Tuesday, March 15, 2011

பேரழிவுகள் ஏன்?



நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள் அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை -நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 8 : 25)

பேரழிவுகள் ஏன்?

அல்லாஹ்வை புறக்கணித்து, அவன் வல்லமையை மறந்து, பல பாவங்களையும் புரியும் நன்றிகெட்ட மனிதர்கள் இப்பூமியில் வாழும்போது, இயற்கை சீற்றங்களான புயல், சூறைக்காற்று, நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு, சுனாமி, எரிமழை தாக்குதல் போன்றவற்றால் அல்லாஹ்வின் கோபச் சோதனையை எதிர்பாருங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்பு

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்

பொதுச் சொத்து தன் சொத்தைப் போல பாவிக்கப்படும் போது,

போரில் கிடைக்கப்படும் அமானிதம் (கனீமத்) தன் பங்குப் பொளாகக் கருதப்படும் போது,

ஜகாத் கடன் கொடுப்பதைப் போன்று கடினமாகக் கருதப்படும் போது,

தீனுடைய நோக்கமின்றி கல்வி கற்பிக்கப்படும் போது,

கணவன் தன் மனைவிக்கு அடிபணிந்து வாழும் போது,

பெற்ற தாய் தன் மக்களால் வேதனை செய்யப்படும் போது,

தனது நண்பனை தனக்கு நெருக்கமாக்கி, பெற்றெடுத்த தந்தையை புறக்கணிக்கும் போது,

அல்லாஹ்வின் பள்ளிவாயில்களில் சப்தங்கள் உயர்த்தப்படும் போது,

ஒரு கூட்டத்தினருக்கு அவர்களில் உள்ள தீயவன் தலைவனாகும் போது,

ஒரு கூட்டத்திலுள்ள இழிவானவன் கண்ணியமானவனாகவும், கண்ணியமானவர் அவர்களில் மிக இழிவானவராகக் கருதப்படும்போது,

ஒரு மனிதனுடைய தீமைக்குப் பயந்து அவனுக்கு கண்ணியமளிக்கப்படும் போது

ஆடல் பாடல்களில் ஈடுபடும் பெண்களும், இசைக்கருவிகளும் அதிகரிக்கும் போது,

மதுபானங்கள் தாராளமாக அருந்தப்படும் போது,

இந்த உம்மத்தில் பின்னால் வருகிறவர் முன் சென்றவர்களைச் சபிக்கும் போது

இத்தகைய காரியங்களெல்லாம் ஏற்படுகிற காலத்தில் சிவந்த நிறமான காற்றையும், நில நடுக்கத்தையும், பூமிக்குள் அழுத்தப்படுவதையும், உருவமாற்றம் நிகழ்வதையும், கல்மாரி பொழிவதையும் நூலருந்த மணிகள்போல் ஒன்றன்பின் ஒன்றாக பல வேதனைகளை எதிர்பாருங்கள். அறிவிப்பவர் : அபூஹூரை (ரழி) நூல் : திர்மிதி

எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பெருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 3 : 89)

நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக் கொண்டும், அவன் மீது நம்பிக்கை (ஈமான்) கொண்டும் இருந்தால், உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4 : 147)

பாவமன்னிப்பு

தவ்பா (பாவமன்னிப்பு) செய்யும் போது தூய மனதுடன் இனி அத்தகைய பாவங்களில் ஈடுபடமாட்டேன் என்ற உறுதியான எண்ணத்துடன் அல்லாஹ்விடம் மட்டுமே பிராத்திக்க வேண்டும்.

நம் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம் மன்றாடும் போது நாம் அடையும் சோதனை மற்றும் 
வேதனைகளிலிருந்தும் துன்ப துயரங்களிலிருந்தும் நாம் மீட்சி பெற இயலும்.

பாவமன்னிப்பு கோரல் பற்றி திருக்குர்ஆன்

ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான் (திருக்குர்ஆன் 66 : 8)

......''எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 7 : 23)

''எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! ....'' (திருக்குர்ஆன் 2 : 186)

மேலும், ''எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! ....'' (திருக்குர்ஆன் 3 : 147)

.... ''எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்'' (திருக்குர்ஆன் 23 : 109)

Hs.

No comments: