Thursday, April 7, 2011

உறங்குவதன் ஒழுக்கம் & தாய் தந்தை பேணல்:-

உறங்குவதன் ஒழுக்கம்

நீ படுக்கைக்கு சென்றால் தொழுகைக்கு உளூச்செய்வது போல் உளூச்செய்து கொள் பிறகு வலது புறமாகப் படுத்துக்கொள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: பராஉ பின் ஆஸிப் (ரழி) ஆதாரம்: புஹாரி-247முஸ்லிம்-2710)


தாய் தந்தை பேணல்
ஒரு மனிதர் செய்யும் நன்மைகளில் மிகச் சிறந்த நன்மைதம் தந்தை மரணித்த பிறகு தந்தைக்கு விருப்பமானவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வதாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
இப்னு உமர்(ரலி) : முஸ்லிம்திர்மிதீஅபூதாவூத்

தந்தையின் திருப்தியில் இறைவனின் திருப்தி உள்ளது. தந்தையின் அதிருப்தியில் இறைவனின் அதிருப்தி உள்ளதுஎன்று நபி(ஸல்) கூறினார்கள்.

ஒருவன் தனது தந்தையை அடிமையாகக் கண்டு அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்தால் தவிர (வேறு எதன் மூலமும்) தந்தையின் கடமை மகன் தீர்க்க முடியாது என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அபூஹீரைரா(ரலி) : முஸ்லிம்அபூதாவூத்திர்மிதீ

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் போரில் பங்கெடுக்க விரும்புகிறேன். (அது பற்றி) உங்கள் ஆலோசனையைக் கேட்க வந்துள்ளேன் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உனக்குத் தாய் இருக்கிறாராஎன்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அதற்கு நபி(ஸல்)அவர்கள்அவரைப் பற்றிக் கொள்ஏனெனில் சுவர்க்கம் அவரது காலடியில் உள்ளது என்று கூறினார்கள்.
முஆவியா பின் ஜாஹிமா(ரலி) : நஸயீஅஹ்மத்ஹாகிம்.

நபி(ஸல்) காலத்தில் என் தாயார் இஸ்லாத்தை ஏற்காத நிலையில் என்னை நாடி வந்தார். என் தாய் என்னிடம் (எதிர் பார்த்து) ஆர்வத்துடன் வந்துள்ளார்அவரைச் சேர்த்துக் கொள்ளலாமாஎன்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன்அதற்கு நபி(ஸல்) அவர்கள் உன் தாயாரைச் சேர்த்துக் கொள்என்றனர்.
அஸ்மா பின் அபீபக்கர்(ரலி) : புகாரிமுஸ்லிம்அபூதாவூத்.

No comments: