Assalamu Alaikkum
Pages
இந்த தளத்தில் தேட ...
Monday, January 25, 2010
அபிராமம் முஸ்லீம் மேனிலைப்பள்ளி பவள விழா
அபிராமம் முஸ்லீம் மேனிலைப்பள்ளி பவள விழா (Dinamani)
கமுதி,ஜன.24: கமுதி அருகே அபிராமம் முஸ்லீம் மேனிலைப்பள்ளி பவள விழா மற்றும் புதிய கட்டடம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்வி பொறுப்புக் கழகத் தலைவர் ஓ.எம்.அகம்மது லத்தீப் தலைமை வகித்தார். உதவித் தலைவர் வி.எம்.முகம்மது முத்து அபுபக்கர், பொருளாளர் பி.எம்.முகம்மது அலி, நிர்வாக் குழு உறுப்பினர்கள் ஏ.நத்தர் முகைதீன், எஸ்.ஏ.அப்துல் ரசீத், பி.செயயது சம்சுக்கனி, எஸ்.எம்.இக்பால் அகம்மது, என்.அபுபக்கர் ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்விப் பொறுப்புக் கழகச் செயலர் எஸ்.ஏ.செயóயது இப்ராகிம் வரவேற்றார். பவள விழா நினைவு கட்டடத்தை தமிழக வணிக வரித்துறை அமைச்சர் எஸ்.எல்.எம்.உபையத்துல்லாவும், வகுப்பறைகள் புதிய கட்டடத்தை கே.முருகவேல் எம்.எல்.ஏ.வும் திறந்துவைத்துப் பேசினர். விழா மலரை ஜே.கே.ரித்தீஷ் எம்.பி. வெளியிட, மலரை வி.எம்.அப்துல்கரம் பெற்றுக்கொண்டார்.
விழாவில் கமுதி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பி.கே.கிருஷ்ணன், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் என்.சக்திமோகன், ராமநாதபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பி.பூலோக சுந்தர விஜயன், உலக பன்னாட்டு தமிழ் உறவு மன்ற அமைப்பாளர் கவிக்கோ வா.மு.சேதுராமன், இஸ்லாமியக் கழகப் பொதுச்செயலர் எஸ்.எம்.இதயத்துல்லா, முதுகுளத்தூர் ரகுமானியா தொழிற்பயிற்யி நிறுவன தாளாளர், டாக்டர் எஸ்.அப்துல்காதர், கமுதி வி.எல்.ஏ. பட்டேல் கல்விச் சங்கத் தலைவர் எஸ்.எல்.முஸ்தபா உள்பட பலர் பேசினர்.
விழாவில் அபிராமம் பேரூராட்சித் தலைவர் பி.கணேஷ்குமார், முன்னாள் தலைவர் வனிதா கந்தன், செயல் அலுலர் நெடுஞ்செழியன், கமுதி வட்டாட்சியர் ஆறுமுகம் நயினார், கமுதி பேரூராட்சித் தலைவர் எம்.எம்.அம்பலம், மற்றும் அபி
ராமம், நத்தம் உள்ளிட்ட முஸ்லீம் ஜமாத்தார்கள், பிரமுகர்கள், ஆசிரியர்,
ஆசிரியைகள், மாணவ,மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தலைமையாசிரியர் எஸ்.பசீர் அகம்மது நன்றி கூறினார்.
ABIRAMAM MAINTHAN.
அபிராமம் முஸ்லீம் மேனிலைப்பள்ளிபற்றிய சுருக்கமான வரலாறு :
அபிராமம் , நத்தம் - ஊர்வாழ் மக்களைக் கொண்டு ரங்கூனில் "முஸ்லிம் வித்தியா தர்ம பரிபாலன சபை" ஆரம்பித்து அதன் ஆயுட்காலத் தலைவராக இருந்து தனது ௮ ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்து தன்னுடைய பெரும் நிதி உதவியாலும், அபிராமம், நத்தம் ஊர்களின் பெருந்தனம் படைத்த வணிகர்கள் அளித்த பெரும் நிதியாலும் அபிரமமத்தில் இந்த பள்ளி ' H ' வடிவ கட்டிடம் கட்டப்பட்டு 1934 ஆம் ஆண்டு உயர்நிலைக் கல்வி பயிலும் பள்ளியாக உருவாக காரணமாக இருந்தவர்.
"முஸ்லிம் வித்தியா தர்ம பரிபாலன சபை" ஆல் இப்பள்ளி கட்டுவதற்கு நாடியபொழுது அப்பொழுதைய நிவாகியான இவர் 7 வருடம் இந்த பள்ளிக் கட்டிடதிர்க்காக தன்னுடைய உடல் உழைப்பை அர்பணித்தவர்.
"முஸ்லிம் வித்தியா தர்ம பரிபாலன சபை" ஆல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளி ஒரு தருணத்தில் வழிநடத்த பொருளாதார வசதியற்று தத்தளித்த பொழுது பேருதவி செய்தவர்.
அபிராமம் , நத்தம் மக்களின் கல்வி வளர்ச்சிக்கென கான்பஹதூர் ஜனாப். V.M. அப்துல் ரஹ்மான் அம்பலம் அவர்களின் தலைமையின் கீழ் அப்பொழுது பர்மாவில் வாணிபம் செய்து வந்த அபிராமம், நத்தம் முஸ்லிம் பெரியோர்களின் முயற்சியால் அபிரமத்தில் 23.06.1924 -யில் முஸ்லிம் செகண்டரி ஸ்கூல் என்ற பெயரில் உயர் தொடக்கப்பள்ளி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதற்கென ஒரு பெரும் நிதி திரட்டி 03.03.1928 யில் ரங்கூன் நகரில் அபிராமம் முஸ்லிம் வித்தியா தர்ம பரிபாலன சபை என்ற பெயரில் 1860 ஆம் வருடத்து சங்க Registration 21 வது ஆக்டுப்படி பதிவு செய்யப்பட்டது. இச்சபைக்கு ஜனாப். V.M. அப்துல் ரஹ்மான் அம்பலம் அவர்கள் முதல் ஆயுட்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சபையினரின் முயற்சியால் 01 .02 .1934 ஆம் ஆண்டு முதல் இது உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.
கான்பஹதூர் ஜனாப். V.M. அப்துல் ரஹ்மான் அம்பலம் அவர்களின் பெரும் நிதி உதவியாலும், அபிராமம், நத்தம் ஊர்களின் பெருந்தனம் படைத்த முஸ்லிம் பெரியோர்களின் தாராளமான பெரும் நிதியாலும் அபிரமமத்தில் இந்த பள்ளி ' H ' வடிவ கட்டிடம் 8 ஏக்கர் நிலப்பரப்பளவில் கட்டப்பட்டு 1934 ஆம் ஆண்டு உயர்நிலைக் கல்வி பயிலும் பள்ளியாக உயர்த்தப்பட்ட நம் பள்ளி , "முஸ்லிம் உயர் நிலைப் பள்ளி" என்ற பெயருடன் இக்கட்டிடதிலேயே 01 .02 .1934 ஆம் ஆண்டு முதல் இயங்க ஆரம்பித்து நம் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு கான்பஹதூர் ஜனாப். விஜயன். அப்துல் ரஹ்மான் அம்பலம் 8 ஏக்கர் நஞ்சை நிலம் நம் பள்ளிக்கு இலவசமாக கொடுத்து உதவினார்கள்.
அபிரை.மைந்தன்.
Thursday, January 21, 2010
மலேசியா உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு விசித்திரமான வழக்கு வந்தது. கிறிஸ்தவர்களும் "அல்லாஹ்" என்ற சொல்லை பாவிக்கலாமா? என்பதே அந்த வழக்கு. மலேசியாவில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தவர்கள் "அல்லாஹ்" என்ற சொல்லை பாவிக்க தடை இருந்தது. மலே கத்தோலிக்கர்களின் பத்திரிகையான "ஹெரால்ட்", அந்த தடையை மீறியிருந்தது. குறிப்பாக மலே மொழி பேசும் கிறிஸ்தவ சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப் படுத்திய அந்தப் பத்திரிகை நீதிமன்றுக்கு இழுக்கப்பட்டது.
வாதங்களை விசாரித்த நீதிபதி, அல்லாஹ் என்ற வார்த்தையை கிறிஸ்தவர்களும் பயன்படுத்தலாம் என தீர்ப்பளித்தார். இஸ்லாமிய மத அடிப்படைவாதக் குழுக்கள், தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மறுத்தன. "அல்லாஹ் முஸ்லிம்களுக்கே மட்டுமே சொந்தம்." என உரிமை கொண்டாடின. கோலாலம்பூர் நகரில் சில கிறிஸ்தவ தேவாலயங்கள் எரிக்கப்பட்டன. தேவாலயங்கள் மீதான வன்முறையை எதிர்ப்பதாக கூறிய மலேசிய பிரதமர், "அல்லாஹ் மீதான தடையை" ஆதரித்து பேசினார்.
அல்லாஹ் என்பது முஸ்லிம்களின் கடவுளை (மட்டும்) குறிக்கும் என்று தான், பிற மதத்தவர்கள் அப்பாவித்தனமாக நம்புகின்றார்கள். சில முஸ்லிம் பாமரர்களும், மத அடிப்படைவாதிகளும் அல்லாஹ் என்ற வார்த்தையை ஒரு முஸ்லிம் மட்டுமே உச்சரிக்க முடியும் என வாதிடுகின்றனர். இது ஒரு வகையில் "இறைவனைத் தவிர வேறெந்த இறைவனும் இல்லை" என்ற திருக் குர் ஆனின் அடிப்படைக்கு முரணானது. "இறைவன் ஒருவனே" எனில், அது உலகமாந்தர் அனைவருக்கும் பொதுவான இறைவனையே சுட்டி நிற்கும். அது போலத்தான், "அஸ்ஸலாமு அழைக்கும்" (உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக) என்ற அரபு சொற் தொடரையும் முஸ்லிம்கள் மட்டுமே கூற வேண்டும் என அடம் பிடிப்பவர்களைக் காணலாம்.
இஸ்லாமிய மதம் அரபு மொழியை அடிப்படையாகக் கொண்டது. திருக்குர்-ஆன் அரபு மொழியில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது. (மொழிபெயர்ப்புகள் இருந்த போதிலும், இஸ்லாமிய மாணவர்கள் மூல மொழியிலான அரபிலேயே படிக்கின்றனர்.) இஸ்லாமியப் படையெடுப்புகள் ஈராக் வரையிலான மக்களை அரபு மொழி பேசுவோராக மாற்றின. இருப்பினும் ஈரானுக்கு அப்பால், அரபு மொழி மத அனுஷ்டானங்களுடன் மட்டும் நின்று விட்டது. சாதாரண மக்களின் பேச்சு மொழியாக மாறவில்லை. இருப்பினும் முஸ்லீமாக மக்கள், சில அரபுச் சொற்களை தமது பெயர்களிலும், அன்றாட பேச்சு வழக்கிலும் சேர்த்துக் கொண்டனர். அவ்வாறு தான், அல்லாஹ் என்ற அரபுச் சொல், முஸ்லிம்களின் கடவுளைக் குறிக்கும் என்ற தப்பபிப்பிராயம் தோன்றலாயிற்று.
தமிழர்கள் "கடவுள், இறைவன், ஆண்டவன்" என்று சொன்னார்கள். சமஸ்கிருதக்காரர்கள் "பகவான்" என்றார்கள். ஆங்கிலேயர்கள் "God " என்றார்கள். பிரெஞ்சுக்காரர்கள் "Dieu " என்றார்கள். அவ்வாறே அரபு மொழி பேசுவோர் "அல்லாஹ்" என்றார்கள். அரபு மொழியில் "இலாஹ்" என்ற பெயர்ச் சொல்லுடன், அல் என்ற விகுதி சேர்ந்து அல்லாஹ் என்றானது. அது இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்பிருந்தே பாவனையில் இருந்துள்ளது. அரேபியாவில் வாழ்ந்த மக்கள், வேறெந்த பெயரில் கடவுளை அழைத்திருப்பார்கள்? ஒரு வேளை அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால்?
சவூதி அரேபியாவில், ஜுபைல் நகருக்கு கிழக்கே உள்ள பாலைவனத்தில், உலகிலேயே மிகப் பழமையான கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. அனேகமாக கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அரேபிய கிறிஸ்தவர்கள் வழிபட்ட ஸ்தலமாக இருக்கலாம். இன்று அந்த இடத்திற்கு எந்த ஆராய்ச்சியாளரும் செல்லாதபடி, சுற்றி வர வேலியிடப்பட்டுள்ளது. (சவூதி) அரேபிய மக்கள் ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களாக இருந்த உண்மையை, இன்றைய ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை, அரேபிய மக்கள் பல தெய்வ வழிபாட்டில் இருந்து விலகி இஸ்லாமைத் தழுவியவர்கள். மெக்காவிலும், வேறு பல அரேபிய பிரதேசங்களிலும் பல தெய்வ வழிபாடு நிலவியது உண்மை தான். இருப்பினும் அயல் நாடுகளில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததற்கான சரித்திர சான்றுகள் உள்ளன. இன்றைய சிரியா, ஜோர்டான், யேமன், ஓமான் நாட்டு மக்களின் முன்னோர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள்.
அந்த நாடுகளின் மக்கள் ஏதோ ஒரு வகை அரபு மொழியை பேசியவர்கள். அதை வட்டார வழக்கு மொழி எனலாம், அல்லது அரபு போலத் தோன்றும் இன்னொரு மொழி எனலாம். இறைதூதர் முகமது நபிகள் தலைமை தாங்கிய இஸ்லாமியப் படைகளின் வெற்றிக்கு அந்த மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தது. இதற்கு மொழி ஒற்றுமை ஒரு காரணியாக இருந்திருக்கலாம். அதுவே பின்னர் அந்தப் பிரதேச மக்கள் அனைவரும் இஸ்லாமியராக மாற ஊக்குவித்திருக்கலாம். ஒரு முக்கிய காரணம் மட்டும் இஸ்லாமியரின் வரலாற்று நூலில் பதியப் பட்டுள்ளது. முஸ்லிம்கள் அல்லாதோர் அதிக வரி செலுத்த வேண்டியிருந்தது. இந்த வரிச் சுமை காரணமாகவே பலர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர். அந்த வரி அறவிடும் முறை இன்றும் மலேசியாவில் பின்பற்றப் படுகின்றது. மலேசியாவில் கிறிஸ்தவர்களும், இந்துக்களும், பௌத்தர்களும் பிரத்தியேக வரி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிற மதத்தவர் கட்டும் வரியைக் கொண்டு, ஏழை மலே முஸ்லிம்களிற்கு சலுகை செய்து கொடுக்கப்படுகின்றது.
பண்டைக் கால அரபு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மீது அதிக வரி செலுத்திய போதிலும், அவர்களை கட்டாயமாக மதமாற்றம் செய்யவில்லை. கிறிஸ்தவர்கள் தமது மத வழிபாட்டை இடையூறின்றி தொடர முடிந்தது. அதனால் தான் இன்றைக்கும் ஈராக், லெபனான், எகிப்து ஆகிய நாடுகளில் கணிசமான அளவு கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். அந்த நாடுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அரபு தான் தாய்மொழி. அவர்கள் தாம் கடவுளாக வணங்கும் இயேசுவை எப்படி அழைப்பார்கள்? "அல்லாஹ்" என்றழைக்காமல் வேறு எப்படி அழைப்பது? இத்தாலிக்கு தெற்கே இருக்கும் சிறிய தீவு, மால்ட்டா. அந்த தேசத்து மக்கள் மால்ட்டீஸ் மொழி பேசும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். அவர்கள் தமது பாஷையில் கடவுளை "அல்லா" என்று அழைக்கிறார்கள்.அதற்கு காரணம், மால்ட்டா தேச மக்களின் மூதாதையர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அரபு நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள். மால்ட்டீஸ் மொழி கிட்டத்தட்ட அரபு மொழி போன்றிருக்கும்.
மலேசியாவில் இன்று அல்லாஹ் என்ற வார்த்தையை வைத்து எழுந்துள்ள சச்சரவு மொழி சார்ந்ததல்ல. அது இனப் பிரச்சினையின் இன்னொரு பரிமாணம். மலேசியாவில் 60 வீதமான மக்கள் மலே மொழி பேசுவோர். (முஸ்லிம்கள்) ஆட்சி அதிகாரம் அவர்கள் கைகளில் தான் உள்ளது. மீதி 40 வீதமான மக்கள், சீனர்கள், இந்தியர்கள், மற்றும் பழங்குடியினர். அவர்களில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மதங்களை பின்பற்றுவோர் அதிகம். இந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மலேசிய அரசை கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. அரசுப் பணிகளில் இருந்து புறக்கணிக்கப்படும் சீனர்களும், இந்தியர்களும் தனியார் துறையில் கோலோச்சுகின்றனர். மலேசியா கடந்த காலங்களில் இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் எதிரான கலவரங்களை கண்டுள்ளது. இப்போது கிறிஸ்தவர்களுக்கு எதிரான மதம் சார்ந்த கலவரம். என்ன விலை கொடுத்தேனும், மலேசிய அரசு இஸ்லாமிய-மலே பேரினவாதத்தை பாதுகாக்கத் துடிக்கின்றது. (பிரிட்டிஷ் காலத்தில்) வந்தேறுகுடிகளான சீனர்களையும், இந்தியர்களையும் ஒதுக்க நினைத்தாலும், கூடி வாழ வேண்டிய கசப்பான நிலைமை. பின்-காலனித்துவ மலேசியா அரசியல், தவிர்க்கவியலாது மதம், மொழி, இனம் சார்ந்த கலவையாகி விட்டது. இந்த அரசியல் சித்து விளையாட்டுக்குள் "அல்லாஹ்" படும் பாடு, பார்க்க சகிக்கவில்லை. பாவம், அவரை விட்டு விடுங்கள்.
HS.
Tuesday, January 19, 2010
நம்மில் பலர் மைக்ரோசாப்ட் Office 2003 -ல் வேலை செய்து பழக்கப்பட்டவர்கள். திடீரென Office 2007 உபயோகிக்க துவங்கும் நிலை வரும்பொழுது, அதில் டூல்பாருக்கு பதிலாக உள்ள ரிப்பன் மெனுவை பார்த்து, சற்று திணறி, சில கட்டளைகளை தேடி சலித்துப்போய், மறுபடியும் 2003 இற்கே மாறி விட்டிருக்கிறோம்.
இதற்கு முக்கியமான காரணம் நாம் உபயோகிக்கப் போகும் கட்டளை எந்த ரிப்பன் மெனுவிற்கு உள்ளே கொடுக்கப்பட்டுள்ளது என்ற குழப்பமே ஆகும்.
நாம் ஒரு கணினி தொழில்நுட்ப வல்லுனராக இல்லாமலிருந்தாலும், புதிதாக வருகின்ற தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டும் உபயோகப்படுத்தவும் வேண்டுமாய்தான் இருக்கிறோம்.
இதோ உங்களுக்காக, Office 2007 -ல் நீங்கள் தேடும் கட்டளைகளை எந்த ரிப்பனில் உள்ளது எனத் தேடித்தர, Microsoft Office Labs -இன் புதிய Add-in.
தரவிறக்க சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதை பதிந்து கொள்வது மிகவும் எளிதானது. பதிந்து கொண்டவுடன். Excel அல்லது Word என ஏதாவது ஒரு அப்பிளிகேஷனை திறந்தால் அதில் வழக்கமாக உள்ள ரிப்பனுக்கு அருகாமையில் Search என்ற புதிய tab வந்திருப்பதை பார்க்கலாம்.
இந்த சர்ச் பாக்ஸில் நமக்கு தேவையான கட்டளைகளை டைப் செய்தால் போதுமானது.
சரியாக கட்டளைகளையே டைப் செய்ய வேண்டுமென்றில்லை, உதாரணமாக Font size பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ, சர்ச் பாரில் smaller என டைப் செய்தால் போதும். அதுமட்டுமல்லாமல், நாம் டைப் செய்ததில் ஏதாவது எழுத்துப் பிழை இருந்தாலும், அதுவே மாற்று வார்த்தையை தரும் கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
Download Search Commands
அது மட்டுமல்லாமல் Office 2007 -ல் உருவாக்கிய Docx, xlsx போன்ற கோப்புகளை 2003 -ல் திறக்க முடியவில்லை என்ற கவலை இருந்தால், கீழே உள்ள சுட்டியிலிருந்து File Format Converter ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
Download File Format Converter
Hs.
Monday, January 18, 2010
உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்னும் சன் டிவி முழக்கத்தை எல்லாம் மற்ந்து விடுங்கள்.உண்மையிலேயே உலக தொலைக்காட்சிகளை காண விருப்பமா?
உலக தொலைக்காட்சி என்றால் உங்கள் கேபிலில் வரும் ஐம்பது அருபது சேனல்களில் இடம்பெறும் ஒரு சில சேனல்களோ அல்லது சன் டீடீஎச்,பிக் டிவி ,டாடா ஸ்கை போன்ற டீடீஎச் சேவைகள் மூலம் கட்டணம் செலுத்தி பார்க்க கூடிய சில சர்வதேச சேனல்களோ அல்ல. உள்ளபடியே சர்வதேச சேனல்கள். நன்கறிந்த பிபிசி முதல் பெயர் தெரியாத சேனல்கள் வரை நூற்றுக்கணக்கான சேனல்களை காணலாம்.
அப்படியா?என்று கேட்கும் ஆர்வம் இருந்தால் நீங்கள் வியூமை.டிவி தளத்திற்கு சென்று பார்க்கலாம். இந்த இணையதளத்தில் உலகம் முழுவதும் உள்ள சற்றேறிக்குறைய 700 சேனல்களை நீங்கள் பார்க்க முடியும்.
ஏற்கன்வே சொன்னது போல பிபிசி முதல் அல்ஜசிரா துவங்கி எண்ணற்ற சேனல்களை பார்க்க முடியும்.
நீங்கள் விரும்பும் அல்லது உங்களூக்கு பிடிக்ககூடிய சேனலை தேர்வு செய்வது மிகவும் சுலபம்.
எந்த வகையான சேனல் என்பதை முடிவு செய்து விட்டு பின்னர் எந்த நிலப்பரப்பிலிருந்து காண விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானித்த பின் அங்குள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து தேவையான சேனலை தேர்வு செய்து கொள்ளலாம். முகப்பு பக்கத்தின் மேலேயே இதற்கான தேர்வு காட்டங்கள் இருக்கின்றன.
அதன் கிழே குறிப்பட்ட தினத்தில் தேர்வு செய்யப்படும் சேனலும் ஒலிபரப்பாகி கொண்டிருக்கும். ஒரே கிளிக்கில் அவற்றை பார்க்கலாம்.
பெரும்பாலானவை ஷாப்பிங் மற்றும் அலுப்பூட்டக்கூடிய சேனல்கள் என்றாலும் மணி மணியான சேனல்களும் உண்டு. உதாரணமாக செய்தி மற்றும் உலக நடப்புக்களீல் ஆர்வம் கொண்டவர்களூக்கு அல்ஜசிரா பயனுள்ளதாக இருக்கும்.அதிலும் சமயங்களில் சி என் என் செய்திக்கான சார்பற்ற செய்திய அறிய விரும்பினால் அல்ஜசிரா கைகொடுக்கும்.அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இப்படு பல பொக்கிஷ சேனல்களை தேடி கண்டு பிடிக்கலாம்.
உலக தொலைக்கட்சிகளை ஒரே இடத்தில் பார்க்க உதவும் இந்த தலம் உண்மையில் இண்டெர்நெட்டில் உள்ள ஐபிடிவி வசதி கொண்ட சேனல்களை திரட்டித்தருகிறது. அவற்றின் இணைய முகவரிகளையும் தருவதால் அடுத்த முறை பார்ப்பது எளிது.
இந்தியாவில் இருந்து ஜி உட்பட பல சேனல்கள உள்ளன. சன் கண்ணில் படவில்லை.
ஒரு முறை சென்று பார்த்து உங்கள் அனுபவம் அல்லது கண்டுபிடித்த முத்துக்களை அறிமுகம் செய்யுங்கள்.
hs.
Monday, January 11, 2010
وَلاَ تَقْرَبُواْ الزِّنَى إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاء سَبِيلاً 32
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. 17:32
________________________________________
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
இந்தியாவிலும், இந்தியாவிலிருந்து வெளியில் வாழும் ஒட்டு மொத்த இந்தியரையும், தலைகுணியச் செய்த சம்பவம் சமீபத்திய முறையற்றப் பாலியல் விவகாரத்தில் என்.டி.திவாரி மாட்டிக் கொண்ட சம்பவமாகும்.
மத்திய அமைச்சராகவும், மூன்று தடவை முதலமைச்சராகவும், இன்னும் பல முக்கிய அரசு கேந்திரப் பொறுப்புகளையும் வகித்து இறுதியாக ஆளுநராக பதவி உயர்வு பெற்று 87 வயது நிரம்பப்பெற்ற முதியவர் விபச்சாரப் பெண்களுடன் மரியாதைக்குரிய ஆளுநர் மாளிகையில் உல்லாசமாக இருந்து மாட்டிக்கொண்டு இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் தலைகுணிவை ஏற்படுத்தி விட்டார்.
செய்தி அறிந்து கொதிப்படைந்த பெண்கள் அமைப்பினர் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு இறுதியாக அவரது வீட்டையும் முற்றுகையிட்டு கேட் கதவுகளின் மீதேறி நாகூசும் வார்த்தைகளைக் கூறி கோஷமிட்டு தனது எதிர்ப்பை பதிந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரப் பெண்கள் எழுப்பிய நாகூசும் கோஷங்களை நேரில் கேட்ட அவரது குடும்பத்தினர் வெட்கி தலைகுணிந்தனர் எத்தனைக் கோடிகளை அவர்களுக்காக இவர் குவித்துக் கொடுத்திருந்தாலும் இதன் மூலம் அவர்கள் அடைந்த அவமானம் அதற்கு நிகராகாது.
இதை விடவும் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்து உயர்ந்த பதவிகளை அளித்த காங்கிரஸ் தலைமை, மற்றும் அதன் உறுப்பினர்கள் எத்தனை வேதனைப் பட்டிருப்பார்கள்.
இதை செவியுற்ற திருமனம் ஆகாத ராகுல் காந்தி இவரை எத்தனை அசிங்கமாக கருதி இருப்பார்.
காடு வா !! வா !! என்றழைக்கும் பதிமூன்றுக் குறைய நூரு வயதைத் தொட்ட திவாரி அவர்களுக்கு இளம் பெண்கள் என்றால் கொள்ளைப் பிரியமாம் ??
இதுப் போன்ற பெரிய இடத்து ( பெரியவாள்கள் செய்யும் ) சில்மிஷன்கள் ஒண்றிரண்டு மட்டுமே அவ்வப்பொழுது வெளிச்சத்திற்கு வருகின்றன ஏராளமானவைகள் கும்மிருட்டுக்குள் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விடுகின்றன பெரியவாள்கள் சமாச்சாரம் நமக்கு எதுக்கு என்று விட்டு விடுகின்றனர்.
மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை என்;று ஆண்களைக் கூறுவதுண்டு.
கூந்தல் நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை என்றுப் பெண்களைக் கூறுவதில்லை.
காரணம் பெண்கள் தாய்மை அடையும் ஒவ்வொரு முறையும் அவர்களது அழகும், உடல் வனப்பும் குறைவதுடன் சேர்ந்தே செக்ஸின் மீதான ஆர்வமும் குறைந்து கொண்டு வரும் முதுமையை நெருங்குவதற்கு முன்பே பெரும்பாலனவர்கள் செக்ஸ் உறவை வெறுத்து விடுவார்கள் அதனால் ஆசைக் குறையாத ஆண்களுக்கு அவர்களால் முதுமையில் ஈடுகொடுக்க முடிவதில்லை இதனால் வெறுப்படைந்த ஆண்கள் தள்ளாடும் வயதிலும் வேலி தாண்டும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
( பொருளாதாரத்தில் குறைவானவர்கள் தங்களுடைய பார்வையை தாழ்த்திக் கொண்டு அதே மனைவியுடன் திருபதி அடைந்து கொண்டு கண்ணியத்தைப் பேணிக் கொள்வார்கள். பைசாப் பார்ட்டிகள் பார்வையை இளசுகளின் மீதுப் பாய விட்டு மாட்டிக் கொள்வார்கள் )
நடுத்தர வயதை உடையவர்கள்.
இன்னும் நடுத்தர வயதை உடையவர்களில் பைசாப் பார்ட்டிகளாக இருப்பவர்கள் இளம் மனைவி ஒன்றுப் போதாமல் ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களை அடைய ஆசைப்பட்டு விபச்சாரப் பெண்களை அல்லது நெருக்கடியில் இருக்கும் சில குடும்பப் பெண்களை வளைக்க முயலுகின்றனர்.
துணைப் பாத்திரங்களில் ஒன்றிரண்டு படங்களில் மட்டும் தோன்றும் நடிகைகள் கூட திடீரென கார், பங்களாவிற்கு மாறி விடுவதற்;கு இவர்களைப் போன்ற பலப் பெண்ணாசைக் கொண்ட பணக்காரர்கள் ஒருக் காரணமாகின்றனர்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவமேக் காரணம்.
அழகும் வனப்பும் வாய்ந்த எண்ணிலடங்கா ஏழைப்பெண்கள் வரதட்சனைக் கொடுமையால் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
கணவன் மார்களை விபத்துகளில், அல்லது இயற்கை மரணத்தில் இழந்து ஒன்றிரண்டு குழந்தைகளுடன் அல்லது தனித்து தவிக்கும் ஏராளமான விதவைகள் மறுவாழ்வு கிடைக்காமல் முடங்கி கிடக்கின்றனர்,
திருமணமாகி சில நாட்களிலேயே கருத்து வேற்றுமை காரணத்தால் விவாகரத்துப் பெற்று மறுவாழ்வு கிடைக்காமல் ஏராளமானப் பெண்கன் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
இவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க இளைஞர்கள் பெரும்பாலும் முன்வருவதில்லை ஒருத்தி மட்டும் தான் என்பதால் அந்த ஒருத்தி புதியவாளாக இருக்க வேண்டும் என்றேப் பெரும்பாலும் விரும்புகின்றனர்.
இனி நமக்கு வாழ்வு கிடைக்கப் போவதில்லை என்று விரக்தி அடைந்த அபலைப் பெண்களில் பலர் ஒருத்தியை மனந்து கொண்டவனுக்கு அந்தப் புறத்தில் ஆசை நாயகியாகி விடுகின்றனர். பலப் பெண்கள் விபச்சார புரோக்கர்களால் விபச்சார சந்தைகளுக்கு எற்றுமதி செய்யப்படுகின்றனர் இவ்வாறு வழி தவறும் அபலைகள் ஏராளம் !! ஏராளம் !!
பலப் பெண்ணாசைக் கொண்டவர்கள் மேற்காணும் திக்கற்ற அபலைப் பெண்களில் ஒருவரைத் தேர்வு செய்து முறையாக திருமனம் செய்து கொண்டு தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இதன் மூலம் அப்பெண்கள் வழி தவறுவதிலிருந்து காப்பாற்றப்படுவர், குவிந்து கிடக்கும் அவர்களது செல்வங்களுக்கு அவர்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளை வாரிசாக்கலாம் !! இதுப் போன்று செய்து கொள்ள ஒருவர் முன் வந்தால் அவரை அல்லாஹ் இன்னும் மிகப் பெரிய செல்வந்தராக்கி விடுவான்.
உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். 24:32
மிகப்பெரும் செல்வந்தரும், அரசின் கேபினட் அதிகாரியுமாகிய என்.டி.திவாரி அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பெண் குலத்தை அழிவில் ஆழ்த்தும் கோட்பாட்டை உடைத்தெறிந்து மேற்காணும் அபலைப் பெண்களில் ஒருப் பெண்ணை முறையாக திருமனம் செய்துகொண்டு தனது ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தால் ?
அவர்களது அந்தரங்க உறவை எவரும் ரகசியமாகப் படமெடுத்து தொலைகாட்சியில் ஒலிபரப்பி நாரடித்திருக்க முடியாது,
பலதார மணம் புரிந்து விட்டார் என்றுக் கூறி அதை எதிர்த்து பெண்கள் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வீட்டை முற்றுகை இட்டு கேட்டைத் தாண்டிக் குதித்து நாகூசும் கோஷங்களை எழுப்பி இருக்க முடியாது.
மறுமனம் முடித்ததைக் காரணம் காட்டி அவருடையப் பதவியைத் தலைமைப் பறித்திருக்காது,
இத்தனைப் பெரிய அவமானத்தை ஈட்டித் தந்தது பழமைவாத ஒருவனுக்கு ஒருத்தி என்றக் கொள்கையே !
ஆண்களின் உடல் உறுப்புகளின் செயல் திறன்கள் இவ்வாறுத் தான் இருக்கும் என்பதை அறிந்த இறைவன் அவர்களுக்கு பலதார மணத்தை அனுமதித்தான்.
பெண்களின் உடல் உறுப்புகளின் செயல் திறன்கள் இவ்வாறுத் தான் இருக்கும் என்பதை அறிந்த இறைவன் கணவன் இறந்தால், அல்லது இழந்தால் மட்டுமே மறுமணத்தை அனுமதித்தான்.
முஸ்லீம்களே !!
ஒரு சில முஸ்லீம் செல்வந்தர்களும் கூட இதுப் போன்ற ஈனச் செயலில் ஈடுப்படுவதாக செய்தித் தாள்கள் மூலம் அறிகிறோம் அவ்வாறு நடப்பவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்
ஆண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட (நான்கிற்குள்) திருமனம் செய்து கொள்வதற்கு இறைவனாhல் சலுகை வழங்கப்பட்டப் பின்னரும் சமுதாயத்திற்கு வெட்கப்பட்டு ஒன்றை மட்டும் மனைவியாக்கிக் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களை ஆசை நாயகிகளாக்கினால் அவர்கள் மீது இறைவனின் கோபம் ஏற்படும், அதிலும் வயது முதிர்ந்தவர்கள் இதைச் செய்தால் அவர்கள் மீது இன்னும் இறைவன் அதிகமாக இறைவனின் கோபம் ஏற்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள்.
கீழ்கானும் மூவரையும் அல்லாஹ் மறுமையில் மன்னிக்க மாட்டான், கொடிய வேதனையை கொடுப்பான். விபச்சாரம் செய்யும் வயோதிகர்,( கிழவர் ) பொய்யுரைக்கும் அரசன், பெருமையடிக்கும் ஏழை என்று அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள். நூல்கள் : முஸ்லிம் , நஸயீ
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
விரிந்து பரந்த இப்பிரபஞ்சமெனும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் அதை உருவாக்கியவனின் பெயர் எழுதி வைக்கப் படவில்லை. ஆனால் பிரபஞ்ச புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தும் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதைப் பறைசாற்றுகின்றன! அப்படைப்பாளனின் வல்லமைகள், குணநலன்கள் குறித்த தேவையான விபரங்களை அப்புத்தகத்தின் வாக்கியங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன.
சிந்திக்கும் திறன் உள்ளவனே மனிதன்! அண்டப் பெருவெளியின் மையத்தில் நிற்கும் அவனிடம் இயற்கையாகவே சில கேள்விகள் எழுகின்றன. அக்கேள்விகள் அனைத்தும் அவனையும் அவனைச் சூழ்ந்திருக்கும் இப் பெருவெளியைக் குறித்தும் அறிய விரும்பும் அவனது ஆவலை வெளிப்படுத்துவதாகும். அறியாப் பாமரன் முதல் அறிவியலாளன் வரை அனைவரது உள்ளத்திலும் இக்கேள்விகள் எழுகின்றன. மனிதனுக்கு எப்போது அறிவும் சிந்தனையும் வழங்கப்பட்டதோ அன்று முதல் அவன் இக்கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான். நாகரீக வளர்ச்சியின் படித்தரங்களை ஆராய்ந்தால் இதுவே நமக்குப் புலப்படுகிறது.
மனிதனால் முன்வைக்கப்படும் கேள்விகளில் முதன்மையானது இப்பேரண்டத்தை உருவாக்கியவன் யார்? என்பதாகும். சிகரங்களின் உச்சியிலோ கடலின் அடியிலோ ஆகாயத்தின் வெளியிலோ அவற்றை உருவாக்கியவனின் பெயர் எழுதப்படவில்லை. ஆனால் மலைகள், கடல்கள், ஆகாய வெளி, காற்று, நீர் என ஒழுங்காகப் படைக்கப்பட்டிருக்கும் பெருவெளியின் ஒவ்வொரு அங்கமும் இதற்குப்பின்னால் வல்லமை மிக்க ஒரு படைப்பாளன் இருக்கின்றான் என்பதற்கு அமைதியான சாட்சிகளாக இருக்கின்றன!
மனிதப் படைப்பை ஓர் உதாரணமாகக் கொள்வோம். தந்தையால் வெளிப்படுத்தப்படும் இலட்சக்கணக்கான விந்தணுக்களில் ஒன்றே ஒன்று மட்டும் தாயின் கருவறையில் சினை முட்டையுடன் இணைந்து ஒரு கருவாகிறது! ஆரம்ப நிலையிலிருக்கும் இக் கருவுக்கு தான் பிறந்து செல்லவிருக்கும் வெப்பம், குளிர், காற்று, ஒளி, ஒலி எல்லாம் உள்ள உலகத்தைக் குறித்த எந்த அறிவும் இருப்பதில்லை! ஆனால் இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள உதவும் திசுக்களாக சுயமாகவே பெருக்கமடைகிறது! ஒன்றாக இருந்தது சுயமாகவே பலகோடி திசுக்களாகப் பெருக்கமடைகின்றன. இதயம், நுரையீரல், இரைப்பை முதலான உடலின் உள்ளுறுப்புகள் உருவாகின்றன.. எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றையெல்லாம் நிர்வகிக்கின்ற மிகப்பெரிய அற்புதமாகிய மூளை உருவாகின்றது! எவ்வாறு இது நடை பெறுகிறது? அற்பமான, புறக்கண்ணால் பார்க்க இயலாத வேறுபட்டிருந்த இரு அணுக்களை ஒன்றிணையச் செய்து, இவ்வளவு அற்புதச் செயல்களை நடைபெறச் செய்பவன் யார்? இவற்றக்குப் பின்னால் உள்ள ஒரு படைப்பாளனை ஏற்றுக் கொள்வதன்றோ அறிவுடைமை?
சிந்தனை செய்து இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள குர்ஆன் அழைக்கிறது!
படைப்புகளைப் பற்றிய சிந்தனையின் மூலம் படைத்தவனின் உள்ளமையை அறிந்து கொள்ளுங்கள் என்ற அறிவுப்பூர்வமான கோட்பாடைத் திருக்குர்ஆன் கூறுகிறது.
“ஒட்டகத்தை, அது எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது என அவர்கள் (கவனித்துப்) பார்க்க வேண்டாமா? வானத்தை, அது எவ்வாறு உயர்த்தப் பட்டுள்ளதென்றும், மலைகள், அவை எவ்வாறு நடப்பட்டுள் ளனவென்றும். பூமி, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ள தென்றும் (அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?)” (அல்குர்ஆன் 88: 17-20)
பரந்து வியாபித்திருக்கும் பேரண்டப் பெருவெளியின் அழகிய படைப்பைக் குறித்து ஆராய்வதன் மூலம் இதற்குப் பின்னாலிருக்கும் மாபெரும் படைப்பாளனின் அதியற்புத சக்தியை விளங்கிக் கொள்ள இயலும்! கற்பனைக் கதைகளுடனும் புரியாத தத்துவங்களுடனும் கடவுளைக் கற்பித்த புராதன கால கட்டத்திலேயே இஸ்லாம் இம்மா பெரும் பிரபஞ்ச நாதனின் வல்லமைகளைக் குறித்த அறிவுப் பூர்வமான விளக்கங்களை அளித்தது! கண்ணை மூடிக் கொண்டு கடவுளை நம்ப வேண்டும் என்பதை விட படைத்தவனைக் குறித்து அறிந்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை இஸ்லாம் கற்றுத் தருகிறது. இறை கொள்கையில் இஸ்லாம் நமக்குக் கற்றுத் தரும் இத்தகைய உயர்ந்த கொள்கை இன்று நடைமுறையில் உள்ள எந்த மதத்திலும் கிடையாது என்பது இஸ்லாமினுடைய தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். தன்னைப் பற்றியும் தன்னைச் சூழ்ந்துள்ள பிரபஞ்சத்தைக் குறித்தும் ஆராய்வதன் மூலம் இதற்குப் பின்னாலிருக்கும் அந்த இறைவனின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளுமாறு மனிதனுக்கு அழைப்பு விடுக்கும் குர்ஆனிய வசனங்கள் பாமரர் முதல் விஞ்ஞானிகள் வரை புரிந்து கொள்ளக் கூடிய அளவில் தெளிவாகவும் எளிதாகவும் உள்ளது. நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் அருளப்பட்ட வசனங்களைப் பாருங்கள்
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக ‘அலக்’ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். (96: 1 -4)
மேற்கண்ட வசனங்கள் மனிதனின் சிந்தனை உணர்வைத் தட்டியெழுப்பக் கூடியதாக உள்ளன.
இவ்வுலகில் மனிதனாகப் பிறப்பதற்கு முன் நம் நிலை எவ்வாறிருந்தது? நம் தந்தையின் உடலில் உள்ள கோடிக்கணக்கான விந்தணுவில் ஒரு அணுவாக, தாயின் சினைப்பையில் உள்ள கருமுட்டைகளில் ஒரு முட்டையாக வேறுபட்டுக் கிடந்த ஓர் ஆன்மா. பின்னர் விந்தணுவும் சினை முட்டையும் இணைந்த ஒரு கருவாக. பின்னர் முதிர்ச்சியடைந்த தசைப் பிண்டமாக. பின்னர் அதில் எலும்புகளும் மஜ்ஜைகளும் ஊருவாகி கண், காது மூக்கு, கை, கால் என எல்லா உறுப்புகளும் உருவாகி ஒரு முழு மனிதனாகப் பிறந்து வருகிறோம். இவ்வுலகில் உள்ள கோடிக்கணக்கான மனிதர்களுள் ஒரு மனிதனாக நாமும் வாழ்கிறோம்! நம்முடைய உடலில் பல்வேறு செயல்பாடுகள். எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், சுவாச உறுப்புகள், ஜீரண உறுப்புகள், நோய் எதிர்ப்பு என வியக்கத் தக்க செயல்பாடுகள் நடை பெறுகின்றன. இன்னின்னவாறு செயல்படுங்கள் என்று நாம் அவ்வுறுப்புகளுக்குக் கட்டளையிடுவதில்லை! நாம் சாப்பிடுகிறோம், ஜீரணமாகிறது. உடலுக்குத் தேவையான சக்திகளை உணவிலிருந்து தயாரிக்க உறுப்புகள்! கழிவை வெளியேற்ற, இரத்தத்தைச் சுத்தீகரிக்க, சிந்திக்க, செயல்பட, எழுத, பேச என அனைத்தும் உடல் உறுப்புகளின் ஒன்றோடொன்று ஒத்துழைக்கும் வியத்தகு செயல்பாடுகள்! யாருடைய செயல்பாடு இதற்குப் பின்னால் உள்ளன? கண்ணுக்குத் தெரியாத கற்பனை செய்ய முடியாத இரு வேறு கூறுகளாகப் பிரிந்து கிடந்த விந்தணுவையும் சினை முட்டையையும் இணைத்து நம்மைப் படிப்படியாக வளரச் செய்து முழு மனிதனாக்கிய அவ்விறைவனின் அதியற்புத ஏற்பாடு இது! இவ்வாறு படைத்த இறைவனே நம்மைப் படைத்த விதத்தை எடுத்துக்கூறி நம்மை சிந்திக்கச் சொல்கிறான். அறியாத பாமரன் முதல் அறிவியலாளன் வரை இத்தகைய சிந்தனையால் தன் இறைவனைப் பற்றி அறிய உதவும் எளிய கோட்பாடை குர்ஆன் கற்றுத் தருகிறது. இதோ வல்லமை மிக்கவனாகிய அந்த இறைவன் குர்ஆனில் மக்களைப் பார்த்துக் கேட்கின்றான்.
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (2:28)
நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (23:12-14)
(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? (56: 58, 59)
இவ்வாறான வசனங்கள் நம்மைப் படைத்தவனை நோக்கிய சிந்தனையின் பால் இட்டுச் செல்கிறது. அவ்விறைவனின் மகா வல்லமையை விளங்கிக் கொள்வதன் மூலம் மட்டுமே மனிதனின் ஆன்மீக லௌகீக வாழ்வுகள் சீரடைகின்றன. இறை சிந்தனையைப் பற்றிய இன்னும் சில விபரங்களை அடுத்த பதிவில் காண்போம். இன்ஷா அல்லாஹ்.
Friday, January 8, 2010
இதயம் காப்போம் :-
இதயம் காப்போம்
நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான வடிவில் படைத்திருக் கின்றோம்.” (அல்குர்ஆன் 95:4)
படைப்புகளனைத்திலும் சிறந்த படைப்பாக அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ள மனிதன் சிந்திக்கும் ஆற்றல் வழங்கப்பட்டுள்ளான். இதுவே அவனின் சிறப்பாகும். ஏனெனில் தமது சிந்தனா சக்தி மூலம் படைத்தவனின் வல்லமையுணர்ந்து அவனுக்கு முற்றிலும் வழிபடுதலே அதனின் நோக்கமாகும்.
மனித உடலே ஒரு மாபெரும் விந்தையாகும். ஆகவே அதனை “மாபெரும் உலகம்” (ஆலமும் அக்பர்) என வர்ணிக்கப்படுகிறது. உலகில் நாம் காணும் அனைத்துப் படைப்புகளின் பிரநிதித்துவமும், மனித உடலில் காணப்படுவதே அதற்குக் காரணமாகும்.
மனித உடலினமைப்பும், அதன் உறுப்புகளின் இயக்கமும் பேரற்புத மாகும். களிமண்ணில் உருவாக்கப்பட்டுள்ள நமது உடலின் ஆராய்ச்சி, விந்தையின் சிகரத்திற்கே நம்மை இட்டுச் செல்லும்.
மனித உடலின் இயக்கத்தில் மிக முக்கியப்பங்கு பெறும் உறுப்பு இதயமாகும்.
வலிமை மிக்கத் தசைகளாலான இவ்வுறுப்பு சுருங்கி விரியும் தன்மை கொண்டது. மார்பின் இடதுபுறத்தில், நெஞ்செலும்புகளுக்கும், முதுகெலும்புகளுக்குமிடையில் அமைந்துள்ளது. இதன் எடை 200 கிராம் முதல் 350 கிராம் வரையிலாகும். (ஆண் 250 – 350 கிராம், பெண் 200 – 300 கிராம்).
முட்டை வடிவம் கொண்ட இதயம், அதன் அடிபாகத்தில் குறுகிய தாகக் காணப்படும். இதன் இயக்கத்தை இடது மார்பின் கீழ்ப்பகுதியில் தொட்டு உணர்ந்து கொள்ள முடியும்.
இதயத்தசை “மயோ கார்டியம்” என்ற கடினத்தசையாலானது. அதன் வெளிப்புறம் “பெரி கார்டியம்” என்ற மெல்லிய இரட்டைச் சவ்வுடைய திரவப் பையினால் போர்த்தப்பட்டு அருகிலுள்ள நுரையீரல்,மார்புச்சுவர் ஆகியவற்றில் உராயாமல் பாதுகாக்கப்படுகிறது. உட்புறம் “எண்டோ தீலியம்” என்ற மெல்லிய தசையால் போர்த்தப்பட்டு இரத்தத்துடன் தொடர்பு கொள்ளும் தன்மையுடையதாகும்.
இதயம், இரு மேல் அறைகளும், இரு கீழ் அறைகளும் கொண்ட தாகும். மேல், கீழ் அறைகளுக்கிடையே “வால்வு” எனப்படும் தடுக் கிதழ்கள் அமைந்துள்ளன. இவைகள் இரத்தம் கீழறையிலிருந்து பின்னோக்கி மேலறைக்குப் பாய்ந்து விடாமல் தடுக்கின்றன. உடலின் அசுத்த இரத்தம் வலது மேலறைக்கு குழாய்கள் மூலம் கொண்டு வரப் பட்டு, அங்கிருந்து வலது கீழறைக்குள் பாய்ந்து, அங்கிருந்து, நுரையீரலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, கரியமில வாயு நீக்கப்பட்டு, பிராணவாயு நிரப்பப்பட்டு, அங்கிருந்து இதயத்தின் இடது மேலறைக்கு வந்தடைகிறது. பிறகு, இடது கீழறைக்குள் செலுத்தப்பட்டு, அங்கிருந்து இந்த சுத்த இரத்தம் உடல் முழுவதும் பாய்ச்சப்படுகிறது. இதுவே இதய இயக்கம். கருப்பையில் தொடங்கி, இறக்கும் வரை நீடிக்கிறது. தினமும் ஓர் இலட்சம் தடவைகள் சுருங்கி விரிகின்றன. 70 வருடம் உயிர் வாழும் மனிதனின் இதயம் 250 கோடி முறை சுருங்கி விரிந்திருக்கும். இதனால் உற்பத்தியாகும் சக்தி, ஒரு போர்க்கப்பலை 14 அடி உயரம் மேலே உயர்த்த முடியும். இடது கீழறை சுருங்கும் நேரம் 3/10 நொடி, விரியும் நேரம் ½ நொடி.
இரத்த ஓட்டம் உடலில் பாய்ந்து செல்லும் தூரம் 1,12000 கி.மீ. இரத்த சிவப்பணு ஒரு சதுர மில்லி மீட்டர் அளவில் 50 லட்சம் வெண்ணிற அணு 6000 முதல் 11,000 வரையிலாகும். சிவப்பணுவின் நடுவில் ஹீமோகுளோபின் என்ற இரும்புச் பொருள் பொதிந்திருக்கும். இதுவே பிராணவாயுவை ஏந்திச் சென்று உடல் திசுக்களுக்கு வழங்குகின்றது. சிவப்பணு 120 நாட்கள் இயங்கும். ஒரு நொடி நேரத்தில் 12 லட்சம் சிவப்பணுக்கள் மடிந்து அதே எண்ணிக்கையில் புதிய அணுக்கள் தோன்றும். ஒவ்வொரு சிவப்பணுவும் 75,000 தடவைகள் உடலைச் சுற்றிப் பயணம் செய்திருக்கும்.
வெள்ளையணுக்கள், நோய் கிருமிகளிலிருந்து உடலைப் பாதுகாக் கின்றன. மனித உடலில் 60 முதல் 90 வினாடி கால அளவில் இதயத் திலிருந்து இரத்தம் வெளியேறி, மீண்டும் வந்தடைகிறது.
உடல முழுவதும் இரத்தம் பாய்ந்து செல்ல தேவையான அளவு இரத்த அழுத்தம் நிலை பெற்றிருக்க வேண்டும். சரியான அளவு 120/80 மில்லி மீட்டர் பாதரசம் ஆகும். 140/90 க்கு மேல் அழுத்தம் அதிகரித்தால், உயர் இரத்த அழுத்தம் எனக் குறிப்பிடப்படுகிறது. இது கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் பல நோய்கள் தோன்ற ஏதுவாகும். இதயம் சுருங்கி விரிவதே, நாடித்துடிப்பாக மணிக்கட்டில் உணரப் படுகிறது. இது நிமிடத்திற்கு 60 முதல் 90 வரையிலாகும்.
இதய நோய்கள் :
1. பிறவிலேயே காணப்படும் இதயக் கோளாறுகள்.
2. உயர் இரத்த அழுத்தம்.
3. மாரடைப்பு
உயிருடன் பிறக்கும் 1000 குழந்தைகளில் 9 குழந்தைகளிடம் இதயக்கோளாறுகள் காணப்படுகின்றன. இக்குழந்தைகள் வளர்ந்து இயல்பான வாழ்க்கை வாழ முடியும். உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
உயர் இரத்த அழுத்தம் :
சுத்த இரத்த நாளங்களின் மீது இதய இயக்கத்தின் வேகம் பதிக்கும் அழுத்தமே இரத்த அழுத்தம் என்பதாகும். இதனை நிர்வகிப்பதில் சிறுநீரகங்கள், சுப்ராரீனல் சுரப்பிகள், மூளை, நரம்பு மண்டலம் ஆகியன முக்கியப் பங்காற்றுகின்றன. சரியான அளவு 100/70 முதல் 140/90 மி.மீ. பாதரஸம் வரையிலாகும். 95 சதவிகித நோயாளிகளிடம் உயர் இரத்த அழுத்தத்திற்குரிய காரணங்கள் தெரிவதில்லை. பிற காரணங்கள், மரபுவழி, அதிக உடற்பருமன், புகைப் பிடித்தல், மது அருந்துதல், மன உளைச்சல், சர்க்கரை நோய், சிறுநீரக நோய்கள், நாளமில்லாச் சுரபி நோய்கள் முதலியன.
முதுமையில் இரத்த நாளங்கள் விறைத்து, விரியும் தன்மை குறைந்து விடுவதும், உயர் இரத்தம் தோன்றக் காரணமாகும். கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு அளவு அதிகரித்து, இரத்த நாளங் களில் படிந்து விடுவதும் மற்றொரு காரணமாகும்.
விளைவுகள் :
இதயம் விரிந்து நலிவடைகிறது. சுவாசக் கோளாறு, மாரடைப்பு, மூளை இரத்த நாளம் வெடித்து, இரத்தம் சிதறி பக்கவாத நோய் தோன்றுதல் முக்கிய, உயிரைப் போக்கும் விளைவுகள். எனவே உணவுக் கட்டுப்பாடு, புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியன தவிர்த்தல், உடற்பயிற்சி ஆகியனவும், உரிய மருந்துகளும், இரத்த அழுத்தம் சீராக அமைய உதவக் கூடியனவாகும்.
மாரடைப்பு :
இதயத் தசைக்கு இரத்தம் கொண்டு செல்லும் கொரனரி நாளங் களில் இரத்தம் ஓட்டம் தடைபடுவதால், இதய இயக்கம் பாதிக்கப் பட்டு மரணம் ஏற்படுகிறது. அதிகக் கொழுப்பு, இரத்த நாளத்தில் படிந்து நாளத்தை அடைத்துக் கொள்கிறது. புகைப்பிடித்தல் மற்றொரு முக்கியக் காரணமாகும். புகையிலையிலுள்ள நச்சுப் பொருட்கள் நாளத்தை தடிக்கச் செய்து விரியும் தன்மையை இழக்கச் செய்கின்றன. உயர் இரத்த அழுத்தம் சர்க்கரை நோய், உடல் பருமன், உடல் உழைப்பின்றி உட்கார்ந்து கழிக்கும் வாழ்க்கை முறை, மன உளைச்சல், எளிதில் உணர்ச்சி வசப்படுதல், அதிக கோபம் முதலியன மற்ற பிற மாரடைப்புக் காரணங்களாகும்.
நெஞ்சு வலி ஏற்படுதல், இது மார்பின் நடுவில் தோன்றி அங்கிருந்து பரவி, கழுத்து, தாடை, இரு கைகள் முழங்கை அல்லது மணிக்கட்டு வரை செல்லக்கூடும். இது முன்னெச்சரிக்கையின்றி தாக்கக்கூடும்.
மாரடைப்பு ஏற்பட்டால், உரிய மருந்துகள் மூலமும், நவீன அறுவை சிகிச்சை மூலமும் சிகிச்சை மேற்கொண்டு நலம் பெறலாம். எனினும் நோய்த் தடுப்பே சிறந்த வழியாகும். உணவுக் கட்டுப்பாடு (”உண்ணுங்கள், பருகுங்கள், மிதமிஞ்சி விடாதீர்கள்”). அல்குர்ஆன் (7:30) புகையிலை, மது தவிர்த்தல், உடற்பயிற்சி, இறை வணக்கம், தியானம், அமைதியான வாழ்க்கை முறை, நோய் ஏற்படின் உரிய மருத்துவம் முதலியன நோய் தடுப்புக்கு உதவக் கூடியனவாகும்.
உயரிய இஸ்லாமிய வாழ்க்கை முறை, சிறந்த நல வாழ்வுக்கு வழி காட்டுவதாகும். இதனைச் செயலாக்குவதன் மூலமே நீண்ட நல வாழ்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதைக் கவனத்தில் வைப்போமாக !
“உடலில் ஒரு தசைத்துண்டு உள்ளது. அது சீராக இருந்தால், அனைத்து உறுப்புகளும் சீராக அமையும். அதுவே இதயம்” என பூமான் நபி (ஸல்) அவர்கள் புகன்றுள்ளனர். இந்நபிமொழியின் உட்கருத்து எதுவாக இருந்தாலும் இதயம் நலமாக இருப்பின், உடல் முழுவதும் நலமாகவே இருந்து விடும். எனவே இதயநலம் பேணுவது நீண்ட வாழ்வுக்கு வழியமைக்கும்.
நன்றி : குர் ஆனின் குரல் ( நவம்பர் 2009 )