ஏகஇறைவனின் திருப்பெயரால்....
كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ  لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ  بِاللّهِ...
நீங்கள், மனித  குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை  ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!... 3:110.
பெருகி வரும் குற்றச்செயல்களில் அதிகரித்து  வரும் நம்மவர்களின் பங்கு.
அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்....
சமீப காலமாக செய்தித் தாள்களைப்  புரட்டினால் இரத்தத்தை உறையச் செய்யும் கொடூர சம்பவங்கள் இடம் பெறாத நாட்களே இல்லை  எனும் அளவுக்கு நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் பெருகி வருவதைப் பார்த்து  வருகிறோம்.
இதில் வேதனை அளிக்கக் கூடிய விஷயம்  என்னவென்றால் ? மேல்படி குற்றச்செயல்களில்  முஸ்லீம்களும் ஈடுபட்டு வருவது தான்.   
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல், வழிப்பறி, விபச்சாரம் போன்ற கொடுஞ்செயல்களில்  நான்கு பேர் பிடிபட்டால் அதில் ஒன்று அல்லது இரண்டு பேர் முஸ்லீமாக இருப்பது  மிகப்பெரிய அவமானமாகவும், வேதனை அளிக்கக் கூடியதாகவும்  இருக்கிறது. 
கடந்த 29 ஜூலை தேதியிட்ட தினத்தந்தி இதழில்  திருமங்கலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபத்திய  6 பேர் கைது மதுரை, ராமநாதபுரம், காரைக்குடி முக்கிய பிரமுகர்களுக்கு  வலைவீச்சு என்ற தலைப்பிட்ட செய்தியில்  ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராமநாதபுரம் அதிமுக முன்னால் ஒன்றிய  செயலாளர் சீனிக்கட்டி மகன் ஷேக்,  ராமேஸ்வரம்  நகரசபை தலைவர் ஜலீல், ராமநாதபுரம் தொண்டு நிருவனத்தின்  பொறுப்பாளர் ரைசுதீன் உட்பட 14 பேர் மீது வழக்கு  பதியப்பட்டு அவர்களைப் பிடிக்க  மூன்று தனிப்படை நியமித்து  மாவட்ட போலீஸ் சூப்பிரன்ட் அணில்குமார் கிரி உத்தரவிட்டதாக செய்தி தொடருகிறது.  
ராமேஸ்வரம் நகரசபைத் தலைவர் ஜலீல்  இதற்கு முன்பொரு முறை தன்னிடம் குடும்ப வறுமைக்;காக கடன் கேட்டுச் சென்ற முஸ்லீம்  சகோதரிக்கு குளிர் பாணத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தானும் அப்பெண்ணை  சீரழித்து தன்னுடன் 6 முஸ்லீமல்லாதவர்களையும் சீரழிக்க  ஏற்பாடு செய்தவன் போதையில் இவர்கள் அப்பெண்ணை சிகரெட்டாலும் சூடு இட்டனர்.  
அவர்களின் பிடியிலிலுருந்து அப்பெண்  ஒருவாறாக தப்பிச் சென்று ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்  செய்து அவர்களை கம்பி எண்ணச் செய்தார். 
மேல்படி திருமங்கலத்தைச் சேர்ந்த  இளம்பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கைது செய்யப்பட்ட 6 பேரில் ரைசுதீன் என்ற  முகவைத்தமிழனும் ஒருவர் என்பது மற்றொரு அதிர்ச்சி தரும் தகவல்.  
சீனிக்கட்டி மகன் ஷேக், ராமேஸ்வரம் நகரசபை தலைவர் ஜலீல்  போன்றோர் எந்த ஒரு பொது நலப் பணிகளிலும் ஈடுபாடு இல்லாதவர்கள் இதையேப் பொழுது  போக்காகக் கொண்டவர்கள் என்பதால் செய்தி அறிந்து வேதனை மட்டும் அடைந்தோம்.  
ஆனால் ரைசுதீன் என்ற முகவைத் தமிழனோ  ஒரு தொண்டு நிறுவனத்தின் பொறுப்பாளர் என்பதுடன்  தமிழ்முஸ்லீம் அரசியல்மேடை  என்ற வலைதளத்தை உருவாக்கிக் கொண்டு தான் குற்றத்திற்கு அப்பாற்பட்ட மனிதன் போல்  பிறருக்கு காட்டிக்கொண்டு அரசியல்வாதிகள் மற்றும் ஆன்மீக பிரச்சாரகர்களை  கொச்சைப்படுத்தி எழுதி வந்தவர். 
இதில் முக்கியமாக மார்க்கத்தை  போதிக்கும் பணியையே முழுமூச்சாகக்கொண்டு செயல்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  தாஇகளின் மீது தன் மனம் போனப் போக்கில் அவதூறுகளை எழுதியவர். 
அந்த தாஇகளின் மீது எந்த அவதூறை  எழுதினாரோ அதற்கு முழுக்க முழுக்க இவரே தகுதியானவர் என்பதை அல்லாஹ் ரப்புல் ஆலமீன்  புனித ரமலான் மாதத்தில் வெளி உலகுக்கு காட்டி இவரை இழிவுப்  படுத்தினான். 
''அல்லாஹ்வே!  ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து  ஆட்சியைப் பறித்துக்கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு  படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும்  ஆற்றலுடையவன்''  என்று  கூறுவீராக! திருக்குர்ஆன். 3:26.
தொட்டில்  பழக்கம்
இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான்  இவர் சறுக்கி விட்டார் இதற்கு முன் இவர் மாசுமருவற்றத் தங்கம் என்று யாரும்  நினைத்திடக் கூடாது. அவருடைய வலைதளத்தைப் பார்த்தால் அப்படித் தான் தெரியும்  தம்மாமில் பணிபுரியும் காலத்தில் சவுதி அரசு மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் இளம்  வயது பெண் டாக்டர் ஒருவர் இவரிடம் தனது பழுதான லேப்டாப்பைக் கொடுத்து பழுது நீக்கி  கேட்டுள்ளார். 
பழுது நீக்கும்பொழுது பெண் டாக்டர்  மற்றொரு டாக்டருடன் இணைந்திருந்த அந்தரங்க காட்சிகளை கொத்தி எடுத்து வைத்துக்கொண்டு  அப்பெண் டாக்டரிடம் ப்ளாக்மெயில் செய்து பெரும் தொகையையும், ஒரு லேப்டாப்பையும் வாங்கிக்  கொண்டவர். இன்னும் வேறு எதையெல்லாம் வாங்கினார் என்பது தெரியாது. தெரிந்ததை மட்டும்  எழுதுகிறோம்.
தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என்பது  போல் அவரிடம் முன்பே குடிகொண்டிருந்த ப்ளாக்மெயில் பழக்கம் தமிழ்செலவி விஷயத்திலும்  தொடர்ந்துள்ளது. 
மேல்படி விபச்சாரத்தில் அப்பெண்ணை  ஈடுபடுத்திய புரோக்கர்கள் வரிசையில் இறுதியாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த பெண்  புரோக்கர் ஒருவர் அப்பெண்ணின் மீது இரக்கம் கொண்டு இத்தொழிலிலிருந்து விடுவிக்க  நினைத்து முகவைத்தமிழன் பொறுப்பு வகிக்கும் தொண்டு நிருவனத்தில்  ஒப்படைத்துள்ளார்.
அப்பெண்ணின் துயரத்தை கேட்டு விபச்சார  புரோக்கரின் கல்நெஞ்சு கரைந்தது,  ஆனால் தன்னை  நூற்றுக்கு நூறு அக்மார்க் என வெளிஉலகுக்கு காட்டி வந்த முகவைத் தமிழனுடைய நெஞ்சு  பணம் பறிக்கவும், சுகமனுபவிக்கவும் இறுகி  விட்டது.
முகவைத்தமிழன் ரைசுதீன் அப்பெண்ணிடம்  நடந்து கொண்ட அறுவருக்கத்தக்க நிகழ்வுகள் இவனை விட கடந்துசென்ற புரோக்கர்கள்  எவ்வளவோ தேவலாம் எனும் வெறுப்பை அப்பெண்ணுக்கு எற்படுத்தி இருக்கிறது.  
இயன்றவரை அப்பெண்ணை அனுபவித்ததுடன்  பழைய புரோக்கர்களிடம் ப்ளாக் மெயில் செய்து பணம் பறிக்க திட்டமிட்டார் என்றும் அந்த  பத்திரிகை செய்திக் கூறுகிறது.
கவிழ்த்து விட்ட  கள்ள மசூரா.
அனைத்து விபச்சார புரோக்கர்களையும்  வரவழைத்து இப்பெண்ணை போலீஸில்  ஒப்படைத்தால் நம் அனைவருக்கும் ஆபத்து என்பதால் இப்பெண்ணின் பெற்றோரிடம் ஒப்படைத்து  விடுவதே சிறந்தது என்ற ஆலோசனையைக் கூற அதற்கு அனைத்து புரோக்கர்களும் இணங்க  இறுதியாக அவரது தாயார் வரவழைக்கப்பட்டுள்ளார்.
தனது மகள் சீரழிக்கப்பட்ட செய்தி  அறிந்ததும் தாயார் கடும் கூச்சலிட புரோக்கர் கூட்டம் தப்பித்தோம் பிழைத்தோம் என  தறிகெட்டு ஓட, வேறு வழியின்றி விபச்சார  புரோக்கரிடமிருந்து மீட்டு வந்ததாக போலீஸிடம் முகவைத் தமிழன் புளுகி அப்பெண்ணை  ஒப்படைக்க அப்பெண்ணோ காமுகன் முகவைத் தமிழனுடைய நம்பிக்கை துரோகத்தைப் போட்டு  உடைக்க தான் பறித்தக் குழியில் தானே விழுந்தார் முகவைத்தமிழன்.மேலதிக விபரங்களை கீழ்காணும் லிங்கை  சொடுக்கி முழு தகவல்களைத் தெரிந்து கொள்ளவும். 
http://thatstamil.oneindia.in/news/2011/07/29/thirumangalam-sex-scam-6-persons-arrested-aid0091.html
நீங்களே சிறந்த  சமுதாயம்
முஸ்லீம் சமுதாயத்தை நோக்கி நீங்களே  சிறந்த சமுதாயமாக இருக்கிறிர்கள் என்று அல்லாஹ் கூறினான் அதற்கு காரணம் அதற்கடுத்த  வசனத்தில் அல்லாஹ்வை உறுதியாக நம்புகிறீர்கள், அதனால் நன்மைமய ஏவி தீமையைத்  தடுக்கும் அரும் பணிகளில் ஈடுபடுகிறீர்கள் என்று சிலாகித்துக்  கூறினான்.
நீங்கள், மனித  குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை  ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!... 3:110.
மேற்காணும் திருமறைக் குர்ஆனின்  வசனத்தை சிரமேற்கொண்டு அன்றைய முஸ்லீம்கள் தங்கள் வாழ்க்கை நெறியாக ஆக்கிக்  கொண்டார்கள். 
சொந்த வாழ்க்கையில் நன்மையை ஏவிக்  கொண்டு தீமையை தடுத்துக் கொண்டார்கள் அதனால் அவர்களின் நடைமுறைகளைப் பார்த்தே பிற  சமுதாய மக்கள் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். 
இன்றைய முஸ்லீம்களில் அதிகமானோர் உலக  ஆடம்பர வாழ்வில் மூழ்கியதால் அல்லாஹ்வை உறுதியாக நம்புவதிலிருந்து பின்வாங்கி  விட்டனர் அதனால் அவர்களின் மேற்காணும் செயல்முறையைப் பார்த்து பிற சமுதாயத்தவர்  வெருண்டோடுகின்றனர் தரக்குறைவாக இஸ்லாத்தை விமர்சனம் செய்கின்றனர்.
மேற்காணும் குற்றச்செயல்கள்  யாரிடமாவது இருக்குமானால் ரமலான் மாதத்திற்காக மட்டும் தள்ளி வைக்காமல் சீர்திருத்த  வந்த புனித ரமளான் மாதத்தில் அறவே விட்டொழிப்பதுடன் இனி வரும் காலங்களில் அவற்றில்  ஈடுபடுவதில்லை என்ற நிய்யத்தை வைத்துக் கொண்டு இதிலிருந்து என்னை தூரப்படுத்துவாயாக  ! இறைவா என்று கரங்களை உயர்த்தி விடுங்கள். 
திருந்தி, நம்பிக்கை  கொண்டு நல்லறங்கள் செய்தவரைத் தவிர. அவர்களது தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக  மாற்றுகிறான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற  அன்புடையோனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன். 25:70.
திருந்தி, நல்லறம்  செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார். திருக்குர்ஆன். 25:71.
அவர்கள் பொய்  சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து  விடுவார்கள். திருக்குர்ஆன். 25:72.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى  الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ  وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி  தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.  அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் . Hayas. 

No comments:
Post a Comment