Wednesday, August 17, 2011

நாடில்லாத நாடோடிகள்.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

{43} أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَكَانُوا أَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَمَا كَانَ اللَّهُ لِيُعْجِزَهُ مِن شَيْءٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ إِنَّهُ كَانَ عَلِيمًا قَدِيرًا

அவர்கள் பூமியில் பயணம் செய்து தமக்கு முன் சென்றோரின் முடிவு எவ்வாறு அமைந்தது என்று பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களை விட கடும் வரிமை பெற்று இருந்தனர். வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வை எதுவும் வெற்றி கொள்ள முடியாது. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஆற்றலுடையவனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 35:44.



நாடில்லாத நாடோடிகள்.

நாடில்லாத நாடோடிகள் (யூதர்கள்) ராஜ்யம் இல்லாத ராஜாவிடம் (நெதன் யாஹூவிடம்) சமூக நீதி கேட்டு போராட்டத்தில் குதித்துள்ளனராம்.

சிறு சிறுக் கூட்டமாகக் கூடிய இந்த நாடோடிகளின் கூட்டம் இன்று மூன்று லட்சமாக அதிகரித்து டெல்அவிவை ஸ்தம்பிக்கச் செய்துள்ளனராம்.

இதுப் போதாதென்று இன்னும் மக்களை திரட்டும் பணியில் தெரு தெருவாகவும், ஊர் ஊராகவும், இன்டர்நெட்டிலும் அழைப்பு விடுத்து வருவதாகவும் ஊடகச் செய்திக் கூறுகிறது.

இஸ்ரேலில் போராட்டம் என்றதும் அதை அப்படியே வெளியிடக் கூட மனமில்லாத பாஷிச சிந்தனைக் கொண்ட பல ஊடகங்கள் ஏதோ ஒரு சில நூறு பேர் கூடியது போல் செய்திகள் வெளியிட்டன.

காரணம் பாலஸ்தீனம் என்றால் அது போராட்ட பூமி என்றும் பாலஸ்தீனர்கள் என்றால் அவர்கள் தீவிரவாதிகள் என்றும் இஸ்ரேலை அமைதிப் பூங்காவாகவும், யூதர்களை அறவழிப் போராளிகளாகவும் சித்தரித்து எழுதிப் பழகிய பாஷிச ஊடகங்களால் யூதர்களின் இந்த ஆட்சிக்கெதிரான கலவரத்தை, நிர்வாகத்தை சீர் குலைக்கும் விதமாக மக்களைத் தூண்டும் கலகத்தை முழுமையாக எழுத மனமில்லை. முழுமையாக அறிய கீழ்காணும் வீடியோவைக் காணவும். http://www.youtube.com/watch?v=EdiHr9NycgE&feature=player_embedded

சமூகநீதி என்றால் என்னவென்று முதலில் இந்த நாடோடிகள் தெரிந்துகொண்டு அதன் பிறகு நெதன் யாஹூவிற்கு தெரியப்படுத்தி விட்டு இந்தப் போராட்டத்தை நடத்தினால் அவர்களுக்கு ஒரு வேளை தீர்வு கிடைக்கலாம்.


அல்லது நாடில்லாத இந்த நாடோடிகளை பாலஸ்தீன புனித பூமிக்குள் நயவஞ்சகத் தனமாக உள் நுழைத்த ஐரோப்பா
, அமெரிக்காப் போன்ற நாடுகளில் வசிக்கும் யூதர்கள் நெதன் யாஹூவிடமிருந்து சமூக நீதி பெற்றுத் தர வலியுருத்தி அங்கே போராட்டங்களை நடத்தினால் ஓரளவு தீர்வு கிடைக்கலாம்.


சுகாதாரம், குழந்தைகள் நலம், கல்வி, வரிவிதிப்பு போன்றவைகள் கடுமையான பாதிப்பை எற்படுத்தி உள்ளதாக பதாதைகளை சுமந்து கொண்டு போராட்டத்தில் குதித்து உள்ளனர். 

ஆனால் வாரத்தில் ஒருமுறை மறக்காமல் நாட்டின் பொருளாதார நிலமைக் குறித்து அமைச்சரவை உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து மக்களின் சிரமம் குறைப்பதற்கான நடிவடிக்கைகளை எடுத்து வந்ததாகவும் அவ்வாறிருந்தும் இந்த கிளர்ச்சி எங்கிருந்து வெடித்தது என்றுத் தெரியாமல் நெதன் யாஹூ மண்டையைப் பிடித்து நைத்துக் கொண்டிருப்பதாக யூதர்களின் ஆதரவு ஊடகங்கள் புலம்புகின்றன.

துனிஷியா, ஏமன், எகிப்து, லிபியா, சிரியா போன்ற நாடுகளில் கலவரத்தை தூண்டி விட்டு அதை  அனைய விடாமல் ஊதிக் கொண்டிருந்த சிஐஏ இந்த யூதர்களின் கலகத்தை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் விழிப் பிதுங்கி நிற்கின்றனராம்.

சுகாதாரம், குழந்தைகள் நலம் ஓர் ஃப்ளாஷ்பேக்...
  
இன்று இஸ்ரேலின் சுகாதாரம் கெட்டு விட்டதாக யூதர்கள் கூக்குரலிடுகின்றனர் இவர்கள் என்று பாலஸ்தீனத்தை ஆக்ரமித்தார்களோ அன்று முதல் இன்று வரை பலஸ்தீனத்தின் சுகாதாரம் சீர் கெட்டிருப்பதை இவர்கள் அறியவில்லையா ?

காஸாவின் குடிநீர் 95 சதவிகிதம் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என்றும் காஸாவில் ஏற்படும் நோயில் 45 சதவிகிதம் குடி நீரினால் உருவாகிறது என்றும் 50 சதவிகித மக்கள் பிழைப்பின்றியும், 80 சதவிகித மக்கள் உலக நாடுகளின் உதவியை எதிர்பார்த்தும் வாழ்வதாக ஐ.நாவின் செய்தி தொடர்பாளர் கிர்ஸ் குன்னஸ் 2006ல் தெரிவித்திருந்தது இவர்களுக்கு நிணைவில்லையா ?

80 சதவிகித மக்கள் உண்ணுவதற்கே உலக உதவியை எதிர்பார்த்திருக்கையில் குடி நீரை எங்கிருந்து அவர்களால் சுத்திகரிப்பு செய்து உயயோகப் படுத்த முடியும் ?   

குழந்தைகள் நலம், கல்வி, வரி விதிப்பு, குடியிருப்புப் போன்றவைகளின் செலவினம் கூடி விட்டதாக மேல்படி நாடோடிகள் கூட்டம் குமுறுகிறது.

ஆனால் அவைகள் அரை நூற்றாண்டாக அறவே மறுக்கப்பட்டு தடுக்கப்பட்டு வரும் மண்ணின் மைந்தர்களின் நிலையை இவர்கள் என்றாவது நினைத்துப் பார்த்ததுண்டா ? ஒடுக்கப்பட்ட அந்த மக்களுக்காக இவர்கள் என்றாவது குரல் கொடுத்ததுண்டா ?   

கடந்த 2006ல் பாலஸ்தீனத்தில் ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடைபெற்று அதில் ஹமாஸ் இயக்கம் வெற்றிப் பெற்றதை அறிந்ததும் அதிர்ச்சியால் உறைந்துப் போன ஆக்ரமிப்பாளர்கள் ஹமாஸை செயலிழக்கச் செய்வதற்காக 2006 பிப்ரவரியில் அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் காஸாவை முற்றுகையிட்டு உணவுப் பொருட்கள் முதல் அத்தியவாசியப் பொருட்கள் செல்லும் அனைத்து வழிகளையும் இரும்புக் கரம் கொண்டு அடைத்தனர்.  அப்பாவி மக்கள் உணவில்லாமல், மருந்தில்லாமல் செத்து மடிவதைக் கண்டித்து Free Gaza Movement  உலகின் 50 நாடுகளிலிருந்து 800 பிரதிநிதிகள் கொண்ட 9 சுதந்திர கப்பல்களை (Freedom Flotilla) சைப்ரஸிலிருந்து அனுப்பியதை இஸ்ரேலிய காட்டுமிராண்டி கப்பல் படை கண்மூடித்தனமாக தாக்கி 6 கப்பல்களை சிதிலமடையச் செய்து 20க்கு மேற்ப்பட்ட நிவாரண உதவியாளர்களை சுட்டுக் கொன்றனர்.

இதைக் கண்டிக்க துப்பில்லாத ஹிலாரி கிளின்டன் இஸ்ரேலியர்களுக்கு தங்களை தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது என்றுக் கூறி வந்தேறிகளின் வரம்பு மீறலை ஊக்குவித்தார்.

இறைவன் நாடினால்...

நாடில்லாத நாடோடிகளான இவர்களின் பாலஸ்தீன ஆக்ரமிப்பிற்குப் பிறகு செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த பாலஸ்தீனர்களின் இந்த அரை நூற்றாண்டுத் துயரத்தை இன்று எம்மால் எழுத்தில் வடிக்க முடியாது, அழுதாலும் தீராது !

இந்தப் போராட்டம் வலுவடைந்து நெதன் யாஹீ நாட்டை விட்டு ஓடும் நிலை உருவானால் அவருக்குப் பின்னர் அனைத்து நாடோடிகளும் அபகரித்த பூமியை விட்டு வெளியேறும் நிலை இறைவன் நாடினால் நடக்கும். 

இஸ்ரேலை உலகில் சில நாடுகள் அங்கீகரிப்பதாக அறிவித்தாலும் அவைகளில் சில நாடுகள் வலிமை மிக்கதாக இருந்தாலும் அவைகளை விட வலிமை மிக்கவன் இறைவன் என்பதால் இறைவனிடம் இந்த புனித ரமளான் மாதத்தில் கையேந்தி விடுவோம் இறைவன் உதவிப் புரிவான் ஆக்ரமிப்பாளர்களின் வலிமையை நிலை குலையச் செய்து அவர்களின் சூழ்ச்சியை முணை மழுங்கச் செய்து அவர்களின் கோரப் படியிலிருந்து அவனது அடியார்களை மீட்டெடுப்பான் அதற்கான நேரத்தையும் இதுவரை எழுதியே இருப்பான் அதுவரை அழுத கண்களுடனும், ஏந்திய கைளுடனும் அவர்களின் துயர் துடைக்க மன்றாடுவோம். 

அவர்கள் பூமியில் பயணம் செய்து தமக்கு முன் சென்றோரின் முடிவு எவ்வாறு அமைந்தது என்று பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களை விட கடும் வரிமை பெற்று இருந்தனர். வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வை எதுவும் வெற்றி கொள்ள முடியாது. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஆற்றலுடையவனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 35:44.
மனிதர்களை அவர்கள் செய்தவற்றுக்காக அல்லாஹ் பிடிப்பதாக இருந்தால் பூமியின் மேல் எந்த உயிரினத்தையும் விட்டு வைத்திருக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளான். அவர்களின் அவகாசம் வரும் போது அல்லாஹ் தனது அடியார்களைப் பார்ப்பவனாக இருக்கிறான். திருக்குர்ஆன். 35:45.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104.

Hayas.

No comments: