்க அம்மாவும் அப்பாவும் சோட்டாணிக்கரைக்கு என்னைய இழுத்தாங்க. 'அதுக்கு முன்னாடி நான் சாப்பாடு போடுற அந்த ஜீவன்களை ஒரு தடவ நீங்க நேருல வந்து பாக்கணும்'னு அம்மாகிட்ட சொன் னேன். எங்கூட வந்து அந்த ஜீவன்கள பாத்துட்டு வீட்டுக்கு வந்ததுமே, 'இத பாருப்பா, நீ அந்த ஜீவன்களுக்கு சோறு போடு. ஒன்னைய புள்ளயா பெத்து பாக்யம் பண்ணினதுக்காக உனக்கு நாங்க சோறு போடுறோம்'னு ரெண்டு பேருமே கண்கலங்கிப்போய் சொன்னாங்க. அதிலிருந்துதான் நான் முழு நேர வேலையா இதை செய்ய ஆரம்பிச்சேன்" என்று சொல்லி தன் பெற்றோரின் மீதான மரியாதையையும் அதிகப்படுத்தினார் கிருஷ்ணன்.


இன்று இந்த நூற்று இருபது பேருக்கும் ஒரு நாளைக் கான உணவை சமைத்து சப்ளை பண்ணி முடிக்க, மூவாயிரம் ரூபாய் செலவு பிடிக்குமாம். இவருடைய தொண்டுள்ளத்தை கண்டு நெகிழ்ந்துபோன சேவை உள்ளம் கொண்ட இருபது பேர், மாதாமாதம் தலா மூவாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நாளைக்கு உண்டான செலவை ஏற்றுக்கொண்டு வருகிறார் களாம். கிருஷ்ணனின் பெற்றோர் இருவரும் மேற்கொண்டு இரண்டு நாட்களுக்கான செலவை பகிர்ந்துகொள்ள, மீதி எட்டு நாட்களுக்குத்தான் சிரமம். திருமணம், பிறந்தநாள் என்று ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள், கொடுக்கும் உணவை வைத்து அதைச் சமாளித்து வருகிறார் கிருஷ்ணன்.
சாப்பாடு சப்ளை போக மீதி நேரங்களில் அழுக்காக திரியும் மனநோயாளிகளை மாநகராட்சி குளியலறைக்குள் கூட்டிபோய் குளிக்கவைத்து அவர்களுக்கு மாற்றுத் துணி கொடுத்து பளீச் ஆக்கிவிடுகிறார். முடிவளர்த்துக் கொண்டு திரியும் மனநோயாளிகளை உட்கார வைத்து, கத்தரி பிடித்து அவர்களுக்கு முடி வெட்டிவிட்டு அழகு பார்க்கிறார், வேதங்களை முறைப்படி கற்ற 24 வயது, கிருஷ்ணன்!
ரம்ப காலகட்டத்தில் நாளொன்றுக்கு நூற்று இருபது பேரின் பசிப் பணியைப் போக்கி வந்த கிருஷ்ணன், கடந்த எட்டு ஆண்டுகளாக தனது அக்ஷயா அறக்கட்டளை மூலம் தினமும் ஏறத்தாழ 400 பேருக்கு மூன்று வேளை உணவு அளித்து வருகிறார்.
அன்றாடம் காலை 4 மணிக்கே துவங்கிவிடும் இவரது சேவைப் பயணம், சுமார் 200 கி.மீ தூரம் வரை மதுரையை வலம் வந்து, வீடற்ற ஏழை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குவது வழக்கம்.
கிருஷ்ணனின் அடுத்த இலக்கு... வீதியில் வசிப்போருக்கு வசிக்க வீடு கட்டித் தருவதே. அதற்கான, செயல் திட்டங்களை வகுத்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


உங்கள் ஓட்டு கிருஷ்ணனுக்கே...


உலகின் சிறந்த 10 மனிதர்களைத் தெரிவு செய்துள்ள சி.என்.என்., அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து 'சி.என்.என். ஹீரோ ஆஃப் தி இயர்' என்ற கெளரவத்தை அளிக்க இணையத்தில் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.
சி.என்.என். தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.
"என்னுடைய மக்களைக் காப்பற்ற வேண்டும். இதுவே, எனது வாழ்க்கையின் நோக்கம்."
 இந்த உன்னத மந்திரச் சொல்லை தனது ஒரே கொள்கையாக கொண்டுள்ள மதுரை நேசம் கிருஷ்ணன், உலகின் முதன்மை நாயகனாக தேர்ந்தேடுப்பதற்கு, உங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய...

நவம்பர் 18 ஆம் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
கிருஷ்ணன் பற்றிய முழு விவரங்களைத் தரும் சி.என்.என். பக்கம்... THIS IS YEAR HERO NARAYANAN KRISHNAN (PROTECTING THE POWERLESS)
 
கிருஷ்ணனின் அக்ஷயா அறக்கட்டளையின் வலைத்தளம்... http://www.akshayatrust.org/

இந்திய இணையவாசிகள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தாலே கிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி!

ஹயாஸ்.







சலுகை விலை சிமென்ட்


ராமநாதபுரம்: வீடு கட்ட, பழுது மற்றும் பராமரிப்பு பணிக்கு அரசின் சலுகை விலை சிமென்ட் வேண்டுவோர் வாணிப கழக கிடங்குகளை அணுகலாம்.

ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களால் 1000 .., வரை கட்டப்படும் வீடுகளுக்கு சலுகை விலையில் சிமென்ட் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. இதற்காக மூடை (50 கிலோ) ஒன்றுக்கு 200 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 400 மூடைகள் வரை இதற்காக வழங்கப்படுகிறது. பயன்பெற விரும்புவோர் உரிய வரைவு காசோலை மற்றம் ரேஷன் கார்ட்டு நகலுடன் விண்ணப்பிக்கலாம். அதன் பின் எட்டு தவணையாக சிமென்ட் வினியோகம் நடக்கும். அதே போல பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு 50 மூடை வரை சிமென்ட் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக 50 மூட்டை வாங்க விரும்பினால் காசோலைக்கு பதிலாக அதற்குரிய பணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்களின் சிமென்டு மூடைகள் தேக்கம் வைக்கப்பட்டுள்ளன. இதற்காக தாலுகா வாரியாக உள்ள வாணிப கழக கிடங்களைஅணுக வேண்டிய பகுதிகள் விபரம்:  
ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக ரோடு 04567-231431 , ராமேஸ்வரம் கெந்தமான பர்வதம் ரோடு 04573-221308 , 
திருவாடானை கடம்பாகுடி-தொண்டி ரோடு 04561-254244 , 
பரமக்குடி கமுதக்குடி 04564-208843 , முதுகுளத்தூர் -தேரிருவேலி ரோடு 04576-291122 , 
கடலாடி - சாயல்குடிரோடு 04576-207314 , 
கமுதி அரண்மனைரோடு-சாயல்குடி ரோடு 04576-223209 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
இதுதவிர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் ராமசந்திரனை 04567-230767 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்








வேலை வாய்ப்பு :
இந்திய விமானப்படை யில் குரூப் “ஓ” டெக்னிக்கல் பிரிவுகளில் படைவீரராக பணியாற்ற தேர்வுநடைபெற உள்ளது. 01.04.1990 முதல் 31.05.1994-ம் தேதிக் குள் பிறந்த தமிழகம் மற்றும் புதுவை மாநில திருமணமாகாத இளைஞர் கள் பிப்ரவரி 2011-ல் நடைபெற உள்ள தேர்வு மூலம் குரூப் “ஓ” டெக்னிக்கல் டிரேட்களில் படைவீரராக பணியாற்றும் வாய்ப்பை பெற வரவேற்கப்படுகிறார்கள்.
10 மற்றும் பிளஸ்-2 இன்டர்மீடியட் படிப்பில் கணிதம் மற்றும் இயற் பியல் பாடங்களுடன் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியிருக்க வேண்டும். (அல்லது) அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் இன்ஸ்ட்டிட்யூட்டில் மூன்று வருடம் டிப்ளமோ படிப்பில் (மெக்கானிக்கல் -எலக்ட்ரிக் கல்-எலக்ட்ரானிகல்- ஆட்டோ மொபைல்- கம்ப்யூட்டர் சயின்ஸ்- இன்ஸ்ட்ரூமென்டேஷன் - இன்பர்மேஷன்-டெக்னா லஜி பிரிவுகள் மட்டும்) குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியிருக்க வேண்டும்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 08.11.2010. விளம்பரம், வேலைவாய்ப்பு, பாடத் திட்டம், மாதிரி வினாத்தாள், தேசிய அளவிலான தேர்ச்சி பட்டியல், மற்றும் சேர்க்கை பட்டியல் ஆகியவைகளுக்கு பார்க்க வெப்தளம் மேலும் விபரங்களுக்கு 8, எர்மென் செலக்ஷன் சென்டர், ஏர்போர்ஸ் ஸ்டேஷன் தாம்பரம், சென்னை-600 046, தொலைபேசி எண்: 044-22791853.
விமானப்படையில் வீரர் தேர்வு இலவசமாகவும் நேர்மையாகவும் தகுதி அடிப்படையில் மட்டுமே நடைபெறுகிறது. யாருக்கும் பணம் தரத்தேவையில்லை. ஏஜெண்ட்டுகள் என யாரையும் நம்பி ஏமாற்றத்திற்கும், தேவை யற்ற ஒழுங்கு நடவடிக் கைக் கும் ஆளாகாதீர்கள். ராம நாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி உள்ள இளை ஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயன்பெறு மாறு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகர ன் கேட் டுக்கொண்டுள்ளார். 

http://heroes.cnn.com/vote.aspxhttp://www.akshayatrust.org/http://edition.cnn.com/SPECIALS/cnn.heroes/archive10/naryanan.krishnan.html