Thursday, September 2, 2010

சிந்திக்க சில நபிமொழிகள்



நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவான் - அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றைப் பார்க்கிறவன். (குர்ஆன் 49:18)
(நபியே!) தொழுகையைக் கொண்டு உம்முடைய குடும்பத்தினரை ஏவுவீராக! இன்னும் அதன் மீது நீரும் நிலைத்திருப்பீராக! உம்மிடம் உணவை நாம் கேட்கவில்லை; உமக்கு நாமே, உணவளிக்கிறோம்; நல்ல முடிவு-பயபக்தி (உடையவர்களு)க்கே உரியது. (குர்ஆன்20:132)


மறுமை நாளில் அடியானிடம் விசாரிக்கப்படும் முதற் கேள்வி அவனது தொழுகையைப் பற்றியதாகும் என ந்பி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நஸயீ)


"எத்தகைய இஸ்லாம் சிறந்தது?" என பெருமானாரிடம் கேட்கப்பட்டது; "பசித்தவருக்கு உணவளித்து, உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் ஸலாம் சொல்லும் இஸ்லாமே சிறப்புடையது" என்று செம்மல் நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி)
அடியான் ஆரோக்கியமானவனாய் ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற(அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பிரயாணத்தில் இருக்கும் போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும். (புகாரி)


மனிதர்களிடம் யார் கிருபை காட்டவில்லையோ அவர்களிடம் அல்லாஹ் கிருபை காட்டமாட்டான். (புகாரி, முஸ்லிம்)

தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காக போராடும்போது கொல்லப்பட்டவர், இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார். (புகாரி)
விதவைகளுக்காகவும்; ஏழைகளுக்காகவும் பாடுபடுபவர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவர் போன்றவராவார். (புகாரி, முஸ்லிம்)


அநீதமிழைக்கப்பட்டவரின் இறைஞ்சுதலை அஞ்சிக்கொள்க. அவர் த்மது உரிமையை அல்லாஹ்விடம் கேட்கிறார். உரிமையுடையோருக்கு அல்லாஹ் அவரது உரிமையைக் கிடைக்கச் செய்யாதிருப்பதில்லை. (பைஹகீ)

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு எந்தச் செயலும் கவலை அளிக்குமாயின் அவர்கள் தொழச் சென்றுவிடுவார்கள். (அபூதாவூது)
நாசத்தை விளைவிக்கும் இணைவைத்தல், செய்வினை செய்தல் ஆகியவற்றிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். (புகாரி)

(உணவை உண்டு முடித்ததும், விரல்களை) சூப்பி, உணவுத் தட்டை வழித்தும் சாப்பிடுமாறு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஏவினார்கள். நிச்சயமாக நீங்கள் அவுணவில் எதில் பரக்கத் உள்ளது என்பதை அறிய மாட்டீர்கள். (முஸ்லிம்)

ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால், அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளது கணவனுக்கும் கிடைக்கும். (புகாரி)


சாட்சி கொண்டு வருவது வாதியின் மீதும், சத்தியம் செய்வது பிரதிவாதியின் மீதும் கடமையாகும். (திர்மிதீ)
பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்பட்டு, ஏழைகள் விடப்படும் வலீமா விருந்தாகிறது, உணவுகளில் கெட்டதாகும். (புகாரி, முஸ்லிம்)
நீங்கள் எந்த நோயாளியிடம் சென்ற போதினும் அவருக்கு நீண்ட ஆயுளை நல்குமாறு இறைஞ்சவும். ஏனெனில் இதன் காரணமாக அவருக்கு மன ஆறுதல் ஏற்படுகிறது. (திர்மிதீ)
"அதிகமாக உரையாடாதீர்கள். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ்வை நினைவு கூர்தல் இல்லாது அதிகமாக உரையாடுவது மனதைக் கல்லாய்ச் சமைத்துவிடக் காரணமாகிவிடும்." (திர்மிதீ)

அன்பளிப்புச் செய்யும் விசயத்தில் உங்கள் பிள்ளைகளிடையே நீதியாக நடந்து கொள்ளுங்கள். (புகாரி)
நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்று அதற்கு (பதிலாக எதையாவது கொடுத்து) ஈடுசெய்து வந்தார்கள். (புகாரி)

"சிறுவர்களைத் தொழுமாறு கட்டளையிடுங்கள் அவர்கள் ஏழு வயதை எய்திவிட்டால். ஆனால் அவர்கள் பத்து வயதை எய்தியும் தொழுது வராவிடின் அதற்காக அவர்களை அடித்துத் தொழச் செய்யுங்கள்" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், திர்மிதீ)
நிச்சயமாக உங்களுடைய பொருட்களும், உங்களுடைய மக்களும் (உங்களுக்குச்) சோதனையாடிருக்கும் என்பதையும் நிச்சயமாக அல்லாஹ் - அவனிடத்தில்தான் மகத்தான (நற்) கூலி இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (குர்ஆன் 8:28)


வானங்களில் உள்ளவை, பூமியில் உள்ளவை அனைத்தையும் தன் புறத்திலிருந்து உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற கூட்டத்தாருக்கு உறுதியான பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (குர்ஆன் 45:13)
முஃமின்களே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்வீர்களானால், உங்களுக்கு (நன்மை-தீமையைப்) பகுத்தறியும் தன்மையை அவன் அளித்து, உங்களுடைய தீமைகளை உங்களை விட்டும் அகற்றி, இன்னும் உங்க(ளுடைய பாவங்க)ளை மன்னிப்பான் (ஏனெனில்) அல்லாஹ் மகத்தான கருணை உடையவன். (குர்ஆன் 8:29)


நிச்சயமாக மனிதன் அவசரக் காரனாகப் படைக்கப்பட்டுள்ளான். ஒரு தீங்கு அவனைத் தொட்டுவிட்டால் பதறுகிறவனாகவும் உள்ளான். (குர்ஆன் 70:19,20)

நிச்சயமாக எவர்கள் அநியாயமாக அநாதைகளின் பொருட்களைத் தின்கிறார்களோ அவர்கள் தங்களின் வயிறுகளில் நெருப்பையே தின்(று நிரப்பு)கிறார்கள்; பின்னர் அவர்கள் கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பில்தான் நுழைவார்கள். (குர்ஆன் 4:10)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி தேடுங்கள்; நிச்சயமாக அ(த் தொழுகையான)து உள்ளச்சம் உள்ளவர்க்கேயன்றி (மற்றவருக்குப்) பெரும் பாரமாகவே இருக்கும். (குர்ஆன் 2:45)



(முஃமின்களே!) ஓரளவு பயத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் (விளைச்சல்கள்) ஆகியவற்றின் நஷ்டத்தாலும் திண்ணமாக நாம் உங்களைச் சோதிப்போம்; (நபியே! இச்சோதனைகளில்) பொறுமையாளர்களுக்கு (சுவனத்தைக் கொண்டு) நீர் நன்மாராயங் கூறுவீராக! (குர்ஆன் 2:155)

உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் நேரமெல்லாம் தொழுகையிலேயே அவர் இருக்கிறார். மேலும் அவர் தொழுகை முடிந்து எழாதிருக்கும் வரை அல்லது அவரது உளு முறியாமலிருக்கும்வரை, வானவர்கள், "இறைவா! இவரை மன்னித்து இவருக்குக் கருணை புரிவாயாக!" என்று பிரார்த்தனை செய்கின்றார்கள். (புகாரி)
அல்லாஹ் தான் நாடியவருக்கு உணவை (சம்பத்தை) விரிவாக்குகிறான்; தான் நாடியவருக்கு (அதனைச்) சுருக்குகிறான்; உலக வாழ்வைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். உலக வாழ்க்கையோ மறுமைக்கு (ஒப்பிடும் போது, அதன்) முன்னே, அற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (குர்ஆன் 13:26)


உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னமே உங்களுடைய ரப்பின்பால் நீங்கள் திரும்பிவிடுங்கள்; அவனுக்கு நீங்கள் முற்றிலும் பணிந்து விடுங்கள்; (வேதனை வந்தால்) பிறகு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (குர்ஆன் 39:54)

தொழுகையை விடுவது மனிதனைக் குஃப்ரில் சேர்த்து விடுகிறது. தொழுகையை விடுவதே மனிதனையும் குஃப்ரையும் ஒன்று சேர்க்கிறது. தொழுகை ஈமானையும் குஃப்ரையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. (தர்ஃகீப்)

"மனிதருக்கும் இணைவைப்பதற்கும் இடையில் தொழுகையைக் கைவிடுவதுதான் பிரித்தறிவிப்பது ஆகும்" என்று, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினர். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ)Post a Comment