உலக தொலைக்காட்சிகளை காண ஒரு இணையதளம்.
உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்னும் சன் டிவி முழக்கத்தை எல்லாம் மற்ந்து விடுங்கள்.உண்மையிலேயே உலக தொலைக்காட்சிகளை காண விருப்பமா?
உலக தொலைக்காட்சி என்றால் உங்கள் கேபிலில் வரும் ஐம்பது அருபது சேனல்களில் இடம்பெறும் ஒரு சில சேனல்களோ அல்லது சன் டீடீஎச்,பிக் டிவி ,டாடா ஸ்கை போன்ற டீடீஎச் சேவைகள் மூலம் கட்டணம் செலுத்தி பார்க்க கூடிய சில சர்வதேச சேனல்களோ அல்ல. உள்ளபடியே சர்வதேச சேனல்கள். நன்கறிந்த பிபிசி முதல் பெயர் தெரியாத சேனல்கள் வரை நூற்றுக்கணக்கான சேனல்களை காணலாம்.
அப்படியா?என்று கேட்கும் ஆர்வம் இருந்தால் நீங்கள் வியூமை.டிவி தளத்திற்கு சென்று பார்க்கலாம். இந்த இணையதளத்தில் உலகம் முழுவதும் உள்ள சற்றேறிக்குறைய 700 சேனல்களை நீங்கள் பார்க்க முடியும்.
ஏற்கன்வே சொன்னது போல பிபிசி முதல் அல்ஜசிரா துவங்கி எண்ணற்ற சேனல்களை பார்க்க முடியும்.
நீங்கள் விரும்பும் அல்லது உங்களூக்கு பிடிக்ககூடிய சேனலை தேர்வு செய்வது மிகவும் சுலபம்.
எந்த வகையான சேனல் என்பதை முடிவு செய்து விட்டு பின்னர் எந்த நிலப்பரப்பிலிருந்து காண விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானித்த பின் அங்குள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து தேவையான சேனலை தேர்வு செய்து கொள்ளலாம். முகப்பு பக்கத்தின் மேலேயே இதற்கான தேர்வு காட்டங்கள் இருக்கின்றன.
அதன் கிழே குறிப்பட்ட தினத்தில் தேர்வு செய்யப்படும் சேனலும் ஒலிபரப்பாகி கொண்டிருக்கும். ஒரே கிளிக்கில் அவற்றை பார்க்கலாம்.
பெரும்பாலானவை ஷாப்பிங் மற்றும் அலுப்பூட்டக்கூடிய சேனல்கள் என்றாலும் மணி மணியான சேனல்களும் உண்டு. உதாரணமாக செய்தி மற்றும் உலக நடப்புக்களீல் ஆர்வம் கொண்டவர்களூக்கு அல்ஜசிரா பயனுள்ளதாக இருக்கும்.அதிலும் சமயங்களில் சி என் என் செய்திக்கான சார்பற்ற செய்திய அறிய விரும்பினால் அல்ஜசிரா கைகொடுக்கும்.அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இப்படு பல பொக்கிஷ சேனல்களை தேடி கண்டு பிடிக்கலாம்.
உலக தொலைக்கட்சிகளை ஒரே இடத்தில் பார்க்க உதவும் இந்த தலம் உண்மையில் இண்டெர்நெட்டில் உள்ள ஐபிடிவி வசதி கொண்ட சேனல்களை திரட்டித்தருகிறது. அவற்றின் இணைய முகவரிகளையும் தருவதால் அடுத்த முறை பார்ப்பது எளிது.
இந்தியாவில் இருந்து ஜி உட்பட பல சேனல்கள உள்ளன. சன் கண்ணில் படவில்லை.
ஒரு முறை சென்று பார்த்து உங்கள் அனுபவம் அல்லது கண்டுபிடித்த முத்துக்களை அறிமுகம் செய்யுங்கள்.
hs.
No comments:
Post a Comment