Monday, January 11, 2010

ஏகஇறைவனின் திருப்பெயரால்....
وَلاَ تَقْرَبُواْ الزِّنَى إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاء سَبِيلاً 32
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. 17:32
________________________________________
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
இந்தியாவிலும், இந்தியாவிலிருந்து வெளியில் வாழும் ஒட்டு மொத்த இந்தியரையும், தலைகுணியச் செய்த சம்பவம் சமீபத்திய முறையற்றப் பாலியல் விவகாரத்தில் என்.டி.திவாரி மாட்டிக் கொண்ட சம்பவமாகும்.
மத்திய அமைச்சராகவும், மூன்று தடவை முதலமைச்சராகவும், இன்னும் பல முக்கிய அரசு கேந்திரப் பொறுப்புகளையும் வகித்து இறுதியாக ஆளுநராக பதவி உயர்வு பெற்று 87 வயது நிரம்பப்பெற்ற முதியவர் விபச்சாரப் பெண்களுடன் மரியாதைக்குரிய ஆளுநர் மாளிகையில் உல்லாசமாக இருந்து மாட்டிக்கொண்டு இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் தலைகுணிவை ஏற்படுத்தி விட்டார்.
செய்தி அறிந்து கொதிப்படைந்த பெண்கள் அமைப்பினர் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு இறுதியாக அவரது வீட்டையும் முற்றுகையிட்டு கேட் கதவுகளின் மீதேறி நாகூசும் வார்த்தைகளைக் கூறி கோஷமிட்டு தனது எதிர்ப்பை பதிந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரப் பெண்கள் எழுப்பிய நாகூசும் கோஷங்களை நேரில் கேட்ட அவரது குடும்பத்தினர் வெட்கி தலைகுணிந்தனர் எத்தனைக் கோடிகளை அவர்களுக்காக இவர் குவித்துக் கொடுத்திருந்தாலும் இதன் மூலம் அவர்கள் அடைந்த அவமானம் அதற்கு நிகராகாது.
இதை விடவும் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்து உயர்ந்த பதவிகளை அளித்த காங்கிரஸ் தலைமை, மற்றும் அதன் உறுப்பினர்கள் எத்தனை வேதனைப் பட்டிருப்பார்கள்.
இதை செவியுற்ற திருமனம் ஆகாத ராகுல் காந்தி இவரை எத்தனை அசிங்கமாக கருதி இருப்பார்.
காடு வா !! வா !! என்றழைக்கும் பதிமூன்றுக் குறைய நூரு வயதைத் தொட்ட திவாரி அவர்களுக்கு இளம் பெண்கள் என்றால் கொள்ளைப் பிரியமாம் ??
இதுப் போன்ற பெரிய இடத்து ( பெரியவாள்கள் செய்யும் ) சில்மிஷன்கள் ஒண்றிரண்டு மட்டுமே அவ்வப்பொழுது வெளிச்சத்திற்கு வருகின்றன ஏராளமானவைகள் கும்மிருட்டுக்குள் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விடுகின்றன பெரியவாள்கள் சமாச்சாரம் நமக்கு எதுக்கு என்று விட்டு விடுகின்றனர்.
 மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை என்;று ஆண்களைக் கூறுவதுண்டு.
 கூந்தல் நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை என்றுப் பெண்களைக் கூறுவதில்லை.
காரணம் பெண்கள் தாய்மை அடையும் ஒவ்வொரு முறையும் அவர்களது அழகும், உடல் வனப்பும் குறைவதுடன் சேர்ந்தே செக்ஸின் மீதான ஆர்வமும் குறைந்து கொண்டு வரும் முதுமையை நெருங்குவதற்கு முன்பே பெரும்பாலனவர்கள் செக்ஸ் உறவை வெறுத்து விடுவார்கள் அதனால் ஆசைக் குறையாத ஆண்களுக்கு அவர்களால் முதுமையில் ஈடுகொடுக்க முடிவதில்லை இதனால் வெறுப்படைந்த ஆண்கள் தள்ளாடும் வயதிலும் வேலி தாண்டும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
( பொருளாதாரத்தில் குறைவானவர்கள் தங்களுடைய பார்வையை தாழ்த்திக் கொண்டு அதே மனைவியுடன் திருபதி அடைந்து கொண்டு கண்ணியத்தைப் பேணிக் கொள்வார்கள். பைசாப் பார்ட்டிகள் பார்வையை இளசுகளின் மீதுப் பாய விட்டு மாட்டிக் கொள்வார்கள் )
நடுத்தர வயதை உடையவர்கள்.
இன்னும் நடுத்தர வயதை உடையவர்களில் பைசாப் பார்ட்டிகளாக இருப்பவர்கள் இளம் மனைவி ஒன்றுப் போதாமல் ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களை அடைய ஆசைப்பட்டு விபச்சாரப் பெண்களை அல்லது நெருக்கடியில் இருக்கும் சில குடும்பப் பெண்களை வளைக்க முயலுகின்றனர்.
துணைப் பாத்திரங்களில் ஒன்றிரண்டு படங்களில் மட்டும் தோன்றும் நடிகைகள் கூட திடீரென கார், பங்களாவிற்கு மாறி விடுவதற்;கு இவர்களைப் போன்ற பலப் பெண்ணாசைக் கொண்ட பணக்காரர்கள் ஒருக் காரணமாகின்றனர்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவமேக் காரணம்.
 அழகும் வனப்பும் வாய்ந்த எண்ணிலடங்கா ஏழைப்பெண்கள் வரதட்சனைக் கொடுமையால் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
 கணவன் மார்களை விபத்துகளில், அல்லது இயற்கை மரணத்தில் இழந்து ஒன்றிரண்டு குழந்தைகளுடன் அல்லது தனித்து தவிக்கும் ஏராளமான விதவைகள் மறுவாழ்வு கிடைக்காமல் முடங்கி கிடக்கின்றனர்,
 திருமணமாகி சில நாட்களிலேயே கருத்து வேற்றுமை காரணத்தால் விவாகரத்துப் பெற்று மறுவாழ்வு கிடைக்காமல் ஏராளமானப் பெண்கன் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

இவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க இளைஞர்கள் பெரும்பாலும் முன்வருவதில்லை ஒருத்தி மட்டும் தான் என்பதால் அந்த ஒருத்தி புதியவாளாக இருக்க வேண்டும் என்றேப் பெரும்பாலும் விரும்புகின்றனர்.
இனி நமக்கு வாழ்வு கிடைக்கப் போவதில்லை என்று விரக்தி அடைந்த அபலைப் பெண்களில் பலர் ஒருத்தியை மனந்து கொண்டவனுக்கு அந்தப் புறத்தில் ஆசை நாயகியாகி விடுகின்றனர். பலப் பெண்கள் விபச்சார புரோக்கர்களால் விபச்சார சந்தைகளுக்கு எற்றுமதி செய்யப்படுகின்றனர் இவ்வாறு வழி தவறும் அபலைகள் ஏராளம் !! ஏராளம் !!
பலப் பெண்ணாசைக் கொண்டவர்கள் மேற்காணும் திக்கற்ற அபலைப் பெண்களில் ஒருவரைத் தேர்வு செய்து முறையாக திருமனம் செய்து கொண்டு தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இதன் மூலம் அப்பெண்கள் வழி தவறுவதிலிருந்து காப்பாற்றப்படுவர், குவிந்து கிடக்கும் அவர்களது செல்வங்களுக்கு அவர்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளை வாரிசாக்கலாம் !! இதுப் போன்று செய்து கொள்ள ஒருவர் முன் வந்தால் அவரை அல்லாஹ் இன்னும் மிகப் பெரிய செல்வந்தராக்கி விடுவான்.
உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். 24:32
மிகப்பெரும் செல்வந்தரும், அரசின் கேபினட் அதிகாரியுமாகிய என்.டி.திவாரி அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பெண் குலத்தை அழிவில் ஆழ்த்தும் கோட்பாட்டை உடைத்தெறிந்து மேற்காணும் அபலைப் பெண்களில் ஒருப் பெண்ணை முறையாக திருமனம் செய்துகொண்டு தனது ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தால் ?
 அவர்களது அந்தரங்க உறவை எவரும் ரகசியமாகப் படமெடுத்து தொலைகாட்சியில் ஒலிபரப்பி நாரடித்திருக்க முடியாது,
 பலதார மணம் புரிந்து விட்டார் என்றுக் கூறி அதை எதிர்த்து பெண்கள் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வீட்டை முற்றுகை இட்டு கேட்டைத் தாண்டிக் குதித்து நாகூசும் கோஷங்களை எழுப்பி இருக்க முடியாது.
 மறுமனம் முடித்ததைக் காரணம் காட்டி அவருடையப் பதவியைத் தலைமைப் பறித்திருக்காது,
இத்தனைப் பெரிய அவமானத்தை ஈட்டித் தந்தது பழமைவாத ஒருவனுக்கு ஒருத்தி என்றக் கொள்கையே !
ஆண்களின் உடல் உறுப்புகளின் செயல் திறன்கள் இவ்வாறுத் தான் இருக்கும் என்பதை அறிந்த இறைவன் அவர்களுக்கு பலதார மணத்தை அனுமதித்தான்.
பெண்களின் உடல் உறுப்புகளின் செயல் திறன்கள் இவ்வாறுத் தான் இருக்கும் என்பதை அறிந்த இறைவன் கணவன் இறந்தால், அல்லது இழந்தால் மட்டுமே மறுமணத்தை அனுமதித்தான்.
முஸ்லீம்களே !!
ஒரு சில முஸ்லீம் செல்வந்தர்களும் கூட இதுப் போன்ற ஈனச் செயலில் ஈடுப்படுவதாக செய்தித் தாள்கள் மூலம் அறிகிறோம் அவ்வாறு நடப்பவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்
ஆண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட (நான்கிற்குள்) திருமனம் செய்து கொள்வதற்கு இறைவனாhல் சலுகை வழங்கப்பட்டப் பின்னரும் சமுதாயத்திற்கு வெட்கப்பட்டு ஒன்றை மட்டும் மனைவியாக்கிக் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களை ஆசை நாயகிகளாக்கினால் அவர்கள் மீது இறைவனின் கோபம் ஏற்படும், அதிலும் வயது முதிர்ந்தவர்கள் இதைச் செய்தால் அவர்கள் மீது இன்னும் இறைவன் அதிகமாக இறைவனின் கோபம் ஏற்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள்.
கீழ்கானும் மூவரையும் அல்லாஹ் மறுமையில் மன்னிக்க மாட்டான், கொடிய வேதனையை கொடுப்பான். விபச்சாரம் செய்யும் வயோதிகர்,( கிழவர் ) பொய்யுரைக்கும் அரசன், பெருமையடிக்கும் ஏழை என்று அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள். நூல்கள் : முஸ்லிம் , நஸயீ
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

No comments: