ஜி-மெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, ரகசியஎண் போன்ற விவரங்களை கேட்டு வரும் செய்திகளுக்கு பதில் அனுப்பவேண்டாம் என, கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் ஜி-மெயில் பயன்படுத்தும்வாடிக்கையாளர்களுக்கு, சில தினங்களுக்கு முன் கூகுள் நிறுவனத்தின்பெயரில் அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில்கூறப்பட்டிருந்ததாவது: பாதுகாப்பு காரணங்களுக்காக,வாடிக்கையாளர்கள் தங்களது பெயர், வங்கி கணக்கு ரகசிய எண்,வேலை, எந்த நாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கடிதத்தில்கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் பூர்த்தி செய்து உடனடியாக பதில் அனுப்பவேண்டும். கடிதம் கிடைத்து ஏழு நாட்களுக்குள் மறுபதிவு செய்யாவிட்டால் ஜி-மெயில் கணக்கு நிரந்தரமாக காலாவதி ஆகிவிடும்.இவ்வாறு குறிப்பிட்டிருந்த கடிதத்தைப் பார்த்த வாடிக்கையாளர்கள்,குழம்பினர். சில நாட்களுக்குப் பின்னரே, இக்கடிதம் போலியானது எனதெரிந்தது.
இதுகுறித்து, கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர்கூறியதாவது: கூகுள் நிறுவனம் சார்பில், அது போன்ற கடிதம் எதுவும்அனுப்பப்படவில்லை. சில விஷமிகள் மோசடி செய்யும் எண்ணத்தில்,கூகுள் நிறுவன பெயரில் தவறான கடிதத்தை அனுப்பியுள்ளனர்.வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்கள், ரகசிய எண்ஆகியவற்றை தெரிந்து கொண்டு, பண மோசடிகளில் ஈடுபடும்எண்ணத்துடன் அவர்கள், ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு கடிதம்அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதுபோன்று தனிப்பட்ட விவரங்கள்கேட்டு, நாங்கள் ஒருபோதும் கடிதம் அனுப்புவது கிடையாது. தனிப்பட்டவிவரங்கள் கேட்டு வரும் கடிதங்களுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என,வாடிக்கையாளர்களை அவ்வப்போது நாங்கள் எச்சரித்து வருகிறோம்.இதுபோன்ற கடிதங்களை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம்.
கடிதங்கள் குறித்து சந்தேகம் எழுந்தால், http://mail. google.com/ support/bin/ answer என்ற முகவரியில் வெளியிடப்பட்டிருக்கும்தகவல்களை கொண்டு, போலியான கடிதங்களை தெரிந்து கொள்ளலாம்.இன்டர்நெட் பயன்படுத்துவோர், இதுபோன்று வரும் மோசடி கடிதங்களைவிசாரணை மையங்கள் உதவியுடன் அறிந்துகொண்டு செயல்படுவதுஅவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.
இரண்டாவது செய்தி
:ஆன்-லைன் மூலம் மற்றவர் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுத்துமோசடியில் ஈடுபட்ட மும்பையைச் சேர்ந்த இருவரை, சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம், ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் சரவணன்;இன்ஜினியர். இவர், கடந்தாண்டு ஆகஸ்டில் சி.பி.சி.ஐ.டி., கூடுதல்டி.ஜி.பி., அர்ச்சனா ராமசுந்தரத்தை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார்.அதில், தன் சேமிப்பு வங்கிக் கணக்கில் இருந்து, ஆன்-லைன் மூலம் 75ஆயிரத்து 510 ரூபாயை வேறு ஒரு வங்கிக் கணக்கிற்கு யாரோமாற்றியுள்ளனர்.அத்துடன், மோசடியில் ஈடுபட்டவர்கள் வங்கியில்இருந்து தனக்கு அனுப்பியது போன்று பொய்யான இ-மெயில் அனுப்பி,அடையாள எண், பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்களை பெற்று மோசடிசெய்துள்ளனர்.
இந்த பணம் ஆன்-லைன் மூலம் மற்றொருவர் ரகசியங்களைதிருடுபவர்களின் (ஹேக்கர்ஸ்) கையாட்களின் ("மணி மியூல்ஸ்'என்றழைக்கப்படுகின்றனர்) வங்கிக் கணக்கிற்குமாற்றப்பட்டுள்ளது.இவர்கள் பெரும்பாலும் டில்லி மற்றும் மும்பையைச்சேர்ந்தவர்கள் என்று புகாரில் கூறியிருந்தார். இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி.,சைபர் கிரைம் பிரிவில், வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்துவந்தது.இது தொடர்பாக, மும்பையைச் சேர்ந்த இஸ்மாயில்அன்சாரியின் மகன் இப்ராகிம் அன்சாரி (25) என்பவரை சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கைது செய்தனர். இவர், பண மோசடிக்காக மற்றொருவரின்கையாளாக செயல்பட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
மும்பை போலீசாரின் உதவியுடன், 25 ஆயிரம் ரூபாயும் பறிமுதல்செய்யப்பட்டது.இதே போன்று கடந்தாண்டு நவம்பரில் திருச்சியைச்சேர்ந்த தொழிலதிபர் சலாகுதீன், தன் வங்கிக் கணக்கில் இருந்துஆன்-லைன் மூலம் 26 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை வேறுகணக்குகளுக்கு பரிமாற்றம் செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி., கூடுதல்டி.ஜி.பி.,யிடம் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் சைபர் கிரைம்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
HS.
No comments:
Post a Comment