Wednesday, February 23, 2011

தோல்களில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன [ திருக்குர்ஆன் விளக்கம் ]


அஸ்ஸலாமு அலைக்கும்,,,

திருக்குர்ஆன் விளக்கம்

Source – Link

119. தோல்களில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன

வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள் மனிதனின் தோலில் தான் உள்ளன. தோல் கரிந்து விட்டால் எந்த வேதனையையும் மூளை உணராது என்பது சமீபத்திய கண்டு பிடிப்பு. இதனால் தான் மேல் தோலை மட்டும் மரத்துப் போகச் செய்யும் ஊசிகளைப் போட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்கின்றனர். முழு உடலையும் மரத்துப் போகச் செய்வதில்லை. அவ்வாறு மரத்துப் போகச் செய்தால் மனிதன்  செத்து     விடுவான்.
அது போல் தான் தீக்காயத்தில் தோல் கருகிப் போனவர்கள் வேதனையால் துடிக்காமல் இருப்பதையும் காண்கிறோம். பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த முஹம்மது நபிக்கு இது எப்படித் தெரியும்? திருக்குர்ஆன் 'அவர்களின் தோல் கருகும் போது அதை மாற்றுவோம்' என்று கூறாமல் 'வேதனையை அவர்கள் உணர்வதற்காகவே மாற்றுவோம்' என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறுவதென்றால் மனிதனைப் படைத்த இறைவனால் தான் சாத்தியமாகும். திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக அமைந்துள்ளது. (இக்குறிப்புக்கான வசனம்: 4:56)

நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்
6801 உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (பத்துப் பேருக்கும் குறைவான) ஒரு குழுவினருடன் (சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை கற்பிப்பதில்லை; திருடுவதில்லை; குழந்தை களைக் கொல்வதில்லை;  உங்களிடையே அவதூறு கற்பித்து அதைப் பரப்புவதில்லை; எந்த நற்செயலும் எனக்கு மாறு செய்வ தில்லை என்று நான் உங்களிடம் உறுதி மொழி வாங்குகின்றேன். உங்களில் எவர் (இவற்றை) நிறைவேற்றுகிறாரோ அவரது பிரதிபலன் அல்லாஹ்விடத்தில் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களான இ)வற்றில் எதையேனும் ஒருவர் செய்து, (அதற்காக) அவர் இவ்வுலகில் தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குப் பரிகாரமாகவும் அவரைத் தூய்மையாக்கக் கூடியதாகவும் ஆகிவிடும். (அவற்றில் எதையேனும் ஒருவர் செய்து பின்னர்) அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுவார்; அல்லாஹ் நாடினால் அவரைத் தண்டிப்பான்: அவன் நாடினால் அவரை மன்னிப்பான் என்று கூறினார்கள்.19
-------------------------------------------------
புலனாய்வு பத்திரிக்கைகள்,

எனக்கு வெகு நாட்களாக ஒரு சந்தேகம். இந்தப் புலனாய்வு பத்திரிக்கைகள், (எதைப் புலனாய்வு செய்கின்றன என பிறகு பார்ப்போம்) என்ன சமூக அவலங்களைப் புலனாய்வு செய்து கிழிக்கின்றன என்று. நானும், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன், ஜூனியர் விகடன் என அனைத்தையும் பார்த்துவிட்டேன். புலனாய்வு செய்கிறேன் பேர்வழி என பெண்களின் புலன்களை ஆயும், புலனாய்வு வேலையில் ஈடுபட்டுள்ளன இந்தப் பத்திரிக்கைகள். ஜூனியர் விகடன் எனப் பெயர் வைத்திருந்தாலும், இந்தப் புலன் ஆய்வு வேலைகளில் ஜூனியர் விகடன் தான் சீனியர்.

சில வாரம்களுக்கு முன்பு  'பாழாகும் பாடி' என்ற செய்தி வெளியாகியிருந்தது. அதாவது பாடி, போரூர் ஆகிய இடங்களில் போலீசு துணையுடன் விபச்சாரம் நடப்பதாகவும், அதனால் பொது மக்களுக்கு அசிங்கமான பல இடையூறுகள் ஏற்படுவதாகவும் எழுதியிருந்தனர். அந்த செய்தியை முழுதாய் படித்தால், "பசங்களா... சென்னைல எங்க விபச்சாரம் நடக்குதுனு தேடி அலையாதீங்க, போரூர்லயும், பாடிலயும் நல்லா நடக்குது"னு அறிவிப்பது போல் இருந்தது. சரி, அதை விடுங்கள். அதைவிடக் கொடுமை, அந்த செய்திக்கு அவர்கள் வெளியிட்டிருந்தப் படம் தான். முக்கால் பக்கத்துக்கு, கால்வாசி உடையுடன் நிற்கும் ஒரு பெண்ணின் படம். 
சரி செய்திக்குதான் படம் இப்படியென்றால், அந்தச் செய்தியின் முந்தையப் பக்கமான நடுப்பக்கத்தில் அரை நிர்வாணமாய் நிற்கும் நடிகையின் படம்!!!!

எதற்கு இப்படியொரு அரைகுறை படம்? விடலைப் பையன்களும், இன்னும் சிலரும் அந்தப் படத்தைப் பார்த்து பத்திரிக்கையை வாங்குவதற்காகத் தானே? அடப் பாவிகளா, இதைத்தானே அந்த போரூர் மற்றும் பாடி ஏரியாக்களின் மாமாக்களும் செய்கிறார்கள்? விபச்சாரம் செய்யும் பெண்ணைக் காண்பித்து தொழிலுக்கு அழைக்கிறார்கள். அவர்களுக்கும் ஜூனியர் விகடனுக்கும் என்ன வித்தியாசம்? அவர்களாவது வயிற்று பிழைப்புக்கு செய்கிறார்கள். ஆனால் விகடனோ அதே வேலையை, சில பிரதிகள் அதிகம் விற்க வேண்டி செய்கிறது. சொல்லப்போனால் ஜூனியர் விகடன் 'அந்த' தொழில் செய்பவர்களைவிட இன்னும் மோசம். 

பாடியிலும், போரூரிலும் விபச்சாரம் நடக்கிறது குடும்பப் பெண்கள் நடமாட முடியவில்லை. குடும்பத்துடன் வெளியே செல்ல முடியவில்லை என்றெல்லாம் மக்கள் புலம்புவதாய் செய்தி வெளியிட்டிருக்கும் விகடனுக்கு சில கேள்விகள். "உங்கள் ஜூனியர் விகடனை, குடும்பத்தை அருகில் வைத்துக் கொண்டு படிக்க முடியுமா? எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் நீங்கள் செய்யும் 'பெண் புலன் ஆய்வு'தான் தென்படுகிறது. 
போரூர், பாடி போன்ற இடங்களை விபச்சாரம் செய்பவர்கள் கெடுக்கிறார்கள் என புலம்பியிருக்கிறீரே, பத்திரிக்கை ஊடகத்தை ஏதோ ஷகீலா படம் போல் மாற்றும் உங்களை எவன் தட்டிக் கேட்பது?
போலீசையும், விபச்சாரிகளையும், மாமாக்களையும் குறை சொல்லவும், திட்டவும் உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? இந்தப் பதிவுக்கு நான், "விபச்சாரம் செய்யும் விகடன்" எனப் பெயர் வைத்ததில் என்ன தப்பு இருக்கிறது?

நான் 'ஒரு' செய்தியை உதாரணமாய் காட்டியிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் இருமுறை வரும் இதுபோன்ற இதழ்களில், பலமுறை அசிங்கங்கள் நடக்கின்றன. ஜூவியில் மட்டுமல்ல. அனைத்து புலனாய்வு பத்திரிக்கைகளும் ஈடுபட்டிருப்பது புலன்களை ஆய்வதில் தான்.  நக்கீரன் இதற்கு கொஞ்சமும் சலைத்ததள்ள. நித்தியா நந்தா விவகாரத்தில் ஆபாஸகாட்ச்சிகளை விவரமாக பார்க்க வேண்டும் என்றால் சந்தாதார்ர் ஆகுங்கள் என்று கடைவிரித்த்தை அனைவரும் பார்த்தோம்தானே. எனவே இவர்கள் புலன் ஆய்வு செய்வதை விட சதை ஆய்வு வியாபாரம் செய்வதுதான் அதிகம்.  
--
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

please forward to this website address for all islamic,christian and hindu brothers.
http://www.jesusinvites.com - http://www.onlinepj.com
அன்புச் சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவரையும் இந்த பயனுள்ள வலைத்தல குழுமத்தில் இனைந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறோம். 
இந்த குழுமத்தில் உங்களின் ஆக்கங்களை வெளியிடவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் அல்லது குழுமத்திலிருந்து விலகவும் விரும்பினால் payanullathagaval@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு மெயில் செய்யவும். நன்றி

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.


நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம். 

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

 இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

டிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

டிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

ஒரு தாமரைக்கு எத்தனை சுழியம்?


[எழுத்தோவியங்கள்]
ஒரு தாமரைக்கு எத்தனை சுழியம்?


ஒரு தாமரைக்கு எத்தனை சுழியம்?

எனக்கு வந்த ஒரு மடல் கீழே சாய்வெழுத்துகளில் :

அமெரிக்க முறைப்படி எண்களை மில்லியன், பில்லியன், ட்ரில்லியன்,
க்வாட்ரில்லியன், குயின்டில்லியன், என்று துவங்கி சென்டில்லியன் வரை
நீட்டிக்கொண்டே போகலாம். (சென்டில்லியன் என்றால் ஒன்று போட்டு 303
ஸைஃபர் போடவேண்டும்).

ஆனால், நம் இந்தியாவிலோ கோடியைத் தாண்டிவிட்டால் பிறகு வேறு வார்த்தை
கிடையாது. அதன் பிறகு நூறு கோடி, ஆயிரம் கோடி, லட்சம் கோடி, கோடி கோடி
என்று கூறித்தான் மக்களைக் குழப்ப வேண்டி யிருக்கிறது. ஒரு காலத்தில்
கோடி என்பது மிகப் பெரிய எண்ணாக இருந்ததால், அதற்கு மேல் வார்த்தை
தேவைப்படவில்லை. ஆனால், இப்போதெல்லாம் ஒரு ஊழல் மட்டுமே ஒரு லட்சத்து 76
ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடத்தப்படுகிறது.

வருகிற காலத்தில் கோடி கோடி ஊழல் எல்லாம் வரக்கூடும். எனவே, கோடிக்கு
மேல் புதிய சொற்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு
ஏற்பட்டுள்ளது.

இதை வைத்து நம் இன்டெர்நெட் அரசியல் ஆர்வலர்கள் விளையாட ஆரம்பித்து
விட்டார்கள். எப்படி ?

1000
கோடி = 1 ராடியா
10,000
கோடி = 1 கல்மாடி
1,00,000
கோடி = 1 ராசா

ஆக, இனிமேல் பெரிய தொகைகளைக் குறிக்கும் தகவல்களைக் கீழ்க் கண்டவாறு
குறிப்பிடலாம்:

அனில் அம்பானி புதிதாகக் கட்டியிருக்கும் வீட்டின் மதிப்பு சுமார்
4.5
ராடியா ரூபாய் (4,500 கோடி ரூபாய்) மதிப்பிருக்கும்.

ஆண்டுதோறும் கெரஸினுக்கு மத்திய அரசு வழங்கும் மான்யம்
2
கல்மாடி ரூபாய் ஆகும் (20,000 கோடி ரூபாய்)

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் தொகை
50
ராசா ரூபாய் (50 லட்சம் கோடி ரூபாய்) இருக்கக் கூடுமெனத் தெரிகிறது.

-
இந்த ஐடியாவை மத்திய அரசு பரிசீலிக்கலாம்.
------------------------------
----------------------------------------
நன்றி : துக்ளக் வார இதழ் 16.02.2011
----------------------------------------------------------------------



நகைச்சு வைப்பதற்காக மேலுள்ளதைக் குறிப்பிட்டாலும்,

உண்மையில் கோடிக்கு அப்பாலும் எண்களைச் சொல்வதற்கு தமிழில் முடியும் என்று தொல்காப்பியம் சுட்டுகிறது:

ஒன்று = 1
பத்து = 10
நூறு = 102
ஆயிரம் = 103
பத்தாயிரம் = 104
நூறாயிரம் = 105
பத்து நூறாயிரம் = 106
கோடி = 107
தாமரை (=கோடிகோடி) = 1014
வெள்ளம் (=கோடிதாமரை) = 1021
ஆம்பல் (=கோடிவெள்ளம்) = 1028

இன்று படித்த ஒரு செய்தி இங்கே கூறத்தக்கது:

1.76 லட்சம் கோடிக்கு எத்தனை "ஜீரோ'? பதிலளித்த மாணவிக்கு ரூ. 10 ஆயிரம்.

--
Posted By
இப்னு ஹம்துன் to எழுத்தோவியங்கள் at 2/13/2011 04:12:00 AM



--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 begin_of_the_skype_highlighting              +966 050 7891953      end_of_the_skype_highlighting / 050 1207670 begin_of_the_skype_highlighting              050 1207670      end_of_the_skype_highlighting
www.ezuthovian.blogspot.com
www.mypno.com

தன்னை அறிதலும் தக்கபடி வாழ்தலும்
தேடலில் எல்லாம் தலை!